Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பி.இ. துணைக் கலந்தாய்வு: நாளை விண்ணப்பப் பதிவு

Posted: 25 Jul 2016 01:27 PM PDT

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளது.

உளவுத்துறை காவலர் போல் நடித்து அமைச்சரை ஏமாற்றிய நபர் கைது

Posted: 25 Jul 2016 01:27 PM PDT

மதுரையில் அமைச்சரிடம் உளவுத்துறைக் காவலர் எனக்கூறி நடித்த ஓய்வு பெற்ற தலைமைக் காவலரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

7 பெண்களை ஏமாற்றித் திருமணம்: வங்கி ஊழியர் கைது

Posted: 25 Jul 2016 01:26 PM PDT

7 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக மனைவி அளித்தப் புகாரின் பேரில், வங்கி ஊழியரை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நியாயமான கோரிக்கை!

Posted: 25 Jul 2016 01:26 PM PDT

மெட்ரோ ரயில் திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இது குறித்துப் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்த போதிலும், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் (விம்கோ நகர்) இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மீண்டும் இதனை வலியுறுத்தியிருக்கிறார்.

எல்லாம் இயந்திர மயம்!

Posted: 25 Jul 2016 01:25 PM PDT

இன்றைக்கு அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) குறும்பனுவல் (டெக்ஸ்டிங்) அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்னவோ உண்மை. இத்தகைய கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) அனுப்புவோர் தம் மூளையில் உண்டாகும் அதிர்வலைகள் வழக்கமான மனிதர்களின் மூளைத் தாளலயத்தைவிட மாறுபட்டதாகத் தெரிகிறது என்பது ஒரு அதிர்ச்சி தகவல். "வலிப்புநோய் மற்றும் நடத்தைப் பாங்கு' எனும் அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட உண்மை இது.

நீதிக்கான போராட்டம்

Posted: 25 Jul 2016 01:24 PM PDT

சமுதாயத்தில் தவறிழைப்பவர்களைத் திருத்தவும், கொடிய குற்றங்களைச் செய்பவர்களுக்குத் தண்டனை அளிக்கவும்தான் சிறைகள் உருவாக்கப்பட்டன.

வருவாய்ப் பற்றாக்குறை குறைய வாய்ப்பு: ஓ.பன்னீர்செல்வம்

Posted: 25 Jul 2016 12:18 PM PDT

வரும் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை குறைய வாய்ப்புள்ளது என்று நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்தார்.

110 விதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? திமுக கேள்வி

Posted: 25 Jul 2016 12:17 PM PDT

பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

பதிலளிக்க அதிமுக எம்எல்ஏவை அழைத்ததால் திமுக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்

Posted: 25 Jul 2016 12:16 PM PDT

எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பதிலளிக்க ஆளும் கட்சி உறுப்பினரை அனுமதிக்கலாமா என்று சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலாறு விவகாரத்தை தீர்க்காதது ஏன்? திமுகவுக்கு அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

Posted: 25 Jul 2016 12:16 PM PDT

திமுக ஆட்சியிலேயே பாலாறு விவகாரத்தை பேசித் தீர்க்காதது ஏன் என்று நெடுஞ்சாலைகள்-பொதுப்பணித் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல்

Posted: 25 Jul 2016 12:15 PM PDT

மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 5 பேரின் மறைவுக்கு, சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

வருவாய்ப் பற்றாக்குறை: திமுக - அதிமுக உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் விவாதம்

Posted: 25 Jul 2016 12:14 PM PDT

தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை ஆங்கிலத்தில் விவாதம் புரிந்தனர்.

"தகுதியுள்ளோருக்கு முதியோர் ஓய்வூதியம்'

Posted: 25 Jul 2016 12:13 PM PDT

தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

கருணாநிதி பெயரை குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு: திமுக- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

Posted: 25 Jul 2016 12:13 PM PDT

சட்டப் பேரவையில் கருணாநிதி பெயரை அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பாலாறு: ஆந்திர அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted: 25 Jul 2016 12:13 PM PDT

பாலாறு விவகாரத்தில் ஆந்திர அரசைக் கண்டித்து, சட்டப் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தலித்துகள் மீதான தாக்குதல்: மோடி மெளனம் சாதிப்பது ஏன்? மாயாவதி கேள்வி

Posted: 25 Jul 2016 12:11 PM PDT

தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி மெளனம் சாதிப்பது ஏன்? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி: விசாரணை ஒத்திவைப்பு

Posted: 25 Jul 2016 12:11 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கை, சிபிஐ வழக்குரைஞர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புதன்கிழமை (ஜூலை 27) வரை தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா ஆஜராவதற்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted: 25 Jul 2016 12:10 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞராக பி.வி. ஆச்சார்யா ஆஜரானதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

Posted: 25 Jul 2016 12:10 PM PDT

மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதலிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ரேணுகா செளத்ரி ஆகியோருக்கு எதிராக மாநிலங்களவையில் சிரோமணி அகாலி தளம் கட்சியினர் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தனர்.

நெட் தேர்வு: எஸ்.சி., ஓபிசி பிரிவினருக்கு விதிகள் தளர்வு

Posted: 25 Jul 2016 12:10 PM PDT

தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே தேசிய தகுதித் தேர்வில் (நெட்) பங்கேற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 25 Jul 2016 12:08 PM PDT

பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,400 கோடி வரை கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத வழக்கில், தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அழைப்பு முறிவு பிரச்னை ஓராண்டுக்குள் 1 லட்சம் செல்லிடப்பேசி கோபுரங்கள்: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதி

Posted: 25 Jul 2016 12:08 PM PDT

அழைப்பு முறிவு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஓராண்டுக்குள் 1 லட்சம் செல்லிடப்பேசி கோபுரங்களை அமைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

சுதந்திர தினத்தில் தாக்குதல் நடத்த சதி: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 25 Jul 2016 12:08 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை சுட்டுக் கொன்றனர்.

அரசு ஊழியர்களின் வங்கிப் பரிமாற்றங்களை கண்காணிக்கிறது சிவிசி

Posted: 25 Jul 2016 12:07 PM PDT

ஊழலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களின் சர்ச்சைக்குரிய வங்கிப் பரிமாற்றங்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது.

மாயமான விமானம் குறித்து பாரிக்கர் விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

Posted: 25 Jul 2016 12:07 PM PDT

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான ஏ.என்.32 ரக விமானப் படை விமானத்தை கண்டுபிடிப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மக்களவையில் விளக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்தார்.

பாகிஸ்தான் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டாம்: தூதரக அதிகாரிகளுக்கு இந்தியா அறிவுறுத்தல்

Posted: 25 Jul 2016 12:06 PM PDT

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அஸ்வின் அசத்தல்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Posted: 25 Jul 2016 12:04 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

குத்துச்சண்டையில் கோலோச்சுமா இந்தியா?

Posted: 25 Jul 2016 12:03 PM PDT

இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டே குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்று வந்தாலும், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்ற பிறகுதான் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.

1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்

Posted: 25 Jul 2016 12:01 PM PDT

23-ஆவது ஒலிம்பிக் போட்டி 1984-ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 வரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இந்த நகரில் நடைபெற்ற 2-வது ஒலிம்பிக் போட்டி இது. இதற்கு முன்பு, 1932-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலீஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

"சாய்' மீது நர்சிங் யாதவ் குற்றச்சாட்டு

Posted: 25 Jul 2016 12:00 PM PDT

ஊக்கமருந்து விவகாரத்தில் தான் சிக்கியதற்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (சாய்) சதியே காரணம் என்று இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

தோல்வியின் பிடியில் பாகிஸ்தான்

Posted: 25 Jul 2016 11:59 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 565 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான், 4-ஆவது நாளில் தேநீர் இடைவேளையின்போது 49 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது.

இசை நிகழ்ச்சியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட அகதி குண்டு வெடித்து சாவு: மதநோக்கம் காரணம்: ஜெர்மனி காவல்துறை

Posted: 25 Jul 2016 11:58 AM PDT

ஜெர்மனியில் இசை நிகழ்ச்சியின்போது வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தத் திட்டமிட்ட சிரியா அகதி, அந்த குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டார்.

நேபாளம்: புதிய பிரதமரை ஒரு வாரத்தில் தேர்ந்தெடுக்க அதிபர் வலியுறுத்தல்

Posted: 25 Jul 2016 11:57 AM PDT

நேபாளத்தில் புதிய பிரதமரை ஒரு வார காலத்துக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசியல் கட்சியினரிடம் அதிபர் வித்யாதேவி பண்டாரி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம்: ஆஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தல்

Posted: 25 Jul 2016 11:57 AM PDT

ஆஸ்திரேலியாவுக்கு உண்மையான பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால், பயங்கரவாதத்துக்கு எதிரான மிகக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அந்த நாட்டுப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறியுள்ளார்.

ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

Posted: 25 Jul 2016 11:56 AM PDT

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் டெபி வாஸர்மன் ஷூல்ஸ் ராஜிநாமா செய்தார்.

கற்கால மனிதன் கயிறு தயாரித்தது எப்படி? புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted: 25 Jul 2016 11:55 AM PDT

40,000 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் கால் பதித்த ஆதி மனிதர்கள், வேட்டைக்கு மிக அவசியமான கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்பது குறித்து இதுவரை இருந்து வந்த மர்மம் விலகியுள்ளது.

மெக்ஸிகோவில் மேலும் ஒரு மேயர் சுட்டுக் கொலை

Posted: 25 Jul 2016 11:54 AM PDT

மெக்ஸிகோவில் தெற்கு கியூரிரோ மாவட்டத்தில் மேலும் ஒரு மேயர் மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

லிபியாவில் கரையொதுங்கிய 41 அகதிகள் உடல் மீட்பு

Posted: 25 Jul 2016 11:54 AM PDT

லிபியக் கடற்கரையில் ஒதுங்கிய 41 பேரது உடல்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு:அமெரிக்காவில் இருவர் பலி

Posted: 25 Jul 2016 11:53 AM PDT

அமெரிக்காவில், கேளிக்கை விடுதி அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரத்தில் நவ. 4 முதல் 13 வரை புத்தகத் திருவிழா

Posted: 25 Jul 2016 11:53 AM PDT

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை 10 நாள்கள் புத்தகத்திருவிழா நடத்துவது என திங்கள்கிழமை கலை இலக்கிய ஆர்வலர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இராக்கில் தற்கொலைத் தாக்குதல்: 10 பேர் சாவு

Posted: 25 Jul 2016 11:53 AM PDT

இராக்கில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

பொதுப் பட்டாவை ரத்து செய்ய திருப்பாலைக்குடி மீனவர்கள் கோரிக்கை

Posted: 25 Jul 2016 11:52 AM PDT

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திருப்பாலைக்குடியில் மீனவர்கள் வலையை காயப்போடும் இடத்தை பொதுப் பட்டாவாக கொடுத்ததை ரத்து செய்யுமாறு, அப்பகுதியினர் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2016 11:51 AM PDT

மானாமதுரை ஒன்றியம் முத்தனேந்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது. விலைவாசி உயர்வைத் தடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் முனியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பரமாத்மா, ஆண்டி, ராஜாராம், முருகன், சேது, பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 25 Jul 2016 11:51 AM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், ஆட்சியர் எஸ். நடராஜன் தலைமையில், ஜூலை 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

சிறு தேயிலை விவசாயிகளுக்கு சலுகைகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 25 Jul 2016 11:50 AM PDT

சிறு தேயிலை விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

கனரா வங்கி லாபம் 52% சரிவு

Posted: 25 Jul 2016 11:50 AM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கியின் முதல் காலாண்டு லாபம் 52.1 சதவீதம் சரிவடைந்தது. இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:

ராமநாதபுரத்தில் பலத்த மழை

Posted: 25 Jul 2016 11:49 AM PDT

ராமநாதபுரத்தில் நீண்ட நாள்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலை பலத்த மழை பெய்தது.

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் காலாண்டு லாபம் ரூ.630 கோடி

Posted: 25 Jul 2016 11:49 AM PDT

வீட்டு வசதிக் கடன் அளித்து வரும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் முதல் காலாண்டில் ரூ.630 கோடி லாபம் ஈட்டியது.

சென்செக்ஸ் மீண்டும் 28,000 புள்ளிகளை எட்டியது

Posted: 25 Jul 2016 11:49 AM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் மீண்டும் 28,000 புள்ளிகளை எட்டியது.

யுனிகெம் லாபம் ரூ.25 கோடி

Posted: 25 Jul 2016 11:49 AM PDT

யுனிகெம் லேபரட்டரீஸின் முதல் காலாண்டு லாபம் ரூ.25.76 கோடியாக இருந்தது.

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்குப்பூஜை

Posted: 25 Jul 2016 11:49 AM PDT

மானாமதுரை தயாபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி மாத திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாரியம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். அதன்பின் கோயில் சன்னதியில் நடந்த விளக்குப் பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி பூஜை நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி சுப்ரமணியன் செய்திருந்தார்.

அரியவகை மானை வேட்டையாடிய வழக்கு: சல்மான் கான் விடுதலை

Posted: 25 Jul 2016 11:48 AM PDT

சிங்காரா எனப்படும் அரியவகை மானை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் ஹிந்தி நடிகர் சல்மான் கானை விடுதலை செய்து ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

காவிரி: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழகம், கர்நாடக அரசுகளுக்கு உத்தரவு

Posted: 25 Jul 2016 11:48 AM PDT

காவிரியில் இருந்து உரிய தண்ணீர் திறந்து விடப்படாத விவகாரத்தில் தமிழக அரசும், கர்நாடக அரசும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதன்கிழமை (ஜூலை 27) தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 25 Jul 2016 11:47 AM PDT

சாத்தூரில் 8-ஆவது வார்டு பெண்கள்  நகராட்சி அலுவலகத்தை திங்க ள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியருக்கு மீண்டும் பணி வழங்க கோரி கிராம மக்கள் மனு

Posted: 25 Jul 2016 11:47 AM PDT

ராஜபாளையம், அயன் கொல்லங் கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி. முத்துக்குமரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

செலவு நிதி வராததால் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தவிப்பு

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

சட்டப்பேரவை தேர்தலுக்கு மாவட்ட தேர்தல் பிரிவுகள் மூலம் செலவிடப்பட்ட நிதி ரூ.1 கோடி இதுவரை வழங்கப்படாததால் சம்பந்தப்பட்ட அலுவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

கலாம் குறித்த "அஞ்சல் அட்டை' பதிவுகள் புத்தகமாக தொகுப்பு

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர் குறித்து அஞ்சல் அட்டையில் எழுதப்பட்ட மக்களின் கருத்துகளை, கேரளத்தை சேர்ந்த ஒரு தன்னார்வ நிறுவனம் புத்தகமாகத் தொகுத்து வருகிறது.

பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் 24 வார கால கருவைக் கலைக்க அனுமதி: உச்சநீதி மன்றம்

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் வயிற்றில் இருக்கும் 24 வார கால குறைபாடுடைய கருவைக் கலைப்பதற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

சிவகாசி ஏ.வி.டி.பாடசாலைத் தெருவைச் சேர்ந்த ஓவியர் டேனியல்(75). இவரது மனைவி புவனேஸ்வரி(72). இவர் முண்டகன் தெருவில் திங்கள்கிழமை மாலை நடந்து சென்றபோது, பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினராம். சிவகாசி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சுவரில் துளையிட்டு நகை பணம் திருட்டு

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டிக்குறிச்சி கிராமத்தில் வசிப்பவர் வீரம்மாள்(40). இவர் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றுள்ளார். திங்கள்கிழமை வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோதுதான் வீட்டின் சுவரில் துளையிடப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த வழியாக வீட்டுக்குள் வந்த நபர், பீரோவை உடைத்து அதிலிருந்த கொலுசு, ஒரு பவுன் நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக வீரம்மாள் பந்தல்குடி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பாஜகவின் கொள்கைகள் தலித்துகளுக்கு எதிரானவை: டி.ராஜா குற்றச்சாட்டு

Posted: 25 Jul 2016 11:46 AM PDT

பாஜகவின் கொள்கைகள் தலித்துகளுக்கு எதிராக உள்ளன என்று மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி. ராஜா குற்றம்சாட்டினார்.

விருதுநகர் அருகே முன்னெச்சரிக்கையாக 14 பேர் மீது வழக்கு

Posted: 25 Jul 2016 11:45 AM PDT

விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரையை சேர்ந்த பெண்ணும் காளப்பெருமாள்பட்டியை சேர்ந்த இளைஞரும் ஜூலை 15 இல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணம் என்ன? சிந்து விளக்கம்

Posted: 25 Jul 2016 11:45 AM PDT

பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு கட்சித் தலைமை தன்னை வலியுறுத்தியதால்தான் பாஜகவிலிருந்து வெளியேறினேன் என்று நவஜோத் சிங் சித்து விளக்கமளித்துள்ளார்.

மதுக்கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

Posted: 25 Jul 2016 11:45 AM PDT

சூலக்கரையில், மதுக்கூடத்துக்கு அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி. முத்துகுமரனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 25 Jul 2016 11:44 AM PDT

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.

ஏற்றுமதியாளர்கள்-விசைத்தறியாளர்கள் இடையே ஒப்பந்தம்: வேலைக்கு சென்ற தொழிலாளர்களை தடுத்த 84 பேர் கைது

Posted: 25 Jul 2016 11:44 AM PDT

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விசைத்தறியாளர்கள் சங்கத்துக்கும் ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானதால் பலர் திங்கள்கிழமை வேலைக்கு திரும்பினர். இருப்பினும் தொழிலாளர்கள் தரப்புக்கு முறைப்படி ஒப்பந்தம் ஏற்படாததால், வேலைக்குச் சென்ற தொழிலாளர்களைத் தடுத்த 84 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: நகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்

Posted: 25 Jul 2016 11:44 AM PDT

விருதுநகர் செந்தி விநாயகம் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், நகராட்சியை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

விழிப்புணர்வு முகாம்

Posted: 25 Jul 2016 11:43 AM PDT

விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இலவச வீட்டு மனைப் பட்டா கோரி மனு

Posted: 25 Jul 2016 11:43 AM PDT

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு மலையடிபட்டி புதுக்குடி தெருவை சேர்ந்த 40 பெண்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டியை சேர்ந்த 60 பேர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) முத்துக்குமரனிடம் மனு அளித்தனர்.

அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

Posted: 25 Jul 2016 11:42 AM PDT

ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் 100 சத வெற்றி பெறுவது குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதுநிலை யோகா படிப்பு:விண்ணப்பங்களை பதிவிறக்கலாம்

Posted: 25 Jul 2016 11:42 AM PDT

மூன்றாண்டு முதுநிலை யோகா -இயற்கை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏ.ஐ.டி.யு.சி தலைவருக்கு பாராட்டுவிழா

Posted: 25 Jul 2016 11:42 AM PDT

விருதுநகர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி தலைவர் பி.எம்.ராமசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.

சதுரகிரி கோயிலில் ஆடிஅமாவாசை: பாதுகாப்புப் பணிக்கு தனி அலுவலர்கள் நியமனம்

Posted: 25 Jul 2016 11:42 AM PDT

சதுரகிரி சுந்தர மாகாலிங்கம் கோயிலில் நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவில் சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணிக்கு வருவாய்துறை சார்பில் தனி நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிவகாசி பேருந்து நிலையத்தில் தடுப்புக்கம்பிகளால் இடையூறு

Posted: 25 Jul 2016 11:41 AM PDT

சிவகாசி பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் வைத்துள்ள தடுப்பால் இடையூறு ஏற்படுகிறது.

கல்குவாரியை மூடக்கோரி சாலை மறியல்

Posted: 25 Jul 2016 11:41 AM PDT

அருப்புக்கோட்டை அருகே கொட்டம், தென்பாலை பகுதியில் உள்ள கல்குவாரியை மூடக் கோரி கிராம மக்களும் பள்ளி மாணவர்களும் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 25 Jul 2016 11:40 AM PDT

சின்னமனூர் 27 ஆவது வார்டு ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்தவர் போஸ் (59). இவர், அங்குள்ள தனியார் சமையல் எரிவாயு கிட்டங்கியில் இரவு காவலராகப் பணியில் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு சென்றுவிட்டார். எனவே, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி ஈஸ்வரி (50), தூங்குவதற்காக அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டாராம்.

போடியில் பள்ளி படிப்பை தொடர அனுமதி மறுப்பு: கேரளவாழ் தமிழர் குழந்தைகள் ஆட்சியரிடம் புகார்

Posted: 25 Jul 2016 11:40 AM PDT

கேரளவாழ் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்த 4 மாணவிகள், போடியில் உள்ள அரசு நிதி உதவிபெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிப்பைத் தொடர, தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தேன் எடுக்கச் சென்ற பழங்குடியினரிடம் வனத் துறையினர் அத்துமீறல்: ஆட்சியரிடம் புகார்

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

கம்பம் அருகே பளியன்குடிசை வனப் பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற பழங்குடியினரிடம் வனத்துறையினர் அத்துமீறி நடந்துகொண்டதாக, தேனியில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் பழங்குடியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

ஜூலை 27 மின் தடை

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக பொறியாளர் கைது

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

வீட்டின் பூட்டை உடைத்து  30 பவுன் திருட்டு

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

ஜோலார்பேட்டை அருகே அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

நாராயணி மருத்துவமனையில் புதிய பரிசோதனைக் கூடம்: மேகாலயா ஆளுநர் திறந்து வைத்தார்

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

வேலூர், ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் ரத்த அணுக்கள், திசுக்களை பிரித்தெடுக்கும் பரிசோதனைக் கூடத்தை மேகாலயா மாநில ஆளுநர் வி.சண்முகநாதன் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

தண்ணீர் என நினைத்து "ஆசிட்' குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி

Posted: 25 Jul 2016 11:39 AM PDT

வேலூரில் தண்ணீர் என நினைத்து "ஆசிட்' குடித்த பெண் மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

மேம்பாலத்தில் இருந்து அரசுப் பேருந்து விழுந்து இருவர் சாவு: 33 பயணிகள் காயம்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே மேம்பாலத்திலிருந்து அரசுப் பேருந்து கவிழ்ந்து கீழே விழுந்த விபத்தில் நீதிபதியின் சகோதரி உள்பட இருவர் உயிரிழந்தனர். 33 பேர் பலத்த காயமடைந்தனர்.

தனியார் நிறுவன கேண்டீனில் சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

சோளிங்கர் அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலை கேண்டீனில் சாப்பிட்ட தொழிலாளர்களுக்கு வாந்தி,  மயக்கம் ஏற்பட்டது.

100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்கக் கோரிக்கை

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூரில் 2-ஆவது நாளாக இடியுடன் பலத்த மழை

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் பலத்த மழை பெய்தது.

திருச்சானூரில் ஆகஸ்ட் 12-இல் வரலட்சுமி விரதம்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி  வரலட்சுமி விரத பூஜை நடக்கிறது.

கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில் அமைச்சர் ஜாவடேகர் விளக்கம்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

கற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மக்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.

பாலாறு விவகாரத்தில் மத்திய அரசு  தலையிட மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

பாலாறு தடுப்பணையின் உயரம் அதிகரிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழக விவசாயிகள்,பொதுமக்களின் நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.

ஒருமித்த கருத்துக்கு பிறகே ஜிஎஸ்டி மசோதா: மாநிலங்களவையில் அதிமுக திட்டவட்டம்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மசோதா மீது மாநில அரசுகள் கொண்டுள்ள சந்தேகங்கள் முழுமையாகத் தீர்க்க தாமதமின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக திட்டவட்டமாக வலியுறுத்தியது.

நரேலாவில் ஹோமியோபதி மருத்துவமனைக் கல்லூரி

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

தில்லி புறநகர்ப் பகுதியில் உள்ள நரேலாவில் "அகில இந்திய ஹோமியோபதி மருத்துவமனைக் கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மக்களையில் மத்திய அரசு தெரிவித்தது.

கேஜரிவால் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்: ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனு மீதான உத்தரவை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 25 Jul 2016 11:38 AM PDT

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக திங்கள்கிழமை வலியுறுத்தியது.

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில், தொடக்கக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆம்பூர் அருகே 15 கறவை மாடுகள் இறந்த சம்பவம் எதிரொலி: கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

ஆம்பூர் அருகே கறவை மாடுகள் இறந்த சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்தில் கால்நடைகளுக்கு ஆந்த்ராக்ஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகளை முறையாக விசாரிக்க வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவதை மக்கள் தவிர்க்க வேண்டும்: மாநகராட்சி பொறியாளர்

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

மழைநீர் வழிந்தோடும் நோக்கில் கட்டப்பட்டுள்ள கால்வாயில், குப்பைகளைக் கொட்டக் கூடாது என வேலூர் மாநகராட்சி மண்டலக் குழுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 25 Jul 2016 11:37 AM PDT

வேலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™