Tamil News | Online Tamil News |
- ரியோ ஒலிம்பிக்கில் நரசிங்கிற்குப் பதில் பிரவீண் ராணா தேர்வு
- காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக மீண்டும் இளங்கோவன்? மாற்று நபர் இல்லாததால் மேலிடம் ஆலோசனை
- சரியாக வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு நிறுத்தம்: 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியீடு
- நிதிஷ் - லாலு உறவில் திடீர் விரிசல்?உ.பி., தேர்தல் விஷயத்தில் முரண்பாடு
- 'பாரம்பரிய விளையாட்டு என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது'
- விமானம் மாயமாகி 5 நாட்கள் ஆனது துப்பு கிடைக்காததால் ஏமாற்றம்
- 'மூன்றாவது உலகப்போர் வேண்டாம்' ராஜ்யசபாவில் தி.மு.க., எச்சரிக்கை
- முதல்வர் ஜெ.,வை புகழ எதிர்ப்பு :அமைச்சர் 'டென்ஷன்'
- கங்கா தீர்த்த விற்பனை கேரளாவில் அமோகம்!
- 'கபாலி'யால் லாபம் அடைந்தவருக்கு தண்டனை இல்லையா: கருணாநிதி
- தே.மு.தி.க., எழுச்சியாக உள்ளது:பிரேமலதா தடாலடி; கட்சியினர் பீதி
- 'டிரம்ப் போட்டியே கிடையாது; ஹிலாரி தான் அமெரிக்க அதிபர்'
- ரியோ ஒலிம்பிக்: ரோஜர் பெடரர் விலகல்
| ரியோ ஒலிம்பிக்கில் நரசிங்கிற்குப் பதில் பிரவீண் ராணா தேர்வு Posted: 26 Jul 2016 11:25 AM PDT
புதுடில்லி: ஊக்கமருந்து சோதனையில் சி்க்கிய மல்யுத்த வீரர் நரசிங்கிற்குப்பதில், பிரவீண் ராணா ரியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 26. டில்லி காமன்வெல்த்தில் (2010) தங்கம், 2014 ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்றவர். 2015 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் (74 கி.கி., பிரிவு) வெண்கலம் வென்று, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு (ஆக.,5-21) நேரடியாக தகுதி பெற்றார். இதனிடையே இவர் தடை செய்யப்பட்ட 'மெட்டாடியனன்' என்ற மருந்தை பயன்படுத்தியது உறுதியானது. இதனால், ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ... |
| காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக மீண்டும் இளங்கோவன்? மாற்று நபர் இல்லாததால் மேலிடம் ஆலோசனை Posted: 26 Jul 2016 10:41 AM PDT தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, புதிய தலைவர் நியமிப்பதில், ஒருமித்த கருத்து உருவாக வில்லை. மாற்று நபரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், மீண்டும், இளங்கோவனையே தலைவராக நியமித்து விடும் ஆலோசனையில், கட்சித் தலைமை ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, கடந்த ஜூன் மாதம்15ம் தேதி, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை, இளங்கோவன் ராஜினாமா செய்தார்.இருந்த போதும், புதிய தலைவரை நியமிக்க முடியாமல், கட்சித் தலைமை, 40 நாட்களுக்கும் மேலாக தடுமாறி வருகிறது. இதனால், செயல்பாடுகள் இன்றி, தமிழக காங்கிரஸ் முடங்கிக் ... |
| Posted: 26 Jul 2016 10:57 AM PDT புதுடில்லி: 'சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள ... |
| நிதிஷ் - லாலு உறவில் திடீர் விரிசல்?உ.பி., தேர்தல் விஷயத்தில் முரண்பாடு Posted: 26 Jul 2016 11:05 AM PDT பாட்னா : ''உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடாது,'' என, அந்த கட்சி தலைவர், லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், அவரது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார், ''ஐக்கிய ஜனதா தளம், கண்டிப்பாக போட்டியிடும்,'' என, அறிவித்துள்ளார். அமோக வெற்றி: பீஹாரில், நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரில், லாலுவும், நிதிஷும் தனித்து போட்டியிட்டு, படுதோல்வியடைந்தனர். பா.ஜ.அமோக ... |
