Tamil News | Online Tamil News |
- கலந்தாய்வு முடியும் வரை நடவடிக்கை இல்லை : வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம்
- ஒரு மாதமாக தலைவர் இல்லாமல் தமிழக காங்கிரஸ்... தவிப்பு! ஆளாளுக்கு புகார் பட்டியல் வாசிப்பதால் நியமனம் இழுபறி
- அடுத்தடுத்த தாக்குதலால் ஐரோப்பிய நாடுகள்.அதிர்ச்சி! ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா அவசர ஆலோசனை
- 'கறுப்பு பணம் இருந்தால் செப்., 30க்குள் சொல்லிடுங்க!'
- உ.பி., சட்டசபை தேர்தல் :பிரசாரம் துவக்கி வைத்தார் சோனியா
- பிரதமர் மற்றும் வெங்கையாவுக்கு முதல்வர் ஜெ., பாராட்டு
- ரூ.25 லட்சம் இருந்தால் தான் கவுன்சிலர் 'சீட்': மா.செ.,க்கள் அறிவிப்பால் கட்சியினர் கலக்கம்
- மாயமான விமானத்தை தேடும் 19 கப்பல்கள், 5 விமானங்கள்
- ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'
- டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு
- நாட்டைவிட்டு வெளியேற 3 சீன பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு
- ஸ்மிருதி இரானியின் ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை: தேர்தல் ஆணையம்
| கலந்தாய்வு முடியும் வரை நடவடிக்கை இல்லை : வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் Posted: 23 Jul 2016 09:30 AM PDT சென்னை: 'புதிய விதிகள் தொடர்பான கலந்தாய்வு முடியும் வரை, வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. இதற்கிடையில், முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வருகை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் வழங்க, வழக்கறிஞர்கள் சட்டத்தில் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முழுமையாக வாபஸ் பெறக் கோரி, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ... |
| Posted: 23 Jul 2016 09:32 AM PDT தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த இளங்கோவன், தன் பதவியை ராஜினாமா செய்து ஒரு மாதமாகியும், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ள தலைவர்கள், ஆளாளுக்கு டில்லி சென்று, கட்சி மேலிடத்திடம் ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியல் வாசிப்பதால், புதிய தலைவர் நியமனத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், எட்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பீஹாரைப் போல, தமிழகத்திலும் காங்., அதிக இடங்களில் வெற்றி பெறும் என, கணக்கு போட்டிருந்த ... |
| அடுத்தடுத்த தாக்குதலால் ஐரோப்பிய நாடுகள்.அதிர்ச்சி! ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா அவசர ஆலோசனை Posted: 23 Jul 2016 09:44 AM PDT முனிச்,:ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில், ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி, அவசர ஆலோசனை நடத்தினர். கடந்த, எட்டு நாட்களுக்குள், அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரான்சின் நீஸ் நகரில், தேசிய தினத்தன்று, வாணவேடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினர் மீது, பயங்கரவாதி ஒருவன், கன்டெய்னர் லாரியை தாறுமாறாக ஓட்டிச் சென்றதில், 84 பேர் ... |
| 'கறுப்பு பணம் இருந்தால் செப்., 30க்குள் சொல்லிடுங்க!' Posted: 23 Jul 2016 09:51 AM PDT புதுடில்லி: ''கறுப்பு பணம் வைத்திருப்போர் நிம்மதியாக துாங்க வேண்டுமானால், அதுகுறித்து, செப்டம்பர், 30க்குள் வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். தலைநகர் டில்லியில் நேற்று, நகை வர்த்தகர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, மோடி பேசியதாவது:கறுப்புப்பண சுமையை, நம் முதுகில் சுமக்க வேண்டிய அவசியம் என்ன? வருமான வரித்துறைஅதிகாரிகள் நம் வீட்டில் சோதனையிடுவர் என்ற அச்சத்துடன் ஏன் இருக்க வேண்டும்? கறுப்புப்பணம் வைத்திருப்போர், நிம்மதியாக துாங்க வேண்டுமானால், வரும் செப்., 30க்குள், ... |
| உ.பி., சட்டசபை தேர்தல் :பிரசாரம் துவக்கி வைத்தார் சோனியா Posted: 23 Jul 2016 09:57 AM PDT புதுடில்லி: உ.பி.,யில், சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல், நேற்று துவக்கி வைத்தனர். உ.பி.,யில் சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை, காங்., தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோர், டில்லியில் நேற்று துவக்கி வைத்தனர். இதையொட்டி, காங்., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, மூன்று நாள் சிறப்பு பஸ் யாத்திரையை, இத்தலைவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.600 கி.மீ., துாரம் பயணம் காங்., ... |
