Tamil News | Online Tamil News |
- வக்கீல்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்ற பணிகள்... ஸ்தம்பிப்பு! போலீசாருடன் தள்ளுமுள்ளு; போக்குவரத்தும் பாதிப்பு
- பார்லி.,க்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.பி.,க்கு தடை : விசாரணை நடத்தவும் கமிட்டி அமைப்பு
- 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்...அனுமதி ! கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் வருமா?
- ஜெ., - கருணாநிதி பெயரை சொல்லலாமா? சபையில் அமளி : தி.மு.க., வெளிநடப்பு
- தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினுக்கு 'செக்'
- 3.5 கி.மீ., ஆழத்தில் விமானத்தை தேடும் பணி இன்று துவக்கம் கடலோர காவல் படை அதிகாரி பேட்டி
- வழக்கறிஞர்களுக்கு பொறுப்பு உள்ளது: கவுல்
- பாலாறு விவகாரத்தில் ஆந்திராவுக்கு எதிராக தீர்மானம்: ஸ்டாலின் வலியுறுத்தல்
- பேச விடு... பேச விடு... ஸ்டாலினை பேச விடு'
- ஜம்மு, திருப்பதியில் ஐ.ஐ.டி., ; மசோதா நிறைவேறியது
- அரசு ஊழியர் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன!
- இஸ்ரேல் பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது
- பெண்ணை இழுத்து சென்றது புலி; மீட்க போன தாய் பரிதாப பலி
- ஜப்பானில் மர்மநபர் நடத்திய ‛கத்தி' தாக்குதல்; 19 பேர் பலி
| Posted: 25 Jul 2016 09:31 AM PDT சென்னை: சென்னையில், நேற்று வழக்கறிஞர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிவில் நீதிமன்றங்கள் உட்பட, பல நீதிமன்றங்களின் பணிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தில் பங்கேற்க, மாநிலம் முழுவதும் இருந்து, ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் வந்ததால், அவர்களை தடுக்கும் வகையில், உயர் நீதிமன்ற நுழைவாயில்களை போலீசார் பூட்டினர். இதனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வழக்கறிஞர்களும் பாதிக்கப்பட்டனர்.நீதிமன்றங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ... |
| பார்லி.,க்குள் நுழைய ஆம் ஆத்மி எம்.பி.,க்கு தடை : விசாரணை நடத்தவும் கமிட்டி அமைப்பு Posted: 25 Jul 2016 09:40 AM PDT புதுடில்லி,: ஆம் ஆத்மி எம்.பி., பகவந்த் மான், பார்லிமென்டின் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றி வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டது குறித்து விசாரணை நடத்த, ஒன்பது பேர் கமிட்டியை, லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அமைத்துள்ளார். மேலும், பார்லிமென்ட்டுக்கு வரவும், அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில்... பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, ஆம் ஆத்மி சார்பில், எம்.பி.,யாக தேர்வானவர் பகவந்த் மான். அவர், தன் காரில், பார்லிமென்ட்டுக்கு சென்ற காட்சிகளை, மொபைல் போன்மூலம் படம் பிடித்தார். அதை, அவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டார்; ... |
| 24 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்...அனுமதி ! கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் வருமா? Posted: 25 Jul 2016 09:43 AM PDT புதுடில்லி,: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின், வினோத நோயுள்ள, 24 வார கருவை கலைக்க, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பாலியல் பலாத்காரம் போன்ற அசாதாரண சூழ்நிலையில் கருவை கலைக்க, தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான சட்டத் திருத்தம் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெண் சிசுக்கள் கொல்லப்படுவதை தடுப்பது போன்ற காரணங்களுக்காக, 1971ல், கருக்கலைப்பு தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இது, 1972 ஜனவரி, 1ம் தேதி முதல் நடைமுறையில் உள்ளது.இந்த சட்டத்தின்படி, எந்தச் சூழ்நிலையிலும், 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைக்க ... |
| ஜெ., - கருணாநிதி பெயரை சொல்லலாமா? சபையில் அமளி : தி.மு.க., வெளிநடப்பு Posted: 25 Jul 2016 10:27 AM PDT சென்னை: பட்ஜெட் மீதான விவாதத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நரசிம்மன் பேசும் போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி பெயரை குறிப்பிட்டு பேசினார். அதற்கு, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எங்கள் கட்சி தலைவர் பெயரை கூறினால், முதல்வர் பெயரை கூறுவோம்' எனக் கூறியதுடன், அவரது பெயரையும் கூறினர். அதற்கு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவிக்க, கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்: சபாநாயகர் தனபால்: சபையில் குந்தகம் விளைவிக்காதீர்கள்; அனைவரும் உட்காருங்கள். 'மாண்புமிகு உறுப்பினர்' எனக் கூறித் தான், அவரது பெயரை ... |
| தி.மு.க.,வில் மீண்டும் அழகிரி? ஸ்டாலினுக்கு 'செக்' Posted: 25 Jul 2016 10:38 AM PDT தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் ஆதிக்கத்தை குறைக்க, மீண்டும் அழகிரியை கட்சிக்குள் கொண்டு வரும் முயற்சியில், கட்சி தலைவர் கருணாநிதி இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தி.மு.க., பொருளாளராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கும் ஸ்டாலின், கட்சிக்குள் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார். மொத்த கட்சி நிர்வாகத்தையும் தன் கைக்குள் வைத்துள்ளார். கட்சியின் தலைவராக இருந்தும், கருணாநிதியால், கட்சிக்குள் நினைத்ததை செய்யமுடியாத நிலை நிலவி வருகிறது.பிரதான எதிர்க்கட்சியாக... கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ... |
| 3.5 கி.மீ., ஆழத்தில் விமானத்தை தேடும் பணி இன்று துவக்கம் கடலோர காவல் படை அதிகாரி பேட்டி Posted: 25 Jul 2016 10:40 AM PDT சென்னை,: ''நடுவானில் காணாமல் போன, விமானப்படை விமானத்தை கடலுக்கு அடியிலும் தேடும் பணி இன்று துவங்குகிறது,'' என, கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி.,யான ராஜன் பர்கோத்ரா தெரிவித்தார். சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, ஜூலை, 22ல், முப்படைகளை சேர்ந்த, 29 பேருடன், அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு சென்ற விமானப்படை விமானம் மாயமானது. அதன், தேடுதல் பணி குறித்து, ராஜன் பர்கோத்ரா நேற்று கூறியதாவது:கடந்த நான்கு நாட்களாக, விமானப்படை மற்றும் கடற்படையுடன் இணைந்து இரவு, பகலாக விமானத்தை தேடி வருகிறோம். வர்த்தக கப்பல்கள், இந்திய விண்வெளி ஆய்வு ... |
| வழக்கறிஞர்களுக்கு பொறுப்பு உள்ளது: கவுல் Posted: 25 Jul 2016 10:51 AM PDT சென்னை:''வழக்கறிஞர்களுக்கு பொறுப்பு உள்ளது. உங்களைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் என்ன நினைப்பர். மற்றவர்களுக்கு என்ன கருத்தை வெளிப்படுத்த நீங்கள் விரும்புகிறீர்கள்,'' என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர்கள் போராட்டம், உயர் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்தபோது, வழக்கம் போல, நீதிமன்றத்தில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்தன. தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய முதல் பெஞ்ச், வழக்கு விசாரணையை நடத்தியது.காலை, 11:15 மணிக்கு, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சூரியபிரகாசம், ''பந்த் நடப்பது போல் உள்ளது; ஆவின் ... |
| பாலாறு விவகாரத்தில் ஆந்திராவுக்கு எதிராக தீர்மானம்: ஸ்டாலின் வலியுறுத்தல் Posted: 25 Jul 2016 10:59 AM PDT சென்னை:''ஆந்திர அரசை கண்டித்து, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.இது தொடர்பாக நடந்த விவாதம்: ஸ்டாலின்: ஆந்திர மாநில அரசு, பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்து, ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்துள்ளேன்.சபாநாயகர் தனபால்: இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதற்கு குந்தகம் விளைவிக்காதபடி பேச வேண்டும்.ஸ்டாலின்: வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே பாலாறு செல்கிறது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. 4.50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களுக்கு, பாசன ... |
| பேச விடு... பேச விடு... ஸ்டாலினை பேச விடு' Posted: 25 Jul 2016 11:07 AM PDT சென்னை,: சட்டசபை, நேற்று துவங்கியதும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாலாறு பிரச்னை குறித்து பேசினார். அவர் பேசும்போது, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் குறுக்கிட்டார்; அவரை சபாநாயகர் அனுமதித்தார். அதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 'ஸ்டாலின் பேச்சை முடிக்க அனுமதிக்க வேண்டும்' என வலியுறுத்தினர்; சபாநாயகர் அனுமதிக்கவில்லை.அதைத் தொடர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து நின்று, 'பேச விடு பேச விடு... எதிர்க்கட்சித் தலைவரை பேச விடு' என கோஷம் எழுப்பினர்.சபாநாயகர் தனபால் எழுந்து, ''நீங்கள் செய்வது முறையல்ல; அனைவரும் உட்காருங்கள். நான் ... |
| ஜம்மு, திருப்பதியில் ஐ.ஐ.டி., ; மசோதா நிறைவேறியது Posted: 25 Jul 2016 11:17 AM PDT புதுடில்லி; ஜம்மு, திருப்பதி, பாலக்காடு, கோவா, தார்வாட், பிலாய் ஆகிய இடங்களில், புதிதாக ஆறு ஐ.ஐ.டி.,க்களை துவங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. இதற்கான மசோதாவை தாக்கல் செய்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:எஸ்.சி., - எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள், முதுகலை பட்டப் படிப்பில், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலே, என்.இ.டி., எனப்படும் தேசிய திறனறி தேர்வில் பங்கேற்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார். ... |
| அரசு ஊழியர் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன! Posted: 25 Jul 2016 12:59 PM PDT
புதுடில்லி : ஊழல், லஞ்சத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசு ஊழியர்களின் சந்தேகத்துக்குரிய வங்கி கணக்குகளை, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையம், ஆராய்ந்து வருகிறது. நாடு முழுவதும் நடக்கும் வங்கி பரிவர்த்தனைகளை, நிதி புலனாய்வு பிரிவு சேகரித்து ஆராய்ந்து வருகிறது. சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனை அறிக்கையை, இந்த அமைப்பு தயாரிக்கிறது. மேலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன. இந்த அறிக்கையை, மத்திய அமலாக்கத் துறை, சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, 'செபி' எனப்படும், பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ... |
| இஸ்ரேல் பெண் பாலியல் பலாத்காரம்; 2 பேர் கைது Posted: 25 Jul 2016 01:43 PM PDT புதுடில்லி : மணாலியில் இஸ்ரேல் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இமாசல பிரதேசம் மணாலியில் டாக்சிக்காக நின்று கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு காரில் லிப்ட் தந்த 6 பேர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அவரை பலாத்காரம் செய்தனர். கடந்த 23ம் தேதி நடந்த இந்த சம்பவம் நடந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், குற்றவாளிகள் 2 பேரை கைது செய்தனர். குலு மாவட்டத்தில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, கடந்த 4 ஆண்டுகளில் இது 3வது ... |
| பெண்ணை இழுத்து சென்றது புலி; மீட்க போன தாய் பரிதாப பலி Posted: 25 Jul 2016 02:39 PM PDT பீஜிங்: சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில், புலியிடம் சிக்கிய, தன் மகளை மீட்க சென்ற தாய், மற்றொரு புலியால் தாக்கப்பட்டு பலியான சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பீஜிங் நகரில், பிரசித்தி பெற்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, பார்வையாளர்கள், தங்கள் சொந்த வாகனத்தில் சென்று, வன விலங்குகளை பார்வையிடும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தகராறால் விபரீதம் : இந்நிலையில், சமீபத்தில் ஒரு குடும்பத்தினர், தங்கள் காரில், அந்த பூங்காவுக்கு சென்றனர். பூங்காவின் ... |
| ஜப்பானில் மர்மநபர் நடத்திய ‛கத்தி' தாக்குதல்; 19 பேர் பலி Posted: 25 Jul 2016 02:55 PM PDT சிகமிகரா : ஜப்பானில் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில், மர்மநபர் கத்தியை கொண்டு தாக்கியதில் 19 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காமயடைந்தனர். ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகருக்கு அருகிலுள்ள சகமிஹரா நகரிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லத்தில் புகுந்த மர்மநபர், கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு வெறித்தனமாக தாக்கினார். இச்சம்பவத்தில் 19 பேர் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கத்தியால் தாக்கிய 26 வயது நிரம்பிய நபரை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியவன் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 26,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |