Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மும்பையில் ஐ.எஸ். ஆதரவாளர் கைது

Posted: 23 Jul 2016 01:31 PM PDT

மும்பைக்கு அருகிலுள்ள தாணே மாவட்டத்தில் கேரள போலீஸாரும், மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்) போலீஸாரும் நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளைஞர்கள் சேர்வதற்கு காரணமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாட்டைவிட்டு வெளியேறுமாறு 3 சீன பத்திரிகையாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 23 Jul 2016 01:31 PM PDT

இந்தியாவில் பணிபுரிந்துவரும் 3 சீனப் பத்திரிகையாளர்களுக்கான நுழைவு இசைவை (விசா) புதுப்பிக்க மறுத்த மத்திய அரசு, அவர்களை நாட்டைவிட்டு வரும் 31-ஆம் தேதிக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்ட்: சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

Posted: 23 Jul 2016 01:31 PM PDT

உத்தரகண்டில் பெய்த பலத்த மழை காரணமாக வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி குறித்த வழக்கு: ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை

Posted: 23 Jul 2016 01:28 PM PDT

"கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் தில்லியின் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள், இதர ஆவணங்களை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று தில்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை செப். 30-க்குள் அறிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை: நரேந்திர மோடி

Posted: 23 Jul 2016 01:28 PM PDT

கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அது பற்றிய விவரங்களை வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் அறிவிக்காவிட்டால், சிறைத் தண்டனை உள்ளிட்ட கடுமையான விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

காஷ்மீர்: நவாஸ் ஷெரீஃப் கனவு நிறைவேறாது: சுஷ்மா ஸ்வராஜ்

Posted: 23 Jul 2016 01:28 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குறித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம்

Posted: 23 Jul 2016 01:23 PM PDT

குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாரண, சாரணீய இயக்க ஆளுநர் தேர்வு முகாம் தொடக்கம்

Posted: 23 Jul 2016 01:22 PM PDT

வேலூர் ஸ்ரீ நாராயணி வித்யாலயா பள்ளியில் பாரத சாரண, சாரணீய இயக்க ஆளுநர் விருதுக்கான இரண்டு நாள் தேர்வு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

எல்லையம்மன் கோயிலில் ஆடித் திருவிழா

Posted: 23 Jul 2016 01:22 PM PDT

திருவள்ளூர் அருகே அமைந்துள்ள எல்லையம்மன் கோயிலில் 10-ஆம் ஆண்டு ஆடித் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தாலிக்குத் தங்கம் திட்டத்தால் உயர்கல்வி பயில்வோர் அதிகரிப்பு: விஜிலா சத்யானந்த்

Posted: 23 Jul 2016 01:21 PM PDT

தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், மகளிர் அணிச் செயலாளருமான விஜிலா சத்யனாந்த் குறிப்பிட்டார்.

சிறையில் முருகன், நளினி சந்திப்பு

Posted: 23 Jul 2016 01:21 PM PDT

வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 23 Jul 2016 01:21 PM PDT

ரயில் மூலம் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேர் கைது

Posted: 23 Jul 2016 01:20 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாகக் கூறி காட்பாடியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் 60 பேர் சன

காமராஜர் அறக்கட்டளை சார்பில் 4,000 மாணவர்களுக்கு சீருடை

Posted: 23 Jul 2016 01:20 PM PDT

திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

பிளாஸ்டிக் மறுசுழற்சி மையம் தொடக்கம்

Posted: 23 Jul 2016 01:18 PM PDT

குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் சேகரிக்கப்படும் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மறு சுழற்சி மூலம் அரைவை செய்யும் மையம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

பசுமை போர்வைத் திட்டம் 75,000 மரக்கன்றுகள் தயார்: ஆற்காடு வனச் சரக அலுவலர் தகவல்

Posted: 23 Jul 2016 01:17 PM PDT

அம்மூர் காப்புக்காடு மத்திய நாற்றங்காலில் 75,000 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக ஆற்காடு வனச் சரக அலுவலர் விஜய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் வன்முறை குறித்து ஒமர் கட்சியினரிடம் விசாரணை தேவை

Posted: 23 Jul 2016 01:15 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மையில் வன்முறையில் ஈடுபட்ட கலவரக்காரர்களை பிரதான எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சியினர் தூண்டிவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Posted: 23 Jul 2016 01:14 PM PDT

சிபிஎஸ்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு, ஒரு நாள் பாடத்திட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காவனூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted: 23 Jul 2016 01:14 PM PDT

அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் ரூ. 3 லட்சம் நிதியில் அமைக்கப்பட்ட இலவச குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது

2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சி

Posted: 23 Jul 2016 01:14 PM PDT

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வறுமைக் கோடு பட்டியலில் பெயர்: திக்விஜய் சிங் அதிர்ச்சி

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

மத்திய அரசும், மத்தியப் பிரதேச அரசும் வெளியிட்டுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல்களில் தனது குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதற்கு, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரிடையே மோதல்: 5 பேர் கைது

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

ஆற்காடு அருகே முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

ஆம்பூர் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவம் முறியடித்தது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

கானாற்று நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மண் சாலை அகற்றம்

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

பேர்ணாம்பட்டு அருகே கானாற்று நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட மண் சாலையை வருவாய்த் துறையினர் சனிக்கிழமை அகற்றினர்.

பிரபல ஓவியர் ரஜா காலமானார்

Posted: 23 Jul 2016 01:13 PM PDT

பிரபல ஓவியர் எஸ்.ஹெச். ரஜா எனப்படும் சையது ஹைதர் ரஜா தில்லியில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

Posted: 23 Jul 2016 01:12 PM PDT

ஆற்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது. ஆற்காட்டை அடுத்த பெரிய உப்புபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலா (60). இவர் தான் வளர்த்து

தகாத வார்த்தைகளை பகுஜன் சமாஜ் கட்சியினர் பயன்படுத்துவதை மாயாவதி தடுக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு

Posted: 23 Jul 2016 01:12 PM PDT

உத்தரப் பிரதேச மாநில பாஜக முன்னாள் துணைத் தலைவர் தயாசங்கர் சிங்கின் குடும்பத்தினருக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாமென்று தனது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவுறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் விரிசல்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு

Posted: 23 Jul 2016 01:12 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தகாத வார்த்தைகளை பேசுவதில் பாஜக - பகுஜன் சமாஜ் இடையே போட்டி

Posted: 23 Jul 2016 01:12 PM PDT

தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் பாஜக - பகுஜன் சமாஜ் கட்சி இடையே போட்டி நிலவி வருவதாக உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை அருகே சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதல்: 4 பேர் சாவு

Posted: 23 Jul 2016 01:12 PM PDT

திருவண்ணாமலை அருகே சனிக்கிழமை அதிகாலை, பஞ்சராகி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலாப் பேருந்து மீது சரக்கு லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்தனர்.

தாமதமாகும் தில்லி மெட்ரோ "பிங்க் லைன்' திட்டம்

Posted: 23 Jul 2016 01:11 PM PDT

நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதம் காரணமாக, தில்லி மெட்ரோ ரயில் பிங்க் லைன் திட்டத்தை திட்டமிட்டபடி அடுத்த

ஜூலை 26-முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் எச்சரிக்கை

Posted: 23 Jul 2016 12:30 PM PDT

செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகள் மீது தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட தில்லி டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அரசு மருத்துவமனைகளில் உபகரணங்கள் பற்றாக்குறை: முதல்வர் கேஜரிவால் விளக்கம்

Posted: 23 Jul 2016 12:30 PM PDT

தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் போன்ற முக்கிய உபகரணங்கள் பற்றாக்குறைக்கு இன்னும் நான்கு மாதங்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதி அளித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி கல்வித் தகுதி குறித்த வழக்கு: ஆவணங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

Posted: 23 Jul 2016 12:29 PM PDT

"கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் தில்லியின் சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள், இதர ஆவணங்களை எவ்வளவு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று தில்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேம்பாலத்தை வலுக்கட்டாயமாக திறந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.

Posted: 23 Jul 2016 12:29 PM PDT

தில்லியின் விகாஸ்புரி - மீராபாக் இடையிலான சாலை மேம்பாலத்தை, முதல்வர் கேஜரிவால் திறந்து வைக்க இருந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மகபால் மிஸ்ரா வலுக்கட்டாயமாக சனிக்கிழமை திறந்துவைத்தார். விகாஸ்புரி - வாஜிராபாத் இடையிலான 22 கி.மீ. தொலைவு உயர்மட்ட சாலைத்

போலீஸ் நெருக்கடியால் எம்எல்ஏ கான் மீது பெண் பொய் புகார்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 23 Jul 2016 12:29 PM PDT

"ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெண் ஒருவர் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது; போலீஸாரின் நெருக்கடி காரணமாகவே கான் மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்' என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

மோடியின் பெயர், புகைப்படத்துடன் சிஆர்பிஎஃப் பணிக்கு விண்ணப்பித்த நபர்!

Posted: 23 Jul 2016 12:28 PM PDT

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் பணிக்கு, பிரதமர் மோடியின் பெயர், புகைப்படத்துடன் ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அவருக்கு உடல் தகுதி தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை அவர் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளார். இதையடுத்து, அவரது போலியான அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜாமா மசூதி பகுதியில் பட்டம் விடும் விழா:தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா பங்கேற்பு

Posted: 23 Jul 2016 12:28 PM PDT

வரலாற்றுச் சிறப்புமிக்க தில்லி ஜாமா மசூதி பகுதியில் பாரம்பரிய பட்டம் விடும் விழா இந்திய சிட்டி வாக்ஸ் என்ற அமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கலந்து கொண்டார். இந்த விழா குறித்து இந்தியா சிட்டி வாக்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "இந்த சுதந்திரதினம் (ஆகஸ்ட் 15) வரை வார இறுதி நாள்களில் இந்த பட்டம் விடும் விழா நடைபெறும்.

தெற்கு தில்லி தனியார் வணிக வளாகத்தில் பேரிடர் ஒத்திகை

Posted: 23 Jul 2016 12:28 PM PDT

தெற்கு தில்லி தனியார் வணிக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

ஊழல் வழக்கு: ராஜேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

Posted: 23 Jul 2016 12:28 PM PDT

 ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பண்பலை வானொலி மூலம் தில்லி அரசு போலியான பிரசாரம்: பாஜக குற்றச்சாட்டு

Posted: 23 Jul 2016 12:27 PM PDT

பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் தொடர்பாக பண்பலை வானொலியில் தில்லி அரசு போலியான தகவல்களைக் கூறி பிரசாரம் செய்து வருகிறது என்று தில்லி பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தில்லி சமாச்சார் குடியிருப்பு முதியவர் கொலை வழக்கில் இளம்பெண் கைது

Posted: 23 Jul 2016 12:27 PM PDT

தில்லியில் பத்திரிகையாளர்கள் அதிகம் வசித்து வரும் சமாச்சார் குடியிருப்பில் முதியவர் கொலைச் சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலித் சிறுமி மீண்டும் பலாத்கார சம்பவம்: காவல் துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

Posted: 23 Jul 2016 12:27 PM PDT

தில்லியின் புராரி பகுதியில் 14 வயது தலித் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்குரைஞர்கள் போராட்ட விவகாரம்: பிசிஐ இன்று முக்கிய ஆலோசனை

Posted: 23 Jul 2016 12:26 PM PDT

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ள ஒரு பிரிவு வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது.

ஆகஸ்ட் 13-இல் : திருச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் சங்க மாநில மாநாடு

Posted: 23 Jul 2016 12:26 PM PDT

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் 5-ஆவது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேசிய இளந்திரு விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு

Posted: 23 Jul 2016 12:25 PM PDT

கவிதை ஒப்பித்தல் போட்டியில் தேசிய அளவில் இளந்திரு விருது பெற்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாதானம் முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி:திருவாவடுதுறை ஆதீனம் தொடங்கிவைத்தார்

Posted: 23 Jul 2016 12:25 PM PDT

சீர்காழி அருகே மாதானம் முத்துமாரியம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கான திருப்பணியை திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் உடன்பிறப்புகள்...

Posted: 23 Jul 2016 12:24 PM PDT

ஒலிம்பிக்... இது ஒவ்வொரு விளையாட்டு வீரரின் மனதிலும் ஒலிக்கும் தாரக மந்திரம். விளையாட்டை தங்களின் வாழ்க்கையாக தேர்வு செய்த யாரைக் கேட்டாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும்; பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் அவர்களுடைய உச்சபட்ச கனவாக இருக்கும்.

ஆண்டுப் பெருவிழா: வேளாங்கண்ணி பேராலயத்தை பொலிவுப்படுத்தும் பணிகள் தொடக்கம்

Posted: 23 Jul 2016 12:24 PM PDT

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பேராலயத்தைப் பொலிவுப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

"ஆணையர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரகம் முற்றுகை'

Posted: 23 Jul 2016 12:24 PM PDT

மத்திய அரசின் நிதியில் முறைகேடு செய்த ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மனைவியை தீவைத்துக் கொளுத்திய கணவர் சிறையில் அடைப்பு

Posted: 23 Jul 2016 12:24 PM PDT

நீடாமங்கலம் அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய கணவரை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

உழவர் வயல்வெளிப் பள்ளியில் செயல் விளக்கம்

Posted: 23 Jul 2016 12:23 PM PDT

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பாக நெல் தரிசு பருத்திப் பற்றிய உழவர் வயல்வெளிப் பள்ளியில் பருத்தியில் பஞ்சு எடுக்கும் கருவி பற்றிய செயல்விளக்கம் ஆலங்குடி கிராமத்தில் வெள்ளிக்கிழமை செய்து காட்டப்பட்டது.

ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

Posted: 23 Jul 2016 12:23 PM PDT

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலத்த காயம்

Posted: 23 Jul 2016 12:23 PM PDT

நன்னிலம் அருகே இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி பலத்த காயமடைந்தார்.

காஷ்மீர் வன்முறையை கண்டித்து ரயில் மறியல் : 205 பேர் கைது

Posted: 23 Jul 2016 12:22 PM PDT

திருவாரூர் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 205 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் திணறல்

Posted: 23 Jul 2016 12:22 PM PDT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரன் சேர்க்க முடியாமல் திணறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, மதிய உணவு இடைவேளையின்போது 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் மறியல்

Posted: 23 Jul 2016 12:22 PM PDT

திருவாரூர் அருகே தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சி

Posted: 23 Jul 2016 12:22 PM PDT

பேரளம் சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

Posted: 23 Jul 2016 12:21 PM PDT

பள்ளி மற்றும் இல்லம் சார்ந்த 6 முதல் 18 வயதுடைய மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார் ஆட்சியர் எம். மதிவாணன்.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jul 2016 12:21 PM PDT

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

உள்ளாட்சித் தேர்தல் குமரியில் 296 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Posted: 23 Jul 2016 12:21 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் 296 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

முக்கடல் அணையின் கொள்ளளவை உயர்த்துவது குறித்து எம்.பி. ஆய்வு

Posted: 23 Jul 2016 12:21 PM PDT

நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து விஜயகுமார் எம்.பி. அணைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

"குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும்

Posted: 23 Jul 2016 12:20 PM PDT

பொருளாதார வளர்ச்சி மிக்க மாவட்டமாக கன்னியாகுமரி உருவாக குளச்சல் வர்த்தக துறைமுக திட்டத்தை உடனடியாக தொடங்கி செயல்படுத்திட வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு:நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Posted: 23 Jul 2016 12:20 PM PDT

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவிலில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரப்பர் உற்பத்தியில் நிலவிய மந்தநிலையில் மாற்றம் நிகழாண்டில் உற்பத்தி 6.54 லட்சம் டன்னாக இருக்கும்

Posted: 23 Jul 2016 12:19 PM PDT

நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தியில் நிலவி வந்த மந்தநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் மீண்டும் சாரல் மழை

Posted: 23 Jul 2016 12:19 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது.

வீட்டை உடைத்து நகை திருட்டு

Posted: 23 Jul 2016 12:18 PM PDT

ராஜாக்கமங்கலம் அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 6 பவுன் தங்க நகை திருட்டுப் போனது.

கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

Posted: 23 Jul 2016 12:18 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலய 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அரசு விதிகளை பின்பற்றாத குழந்தைகள் இல்ல அனுமதி ரத்து செய்யப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 23 Jul 2016 12:18 PM PDT

அரசின் விதி முறைகளை பின்பற்றாத குழந்தைகள் இல்ல அனுமதி ரத்து செய்யப்படும் என்றார் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

விவேகானந்தர் மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு இணைப்பு பாலம்: மோரீஷஸ் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்

Posted: 23 Jul 2016 12:18 PM PDT

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் பாலம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மோரீஷஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வலியுறுத்தினார்.

வர்த்தக துறைமுகத்தால் பாதிக்கப்படுவோருக்கு மாற்று ஏற்பாடு :மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 23 Jul 2016 12:17 PM PDT

குளச்சல் வர்த்தக துறைமுகத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்தபிறகே துறைமுகத்திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிற்றாறு அணை திறக்கப்படாததால் பட்டணம்கால்வாய் விவசாயம் பாதிப்பு

Posted: 23 Jul 2016 12:17 PM PDT

குமரி மாவட்டத்தில் பிரதான அணைகளில் ஒன்றான சிற்றாறு அணை திறக்கப்படாததால் சிற்றாறு பட்டணம்கால் பாசனம் பாதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தல்

Posted: 23 Jul 2016 12:17 PM PDT

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி மது போதைக்கு அடிமையானவர்களுக்கு மறு வாழ்வு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஸ்ரீ தங்கமாரியம்மன் கோயில் கொடை விழா

Posted: 23 Jul 2016 12:16 PM PDT

கோவில்பட்டி நடராஜபுரம் 2ஆவது தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தங்கமாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ முத்துக்கருப்பன் திருக்கோயில் 20ஆவது ஆண்டு கொடை விழா நடைபெற்றது.

கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Posted: 23 Jul 2016 12:16 PM PDT

கோவில்பட்டியில் கூட்டுறவு நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி, கூட்டுறவு நியாயவிலைக் கடை ஊழியர்கள் சனிக்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பத்மநாபமங்கலம் பகுதியில் கல்குவாரிகளால் பாதிப்பு: நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தல்

Posted: 23 Jul 2016 12:16 PM PDT

பத்மநாபமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைப் பிரசாரக் கூட்டம்

Posted: 23 Jul 2016 12:15 PM PDT

ஆத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியில் சிவில் அசோஸியேஷன் தொடக்கம்

Posted: 23 Jul 2016 12:15 PM PDT

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் அசோஸியேஷன் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி இசக்கி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

Posted: 23 Jul 2016 12:15 PM PDT

தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதியில் உள்ள முப்பந்தல் இசக்கி அம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு 115 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு: திருச்செந்தூரில் இன்று நடைபெறுகிறது

Posted: 23 Jul 2016 12:14 PM PDT

மாநில அளவிலான சப்-ஜூனியர் கபடிப் போட்டியில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட அளவில் வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

Posted: 23 Jul 2016 12:14 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

"குவைத்தில் பொறியாளர், ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 23 Jul 2016 12:14 PM PDT

குவைத்தில் பணிபுரிய விரும்பும் பொறியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புன்னைக்காயலில் இன்று இலவச மருத்துவ முகாம்

Posted: 23 Jul 2016 12:13 PM PDT

புன்னைக்காயலில் கப்பல் மாலுமிகள் நலச்சங்கம், தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை, மதுரை குரு மருத்துவமனை ஆகியன சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

பன்னம்பாறையில் அம்மா திட்ட முகாம்

Posted: 23 Jul 2016 12:13 PM PDT

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கிளை நூலகத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டத்தில் இன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 23 Jul 2016 12:12 PM PDT

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறுகிறது.

செஸ் போட்டி: திருச்செந்தூர் பள்ளி சாம்பியன்

Posted: 23 Jul 2016 12:12 PM PDT

மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு

Posted: 23 Jul 2016 12:11 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற உள்ளது.

கணவர் மீது தாக்குதல்: மனைவி, மாமியார் மீது வழக்கு

Posted: 23 Jul 2016 12:11 PM PDT

கணவரைத் தாக்கத் தூண்டியதாக மனைவி, மாமியார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குடியிருப்புக்கு மாற்றுப் பாதை கோரி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 23 Jul 2016 12:11 PM PDT

சமுசிகாபுரம் ஊராட்சியில் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தரக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) செ.முத்துக்குமரனிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.

தேச ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கிறது விளையாட்டு

Posted: 23 Jul 2016 12:10 PM PDT

தேசத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு விளையாட்டு உதவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கூறினார்.

மலைப்பகுதிகளில் மழை இல்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Posted: 23 Jul 2016 12:10 PM PDT

ராஜபாளையத்திற்கு மேற்கே உள்ள தமிழக, கேரள வனப்பகுதியில் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் நல்லமழை பெய்யும். இதனால் அய்யனார்கோவில் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரும். வனப்பகுதி முழுவதும் குளுமையாக பசுமையாக இருக்கும்.

கல்லூரியில் நிதிக் கல்வி முகாம்

Posted: 23 Jul 2016 12:10 PM PDT

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி வணிகவியல் துறையும், பரோடா வங்கியும் இணைந்து சிறப்பு நிதிக் கல்வி முகாமை கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தின.

கருக்காத்தகுடி தேவாலயத்தில் தேர்பவனித் திருவிழா தொடக்கம்

Posted: 23 Jul 2016 12:10 PM PDT

திருவாடானைத் தாலுகா கருக்காத்தகுடி கிராமத்தில் புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விலைவாசி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. பிரசார இயக்கம்

Posted: 23 Jul 2016 12:09 PM PDT

திருவாடானை தாலுகா, தொண்டி, மங்களக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில், விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் நடைபெற்றது. திருவாடானை ஓரியூர் நான்கு

வங்கி மையத்தில் வாகனம் ஓட்டும் பயிற்சி நிறைவு விழா

Posted: 23 Jul 2016 12:09 PM PDT

ராமநாதபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளையின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலகு ரக மோட்டார் வாகனம் ஓட்டும் பயிற்சி வகுப்பு நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இங்கிலாந்து 589 ரன்களில் டிக்ளேர்

Posted: 23 Jul 2016 12:09 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 152.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

தேவகோட்டை கல்லூரியில் படிப்பு மையம் தொடக்கம்

Posted: 23 Jul 2016 12:09 PM PDT

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் படிப்பு மையம் தொடங்கப்பட்டது.

1976 மான்ட்ரியால் ஒலிம்பிக்

Posted: 23 Jul 2016 12:09 PM PDT

21-ஆவது ஒலிம்பிக் போட்டி கனடாவின் மான்ட்ரியால் நகரில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்றது.

தேனியில் மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டி

Posted: 23 Jul 2016 12:08 PM PDT

தேனி மாவட்ட நீச்சல் அரங்கில் தமிழ்நாடு பாராலிம்பிக் நீச்சல் சங்கம் மற்றும் மாவட்ட பாராலிம்பிக் நீச்சல் சங்கம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் நீச்சல் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™