| 'பாரம்பரிய விளையாட்டு என்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது' Posted: 26 Jul 2016 11:10 AM PDT புதுடில்லி:'பாரம்பரிய விளையாட்டு என்பதற்காக மட்டும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியாது' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. தமிழகத்தின், பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்து, மத்திய அரசு இந்தாண்டு ஜனவரியில் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், அரசாணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இது தொடர்பாக பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதன்படி, தமிழக அரசும், மத்திய அரசும் பதில் மனுவை ... |
| விமானம் மாயமாகி 5 நாட்கள் ஆனது துப்பு கிடைக்காததால் ஏமாற்றம் Posted: 26 Jul 2016 11:57 AM PDT ஐந்து நாட்களுக்கு முன், நடுவானில் மாயமான விமானப்படை விமானம் பற்றி துப்பு கிடைக்காததால், பாதுகாப்பு படையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விமானத்தில் சென்றவர்களின் குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். ஜூலை 22ல், கோவையில் இருந்து தாம்பரம் விமானப்படை நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து, அந்தமானை நோக்கி சென்ற ஏ.என்.32 ரக விமானம், முப்படை வீரர்கள், 29 பேருடன் நடுவானில் மாயமானது. சென்னைக்கு கிழக்கே, 250 கி.மீ., தொலைவில் காணாமல் போனதாக கூறி, 20 கப்பல்கள், 15 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேடி வந்தாலும், இன்னும் சிக்கவில்லை.தொடர்ந்து, 60 ஆயிரம் சதுர கடல் ... |
| 'மூன்றாவது உலகப்போர் வேண்டாம்' ராஜ்யசபாவில் தி.மு.க., எச்சரிக்கை Posted: 26 Jul 2016 12:19 PM PDT 'தண்ணீருக்காகவே, வருங்காலத்தில் மூன்றாவது உலகப்போர் மூளக்கூடும். அது போன்ற மூன்றாவது உலகப்போர், இந்தியாவிலும் ஏற்படுவதற்கு, மத்திய அரசு அனுமதிக்காது என்று நம்புகிறோம்' என, பார்லி.,யில், தி.மு.க., எச்சரித்துள்ளது. மகாநதியின் குறுக்கே, சத்தீஸ்கர் அரசு கட்டும் தடுப்பணைகள் காரணமாக, ஒடிசா மாநில விவசாயிகள், பெரும் பாதிப்படைவது குறித்து, ராஜ்யசபாவில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், நேற்று நடந்தது. இதில் பங்கேற்று, தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:நதிநீர் பிரச்னை என்பது, மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது. ஏற்கனவே, இரண்டு உலகப்போர்கள் ... |
| முதல்வர் ஜெ.,வை புகழ எதிர்ப்பு :அமைச்சர் 'டென்ஷன்' Posted: 26 Jul 2016 12:33 PM PDT சென்னை:முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., உறுப்பினர்களை பார்த்து, ''இதுதான், உங்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடா,'' என, அமைச்சர் செல்லுார் ராஜூ கேள்வி எழுப்பினார். சட்டசபை நேற்று துவங்கியதும் பேசிய, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ''எய்ம்ஸ் மருத்துவமனையில், தமிழக மாணவர் மர்மச்சாவு; அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட, 34 ஒத்திவைப்பு தீர்மானங்கள் தந்துள்ளேன். அதுபற்றி விவாதிக்க வேண்டும்,'' என, கோரினார். வரலாறு:அதற்கு சபாநாயகர், அந்த பிரச்னைகளை படிப்படியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்வ ... |
| கங்கா தீர்த்த விற்பனை கேரளாவில் அமோகம்! Posted: 26 Jul 2016 12:38 PM PDT
கொச்சி: மத்திய அரசால் சமீபத்தில் துவக்கப்பட்ட, புனித கங்கை நதிநீர் திட்டத்துக்கு, கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை நதிநீர் சேகரிக்கப்பட்டு, டில்லிக்கு எடுத்து வரப்படுகிறது. பின், அந்த நீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில், டில்லியிலிருந்து கேரள மாநிலத்துக்கு, 549 பாட்டில்களில் கங்கை நீர் விற்பனைக்கு வந்தது. கோழிக்கோடு தபால் நிலையத்தில், ஒரு வாரத்தில் மட்டும், 150 பாட்டில் கங்கை தீர்த்தம் ... |
| 'கபாலி'யால் லாபம் அடைந்தவருக்கு தண்டனை இல்லையா: கருணாநிதி Posted: 26 Jul 2016 12:41 PM PDT சென்னை : 'முதல்வர் வீட்டில் தங்கியிருந்து, கபாலி படத்தின் உரிமையை பெற்று, கோடிக் கணக்கில் லாபம் அடைந்தவருக்கு, எந்த தண்டனையும் கிடையாதா?' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கை: கபாலி படத்திற்கு, 10 டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டும்' என, கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். படத்திற்கு டிக்கெட்கேட்டு, கடிதம் அனுப்பியதற் காக, என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே. அந்தப் படத்தை திரையிடும் உரிமையை, முதல்வரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் பெற்று, ... |
| தே.மு.தி.க., எழுச்சியாக உள்ளது:பிரேமலதா தடாலடி; கட்சியினர் பீதி Posted: 26 Jul 2016 01:01 PM PDT சென்னை : ''முன்பு இருந்ததை விட, தே.மு.தி.க., மிகவும் எழுச்சியாக உள்ளது,'' என பிரேமலதா கூறினார். முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா அளித்த பேட்டி: கடந்த ஆட்சியில், தி.மு.க.,விற்கு, 23 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். தற்போது, 89 எம்.எம்.எல்.ஏ.,க் கள் உள்ளனர். அதனால், தமிழகத்திற்கு எந்த நன்மையும் நடக்கப் போவது இல்லை.தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது. சிறுதாவூர் பங்களாவில் இருந்த கன்டெய்னர் லாரி குறித்து, தி.மு.க., ... |
| 'டிரம்ப் போட்டியே கிடையாது; ஹிலாரி தான் அமெரிக்க அதிபர்' Posted: 26 Jul 2016 01:15 PM PDT
பிலடல்பியா: ''மிகச் சிறந்த அமெரிக்க அதிபராக ஹிலாரி கிளிண்டன் விளங்குவார்; அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் ஒரு போட்டியே கிடையாது,'' என, ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட பெர்னி சான்டரஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும், நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு நடந்து வருகிறது. கட்சியின் அதிபர் வேட்பாளரை ... |
| ரியோ ஒலிம்பிக்: ரோஜர் பெடரர் விலகல் Posted: 26 Jul 2016 01:58 PM PDT
ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக்கில் இருந்து சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் பெடரர் விலகினார். சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்(34) கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 17 பட்டம் வென்றவர். 2008ல் தங்கம் (இரட்டையர்), 2012ல் வெள்ளி (ஒற்றையர்) என இரு ஒலிம்பிக் பதக்கம் வென்றார். இதனிடையே காயம் காரணமாக ரியோ ஒலிம்பிக் (ஆக.,5-21) மற்றும் இந்த ஆண்டு மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார். இதுகுறித்து 'பேஸ்புக்கில்' பெடரர் வெளியிட்ட செய்தி: இந்த ஆண்டு துவக்கத்தில் முழங்கால் காயத்திற்கு 'ஆப்பரேஷன்' செய்தேன். இதிலிருந்து இன்னும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 27,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |