Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து

Posted: 21 Jul 2016 01:31 PM PDT

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 21 Jul 2016 01:31 PM PDT

இலங்கை சிறையிலிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்.

பியூஷ் மானுஷ் ஜாமீனில் விடுவிப்பு

Posted: 21 Jul 2016 01:31 PM PDT

சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மானுஷ் வியாழக்கிழமை மாலை சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சட்டவிரோதமாக கிரானைட் வெட்டிய வழக்கு: அரசுக்கு ரூ. 748 கோடி இழப்பு:குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted: 21 Jul 2016 01:30 PM PDT

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக கிரானைட் பாறைகளை வெட்டியதாக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட 4 வழக்குகளில் மேலூர்

போலீஸாரிடமிருந்து தப்பிய சீர்திருத்தப் பள்ளி சிறுவன் பிடிபட்டார்

Posted: 21 Jul 2016 01:30 PM PDT

போலீஸிடமிருந்து தப்பியோடிய சீர்திருத்தப் பள்ளி சிறுவன் மீண்டும் போலீஸாரிடம் பிடிபட்டார்.

அரசு சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்

Posted: 21 Jul 2016 01:30 PM PDT

சென்னை கெல்லீஸில் உள்ள அரசு சிறுவர் கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தங்கம் பவுனுக்கு ரூ. 88 குறைவு

Posted: 21 Jul 2016 01:29 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.88 குறைந்து, ரூ. 23,360-க்கு விற்பனையானது.

"அட்டாக்' பாண்டி ஜாமீன் மனு தள்ளுபடி:உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Jul 2016 01:29 PM PDT

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திமுக முன்னாள் அமைச்சருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Jul 2016 01:29 PM PDT

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ரூ. 207 கோடி உதவித் தொகை 6.96 லட்சம் மாணவர்கள் பயன்

Posted: 21 Jul 2016 01:28 PM PDT

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகைக்காக ரூ.207.96 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

Posted: 21 Jul 2016 01:28 PM PDT

போக்குவரத்துத் துறைக்கு பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கும் வகையில் ரூ.1295.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1,000 கோயில்களை புதுப்பிக்க ரூ.10 கோடி

Posted: 21 Jul 2016 01:27 PM PDT

ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள், கிராமங்கள் ஆகிய இடங்களில் 1,000 கோயில்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

147 லட்சம் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு

Posted: 21 Jul 2016 01:27 PM PDT

2016-17 ஆம் ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கை 147 லட்சம் டன்னாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது.

மாநில நெடுஞ்சாலைகள் ரூ.1,541 கோடியில் நான்குவழிச் சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும்

Posted: 21 Jul 2016 01:26 PM PDT

அரசு-தனியார் பங்களிப்பு முறையில் மேட்டுப்பாளையம்-ஈரோடு நெடுஞ்சாலை உள்பட மாநில நெடுஞ்சாலைகள் ரூ.1,541 கோடியில் நான்கு வழிச்சாலைகளாகத் தரம் உயர்த்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிராமத்துக்கு ரூ.356 கோடி;நகரத்துக்கு ரூ.350 கோடி

Posted: 21 Jul 2016 01:24 PM PDT

கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.356 கோடியும், நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டங்களுக்கு ரூ.350 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வைகை-நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிர் அளிக்க புதிய திட்டம்

Posted: 21 Jul 2016 01:24 PM PDT

வைகை, நொய்யல் ஆறுகளின் நீர்வரத்தை நிலைப்படுத்தவும், வனப் பகுதியில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும் வைகை-நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிரளித்தல் என்ற புதிய திட்டம் ரூ.24.58 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

மாநில வளர்ச்சிக்கு 5 இயக்கங்கள்,11 சிறப்புத் திட்டங்கள்:நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

Posted: 21 Jul 2016 01:23 PM PDT

தமிழக வளர்ச்சிக்காக வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த முதன்மைத் துறைகளின் வளர்ச்சிக்கான திட்டம் உள்பட 11 சிறப்பு திட்டங்களையும், தூய்மைத் தமிழகத்துக்கான இயக்கம், திறன் மேம்பாட்டுக்கான இயக்கம் உள்பட 5 இயக்ககங்களையும் நிதிநிலை அறிக்கையில் நிதித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

விலையில்லா திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் கறவைப் பசுக்கள், 4 லட்சம் ஆடுகள்

Posted: 21 Jul 2016 01:23 PM PDT

விலையில்லா திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 4 லட்சம் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளும் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சுற்றுலாத் துறைக்கு ரூ.85 கோடி ஒதுக்கீடு; உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.53 கோடி

Posted: 21 Jul 2016 01:23 PM PDT

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் சுற்றுலாத் துறைக்கு ரூ.85.80 கோடியும், சுற்றுலாத் தலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.53.20 கோடியும் ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்குரூ. 24,130 கோடி ஒதுக்கீடு

Posted: 21 Jul 2016 01:22 PM PDT

பள்ளி கல்வித்துறைக்கு என திருத்திய வரவு செலவு திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ.24,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3,193.50 கோடி அதிகமாகும்.

5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க

Posted: 21 Jul 2016 01:21 PM PDT

தகவல் தொழல்நுட்பவியல் துறை சார்பில் நடப்பாண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ.890 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர் கல்வித் துறைக்கு ரூ. 3,679 கோடி

Posted: 21 Jul 2016 01:21 PM PDT

உயர் கல்வித் துறைக்கு 2016-17 திருத்திய வரவு - செலவுத் திட்டத்தின் கீழ் ரூ. 3,679.01 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

சத்துணவுத் திட்டத்துக்கு ரூ. 1,645 கோடி

Posted: 21 Jul 2016 01:20 PM PDT

சத்துணவுத் திட்டத்தின்கீழ் 55 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறைக்குரூ. 9,000 கோடி

Posted: 21 Jul 2016 01:19 PM PDT

தமிழக சுகாதாரத் துறைக்கு 2016 - 2017-ஆம் நிதியாண்டில் ரூ. 9,073 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ரூ.1,500 கோடி வரிவருவாய் இழப்பு:நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.சண்முகம் பேட்டி

Posted: 21 Jul 2016 01:17 PM PDT

500 டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட்டதால், நிகழ் நிதியாண்டில் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி அளவுக்கு வரிகள் வருவாயில் இழப்பு ஏற்படும் என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் க.சண்முகம் தெரிவித்தார்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 5 ஆயிரமாக அதிகரிப்பு

Posted: 21 Jul 2016 01:17 PM PDT

மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 5 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் மீன்வளத் துறைக்கு ரூ. 743.79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ. 2,888 கோடியில் 11 முக்கிய குடிநீர்த் திட்டப் பணிகள்

Posted: 21 Jul 2016 01:17 PM PDT

தமிழகத்தில் ரூ.2,888.26 கோடியில் 11 முக்கிய குடிநீர்த் திட்டங்களுக்கான பணியில் நடைபெற்று வருவதாக என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2,00,000 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 21 Jul 2016 01:17 PM PDT

2 லட்சம் இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயற்சி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.795 கோடி ஒதுக்க மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 21 Jul 2016 01:03 PM PDT

பிரதமரின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் 10-ஆவது கட்ட திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.795 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வியாழக்கிழமை வலியுறுத்தியது.

’ஸ்டிரைக்’ இன்னும் கூட பிரயோஜனமா இருந்திருக்கும் சார்..!

Posted: 21 Jul 2016 01:02 PM PDT

புதிய கல்விக் கொள்கை: ஆலோசனை வழங்க எம்.பி.க்களுக்கு அமைச்சர் ஜாவடேகர் வேண்டுகோள்

Posted: 21 Jul 2016 01:02 PM PDT

புதிய கல்விக் கொள்கைக்கு எம்.பி.க்கள் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கேட்டுக் கொண்டார்.

தென்னக நதிகளை இணைப்பதில் பிரச்னை: மக்களவையில் அமைச்சர் உமா பாரதி விளக்கம்

Posted: 21 Jul 2016 01:00 PM PDT

தென்னக நதிகளை இணைப்பதில் பல்வேறு பிரச்னைகள் நிலுவுவதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்தார்.

அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்

Posted: 21 Jul 2016 12:57 PM PDT

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை வாய்மையாகட்டும்

Posted: 21 Jul 2016 12:56 PM PDT

இந்திய தேசப்பிதாவான காந்தியடிகள் அகிம்சை முறையை வலியுறுத்திய அதேயளவில் சுற்றுச்சூழல் தூய்மையையும் வலியுறுத்தியவர். குறிப்பாக, அவருடைய வார்தா திட்டத்தில் கழிப்பறைப் பயன்பாடு முதன்மையாயிற்று. அன்றைய நிலைமைக்கேற்ப எளியமுறையில் கழிப்பறையமைத்தலைச் செயல்முறையாகச் செய்து காட்டினார்.

முட்டாள் தின நிதியாண்டு!

Posted: 21 Jul 2016 12:55 PM PDT

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய இந்திரா காந்தி அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்ட ஒரு யோசனை இப்போது மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது. வழக்கமாக ஏப்ரல் முதல் தேதியில் தொடங்கும் மத்திய அரசின் நிதியாண்டை மாற்றலாமா என்பதுதான் அந்த யோசனை.

கங்கைக் கரை சத்ருக்கள்!

Posted: 21 Jul 2016 12:54 PM PDT

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' என்றார் மகாகவி பாரதியார். வள்ளுவன் வந்துதித்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை உவந்தளித்ததால் விண்ணை முட்டும் அளவுக்குப் புகழ்படைத்துள்ளது தமிழ்நாடு என்று ஆர்ப்பரிக்கிறார் பாரதி.

செப்டம்பர் 2 வரை பேரவை கூட்டத் தொடர்:பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு

Posted: 21 Jul 2016 12:46 PM PDT

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

நிதிநிலை அறிக்கை வெற்று அறிக்கை:மு.க.ஸ்டாலின்

Posted: 21 Jul 2016 12:46 PM PDT

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. அது வெற்று அறிக்கையாகவே உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

காவல்துறைக்கு ரூ.6,103 கோடி

Posted: 21 Jul 2016 12:45 PM PDT

காவல்துறைக்கு நிதிநிலை அறிக்கையில் ரூ.6,103 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.435 கோடி அதிகமாகும்.

ஆன்-லைன் பட்டா மாற்ற முறை விரிவாக்கம்

Posted: 21 Jul 2016 12:45 PM PDT

நவீன கணினி பட்டா மாற்ற முறை (ஆன்-லைன்) விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 18,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம்

Posted: 21 Jul 2016 12:44 PM PDT

தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 18,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி

Posted: 21 Jul 2016 12:44 PM PDT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு நிதியத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து

Posted: 21 Jul 2016 12:43 PM PDT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (2016-17) வரவேற்றும் எதிர்ப்புத் தெரிவித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டை

Posted: 21 Jul 2016 12:43 PM PDT

இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

முதல்வரின் காப்பீட்டுத் திட்டம்:15.41 லட்சம் பேர் பயன்

Posted: 21 Jul 2016 12:41 PM PDT

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை 15.41 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 இலவச ஸ்கூட்டர்கள்

Posted: 21 Jul 2016 12:41 PM PDT

இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 இலவச ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லோக் ஆயுக்த அமைக்கப்படும்

Posted: 21 Jul 2016 12:40 PM PDT

பொதுச் சேவைகளின் எண்ணிக்கை 300-ஆக உயர்த்தப்படும் என்றும், லோக் ஆயுக்த அமைக்க உருவாக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தமிழக நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் வன்முறைக்கு முக்கியக் காரணம் பாகிஸ்தான்:மக்களவையில் ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Posted: 21 Jul 2016 12:39 PM PDT

"காஷ்மீரில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தது பாகிஸ்தான்' என்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்க்கவில்லை:கேரள அரசு

Posted: 21 Jul 2016 12:37 PM PDT

""சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; அந்தக் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு'' என்று மாநில தேவசம் துறை (அறநிலையம்) அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

நீதிபதிகள் நியமனங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை:காங்கிரஸ் குற்றச்சாட்டு

Posted: 21 Jul 2016 12:36 PM PDT

நீதிபதிகள் நியமன தேசிய ஆணையம் (என்ஜேஏசி) அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் ஆத்திரமடைந்துள்ள மத்திய அரசு, புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"கங்கையில் கழிவுநீர் கலப்பது 2020-க்குள் முற்றிலுமாக நிறுத்தப்படும்'

Posted: 21 Jul 2016 12:36 PM PDT

கங்கையில் கழிவுநீர் கலப்பது, வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

மாயாவதி மீதான விமர்சனத்தைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம்

Posted: 21 Jul 2016 12:36 PM PDT

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை உத்தரப்பிரேதச பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங் தரக்குறைவாக விமர்சித்ததைக் கண்டித்து லக்னௌவில் அக்கட்சியினர் வியாழக்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு:ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவு கோரினார்?

Posted: 21 Jul 2016 12:35 PM PDT

மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஜிஎஸ்டி மசோதாவுக்கு

ஆதார் ஆணையத் தலைவராகஅஜய் பூஷண் பாண்டே நியமனம்

Posted: 21 Jul 2016 12:34 PM PDT

ஆதார் அட்டைகளை உருவாக்கி விநியோகிக்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமைச் செயல் அதிகாரியாக அஜய் பூஷண் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.

குஜராத்: தாக்கப்பட்ட தலித்துகளை சந்தித்து ராகுல் ஆறுதல்

Posted: 21 Jul 2016 12:34 PM PDT

குஜராத்தில் பசுவின் தோலை உரித்ததாகக் கூறி தாக்கப்பட்ட தலித்துகளை ராஜ்கோட் மருத்துவமனையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கருக்கலைப்பு சட்டம்:மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 21 Jul 2016 12:33 PM PDT

கருக்கலைப்பு சட்டம் தொடர்பாக பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கும், மகாராஷ்டிர அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாசங்கரின் நாவுக்கு ரூ.50 லட்சம்:பகுஜன் பெண் தலைவர் அறிவிப்பு

Posted: 21 Jul 2016 12:33 PM PDT

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சனம் செய்த தயாசங்கர் சிங்கின் நாவினை அறுத்துக் கொண்டு வருவோருக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அக்கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு:மக்களவையில் தகவல்

Posted: 21 Jul 2016 12:32 PM PDT

நாட்டில் நிகழாண்டில் இதுவரை மழை, வெள்ளத்தால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

கூடங்குளம் 2 அணு உலைகளிலிருந்து தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 21 Jul 2016 12:31 PM PDT

கூடங்குளத்தில் இரு அணு உலைகள் மூலம் தமிழகத்துக்கு 925 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்: இந்தியா-72/1

Posted: 21 Jul 2016 12:31 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையின்போது 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

சாயப்பட்டறைத் தொழில் புனரமைப்புக்கு ரூ.200 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 21 Jul 2016 12:31 PM PDT

திருப்பூரில் ஜவுளி, சாயப்பட்டறைத் தொழில் சந்தித்து வரும் நெருக்கடிகளைப் போக்கவும், தொழிலை புனரமைக்கவும், வங்கிக் கடன் நிலுவைகளைச் செலுத்துவதற்கும் மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது.

காஷ்மீர் விவகாரம்: சிதம்பரத்தின் கருத்துக்கு பாஜக கண்டனம்

Posted: 21 Jul 2016 12:30 PM PDT

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து, தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கும் வகையில் உள்ளது என்று பாஜக கண்டித்துள்ளது.

ஒலிம்பிக் தரவரிசை: சாய்னாவுக்கு 5-ஆவது இடம்

Posted: 21 Jul 2016 12:30 PM PDT

ரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டித் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்துவுக்கு, 9-ஆவது இடம் கிடைத்துள்ளது. ஆடவர் ஒற்றையர் போட்டித் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 9-ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஊக்கமருந்து ஆய்வகம் மீதான தடை நீக்கம்

Posted: 21 Jul 2016 12:29 PM PDT

ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் அமைக்கப்பட்டுள்ள ஊக்கமருந்து தடுப்பு ஆய்வகம் மீதான இடைக்காலத் தடையை சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (வாடா) நீக்கியுள்ளது.

இங்கிலாந்து-பாக். 2-ஆவது டெஸ்ட்: மான்செஸ்டரில் இன்று தொடக்கம்

Posted: 21 Jul 2016 12:29 PM PDT

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

ரஷிய தடகள சங்கத்தின் மேல்முறையீடு நிராகரிப்பு

Posted: 21 Jul 2016 12:29 PM PDT

ரஷிய தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசும், தடகள சங்கமும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரஷிய தடகள அணி, ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் தடை விதித்துள்ளது.

இரட்டை பதக்கம் வெல்லுமா இந்திய டென்னிஸ் அணி?

Posted: 21 Jul 2016 12:29 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் 15 விளையாட்டுகளில் 121 பேருடன் களம் காண்கிறது இந்திய அணி. அதில் டென்னிஸும் ஒன்று. இந்தியாவின் சார்பில் 4 பேர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவிலிருந்து யாரும் தகுதி பெறவில்லை.

ரியோ ஒலிம்பிக் சில தகவல்கள்...

Posted: 21 Jul 2016 12:28 PM PDT

* 31-ஆவது ஒலிம்பிக் போட்டி, பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெற உள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கி லாபம் 50% அதிகரிப்பு

Posted: 21 Jul 2016 12:25 PM PDT

தனியார் துறையைச் சேர்ந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 50.72 சதவீதம் அதிகரித்தது.

அசோக் லேலண்ட் லாபம் இரு மடங்கு உயர்வு

Posted: 21 Jul 2016 12:24 PM PDT

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் லாபம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்தது.

ஐ.டி.சி. லாபம் ரூ.2,385 கோடி

Posted: 21 Jul 2016 12:24 PM PDT

வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள்கள் தயாரிப்புத் துறையில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,385 கோடி நிகர லாபம் ஈட்டியது.

எச்.டி.எப்.சி. வங்கி நிகர லாபம் ரூ.3,238 கோடி

Posted: 21 Jul 2016 12:23 PM PDT

எச்.டி.எப்.சி. வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் ரூ.3,238.91 கோடியாக இருந்தது. இதுகுறித்து அவ்வங்கி மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:

கோடக் மஹிந்திரா வங்கி வருவாய் ரூ.5,120 கோடி

Posted: 21 Jul 2016 12:23 PM PDT

கோடக் மஹிந்திரா வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.5,120.03 கோடி வருவாய் ஈட்டியது.

அமேசானில் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை 160% அதிகரிப்பு

Posted: 21 Jul 2016 12:23 PM PDT

இணையதள விற்பனை நிறுவனமான அமேசானில் வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை 160% அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் (வீடு மற்றும் சமையலறைப் பிரிவு) சுமித் சகாய் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.: அடுத்த பொதுச் செயலர் யார்?12 பேர் போட்டி; ரகசிய வாக்குப் பதிவு

Posted: 21 Jul 2016 12:22 PM PDT

ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு, வியாழக்கிழமை நடைபெற்றது.

சீனாவில் மழை வெள்ளத்துக்கு 42 பேர் பலி

Posted: 21 Jul 2016 12:22 PM PDT

கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் பலத்த மழைக்கு 42 பேர் பலியாகினர் என அரசு செய்தி நிறுவனம் தெரிவித்தது. 74 பேரைக் காணவில்லை.

தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் தாக்கு

Posted: 21 Jul 2016 12:21 PM PDT

நாட்டில் தலித்துகள் உள்ளிட்ட இதர பிரிவினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டில் உள்ள சில பகுதிகளில் நிலவும் சூழல்கள் தலிபானை நினைவுப்படுத்துவதாக அக்கட்சிகள் விமர்சித்துள்ளன. குஜராத் மாநிலம், உனாவில் அண்மையில் தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.

என்ஜிஓ நிர்வாகிகளின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: எம்.பி.க்கள் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

Posted: 21 Jul 2016 12:21 PM PDT

சில குறிப்பிட்ட வகையிலான அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்ஜிஓ) தலைவர்கள், நிர்வாகிகள் தங்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எம்.பி.க்கள் எழுப்பிய கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

பசுப் பாதுகாப்புக் குழுக்களை குஜராத் அரசு கலைக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 21 Jul 2016 12:20 PM PDT

குஜராத் மாநிலத்தில் இயங்கி வரும் பசுப் பாதுகாப்புக் குழுக்களுக்கு அந்த மாநில அரசு தடை விதிக்க வேண்டும் என்றும், தலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான உணர்ச்சிகளைத் தூண்டி விடும் மதவாத அமைப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

"குமார் விஷ்வாஸுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை மறுத்த பெண் சாட்சி'

Posted: 21 Jul 2016 12:20 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸுக்கு எதிரான பாலியல் வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பெண் ஒருவர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் என்று தில்லி காவல் துறை, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுழல் விளக்கு காரில் மதுபானம் கடத்திய மூவர் கைது

Posted: 21 Jul 2016 12:20 PM PDT

தில்லியில் இருந்து குஜராத்துக்கு சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காரில் மதுபானங்களை கடத்தியதாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கிர்பால் சர்மா உள்பட மூவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

டெங்கு பாதித்த பள்ளி மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் காப்பீடு

Posted: 21 Jul 2016 12:19 PM PDT

டெங்கு நோய் பாதித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 25 ஆயிரத்திற்கான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படும் என்று குர்கான் மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஆழ்கடலில் ஹைட்ரஜன் புதையல்!ஆய்வில் தகவல்

Posted: 21 Jul 2016 12:19 PM PDT

புவித் தகடுகள் நகருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் ஏராளமான அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதிரொலி:துருக்கியில் அவசர நிலை பிரகடனம்

Posted: 21 Jul 2016 12:19 PM PDT

துருக்கியில் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் கடந்த வாரம் முயன்றதன் எதிரொலியாக, அந்த நாட்டில் 3 மாதங்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அதிபர் எர்டோகன் அறிவித்தார்.

பண மோசடி: காலீதா ஜியா மகனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

Posted: 21 Jul 2016 12:18 PM PDT

25 லட்சம் டாலர் (சுமார் ரூ.168 கோடி) பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் காலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

வங்கதேசம்: ஜே.எம்.பி. பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் கைது

Posted: 21 Jul 2016 12:18 PM PDT

வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் உள்ளிட்ட நான்கு பயங்கரவாதிகளை அந்த நாட்டு சிறப்பு அதிரடிப் படையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

"ஃபார்ச்சூன்' பட்டிய−ல் 7 இந்திய நிறுவனங்கள்

Posted: 21 Jul 2016 12:18 PM PDT

"ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஏழு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஃபார்ச்சூன் இதழ், வருவாய் அடிப்படையில் உலக அளவில் முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களை ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது

கங்கை கரை அருகே திருவள்ளுவர் சிலை:உத்தரகண்ட் அரசு உத்தரவு

Posted: 21 Jul 2016 12:16 PM PDT

ஹரித்துவார் கங்கை கரை அருகே திருவள்ளுவர் சிலை வைக்க இடம் ஒதுக்கி உத்தரகண்ட் அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை தொடக்கம்

Posted: 21 Jul 2016 12:15 PM PDT

நவக்கிரக ஸ்தலங்களில் குரு ஸ்தலமான, வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை விழா வியாழக்கிழமை தொடங்கியது.

கபாலி படத்துக்கு தடை இல்லை:உயர்நீதி மன்றம்

Posted: 21 Jul 2016 12:14 PM PDT

கபாலி படத்தை வெளியிட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெரியதாழையில் கடல் சீற்றம்:2 படகு கவிழ்ந்து 10 மீனவர்கள் காயம்

Posted: 21 Jul 2016 12:14 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழையில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் 2 படகுகள் கவிழ்ந்தன. இதில், 10 மீனவர்கள் காயமடைந்தனர்.

அஸ்ஸாம்: நீடிக்கும் வெள்ள அபாயம்

Posted: 21 Jul 2016 12:13 PM PDT

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக வெள்ள அபாயம் நீடித்த வண்ணம் உள்ளது.

விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதா?ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிபிஐ நீதிபதி கண்டனம்

Posted: 21 Jul 2016 12:12 PM PDT

"ஏர்செல் - மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிப்பதா?' என்று சிபிஐ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.

"படிக்காதவன்' பாணியில் ஓர் அண்ணன்! சட்டப்படிப்பில் முதல் மாணவனாக சேர்ந்து அசத்தும் தம்பி

Posted: 21 Jul 2016 12:11 PM PDT

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "படிக்காதவன்' பட பாணியில், தான் படிக்காமல் வேலைக்குச் சென்று மூன்று தம்பிகளையும், ஒரு தங்கையையும் படிக்க வைத்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர்.

மாயாவதி குறித்த விமர்சனம்: பாஜக பிரமுகர் மீது சட்டப்படி நடவடிக்கை

Posted: 21 Jul 2016 12:10 PM PDT

மாயாவதி குறித்து தரக்குறைவாக விமர்சித்த, உத்தரப் பிரதேச மாநில பாஜக துணைத் தலைவர் தயாசங்கர் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

தேசிய நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத் திட்டத்தில் மாற்றம்:துணைவேந்தர் சி.சுவாமிநாதன்

Posted: 21 Jul 2016 12:10 PM PDT

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பெரியார் பல்கலைக்கழகப் பாடத் திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

உதகமண்டலத்தில் ரூ.5 கோடியில் மலை மேலிட விளையாட்டுப் பயிற்சி மையம்

Posted: 21 Jul 2016 12:09 PM PDT

உதகமண்டலத்தில் ரூ.5 கோடியில் மலை மேலிட விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 29 முதல் 31 வரை குரூப் 1 முதன்மைத் தேர்வு

Posted: 21 Jul 2016 12:08 PM PDT

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதன்மைத் தேர்வு ஜூலை 29ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தில்லியில் 50% ஆம்புலன்ஸ்களின் பதிவு ரத்தாகிறது

Posted: 21 Jul 2016 12:07 PM PDT

தில்லியின் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்க 15 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்ற தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவால், சுமார் 991 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பதிவு ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

லோதி எஸ்டேட் டிடிஇஏ பள்ளியில் "பைலட் புராஜெக்ட்' கூடம் திறப்பு

Posted: 21 Jul 2016 12:07 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளியில் "பைலட் புராஜெக்ட்' செயல்முறை கூடத்தை முன்னாள் பள்ளி முதல்வர் இந்துபாலா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™