| பிரதமர் மற்றும் வெங்கையாவுக்கு முதல்வர் ஜெ., பாராட்டு Posted: 23 Jul 2016 10:15 AM PDT சென்னை,: ''மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் முயற்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் ஒத்துழைப்பால் தான், சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் துவக்கப்படுகிறது,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னை, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான, சென்னை மெட்ரோ ரயில், முதல் கட்ட நீட்டிப்பு திட்ட அடிக்கல் நாட்டு விழா, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி பேசியதாவது:சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தை, வண்ணாரப்பேட்டையில் ... |
| ரூ.25 லட்சம் இருந்தால் தான் கவுன்சிலர் 'சீட்': மா.செ.,க்கள் அறிவிப்பால் கட்சியினர் கலக்கம் Posted: 23 Jul 2016 10:20 AM PDT 'மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால், 25 லட்சம் ரூபாயை வைத்திருக்க வேண்டும்' என, கட்சியினருக்கு மாவட்ட செயலர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என, சட்டசபையில் நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இருந்த போதும், தற்போதே, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் உள்ளாட்சி தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் பணியில் இறங்கி விட்டன. எப்படியாவது, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இரு கட்சிகளும் உள்ளன.கட்சி ... |
| மாயமான விமானத்தை தேடும் 19 கப்பல்கள், 5 விமானங்கள் Posted: 23 Jul 2016 10:28 AM PDT வங்கக்கடல் மீது பறந்து கொண்டிருந்த போது, நடுவானில் மாயமான, விமானப்படைக்கு சொந்தமான, ஏ.என்.32 ரக விமானத்தை தேடும் பணி, நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. நேற்று காலை, தமிழகம் வந்த ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர், தேடுதல் நடைபெறும் இடங்களை, ராணுவ விமானத்தில் பார்வையிட்டார். விமானப்படையின் ஏ.என்.32 ரக விமானம், சென்னை, தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இருந்து, முப்படை வீரர்கள், 29 பேருடன், அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேருக்கு, நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு புறப்பட்டது. முன்னதாக அது, கோவை, சூளூர் விமானப் படை நிலையத்தில் இருந்து சில ... |
| Posted: 23 Jul 2016 10:33 AM PDT சென்னை,: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர். ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் ... |
| டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு Posted: 23 Jul 2016 01:15 PM PDT புதாபெஸ்ட்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனிலிருந்து முதல் ஆதரவு டிரம்பிற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் 2016-இறுதியில் முடிவடைகிறது.. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி ... |
| நாட்டைவிட்டு வெளியேற 3 சீன பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு Posted: 23 Jul 2016 02:04 PM PDT புதுடில்லி:இந்தியாவில் உள்ள 3 சீனப் பத்திரிகையாளர்களுக்கானவிசாபுதுப்பிக்க மறுத்த மத்திய அரசு, அவர்களை நாட்டைவிட்டு வரும் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. சீனாவின் ஜின்ஹுவா என்ற செய்தி நிறுவனத்துக்காக அந்நாட்டைச் சார்ந்த டாங் லு, வூ குயாங் உள்ளிட்ட 3 பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இங்கு பணிபுரிவதற்காக இந்திய அரசால் வழங்கப்படும் விசாஇந்த ஆண்டு தொடக்கத்தில் ... |
| ஸ்மிருதி இரானியின் ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை: தேர்தல் ஆணையம் Posted: 23 Jul 2016 02:50 PM PDT புது டில்லி:"கடந்த 2004 லோக்சபா தேர்தலில் டில்லியின் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள், இதர ஆவணங்களை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை' என டில்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.எனினும் இதுதொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது என்று ஆணையம் தெரிவித்தது. தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி, கடந்த 2004, 2011, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற லோக்சபாதேர்தல்களையொட்டி தாக்கல் செய்த பிரமாணப் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 24,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |