Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! - கிருஷ்ணாம்மா !

Posted: 21 Jul 2016 03:41 PM PDT

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் உறவுகளே! எனக்கு கண்ணில் காட்ராக்ட் இருக்கிறது .............கடந்த 15 நாட்களாக படிப்பது கொஞ்சம் கலங்கலாக தெரிகிறது என்று இன்று check up காக சென்றோம் ......டாக்டர் check up செய்து, வரும் ஞாயிறு காலை ஆபரேஷன் செய்வதாக சொல்லிவிட்டார்.............. எப்படியும் குறைந்தது 15 -20 நாட்கள் கழித்து தான் என்னால் இங்கு வர இயலும் என்று தோன்றுகிறது. அன்புடன், கிருஷ்ணாம்மா

தத்துவம்-வாழ்க்கை

Posted: 21 Jul 2016 08:41 AM PDT

நினைவுகள் வாழ்க்கை ஆனால் ஆனந்தம்
வாழ்க்கை நினைவுகள் ஆனால் பெருந்துன்பம்
கேட்டது கிடைத்தால் ஆனந்தம்
கேட்காமல் கிடைத்தால் பேரானந்தம்
வேண்டும் என்று கேட்கும் மனதை
திரை போட்டு மூடி மறைத்தால்
திரிசங்கு சொர்க்கமே

இன்று வெள்ளிக்கிழமை :தான் என்பதை உறுதி செய்ய….!!

Posted: 21 Jul 2016 08:27 AM PDT

- மல்லிகைப்பூக்களும், சிகப்பு, மஞ்சள் சேலைகளும் வீதிகளில் ஆங்காங்கே அழகாய் பூத்திருந்தால், அன்று வெள்ளிக் கிழமை என அறிக! – குமரன் கருப்பையா – —————————————— – @archanabaluit 'பாக்கெட் பாலை அபிஷேகத்துக்கு குடுக்காதீங்க'னு ஐயர் சொல்றார். கற்சிலைக்கே ஒத்துக்காத பாலைத்தான்யா எங்க குழந்தைகளுக்கு குடுக்கறோம்! – —————————————— – வெட்டியானுக்கும், மருத்துவருக்கும் பிறகு, பஸ் கண்டக்டர்களுக்கு நாமெல்லாம் வெறும் சதைப் பிண்டங்களென மகா நெரிசலான ஒரு பேருந்துப் பயணத்தில் தோன்றியிருக்கிறது. – – ...

யார் இந்த பியூஸ் மனுஷ்? 10 முக்கிய தகவல்கள்

Posted: 21 Jul 2016 07:47 AM PDT

பியூஷ் மனுஷ் சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும்பணியாற்றி வரும் சூழலியல் செயற்ப்பாட்டாளர். பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும், தனிப்பட்ட முயற்சியில் காடுகளை உருவாக்கியும் சாதனை புரிந்த முன்னுதாரண மனிதர். 1. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர், அவரது தாத்தா காலத்திலேயே தமிழகத்தின் சேலம் நகருக்கு குடிபெயர்ந்த வியாபார குடும்பத்தை சேர்ந்தவர் பியூஷ் மனுஷ். தனது சாதிப் பெயரை துறந்து மனிதத்தை குறிக்கும் 'மனுஷ்' என்ற பெயரை சேர்த்துக் கொண்டவர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சேலத்தில்தான். ...

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 21 Jul 2016 07:07 AM PDT

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் http://www.mediafire.com/download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ http://www.mediafire.com/download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் ...

சில கவிதைகளும் மொக்கைகளும்..........

Posted: 21 Jul 2016 06:30 AM PDT

கவிதை எண் 2001 அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில் என்ன கொடுமை சார் இது.... கவிதை எண் 2002 பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய ! எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க! மலரிடம் சொன்னது முள்.... கவிதை எண் 2003 ஆசை படுவதை மறந்து விடு ! ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே கவிதை எண் 2004 ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும் என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார். கவிதை எண் ...

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -'வெண் பொங்கல்

Posted: 21 Jul 2016 12:53 AM PDT

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ...

சொல்லித் தரப்படாத இந்தியாவின் Financial Management!

Posted: 21 Jul 2016 12:24 AM PDT

ஒரு வெட்டிப் பயலுக்கு 100 ரூபாய் கிடைத்தது. நேராக 5 ஸ்டார் ஹோட்டலுக்குப் போனான். வயிறு முட்ட வேண்டியதை எல்லாம் ஆர்டர் செய்து சாப்பிட்டான். பில் மூவாயிரம் ரூபாய் வந்தது. நேராக மேனேஜரிடம் போய், ''பணம் இல்லை'' என்றான். மேனேஜர் அவனை போலீஸில் ஒப்படைத்தார். அவன் போலீஸுக்கு 100 ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டான். இதுதான் எம்.பி.ஏ வகுப்புகளில் சொல்லித் தரப்படாத இந்தியாவின் Financial Management! – ——————————————– @urs_priya ஸ்மார்ட் போன் எல்லோரையும் 'கஜினி' பட சூர்யாவாக மாற்றி ...

ஒரு பாடலில் ஒரு நாடகம்

Posted: 20 Jul 2016 07:44 PM PDT

- தமிழ் இலக்கியங்களில் உள்ள அகத்திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சுவைக்கத் தக்கவையாய் உள்ளன. அவற்றுள் நாடகப் பாங்கில் அமைந்த பாடல்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. - திருவள்ளுவர் தமது இன்பத்துப்பால் "புலவி நுணுக்கம்' அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் பத்து நாடகக் காட்சிகளை அழகுற அமைத்துள்ளார். - இதே போன்றதொரு நாடகப் போக்கினை எட்டுத்தொகை நூலாகிய கலித்தொகையில் உள்ள கபிலரின் குறிஞ்சிக்கலிப் பாடலில் காணமுடிகிறது. - தாயும் மகளும் தனித்திருந்த வேளையில் வேட்கை ...

கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்

Posted: 20 Jul 2016 07:34 PM PDT

"லிங்கா' படத்துக்கான நஷ்டத்தை வழங்காததால், "கபாலி' படத்தை வெளியிட தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடர்பாக "சுக்ரா பிலிம்ஸ்' நிறுவனத்தின் பங்குதாரரான மகாபிரபு தாக்கல் செய்த மனு விவரம்: நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்துக்கு ரூ.13.25 கோடியைக் கொடுத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் விநியோக ...

நாடாளுமன்றத்தில் காரசார விவாதத்தின்போது தூங்கிய ராகுல் காந்தி

Posted: 20 Jul 2016 07:32 PM PDT

குஜராத்தில் மாட்டுத்தோல் வைத்திருந்தவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தூங்கி கொண்டிருந்த காட்சி வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் புதன்கிழமை கூடியதும் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பி, காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றியபோது, அவரை பேசவிடாமல் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் ...

திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 20 Jul 2016 07:31 PM PDT

மத்திய அமைச்சரவை இன்று பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் 1,011 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மசோதா, இந்தியா - மொசாம்பி இடையே விமான போக்குவரத்திற்கான மசோதா, கேரள மாநிலம் கொச்சியில் 1,799 கோடி ரூபாய் செவில் உலர் துறைமுக திட்டம் அமைப்பதற்கான மசோதா, பினாமி மூலம் சொத்து சேர்ப்பதை தடுப்பதற்கான ...

வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் வியூகம்

Posted: 20 Jul 2016 07:30 PM PDT

தெருமுனை முகாம்கள் மூலம் சேவை வழங்கி, அதன்மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் சென்னை மண்டலம் மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது சுமார் 8 லட்சம் தரைவழித் தொலைபேசி வாடிக்கையாளர்களும், 15 லட்சம் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களும் உள்ளனர். இவர்களில் 50 சதவீதத்தினர் பிஎஸ்என்எல் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவையையும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தொலைபேசி பழுது, செல்லிடப்பேசி வாடிக்கையாளர் ...

பணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை

Posted: 20 Jul 2016 07:27 PM PDT

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 22) திரும்பப் பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது. வழக்குரைஞர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அமல்படுத்திய சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம், புதுச்சேரி வழக்குரைஞர்களில் ஒரு பிரிவினர், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

மாயாவதிக்காக எனது இதயம் உருகுகிறது:முதல்வர் ஜெயலலிதா

Posted: 20 Jul 2016 07:26 PM PDT

வார்த்தை சவுக்கடிகளால் தாக்கப்பட்டுள்ள, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்காக தனது இதயம் கசிந்து உருகிறது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, உத்தரப்பிரதேச பாஜக பிரமுகர் தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஒடுக்கப்பட்டவர்களின் நிகரில்லாத் தலைவராக மதிக்கப்படுபவர் மாயாவதி. அண்மையில் குஜராத்தில் நடந்த நிகழ்வைக் கண்டித்து, கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தில் ...

பித்தப் பூக்கள்...!!

Posted: 20 Jul 2016 05:48 PM PDT

அச்சமே ஆபத்து….!! * அன்றைய காதலர்களின் காதல் கடிதங்கள் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றில் பதியப்பட்டன. இன்றைய காதலர்கள் கடிதம் எழுதுவதை மறந்து எஸ்எம்எஸ் குறுஞ்செய்திகளில் பரிமாறிக் கொண்டு அடுத்த நொடியே அழகியல் கற்பனை வரிகளை அழித்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள். சமுகச் சங்கிலியில் சிக்குண்டு அச்சத்தில் வாழ்வது சாதல் அச்சமின்றி வாழ்வது காதல். *


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™