Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய ரூ.570 கோடி : சி.பி.ஐ., விசாரணை துவங்குவதில் தாமதம்

Posted: 21 Jul 2016 09:38 AM PDT

தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூரில், மூன்று கன்டெய்னர் லாரிகளில் சிக்கிய, 570 கோடி ரூபாய் விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., விசாரணையை துவங்காமல் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடந்தது. அதற்கு முன், மே, 13ல், திருப்பூர் அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போது, மூன்று கன்டெய்னர் லாரிகளில், 570 கோடி ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 'அது, கோவையில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பணம்' என, பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது. எனினும், 'தேர்தலின் போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ...

வரியில்லா பட்ஜெட்! * அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால்... * 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்ட திட்டம் * 5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' * 1 லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் என அறிவிப்பு

Posted: 21 Jul 2016 09:52 AM PDT

தமிழகத்தில், அக்டோபர் மாதம், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், அரசின் கடன் சுமையும், வருவாய் பற்றாக்குறையும் அதிகரித்துள்ள போதிலும், வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இலவச திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் வீடுகள்; ஐந்து லட்சம் மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' மற்றும், ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை
உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம், அக்டோபரில் நிறைவு பெறுகிறது. எனவே, அந்த மாதம் உள்ளாட்சி ...

அவதூறு பேச்சை கண்டித்து மாயாவதி கட்சியினர்... போராட்டம் ! பா.ஜ., தலைவரை கைது செய்ய கோரிக்கை

Posted: 21 Jul 2016 09:59 AM PDT

லக்னோ,: உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி குறித்து, பா.ஜ.,வின் முன்னாள் மாநில துணைத் தலைவர் தயாசங்கர் சிங், அவதுாறாக பேசியதை கண்டித்து, பகுஜன் சமாஜ் கட்சியினர், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி உள்ள உ.பி.,யில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், உ.பி., மாநில பா.ஜ., துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், நேற்று முன்தினம், மாயாவதியை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.இதற்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினர், கடும் கண்டனம் தெரிவித்தனர். பார்லிமென்ட்டிலும், இந்த பிரச்னை ...

அண்டை நாடுகள் வளர்ந்தால் தான் இந்தியா வளரும்:- பிரதமர் மோடி

Posted: 21 Jul 2016 10:05 AM PDT

புதுடில்லி,: ''அண்டை நாடுகளின் வளர்ச்சியில் தான், இந்தியாவின் வளர்ச்சியும் உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா -- வங்கதேசத்தை இணைக்கும், முக்கியமான தரைவழிப்பாதையில், ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதை, 'வீடியோ கான்பரன்சிங்' முறை மூலம், பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாமற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அப்போது, பிரதமர் மோடி பேசியதாவது:தரைவழிப்பாதை துவக்கம் என்பது, இருநாட்டு உறவில், ஒரு முக்கிய மைல்கல். அங்கு அமைக்கப்பட்டுள்ள, இந்தஒருங்கிணைந்த ...

'ஒத்துழைக்கும் மாநிலங்களில் மட்டுமே நதிகள் இணைப்பு': தமிழகம் ஆதரவு; கேரளா எதிர்ப்பு

Posted: 21 Jul 2016 10:18 AM PDT

புதுடில்லி,: ''நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும், ஒத்துழைக்கும் மாநிலங்களில் மட்டுமே, இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகம் ஆதரவு அளிக்கிறது; ஆனால், கேரளா எதிர்க்கிறது,'' என, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, நதிகள் இணைப்பு திட்டம் குறித்து, அ.தி.மு.க., மற்றும் கேரள எம்.பி.,க்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான உமா பாரதி கூறியதாவது:மிகவும் முக்கியமான நதிகள் இணைப்பு திட்டத்தை, அதற்கு ஆதரவு அளிக்கும், ...

வெத்து வேட்டு பட்ஜெட் ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted: 21 Jul 2016 10:23 AM PDT

சென்னை:''தமிழக அரசு பட்ஜெட், வெறும் வெத்து வேட்டு அறிவிப்பாக உள்ளது,'' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

அவரது பேட்டி:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் போன்றோருக்கான முக்கிய அம்சங்கள், பட்ஜெட்டில் இடம் பெறாதது, வேதனைக்குரியதாக உள்ளது. 2011 அ.தி.மு.க., அரசு பட்ஜெட்டில், சமூக விரோதிகளுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுத்து, அமைதி பூங்காவாக தமிழகத்தை நிலைநாட்டுவோம் என,அறிவித்தனர்.ஆனால், தற்போது தமிழகத்தில், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, செயின் பறிப்பு ...

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.2.52 லட்சம் கோடி!

Posted: 21 Jul 2016 10:26 AM PDT

தமிழக அரசின், 2016 - 17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் மொத்த கடன், 2.52 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், நேற்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:கடந்த, 2012 - 13ம் ஆண்டில், 4.85 சதவீதமாக இருந்த, மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி, 2014 - 15ம் ஆண்டில், 6.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மாநிலப் பொருளாதார வளர்ச்சி மீண்டு வருகிறது என்பதற்கான அறிகுறி.கடந்த, 2015 - 16ம் ஆண்டில், மாநில மொத்த உற்பத்தி மதிப்பின் வளர்ச்சி, 8.79 சதவீதம். இதன் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில், ...

அரசின் வரி வருவாய் இலக்கு திடீர் குறைப்பு!

Posted: 21 Jul 2016 10:28 AM PDT

வணிக வரி வருவாய் வளர்ச்சியில் தொடர் சரிவு ஏற்பட்டு வந்ததால், வருவாய் இலக்கை, 72 ஆயிரத்து, 608 கோடி ரூபாயில் இருந்து, 67 ஆயிரத்து, 627 கோடி ரூபாயாக, அரசு குறைத்துள்ளது.தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ல், 72 ஆயிரத்து, 608 கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், 61 ஆயிரத்து, 709 கோடி ரூபாய் கிடைத்தது. இலக்கை விட, 10 ஆயிரத்து, 899 கோடி ரூபாய் குறைவு. வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது.வரி வருவாய் வளர்ச்சி, 2011 - 12ல்,27 சதவீதமாக இருந்தது, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்ததால், ...

கலீதா ஜியா மகனுக்கு 7 ஆண்டு சிறை

Posted: 21 Jul 2016 10:57 AM PDT

தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கலீதா ஜியாவுடைய மகன் தாரிக் ரஹ்மான், 48. இவர் மீது, 16 கோடி ரூபாயை, சிங்கப்பூருக்கு சட்டவிரோதமாக கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த, தாகா சிறப்பு கோர்ட், அவரை நிரபராதியாக அறிவித்தது. இதை எதிர்த்து, லஞ்ச தடுப்பு ஆணையம் சார்பில், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, நேற்று தீர்ப்பளித்த ஐகோர்ட், தாரிக் ரஹ்மானுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் ...

இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி

Posted: 21 Jul 2016 11:01 AM PDT

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று மாலையுடன் முடிந்தது. இதன்படி, ஒரு லட்சத்து, 92 ஆயிரத்து, ஒன்பது அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பியுள்ளன. ஒரு லட்சத்து, ஆயிரத்து, 318 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு...விளையாட்டுப் பிரிவில், 358 இடங்களும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.கடந்த ஆண்டு, 89 ஆயிரம் இடங்களே காலியாக இருந்தன. இந்த ஆண்டு, எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ், கம்யூ., ...

'பான்' இல்லாமல் பரிவர்த்தனை? 7 லட்சம் பேருக்கு 'நோட்டீஸ்'

Posted: 21 Jul 2016 11:50 AM PDT

புதுடில்லி: 'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணைக் குறிப்பிடாமல், மிகப்பெரிய அளவில் பணப் பரிவர்த்தனை செய்துள்ள, ஏழு லட்சம் பேருக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது.
கறுப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருமான வரி செலுத்துவோரின் பண நடவடிக்கைகளை, வருமான வரித்துறை, 'பான்' எண்கள் மூலமாக கண்காணித்து வருகிறது. அதே நேரத்தில், சில குறிப்பிட்ட முதலீடுகள், பரிவர்த்தனைகள், பான் எண்கள் குறிப்பிடாமல் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, 2009ம் ஆண்டில் இருந்து செய்யப்பட்ட, 90 லட்சம் பரிவர்த்தனைகளை, வருமான வரித்துறை ...

வீட்டு மாடியில் பாக்., கொடி; பீஹாரில் மீண்டும் பரபரப்பு

Posted: 21 Jul 2016 01:09 PM PDT

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின், சொந்த மாவட்டமான நாலந்தாவில், ஒரு வீட்டின் மாடியில், பாக்., கொடி பறக்க விடப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ள பீஹாரில், கடந்த வாரம், பாக்., ஆதரவு கோஷங்கள் எழுப்பப் பட்டன. பயங்கரவாதத்தை துாண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, மதப் பிரசாரகர் ஜாகிர் நாயக்கிற்கு ஆதரவாக நடந்த பேரணியில், பாக்., ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது. இது தொடர்பாக, சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து, பா.ஜ., மற்றும் அதன் மாணவர் அமைப்பான ...

ஆண்டிகுவா டெஸ்ட்: கோஹ்லி சதம்; இந்தியா ரன் குவிப்பு

Posted: 21 Jul 2016 02:21 PM PDT

ஆண்டிகுவா : வெஸட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி சதம் அடிக்க இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், ஆண்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. ‛டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‛பேட்டிங்' தேர்வு செய்தார். லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜாவுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
விஜய் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™