Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 09:51 AM PDT

தினமணி இணையம் தந்த தலைப்பு ! குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி ! கவிஞர் இரா .இரவி ! குடையின்றி நின்று இருந்தபோது குடையோடு வந்தால் என்னவள் ! வருக என்று கண் அசைத்தாள் விழாக்கோலமானது மழைக்காலம் ! இருவரையும் இணைத்து ரசித்தது மழை இனிதே பேசிக்கொண்டே பயணம் ! நெற்பயிர் வளர மட்டுமல்ல மழை நல்காதல் வளரவும் உதவியது மழை ! யாருக்கும் கேட்காதவாறு பேசினோம் யாரும் பார்க்காதவாறு மறைத்தது குடை ! மழையில் நனையவில்லை நாங்கள் மகிழ்ச்சியில் நனைந்தோம் நாங்கள் ! குடைக்குள் இடம் தந்து பாரியானாள் குமரியின் ...

தந்தை போல ஓர் உறவு கிடைத்தால் வாழ்வில் வேறு என்ன வேண்டும்?

Posted: 23 Jul 2016 08:54 AM PDT

மின் கட்டணம் கணக்கிடும் எளிய முறை

Posted: 23 Jul 2016 07:17 AM PDT

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!
வீட்டு இணைப்புகளுக்கானது:-

நன்றி-முகநூல்

புத்தகம் தேவை

Posted: 23 Jul 2016 04:24 AM PDT

சோளகர் தொட்டி - ச பாலமுருகன்.

புத்தகம் pdf வடிவில் வேண்டும் நண்பர்களே..

நம்பிக்கைகள் கேலி பேச அல்ல

Posted: 23 Jul 2016 03:59 AM PDT

மரண அறிவிப்பு போஸ்டரைப் பார்த்துச் சிரித்தார், ஒரு நாத்திக நண்பர். என்ன சிரிக்கிறீர்கள் என்றேன். இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது. மரணமடைந்தவர்களை இறைவனடி சேர்ந்தார், சிவலோகப் பிராப்த்தி அடைந்தார், வைகுண்ட ப்ராப்தி பெற்றார் என்று குறிப்பிடுவது அவரவர்கள் நம்பிக்கைதானே என்றேன். அவர்களுக்கே அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை பாருங்கள், இறந்தவர்கள் அப்படி அங்கு செல்கிறார் என்றால் இவர்களெல்லாம் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும், அதை வருத்தத்துடன் ...

இவர் யாரெனத் தெரிகிறதா? .

Posted: 23 Jul 2016 03:52 AM PDT

தமிழினத்தின் பெருமை. மின்னஞ்சல் என்னும் அற்புதத்தை இவ்வுலகுக்குத் தந்த சிவா ஐயாதுரை என்னும் அற்புதத் தமிழனை இவ்வுலகுக்குத் தந்தவர். திரு ஐயாதுரை அவர்கள். நியூயார்க் நகரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். பாரதியார் சங்கத்தின், கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு பாரதிச் செம்மல் விருது வழங்கும் விழாவுக்கு (21.07.16) வருகை புரிந்த போது..... விருது விழாவின் மேலும் சில ஒளிப்படங்கள் உறவுகளுக்காக.... சிறப்புச் சொற்பொழிவு செய்த சிலம்பொலி செல்லப்பனார், கவிஞர் ஜெயபாஸ்கரன், மூத்த ...

டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம்

Posted: 23 Jul 2016 03:02 AM PDT

டீ-யா ஈ-யா - காமராஜர் விளக்கம் காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்.. உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்... பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... ...

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Posted: 23 Jul 2016 12:35 AM PDT

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy) லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் "பிரவே" வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர். பெரும் செல்வ ...

ஒரு புரட்சிக்காரனின் புல்லாங்குழலிசை - ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள்

Posted: 23 Jul 2016 12:31 AM PDT

முன்னுரை நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நினைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டுமானால் ஒருவர் உயரத்தில் ஏறியாக வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எனவே சிரமப்பட்டு வண்டிக் கொட்டகையில் இருந்த ஏணியில் ஏறினேன். அதன் உச்சியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு அரிச்சுவடி போலிருந்த மார்த்தியின் கவிதைகளை வாய்விட்டு உரக்கப் படித்தேன். எனது பதின் மூன்றாவது வயதில் மார்த்தியை மொழி ...

தந்தை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:24 AM PDT

தந்தை ! கவிஞர் இரா .இரவி ! மகனுக்கு அறிவைக் கற்பிப்பிவர் தந்தை ! மகனுக்கு உலகை உணர்த்துபவர் தந்தை ! குடும்ப பாரம் தலையில் சுமப்பவர் தந்தை ! குடும்பத்தின் தலைவராக விளங்குபவர் தந்தை ! தன் குடும்ப மானம் காப்பவர் தந்தை ! தன்னைப் பற்றிய கவலையின்றி வாழ்பவர் தந்தை ! உப்பு மூட்டை சுமந்து விளையாடுபவர் தந்தை ! உப்பெனெ வாழ்வின் அவசியமானவர் தந்தை ! நெறிப்படுத்தி நல்வழி காட்டுபவர் தந்தை ! நன்மை தீமை எடுத்து இயம்புபவர் தந்தை ! தோழனாக இருந்து தோள் கொடுப்பவர் தந்தை ! துவண்டால் தன்னம்பிக்கைத் ...

தினமணி இணையம் தந்த தலைப்பு ! அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:23 AM PDT

தினமணி இணையம் தந்த தலைப்பு ! அலைகளின் தாகம் ! கவிஞர் இரா .இரவி ! கடலைக் கடந்து விடலாமென்று கடல் அலைகள் முயலுகின்றன ! கடக்க முடியாமல் தோற்றுப்போய் கடலுக்கு திரும்பி விடுகின்றன ! தோல்வி பற்றிய கவலைகள் துளியுமின்றி அலைகள் அலைகின்றன ! என்றாவது ஒருநாள் கடப்போம் என்ற நம்பிக்கையில் வருகின்றன ! பாறைகளிலும் முட்டி மோதுகின்றன பயணம் முடிவின்றித் தொடர்கின்றன ! அலைகளின் தாகம் கடல் அறியவில்லை அறிந்திருந்தால் ஆறுதலாகி இருக்கும் ! கடலில் வாழ்ந்தாலும் அலைகளுக்கென்று கனவும் ஏக்கமும் ...

தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:22 AM PDT

தினமணி ! கவிதை மணி !தந்த தலைப்பு ! எப்படி மறப்பேன் ? கவிஞர் இரா .இரவி ! எம் தமிழினத்தை கூண்டோடு அழித்தான் இந்த உலகமே வேடிக்கைப் பார்த்தது ! போரில்லாப்பகுதி என்று அறிவித்து விட்டு போய் மக்கள் குவிந்ததும் குண்டுப் போட்டான் ! விடுதலை கேட்டது குற்றமெனக் கூறி வீதியில் விட்டு சுட்டு மகிழ்ந்தான் ! குழந்தைகள் பெண்கள் முதியோர் என்று பாராமல் கண்மூடிதனமாகக் கொலைகள் புரிந்தான் ! மருத்துவமனை பள்ளி விடுதி என்று பாராமல் மனம் போனபடி கொன்று குதூகலித்தான் ! சரண் அடைபவர்களை சுடக் கூடாது ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:21 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அறிந்தது உலகம் அறியவில்லை தமிழர் திருக்குறள் அருமை ! ஒரே வரியில் ஒப்பற்ற அறம் ஆத்திசூடி ! நான்கே வரிகளில் நல்லபல கருத்துக்கள் நாலடியார் ! ஒழுக்கம் உணர்த்தும் ஒப்பற்ற வரலாறு சிலப்பதிகாரம் ! தமிழ்மொழி பாட்டி வடமொழி பெயர்த்தி பெயர்த்திக்குப் பிறந்தால் பாட்டி என்று பிதற்றுகின்றனர் கோமாளிகள் ! தண்டனை என்று அறிவிப்போம் தமிங்கிலம் பேசினால் ! நான் இங்கு இருக்கையில் யார் நினைப்பது உங்களை தலையில் தட்டும் மனைவி ! இந்நாட்டு மன்னர்கள் தேர்தல் ...

குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

Posted: 23 Jul 2016 12:19 AM PDT

குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை – 600 017. ***** இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர். பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து 'குழந்தைகள் நிறைந்த வீடு' என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் வெளியிட்ட ...

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:18 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! அம்பு இல்லா வில்லுக்கும் மதிப்புண்டு வானவில் ! பிரிய மனமில்லை பிரித்தது காற்று மரத்திலிருந்து இலை ! நதி நடந்ததால் பளபளப்பானது கூழாங்கல் ! சுமை அல்ல உயர உதவும் சிறகு ! பேசும் பேச்சை விட வலிமையானது மவுனம் ! பஞ்ச பூதங்களை கொள்ளையடிக்கும் பூதம் மனிதன் ! எடுத்தால் திருட்டு நாமாக வழங்கினால் வரதட்சணை !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:17 AM PDT

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! செலவில்லாதது குழந்தைகள் வண்டி நுங்கு வண்டி ! யானை போன்று ஆயிரம் போன் பனைமரம் ! பூ காய் இலை முழுவதும் பயன்படும் முருங்கைமரம் ! நோய் நீக்கும் நலம் தரும் வேப்பமரம் ! ஆயிரம் காலத்து மரம் தேக்கு ! சண்டைமாநிலங்களாகின அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு அநீதி ! ஆடம்பரக் கல்வியானது ஆரம்பக்கல்வி தனியார் பள்ளிகள் ! ஏளனமாய் நினைத்தவர்கள் ஏமாந்துபோனார்கள் அரசுப்பள்ளிகளின் சாதனை நனவாகாது உழைப்பற்ற வெறும் கனவு ! வந்துசேரவில்லை பயன்பட்டது ...

காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:16 AM PDT

காதல் கொலை ! கவிஞர் இரா .இரவி ! கணினியுகத்திலும் காட்டுமிராண்டிக் காலத்தை கண்களில் காட்டும் உணர்வு காதல் கொலை ! பெரியார் இங்கே மீண்டும் பிறக்க வேண்டும் புத்திக்கெட்ட மனிதர்களுக்கு புத்திப் புகட்ட வேண்டும் ! சொந்த மகளென்றும் பாராமல் கொல்கின்றனர் சொந்த மகனென்றும் பாராமல் கொல்கின்றனர்! கோடிப் பணம் கொட்டிக் கொடுத்தாலும் கொன்ற உயிரைத் திரும்பத் தரமுடியாது ! பகுத்தறிவைப் பயன்படுத்துவது மனிதனுக்கு அழகு பகுத்தறிவைப் பயன்படுத்தாதது மனிதனுக்கு இழுக்கு ! கௌரவக் கொலை என்பதில் கௌரவம் இல்லை கேவலம் ...

பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு ! சுறுசுறுப்பு ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:16 AM PDT

பொதிகை மின்னல் மாத இதழ்
தந்த தலைப்பு !
சுறுசுறுப்பு ! கவிஞர் இரா .இரவி !


சுறுசுறுப்பின்
சின்னம்
எறும்புதான் !

வேண்டாம் அலுப்பு சலிப்பு
வேண்டும் சுறுசுறுப்பு
வாழ்க்கை சிறப்பு !

சோம்பேறிகளின்
முதல் பகைவன்
சுறுசுறுப்பு !

குழந்தைகளிடம் அதிகம்
பெரியவர்களிடம் குறைவு
சுறுசுறுப்பு !

இறந்தபின்னும்
மனங்களில் வாழ்த்திட
சுறுசுறுப்பு !

தினமணி கவிதைமணி !தந்த தலைப்பு திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 23 Jul 2016 12:15 AM PDT

தினமணி கவிதைமணி !தந்த தலைப்பு திருமண நாள் ! கவிஞர் இரா .இரவி ! வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! பலருக்கு பொறுப்பும் மகிழ்வும் தந்தது சிலருக்கு வருத்தமும் சோகமும் தந்தது ! இன்றுமுதல் இணையும் இணைகள் இவர்கள் என்று உலகிற்கு அறிவிக்கும் அற்புதநாள் ! ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டால் உலகமே வியந்து பாராட்டுது நம்மை ! இறுதிவரை இணைபிரியாது வாழ்வோர் பலர் இணையைப் பிடிக்காமல் பிரிந்து வாடுவோர் சிலர் ! ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் ஒருபோதும் ...

குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா

Posted: 23 Jul 2016 12:07 AM PDT

குங்குமம் தோழி இதழில் நான் ********************************************* சில துன்ப தருணங்கள் சில இன்ப தருணங்களை மறக்கடித்து விடுகின்றன. அப்படி மறக்கப் பட்ட இன்பமான தருணம் இது. மே 01 -15 குங்குமம் தோழி இதழில் என்னைப் பற்றி......... ************************ நன்றி ஆசிரியர் குங்குமம் தோழி ************************

நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் பி. முருகேசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Posted: 23 Jul 2016 12:00 AM PDT

நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள் நூல் ஆசிரியர் : கவிஞர் பி. முருகேசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி சாந்தகுமாரி வெளியீடு, மதுரை. 174 பக்கங்கள், விலை : ரூ. 100. ***** நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன் அவர்கள், மதுரை மணியம்மை பள்ளியில் நடைபெறும் தமிழறிஞர் இரா. இளங்குமரனார் உரைவீச்சு நிகழ்வுக்கு தவறாமல் வந்து விடுவார். வந்த நாளில் வழங்கினார் இந்நூல். இளங்குமரனார் தலைமையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே கவிதை பாடிய அனுபவம் உள்ளவர் நூல் ஆசிரியர் கவிஞர் பி. முருகேசன். ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(432)

Posted: 22 Jul 2016 11:56 PM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நெல்லை, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

Posted: 22 Jul 2016 10:11 PM PDT

சென்னை: சென்னையிலிருந்து நெல்லை, எர்ணாக்குளத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன் விபரம்: - சென்னை - நெல்லை: - சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 7 ம் தேதி நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் ...

ஆன்டிகுவா டெஸ்ட் : விராத் கோஹ்லி இரட்டை சதம்

Posted: 22 Jul 2016 09:18 PM PDT

- -ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். – வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஆன்டிகுவா மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. – கோஹ்லி அபாரம்: இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியின் அஷ்வின் அரைசதம் கடந்தார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™