Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அதிமுகவில் ஞானசேகரன், கருப்பசாமி பாண்டியன்

Posted: 26 Jul 2016 02:13 PM PDT

வேலூர் ஞானசேகரன், நெல்லை கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர். தமிழக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான

இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 24 பேர் விடுதலை

Posted: 26 Jul 2016 02:11 PM PDT

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இவர்கள் அனைவரும் ராமேசுவரத்தைச் சேர்ந்தவர்கள்.

பேச்சு தோல்வி: ஜூலை 29-இல் வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்

Posted: 26 Jul 2016 02:11 PM PDT

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 29) திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள்

பி.ஆர்க். கலந்தாய்வு: 1,605 பேர் சேர்க்கை

Posted: 26 Jul 2016 02:10 PM PDT

பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) பட்டப்படிப்பில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் 1,605 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.

அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதாவுக்குப் பிடியாணை: திருப்பூர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 26 Jul 2016 02:09 PM PDT

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்குப் பிடியாணை

உள் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

Posted: 26 Jul 2016 02:08 PM PDT

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தங்கம் பவுனுக்கு ரூ.184 அதிகரிப்பு

Posted: 26 Jul 2016 02:08 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.184 அதிகரித்து, ரூ.23,512-க்கு விற்பனையானது.

மாயமான விமானம்: பயணித்தோர் விவரம் வெளியீடு

Posted: 26 Jul 2016 01:28 PM PDT

சென்னை அருகே மாயமான விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் பயணம் செய்தோரின் விவரம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: விரிவான விவாதம் தேவை: ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: விரிவான விவாதம் தேவை

Posted: 26 Jul 2016 01:27 PM PDT

சரக்கு-சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அரசமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றிச் செயல்படுத்துவதற்கு முன்பாக, விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டுமென தில்லியில்

மாயமான விமானம்: நீர்மூழ்கி கப்பல் மூலம் ஆழ்கடலில் தேடும் பணி தொடக்கம்

Posted: 26 Jul 2016 01:26 PM PDT

சென்னை அருகே காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் ஈடுபட உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக் கப்பல் 6 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை தேடுவதற்குரிய திறன் பெற்றதாகும்.

அரசுப் பள்ளியில் மது விருந்து;12 மாணவர்கள் சிக்கினர்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

Posted: 26 Jul 2016 01:26 PM PDT

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சக மாணவரின் பிறந்தநாளை பள்ளி வளாகத்திலேயே 12 மாணவர்கள் மது அருந்தி கொண்டாடி,

ஜே.இ.இ. முதல்நிலை தேர்வு ரேங்கிங்: பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படாது

Posted: 26 Jul 2016 01:25 PM PDT

ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.) முதல்நிலைத் தேர்வு தரவரிசைப் பட்டியலுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ள படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாஸ்த்ராவில் தொழில்முனைவோர் வளர்ச்சி மையம் தொடக்கம்

Posted: 26 Jul 2016 01:24 PM PDT

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் வளர்ச்சி மையத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விபத்து அல்ல பாடம்!

Posted: 26 Jul 2016 01:23 PM PDT

வான் பரப்பில் காணாமல்போன இந்திய விமானப் படையின் ராணுவ விமானம் ஏ.என்.32 இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை கிடைத்த சிறு சிறு துப்புகளும்கூட தவறானதாகவே முடிந்துள்ளன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும்போது

தேவைதான் பொது நுழைவுத் தேர்வு!

Posted: 26 Jul 2016 01:22 PM PDT

நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு பற்றிய சர்ச்சைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன. இது சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா அண்மையில் மக்களவையில் அ.தி.மு.க., பா.ம.க. உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றப்பட்டது.

கார்கில் போர் தியாகிகளுக்கு பிரதமர் புகழாரம்

Posted: 26 Jul 2016 01:19 PM PDT

கார்கில் போரில் இறுதி மூச்சு வரை போராடி உயிர்நீத்த ஒவ்வொரு வீரருக்கும் தாம் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிராம்பட்டினத்தில் 52.4 மி.மீ. மழை

Posted: 26 Jul 2016 01:18 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 52.4 மி.மீ. மழை பெய்தது.

"கோயில் சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க வேண்டும்'

Posted: 26 Jul 2016 01:18 PM PDT

கோயில் சுவர்களில் சுவரொட்டி ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

குடந்தையில் பசுமைத் தாயகம் சார்பில் பள்ளிகளில் 100 மரக்கன்றுகள்

Posted: 26 Jul 2016 01:17 PM PDT

தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட பசுமைத்தாயகம் நாளையொட்டி பல இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டும், அன்னதானம் வழங்கப்பட்டது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை

Posted: 26 Jul 2016 01:17 PM PDT

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுக்கூரில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

Posted: 26 Jul 2016 01:16 PM PDT

மதுக்கூர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் சார்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டையில் நாளை மின் வாரிய குறைதீர் கூட்டம்

Posted: 26 Jul 2016 01:16 PM PDT

பட்டுக்கோட்டை பாளையம் பகுதியில் உள்ள மின் வாரிய கோட்டச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 28) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

Posted: 26 Jul 2016 01:16 PM PDT

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமையம் சார்பில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிய செயல்வழிக் கற்றல், கற்பித்தலுக்கான புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.

தலித் கிறிஸ்தவர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 01:15 PM PDT

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தலித் கிறிஸ்தவர் நலச் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிராம்பட்டினத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

Posted: 26 Jul 2016 01:15 PM PDT

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இலவச பொது மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

சிற்றுந்து வயலில் சாய்ந்து விபத்து: 9 பேர் காயம்

Posted: 26 Jul 2016 01:14 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை சிற்றுந்து வயலில் இறங்கி ஒருபுறமாக சாய்ந்ததில் 9 பேர் காயமடைந்தனர்.

சாஸ்த்ராவில் தொழில்முனைவோர் வளர்ச்சி மையம் தொடக்கம்

Posted: 26 Jul 2016 01:14 PM PDT

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் வளர்ச்சி மையத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொண்டாட்டம்

Posted: 26 Jul 2016 01:13 PM PDT

வழக்குரைஞர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை வரவேற்று கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமையில், செயலாளர் தரணிதரன் முன்னிலையில் வழக்குரைஞர்கள் வெடிவெடித்து இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினர்.

அமைதிப் பேரணி

Posted: 26 Jul 2016 01:13 PM PDT

கார்கில் தினத்தையொட்டி, கும்பகோணம் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கம் சார்பில் அமைதி பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 01:12 PM PDT

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தின் சார்பில், கும்பகோணத்தில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜூலை 30-ல் பாபநாசத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 26 Jul 2016 01:12 PM PDT

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் தூர்வாரும் பணி

Posted: 26 Jul 2016 01:11 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் பொதுப் பணித் துறையின் கல்லணை கால்வாய் கோட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 15.75 லட்சம் காணிக்கை

Posted: 26 Jul 2016 01:11 PM PDT

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், பக்தர்கள் ரூ. 15.75 லட்சம் காணிக்கை செலுத்தியிருப்பது தெரியவந்தது.

41 ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

Posted: 26 Jul 2016 01:10 PM PDT

தஞ்சாவூர் சமூகப் பாதுகாப்பு துறை மூலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 41 ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

அதிராம்பட்டினத்தில் ஜூலை 28 மின் தடை

Posted: 26 Jul 2016 01:08 PM PDT

அதிராம்பட்டினம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 28) மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடித் தளங்களை ஆழப்படுத்த ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு: ஆட்சியர்

Posted: 26 Jul 2016 01:08 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீன்பிடித் தளங்களை ஆழப்படுத்த ரூ. 3 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

கல்லூரி மாணவர் சேவை சங்கம் சார்பில் சேங்கைத் தோப்பு குளம் தூர்வாரும் பணி தொடக்கம்

Posted: 26 Jul 2016 01:07 PM PDT

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மவுன்ட் சீயோன் ரோட்ராக்ட் சங்க மாணவர்கள் இணைந்து புதுகை சேங்கைத்தோப்பு குளத்தை தூர்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கினர்.

துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 26 Jul 2016 01:07 PM PDT

புதுக்கோட்டை நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பணியாற்றி வரும் துப்பரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிலக்கடலையில் ஊடுபயிராக உளுந்து பயிர் செய்தால் ரூ. 7,500 மானியம்

Posted: 26 Jul 2016 01:06 PM PDT

பொன்னமராவதி வட்டாரத்தில் நடப்பு காரீப் பருவத்தில் நிலக்கடலையில் உளுந்து பயிரை ஊடுபயிராக சாகுபடி செய்தால், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 7500 மானியம் வழங்கப்படும் என வேளாண் உதவி இயக்குநர் ஜெயபாலன் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்வு

Posted: 26 Jul 2016 01:06 PM PDT

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காஷ்மீரில் ராணுவத்தின் நடவடிக்கை குறித்த கருணாநிதி, சிதம்பரத்தின் விமர்சனம் கண்டனத்துக்குரியது: எச். ராஜா

Posted: 26 Jul 2016 01:05 PM PDT

காஷ்மீரில் ராணுவத்தின் நடவடிக்கை குறித்து திமுக தலைவர் கருணாநிதி, ப. சிதம்பரம் ஆகியோரின் விமர்சனம் கண்டனத்துக்குரியது என்றார் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா.

