Tamil News | Online Tamil News |
- இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்புக்கு முழுக்கு? புதிய அமைப்பை உருவாக்க பரிந்துரை
- விரைவில் 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம்
- அமராவதிக்கு மாற அரசு ஊழியர்கள் தயக்கம் : ஆந்திராவில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடக்கம்
- போதை டிரைவர்கள் தற்கொலை படையினர்
- எல்லையை விரிவுபடுத்தி மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம் : மோசமான வானிலையால் சிக்கல்
- வில்லங்க சான்று வழங்குவதில் ரூ.2 கோடி மோசடி? பதிவுத்துறை விசாரணையில் பகீர் தகவல்
- சென்னை ஐகோர்ட்டுக்கு 24 புதிய நீதிபதிகள்; நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
- 'கெயில்' நிறுவன விவகாரம்; அரசுக்கு கருணாநிதி கேள்வி
- ரயில்வே திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க!முதல்வர் ஜெ.,வுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
- பருப்பு, சமையல் எண்ணெய் விலையை குறைக்க மத்திய அரசு யோசனை; வரிகளை நீக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம்
- கிராமங்களைத் தத்தெடுக்க அமைச்சர்களுக்கு ஆர்வமில்லை
- அஷ்வின் அசத்தல்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
- பாக்.,கில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை
- நக்சல்களை சமாளிக்க 13 புதிய படைப் பிரிவுகள்
| இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்புக்கு முழுக்கு? புதிய அமைப்பை உருவாக்க பரிந்துரை Posted: 24 Jul 2016 09:20 AM PDT புதுடில்லி: 'செயலிழந்து விட்ட, எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சில் அமைப்புக்கு பதிலாக புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்வது, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அனுமதி அளிப்பது, மருத்துவர்களை பதிவு செய்வது உள்ளிட்டவற்றுக்காக, 1934ல் அமைக்கப்பட்டது, இந்திய மருத்துவக் கவுன்சில். இந்த கவுன்சிலின் செயல்பாடுகள் திருப்தி கரமாக இல்லை என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. கல்வியின் தரம் குறைந்ததுடன், தனியார் கல்லுாரிகளில் சேருவதற்கு பல ... |
| விரைவில் 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் Posted: 24 Jul 2016 09:27 AM PDT புதுடில்லி: பயணத்தின்போது இசையை கேட்பதுடன், அவசர செய்திகளையும் அளிக்கும் வகையில், விரைவில், 1,000 ரயில்களில் ரேடியோ வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடக்கின்றன. ரயில்வே பட்ஜெட்டின்போது, 'ரயில் ரேடியோ அறிமுகம் செய்யப்படும்' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார். தற்போது, இந்த திட்டம், இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. 'விரைவில் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படும்' என, ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| அமராவதிக்கு மாற அரசு ஊழியர்கள் தயக்கம் : ஆந்திராவில் அரசு நிர்வாகம் முற்றிலும் முடக்கம் Posted: 24 Jul 2016 09:28 AM PDT ஆந்திராவில், விஜயவாடா அருகே, அமைக்கப்பட்டு வரும், தற்காலிக தலைநகரில் கட்டுமான பணிகள் நிறைவடையாததால், நிர்வாகம் முழுவீச்சில் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, 2014ல், இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தின் தற்போதைய முதல்வராக, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு இருந்து வருகிறார். தெலுங்கானாவின் நிரந்தர தலைநகராக, ஐதராபாத் இருக்கும் என்பதால், ஆந்திராவிற்கு, அமராவதியில், புதிய தலைநகர் ... |
| போதை டிரைவர்கள் தற்கொலை படையினர் Posted: 24 Jul 2016 09:33 AM PDT
புதுடில்லி: 'குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தற்கொலைப்படை பயங்கரவாதிக்கு சமமானது' என, டில்லி கோர்ட் கூறியுள்ளது. வழக்கு ஒன்றில், டில்லி செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கூறியதாவது: குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. போதையில் வாகனம் ஓட்டு வோர், தற்கொலைப்படை பயங்கரவாதிக்கு சமமானவர்கள். தங்கள் உயிரை இழப்பதுடன், மற்றவர்கள் உயிரிழக்கவும் காரணமாகி விடுகின்றனர். இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். ... |
| எல்லையை விரிவுபடுத்தி மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரம் : மோசமான வானிலையால் சிக்கல் Posted: 24 Jul 2016 09:55 AM PDT சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்றபோது, நடு வானில் மாயமான விமானப்படை விமானத்தை தேடும் பணி, நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்தது. எனினும், மோசமான வானிலையால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து, இம்மாதம், 22ம் தேதி காலை புறப்பட்ட விமானப்படை விமானம், அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு உரிய நேரத்தில் சென்றடையவில்லை. இதையடுத்து, அந்த விமானத்தையும், அதில் சென்ற முப்படையைச் சேர்ந்த, 29 பேரையும் தேடும் பணி துவங்கியது. இரண்டு நாட்களாக, 19 கப்பல்கள், எட்டு |
| வில்லங்க சான்று வழங்குவதில் ரூ.2 கோடி மோசடி? பதிவுத்துறை விசாரணையில் பகீர் தகவல் Posted: 24 Jul 2016 09:56 AM PDT 'ஆன்லைன்' முறையில் வில்லங்க சான்று வழங்கும் பணியில், தனியார் தலையீட்டால், இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக, பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சொத்து பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை பதிவு செய்வோர், அது தொடர்பான முந்தைய பதிவு விவரங்களை சரிபார்க்க, வில்லங்க சான்று பெற வேண்டும். சார் - பதிவாளர் அலுவலகங்களில் மக்கள் நேரடியாக விண்ணப்பித்து, வில்லங்க சான்று பெறலாம். இதற்கான நடைமுறையில் தரகர்கள் ... |
| சென்னை ஐகோர்ட்டுக்கு 24 புதிய நீதிபதிகள்; நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் Posted: 24 Jul 2016 10:17 AM PDT சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, புதிதாக, 24 நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இடம் பெற்ற குழுவான, 'கொலீஜியம்' ஒப்புதல் அளித்துள்ளது. இவர்கள், நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை, 62 ஆக உயரும். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75. தற்போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில், 38 நீதிபதிகள் உள்ளனர்; 37 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவான, கொலீஜியம், 19 வழக்கறிஞர்கள், 11 ... |
| 'கெயில்' நிறுவன விவகாரம்; அரசுக்கு கருணாநிதி கேள்வி Posted: 24 Jul 2016 10:20 AM PDT சென்னை: 'கெயில்' நிறுவனம் குழாய்களை பதிக்கும் பிரச்னையில், விவசாயிகளின் அச்சத்தைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க.,வை பொறுத்தவரை, கெயில் நிறுவனம் குழாய்களை பதிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அந்த குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பார்லிமென்டில் பேசுகையில், 'மத்திய அரசு, கெயில் நிறுவனத்துடன் ஆலோசித்த ... |
| ரயில்வே திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க!முதல்வர் ஜெ.,வுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல் Posted: 24 Jul 2016 10:41 AM PDT சென்னை:''தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு, முதல்வர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு கூறினார். சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிவேக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் - மானாமதுரை இடையே, பசுமை வழித்தட திட்டம்; திருவாலங்காடு - திருவள்ளூர் இடையே நான்காவது ரயில் பாதை, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், இந்திய மருத்துவ முறை சிகிச்சை பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை, சென்னை, சென்ட்ரல் ரயில் ... |
| Posted: 24 Jul 2016 10:48 AM PDT
புதுடில்லி : 'பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்கவும், கட்டுப்பாட்டில் வைக்கவும், அவற்றின் மீதான வரிகளை, மாநில அரசுகள் நீக்க வேண்டும்' என, மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் துவங்க உள்ளதால், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால், இவற்றின் விலையும் உயரலாம். இதைத் தடுப்பது தொடர்பாக, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கும், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை செயலர் ஹேம் பாண்டே கடிதம் ... |
| கிராமங்களைத் தத்தெடுக்க அமைச்சர்களுக்கு ஆர்வமில்லை Posted: 24 Jul 2016 12:39 PM PDT
புதுடில்லி: பிரதமர் மோடியின் கனவு திட்டமான, கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தில், கேபினட் அமைச்சர்கள், 18 பேர், உட்பட ஏராளமான எம்.பி.,க்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சுகாதாரம், சுத்தம், பசுமை ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளை உடைய மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக, கிராம தத்தெடுப்பு திட்டத்தை, 2014ல், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன்படி, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் அனைவரும், தலா ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும். இதுபோல, 2019ம் ஆண்டிற்குள், ஒவ்வொரு எம்.பி.,யும், மூன்று மாதிரி கிராமங்களை உருவாக்குவது இதன் இலக்கு. ... |
| அஷ்வின் அசத்தல்; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி Posted: 24 Jul 2016 12:51 PM PDT
ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் சதமடித்த அஷ்வின், பவுலிங்கிலும் 7 விக்கெட் எடுத்து அசத்த இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 566 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் முகமது ஷமி, உமேஷ் யாதவ் 'வேகத்தில்' மிரட்ட, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி ... |
| பாக்.,கில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொலை Posted: 24 Jul 2016 01:53 PM PDT லாகூர் : பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் என சந்தேகத்தின் பேரில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள ராஜன்பூர் பகுதியில், பாக்., பயங்கரவாத எதிர்ப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது நடந்த திடீர் தாக்குதல், துப்பாக்கி சூடாக மாறியது. இதில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். விசாரணையில் அவர்கள் பாக்.,கில் தடை செய்யப்பட்ட தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் மற்றும் லஷ்கார்-இ-ஜங்வி அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பது ... |
| நக்சல்களை சமாளிக்க 13 புதிய படைப் பிரிவுகள் Posted: 24 Jul 2016 02:35 PM PDT
புதுடில்லி: நக்சலைட் பிரச்னையை சமாளிக்க, 13 ஆயுத படைப் பிரிவுகளை புதிதாக அமைக்க, பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை உயரதிகாரிகள் கூறியதாவது: சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், நக்சலைட் பிரச்னை அதிகமாக உள்ளது. வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும், நக்சலைட்களை சமாளிக்கவும், உள்ளூர் இளைஞர்களை வைத்து, இந்த புதிய, இந்திய ரிசர்வ் படைப் பிரிவுகள் துவங்கப்படுகின்றன. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு, ஜார்க்கண்ட், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 25,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |