Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்... கண்டிப்பு: பழிவாங்க அவதூறு சட்டத்தை பயன்படுத்தாதீர்கள் என உத்தரவு

Posted: 28 Jul 2016 10:30 AM PDT

புதுடில்லி:'அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கும் ஆயுதமாக, அவதுாறு சட்டத்தை பயன்படுத்தக் கூடாது' என, தமிழக அரசை சுப்ரீம் கோர்ட் கண்டித்துஉள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், இவ்வாறு கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், இதுவரை தொடரப்பட்டுள்ள அவதுாறு வழக்குகளின் பட்டியலை, இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் செயல்பாடு குறித்தும், முதல்வர் ஜெயலலிதா குறித்தும், 2015 நவம்பர், 6ல், விமர்சனம் செய்து பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மீது, ...

ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாதென எதிர்க்கட்சிகள் அமளி:எம்.பி.,க்கள் கோஷத்தால் ராஜ்யசபா பலமுறை ஒத்திவைப்பு

Posted: 28 Jul 2016 10:38 AM PDT

'ஓய்வூதியம், ரேஷன் பொருட்கள், சமையல் 'காஸ்' போன்ற, அரசின் சலுகைகளை பெறுவதற்கு, ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது' என, வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, அமளியில் ஈடுபட்டதால், ராஜ்யசபா, நேற்று பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று ராஜ்யசபாவில் அலுவல்கள் துவங்கியதும், திரிணமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சிகளின், எம்.பி.,க்கள் எழுந்து, 'ஆதார் அட்டை குறித்து விவாதம் நடத்த வேண்டும்' என்றனர். துணை தலைவர் குரியன்,''அதற்கு, தற்போது அனுமதியில்லை,'' என்றார். இதையடுத்து, சபையில் அமளி ஏற்பட்டது. பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல் ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் வறுமை ஒழிப்பு':பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

Posted: 28 Jul 2016 10:44 AM PDT

- -''தொழில்நுட்ப வளர்ச்சியால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதுடன், வறுமையை ஒழிக்க முடியும். இந்த தொழில்நுட்ப வளர்ச்சியை அனைத்து துறைகளிலும் பயன்படுத்த முன் வர வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மத்திய திட்டக் கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள, 'நிடி ஆயோக்' அமைப்பின் கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:சூரிய மின்சக்தி போன்ற இயற்கை ஆதாரங்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களை, நாம் பயன்படுத்த தவறி விட்டோம். அதுபோல், பல்வேறு ஆதாரங்களை முழுமையாகவும் பயன்படுத்தி கொள்ளவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி மிகவும் ...

பருப்பு விலை குறைவது எப்போது: பிரதமருக்கு ராகுல் கேள்வி

Posted: 28 Jul 2016 10:54 AM PDT

புதுடில்லி:அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக, லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. இதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் பேசியதாவது:

மத்தியில், தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை. விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறுகிறது. இதுதொடர்பாக, பிரதமர் மோடி, போலியான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். பருப்பு குறையும் தேதியையும் அவர் அறிவிக்க வேண்டும். தேர்தல் ...

நடுவானில் தகராறு; தரையிறங்கியது விமானம்

Posted: 28 Jul 2016 10:54 AM PDT

மும்பை : நடுவானில் பயணி ஒருவர் தகராறில் ஈடுபட்டதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்காசியாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, கேரள மாநிலம், கோழிக்கோட்டிற்கு, இண்டிகோ நிறுவன விமானம், நேற்று புறப்பட்டு வந்தது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர், தகராறில் ஈடுபட்டார். உணவு வழங்கும் பகுதியில் இருந்த ஊழியரிடம் சண்டை போட்டார். இதையடுத்து, ஊழியர்கள், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்; ஆனால், அவர் கேட்கவில்லை.
இதையடுத்து, கட்டுப்பாட்டு ...

ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற தீவிரம் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை

Posted: 28 Jul 2016 11:01 AM PDT

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்று வதற்காக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன், மத்திய அரசு, நேற்று ஆலோசனை நடத்தியது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்துவதற்காக, ஜி.எஸ்.டி., மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. லோக்சபாவில், ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவின் சில பிரிவுகளுக்கு, காங்., உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக, பல்வேறு எதிர்க்கட்சி களுடனும், பல்வேறு அமைப்புகளுடனும், மத்திய அரசு, கடந்த சில மாதங்களாக ஆலோ சனை நடத்தி வருகிறது. ...

மாநில வளர்ச்சி பாதிப்புதி.மு.க., குற்றச்சாட்டு

Posted: 28 Jul 2016 11:06 AM PDT

சென்னை:'பத்திரப் பதிவுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்ந்ததால், கட்டுமானப் பணி தேக்கம் அடைந்து, மாநிலத்தில் வளர்ச்சி பாதித்துள்ளது' என, சட்டசபையில் தி.மு.க., குற்றம் சாட்டியது.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்: தி.மு.க., - துரைமுருகன்: பட்ஜெட் குறித்து நிருபர்களிடம் பேசிய நிதித்துறை செயலர் சண்முகம், 'பெட்ரோலிய பொருள் விலை உயர்ந்தாலும், தமிழக அரசு, விற்பனை வரியை உயர்த்தாததால், 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.சிமென்ட், ஆட்டோமொபைல், ஜவுளி தொழில்களில் மந்தம் நிலவியதாலும், பத்திரப்பதிவு குறைந்ததாலும், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' ...

உள்ளாட்சி தேர்தல் வெற்றி கட்சியினருக்கு ஜெ., வேண்டுகோள்

Posted: 28 Jul 2016 11:13 AM PDT

சென்னை:'உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற, அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்' என, அ.தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சியினருக்கு, முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

தி.மு.க., - காங்., - மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து, 31,834 பேர், நேற்று, முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அருந்ததி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வலசை ரவிச்சந்திரன், தன் கட்சியை கலைத்து விட்டு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.இந்நிகழ்ச்சியில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு பேசுகையில், ''என் தலைமை யிலான அரசு, மக்களுக்கு ...

செல்வாக்கில்லாதவர்கள் வேண்டாம்' கருணாநிதி திடீர் உத்தரவு

Posted: 28 Jul 2016 11:17 AM PDT

'மாற்று கட்சிகளில் இருந்து, 'டம்மி'யானவர்களை இழுக்காமல், உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சித் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க., கூட்டணி, 39.7 சதவீதமும், அ.தி.மு.க., அணி, 40.8 சதவீத ஓட்டுகளும் பெற்றன.இதையடுத்து, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பெரும் பாலான மாநாராட்சி, நகராட்சிகளை கைப்பற்ற இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.இதில், உள்ளாட்சி தேர்தலுக்காக, தி.மு.க., புது வியூகம் ...

2 தமிழர்களுக்கு மரண தண்டனை; இந்திய அரசு மேல்முறையீடு

Posted: 28 Jul 2016 11:59 AM PDT

தோகா : கத்தார் நாட்டில் 2 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக கத்தார் நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் இந்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சிவக்குமார் அரசன் ஆகிய மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ...

பாகிஸ்தான் தவிர 9 நாட்டு மாணவர்களுக்கு இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களில் 'அட்மிஷன்'

Posted: 28 Jul 2016 12:22 PM PDT

பாகிஸ்தான் தவிர, இலங்கை, ஆப்கானிஸ் தான் உட்பட ஒன்பது நாடுகளின் மாணவர்கள், இந்திய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.,யில், அடுத்த ஆண்டு முதல் சேர்க்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன மான ஐ.ஐ.டி.,யில், வெளிநாட்டு மாணவர்கள் படிக்க ஆர்வம் காட்டினர். ஆனால், இதுவரை அதற்கான அனுமதியை வழங்காமல், இந்திய மாணவர்களுக்கே இடங்கள் ஒதுக்கப்பட்டு வந்தன.இந்நிலையில், ஐ.ஐ.டி., நிறுவனத்தை சர்வதேச அளவில் உயர்த்தும் வகையில், வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முடிவு செய்துள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, ஐ.ஐ.டி., கவுன்சில் ...

இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை

Posted: 28 Jul 2016 02:01 PM PDT

ஜாவா: கடும் எதிர்ப்பினையும் மீறி இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் உள்பட 14 பேருக்கு ஒரே நேரத்தில் கொடூர மரணதண்டனை வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு அமைப்புகள் இந்தோனேஷியாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளன..இந்தோனேஷியாவில் கடந்த 2005-ம் ஆண்டு போதை மருந்து கடத்தல் தடுப்பு போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேர் கைதாகினர். இவர்களில் 4 பேர் இந்தோனேஷியர், 5 பேர் நைஜிரீயர்கள் ,2 பேர் ஜிம்பாப்வே நாட்டவர், மற்றும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் நாட்டினர் என மொத்தம் 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை ...

தேக்கம் அடைந்த சாலை பணிகள் ரத்து செய்யப்படுமா?

Posted: 28 Jul 2016 02:46 PM PDT

புதுடில்லி : தேக்கம் அடைந்துள்ள சாலை பணிகள், ரத்து செய்யப்படுவது குறித்து அடுத்த பார்லி., கூட்டுத் தொடருக்கு முன் முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதுகுறித்து லோக்சபாவில் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தெரிவித்ததாவது: மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சி இருந்த போது, துவங்கப்பட்ட, 3.85 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, சாலை பணிகள், பல்வேறு காரணங்களால் தேக்கம் அடைந்துள்ளன. இந்த பணிகள் மீண்டும் துவங்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடருக்கு முன் முடிவு ...

சஞ்சீவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 28 Jul 2016 03:22 PM PDT

டேராடூன் : ராமாயணத்தில் அனுமர் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவினி மூலிகையை இமயமலையிலிருந்து கண்டுபிடிக்க, உத்தரகண்ட் அரசு ரூ.25 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ராமாயணத்தில் லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போராடிய போது சஞ்சீவினி மூலிகையை தேடி அனுமன் செல்வார். மூலிகையை சரியாக அடையாளம் காண முடியாமல் போகவே, சஞ்சீவினி மலையையே துாக்கி பறந்து வந்து லட்சுமணின் உயிரை காப்பார். இந்த சஞ்சீவினி மூலிகை தற்போது இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
இந்நிலையில் சீன எல்லையை ஒட்டிய இமயமலையில் உள்ள துரோனகிரி பகுதியில் சஞ்சீவினி மூலிகையை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™