அழகிய நாச்சியம்மன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை

Posted: 26 Jul 2016 01:05 PM PDT

பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை அண்மையில் நடைபெற்றது.

"வாழ்வியலின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பது கம்ப காவியம்'

Posted: 26 Jul 2016 01:04 PM PDT

வாழ்வியலின் இன்ப துன்பங்களை வகையுற எடுத்துரைப்பது கம்பகாவியம்தான் என்றார் சேலம் தேவி குணசேகரன்.

சிறுபான்மையின மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை

Posted: 26 Jul 2016 01:04 PM PDT

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

விழுப்பணங்குறிச்சி,சோழமாதேவியில் ஜூலை 29-ல் அம்மா திட்ட முகாம்

Posted: 26 Jul 2016 01:03 PM PDT

அரியலூர் வருவாய் வட்டம் விழுப்பணங்குறிச்சி,உடையார்பாளையம் வருவாய் வட்டம் சோழமாதேவி ஆகிய கிராமங்களில் ஜூலை 29-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

தா.பழூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 01:03 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பழூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கறுப்புத்துணி கட்டியும்,காதில் பஞ்சு வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

தொழிலாளர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற...

Posted: 26 Jul 2016 01:02 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை,ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

Posted: 26 Jul 2016 01:02 PM PDT

பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில், பெரம்பலூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

மரவள்ளி: செஞ்சிலந்திப்பேன் மேலாண்மை

Posted: 26 Jul 2016 01:02 PM PDT

மரவள்ளி பயிரில் தற்போது காணப்படும் செஞ்சிலந்திப்பேன் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த , டைகோபால் மருந்தை 1 லிட்டருக்கு 2.5 மில்லி அல்லது புரோபைர்கைட் மருந்து 1.5 மில்லி 1 லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்தில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் சு. திவ்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினர் மோதல்: 2 பேர் கைது

Posted: 26 Jul 2016 12:59 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

ஆன்லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரம்

Posted: 26 Jul 2016 12:58 PM PDT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே,ஆன் லைன் வணிகத்தை தடை செய்ய வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரவையினர் தெருமுனைப் பிரசாரத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

இலவச தாய்-சேய் பாதுகாப்பு வாகனச் சேவை தொடங்கி வைப்பு

Posted: 26 Jul 2016 12:58 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் இலவச தாய்-சேய் பாதுகாப்பு வாகனத்தை ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

தா.பழூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 12:57 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பழூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கறுப்புத்துணி கட்டியும்,காதில் பஞ்சு வைத்தும் நூதன ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிடும் போராட்டம் வாபஸ்

Posted: 26 Jul 2016 12:57 PM PDT

செந்துறை அருகே கடந்த 27 நாட்களாக சுண்ணாம்புக் கல் சுரங்கத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயும், மகளும் போலீஸாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் துறை வாரியாக மாணவர்கள் கூட்டமைப்பு தொடக்கம்

Posted: 26 Jul 2016 12:56 PM PDT

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அனைத்து துறை மாணவர்களின் கூட்டமைப்பு தொடக்க விழா, கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கரும்பு நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி ஆக. 12-ல் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 12:56 PM PDT

பெரம்பலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள ரூ. 55 கோடியை உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஆக. 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கரும்பு விவசாய சங்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆணவக் கொலைகளைத் தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 12:55 PM PDT

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே, சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் ப. காமராசு தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச்செயலர் அ. ராஜேந்திரன், அமைப்பாளர் ஆ. தங்கவேல், நிர்வாகிகள் கா. பெரியசாமி, மு. மொஹைதீன், கற்பனை பித்தன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாளை மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

Posted: 26 Jul 2016 12:55 PM PDT

பிளஸ்-2 வரை பயிலும் மாணவ,மாணவிகளுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (ஜூலை 28) நடைபெற உள்ளன.

மைல் கல் மீது பைக் மோதி கட்டடத் தொழிலாளி சாவு

Posted: 26 Jul 2016 12:54 PM PDT

கரூர் அருகே மைல் கல் மீது பைக் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளி இறந்தார்.

ஒரு மணி நேரம் பலத்த மழை

Posted: 26 Jul 2016 12:54 PM PDT

கரூரில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் ஒரு மணிநேரம் இடைவிடாது பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கல்வி உதவித்தொகை:  சிறுபான்மையினர் விண்ணப்பிக்க அழைப்பு

Posted: 26 Jul 2016 12:53 PM PDT

கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

ரேஷன் பொருள்களின் இருப்பை ஆன்லைனில் அறியலாம்

Posted: 26 Jul 2016 12:53 PM PDT

கரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் 581 நியாயவிலைக் கடைகளும் கணினிமயமாக்கப்பட உள்ளன. இதன்மூலம் கடைகளில் உள்ள பொருட்களின் இருப்பை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.   

நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு திறப்பு: கிணறுகள், விவசாய நிலங்கள் பாதிப்பு

Posted: 26 Jul 2016 12:52 PM PDT

நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் கிணறுகள் சாயக்கழிவுகளால் நிரம்பியுள்ளன. இதனால் அப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.

லாரிகள் மோதல்: ஓட்டுநர் சாவு

Posted: 26 Jul 2016 12:52 PM PDT

குளித்தலை அருகே திங்கள்கிழமை இரவு லாரிகள்  மோதிக்கொண்ட விபத்தில்  ஓட்டுநர் இறந்தார்.

சின்னதாராபுரம் அருகே  வரும் 29-ம் தேதி அம்மா திட்ட முகாம்

Posted: 26 Jul 2016 12:47 PM PDT

சின்னதாராபுரம் அருகே உள்ள நடந்தையில் வரும் 29-ம் தேதி அம்மாதிட்ட முகாம் நடைபெற உள்ளது.

ஆண்டாங்கோவில்புதூரில் கால்நடை பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்

Posted: 26 Jul 2016 12:47 PM PDT

கரூர் மாவட்டம், தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டாங்கோவில் புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடைப் பாதுகாப்புத் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் சிறந்த கலப்பினக் கிடாரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளி  மாணவரின் படைப்புக்கு 2-ம் பரிசு

Posted: 26 Jul 2016 12:46 PM PDT

மாவட்ட அளவில் கரூர் பரணிபார்க் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக் கண்காட்சியில் வெள்ளியணை அரசுப் பள்ளி மாணவரின் படைப்புக்கு மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடி விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு

Posted: 26 Jul 2016 12:31 PM PDT

பயிர்க்கடனால் பயன்பெற்ற விவசாயிகள் குறித்த விவரங்கள், கூட்டுறவுத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.

நிதி நிலை கட்டுக்குள் உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 26 Jul 2016 12:31 PM PDT

தமிழக அரசின் நிநி நிலை கட்டுக்குள் இருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை: அமைச்சர் சம்பத்

Posted: 26 Jul 2016 12:30 PM PDT

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை மீண்டும் தமிழகத்துக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தொழில்துறை அமைச்சர் சம்பத் கூறினார்.

குளச்சல் துறைமுக விவகாரம் அமைச்சர் கருத்துக்கு மறுப்பு: திமுக கடும் அமளி

Posted: 26 Jul 2016 12:29 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகம் தொடர்பாக அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்த கருத்துகளுக்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தில்லியில் சோனியா காந்தியுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு

Posted: 26 Jul 2016 12:21 PM PDT

தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை சந்தித்து

"ஆயுதப்படை சட்டம் வாபஸ் பற்றி உள்துறைதான் முடிவெடுக்க வேண்டும்'

Posted: 26 Jul 2016 12:21 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் முடிவெடுக்க முடியும் என்று

முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை: எஞ்சிய மீனவர்கள் ஓரிரு நாள்களில் விடுதலையாவர்

Posted: 26 Jul 2016 12:18 PM PDT

முதல்வர் ஜெயலலிதாவின் இடையறாத முயற்சிகளின் பயனாக, இலங்கைச் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 43 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிங்கம்புணரியில் விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 26 Jul 2016 12:17 PM PDT

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

டி.புதுப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா

Posted: 26 Jul 2016 12:17 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே டி.புதுப்பட்டியில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர உற்சவ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில் தகராறு: 29 வழக்குரைஞர்கள் மீது வழக்கு: 5 பேர் கைது

Posted: 26 Jul 2016 12:16 PM PDT

சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் தகராறு செய்ததாக, 29 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இதில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

Posted: 26 Jul 2016 12:16 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காவலர்களுக்கு கலவரத்தை அடக்கும் பயிற்சி

Posted: 26 Jul 2016 12:16 PM PDT

கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி காவலர்களுக்கு கலவர அடக்கும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சாயல்குடி நகர பாஜக நிர்வாகிகள் தேர்வு

Posted: 26 Jul 2016 12:16 PM PDT

சாயல்குடி பாஜக புதிய நிர்வாகிகள் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.

கமுதியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 26 Jul 2016 12:13 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் செவ்வாய்க்கிழமை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுவயலை தனி தாலுகாவாக அமைக்க தி.க. கோரிக்கை

Posted: 26 Jul 2016 12:13 PM PDT

காரைக்குடி அருகேயுள்ள புதுவயலை தனி தாலுகாவாக அமைக்க வேண்டும் என்று திராவிடர் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேவகோட்டை ஆசிரியருக்கு கவிச்சுடர் விருது

Posted: 26 Jul 2016 12:11 PM PDT

தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியருக்கு காரைக்குடி வள்ளுவர் பேரவை சார்பில் கவிச்சுடர் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

Posted: 26 Jul 2016 12:11 PM PDT

ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்களின் சங்க நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதிய கல்விக் கொள்கை: கருத்துகள் தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted: 26 Jul 2016 12:11 PM PDT

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்துக்கு இலவச மருந்து வழங்கல்

Posted: 26 Jul 2016 12:10 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ட்ரூபா முதியோர் இல்லத்துக்கு முதியோர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிகாரிகளின் அலட்சியத்தால் மகள் இறந்த அதே இடத்தில் மின்சாரம் பாய்ந்து தந்தை சாவு

Posted: 26 Jul 2016 12:10 PM PDT

ராமநாதபுரத்தில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மகள் இறந்த அதே இடத்தில் மின்கம்பி உரசியதில் கட்டடத் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

உயர் மருத்துவப் படிப்புகள்: 166 இடங்கள் நிரம்பின

Posted: 26 Jul 2016 12:10 PM PDT

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 166 இடங்கள் பூர்த்தியாகின.

சிவகங்கை அருகே சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம்

Posted: 26 Jul 2016 12:09 PM PDT

சிவகங்கை அருகே குமாரப்பட்டி ஊராட்சி சேந்தி உடையநாதபுரம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

என்கவுன்ட்டர் அச்சத்தில் ஹார்திக் படேல்

Posted: 26 Jul 2016 12:09 PM PDT

தாம் போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொல்லப்படலாம் என்று படேல் சமூக போராட்டக் குழுத் தலைவர் ஹார்திக் படேல் அச்சம் தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டோம்

Posted: 26 Jul 2016 12:09 PM PDT

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மானாமதுரையில் பாஜக செயற்குழுக் கூட்டம்

Posted: 26 Jul 2016 12:09 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பாஜக நகர் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கலாம் சமாதியில் குடும்பத்தினர் துவா

Posted: 26 Jul 2016 12:08 PM PDT

ராமேசுவரம் அருகே உள்ள அப்துல்கலாம் சமாதியில் அவரது குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை துவா செய்தனர்.

"காமராஜர் சிலைகள் வைக்க அனுமதி கோரி சென்னையில் ஆகஸ்ட் 19இல் ஆர்ப்பாட்டம்'

Posted: 26 Jul 2016 12:08 PM PDT

நெல்லை,சிவகங்கையில் காமராஜர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கக் கோரி ஆக.19இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் என்.ஆர். தனபாலன் தெரிவித்தார்.

படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Jul 2016 12:08 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராமநாதபுரத்தில் அம்மா வேலைவாய்ப்புத் திட்டம்: ஆட்சியர்

Posted: 26 Jul 2016 12:07 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா திறன் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

சிறார்களை பணியில் அமர்த்தினால் இனி 2 ஆண்டுகள் சிறை : நிறைவேறியது சட்டத் திருத்த மசோதா

Posted: 26 Jul 2016 12:07 PM PDT

பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறார்களை பணியில் அமர்த்தினால் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகையும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மேலும் இருவருக்கு 6 மாதம் சிறை: ஜாதியை சொல்லி திட்டியவருக்கு ஓராண்டு சிறை

Posted: 26 Jul 2016 12:07 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே சூடியூரில் ஜாதியை சொல்லித் திட்டியவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், மேலும், இருவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

கலாம் நினைவிடம் வரை சைக்கிள் பேரணி: ராமநாதபுரத்தில் வரவேற்பு

Posted: 26 Jul 2016 12:06 PM PDT

புதுக்கோட்டையிலிருந்து கலாம் நினைவிடத்துக்கு சைக்கிளில் பேரணியாக வந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

"பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்'

Posted: 26 Jul 2016 12:06 PM PDT

பெண்களை இழிவாக சித்திரிக்கும் சிவப்பழகு கிரீம்களின் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™