Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அமலாகுமா? சென்னை மாநகராட்சியின் உத்தரவு தமிழகம் முழுதும்... கட்டட விதிமீறலை தடுக்க வரைபடம் ஒட்ட முடிவு

Posted: 20 Jul 2016 09:43 AM PDT

சென்னையில், விதிமீறல் கட்டடங்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், கட்டுமான பணி நடைபெறும் இடங்களில், அனுமதி வழங்கப்பட்ட கட்டட வரைபடத்தின் மாதிரியை மக்கள் பார்வைக்கு வைக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

'இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், விதிமீறல்கள் வெகுவாகக் குறையும் என்பதால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்று, விதிமீறலால் பாதிக்கப்படுபவர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நகரமைப்பு சட்டப்படி, இரண்டு தளங்கள் வரையிலான சாதாரண குடியிருப்பு கட்டடங்கள் கட்ட, அனுமதி அளிக்கும் அதிகாரம், மாநகராட்சிக்கு ...

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட பிரச்னையால்... அமளி ! ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது

Posted: 20 Jul 2016 09:48 AM PDT

குஜராத்தில், தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம், பார்லி.,யின் இரு சபைகளிலும், நேற்று கடும் அமளியை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில், இந்த பிரச்னையை யார் கிளப்புவது என்பதில், எதிர்க்கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த ஒத்திவைப்புகளை, ராஜ்யசபா சந்திக்க நேரிட்டது.

நேற்று ராஜ்யசபா கூடியதும், குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தை கிளப்ப, காங்., - எம்.பி.,க்கள் தயாராயினர். அவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில், திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரெய்ன், முதல் ஆளாக எழுந்தார்.''குஜராத்தில் நடந்திருப்பது, திட்டமிட்ட ...

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு அதிரடி திட்டம்

Posted: 20 Jul 2016 09:54 AM PDT

புதுடில்லி: முக்கிய மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றும் நோக்கில், மாநில கட்சிகளின் ஆதரவை திரட்ட, மத்திய அரசு புது திட்டம் வகுத்துள்ளது.
புதிய அணுகுமுறை : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிமசோதாவை, ராஜ்யசபாவில் நிறைவேற்ற விடாமல் காங்., தடுத்து வருகிறது. இதனால், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேறுவதில் தாமதம்
ஏற்படுகிறது. இதையடுத்து, முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, காங்கிரசை தனிமைப்படுத்தி, மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டும் வகையில், புதிய அணுகுமுறையை மத்திய அரசு கையாளத் துவங்கியுள்ளது. இரு நாட்களுக்கு முன், மூத்த அமைச்சர்களிடம், ...

மாயாவதி பற்றி விமர்சனம்: மன்னிப்பு கேட்டது பா.ஜ.,

Posted: 20 Jul 2016 09:57 AM PDT

புதுடில்லி: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை, தரக்குறைவாக விமர்சித்த, உ.பி. மாநில பா.ஜ., துணைத் தலைவர் தயா சங்கர் சிங், பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த விமர்சனத்துக்காக, பா.ஜ., தரப்பில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச்சில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், பா.ஜ., பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை துவங்கியுள்ளன.இந்நிலையில், உத்தர பிரதேச மாநில பா.ஜ., துணைத் தலைவர், தயா சங்கர் சிங் ...

காந்தியும், டி.வி.ஆரும் இதழியல் லட்சியவாதிகள்

Posted: 20 Jul 2016 10:07 AM PDT

இந்திய சுதந்திர போராட்டத்தில் பல்வேறு பத்திரிகைகள் பங்கேற்றன. பாரதியும், காந்தியும் பத்திரிகையாளர்களாக மாறி, சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தினர். போராட்ட களத்தில் பீரங்கிகளுக்கு பதிலாக, பத்திரிகைகள் ஆயுதமாய் மாறி, ஆங்கில ஆட்சியை அகற்றி எறிந்தன.

சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய மறுமலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் பத்திரிகைகளின் தேவை அவசியமாகியது. அந்த நேரத்தில், 1951ல் டி.வி.ராமசுப்பையர், 'தினமலர்' நாளிதழை துவங்கினார். காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட, டி.வி.ஆர்., ...

சி.பி.ஐ., அதிகாரிகள் சந்தேகங்கள்; நீதியை நிலை நிறுத்தும்: கருணாநிதி

Posted: 20 Jul 2016 10:13 AM PDT

சென்னை:தமிழக சட்டசபை தேர்தல் நெருக்கத்தில், திருப்பூருக்கு அருகே, மூன்று கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட பணம், 570 கோடி ரூபாய் பிடிபட்டது. இதை சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ., அதிகாரிகளை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:சி.பி.ஐ., அதிகாரிகள் சிலர், 570 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை குறித்து வெளியிட்டுள்ள விபரங்கள், உண்மையை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக உள்ளன.-திருப்பூர் மாவட்ட, எஸ்.பி., தலைமையில் உள்ள குழுவினர், கன்டெய்னர் லாரிகளையும் ...

மாறி வரும் அரசியல் கலாசாரம்!

Posted: 20 Jul 2016 10:31 AM PDT

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு எதிராக, பா.ஜ., வச் சேர்ந்த தயாசங்கர் சிங் கூறிய கருத்துக்கு, ராஜ்ய சபாவில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, உடனடியாக மன்னிப்பு கோரியுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த பார்லி., தொடர் துவக்கத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்த இணக்கப்பாடு அரசியலை, ஆளும் பா.ஜ., கடைபிடிக்க விரும்புகிறது என்பதற்கு, இது ஒரு சான்று.மாறாக, பார்லி., தொடர் காலத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிற்கு எதிரான தன் கருத்தை, காங்., துணைத் தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு பின்னரும் தொடர்வது, அவசியமில்லாத அரசியல் சிக்கல்களுக்கு களம் ...

2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.1,100 கோடி அரவக்குறிச்சி அருகே மீண்டும் பரபரப்பு

Posted: 20 Jul 2016 10:33 AM PDT

கரூர்:அரவக்குறிச்சி அருகே நிறுத்தப்பட்ட கன்டெய்னர் லாரிகளில், 1,100 கோடி ரூபாய் இருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து நேற்று முன்தினம், கேரள மாநிலம், திருவனந்தபுரம் ரிசர்வ் வங்கி கிளைக்கு, இரண்டு கன்டெய்னர் லாரிகள், தலா, 550 கோடி ரூபாயுடன் புறப்பட்டன. ஒவ்வொரு லாரியிலும், மத்திய போலீஸ் பாதுகாப்பு படை வீரர்கள், ஐந்து பேர், இயந்திர துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காக சென்றனர்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, தகரகொட்டாய் என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, இரண்டாவதாக சென்ற லாரியின், 'ஆக்சில் ஷாப்ட்' ...

மாணவர்கள் பிறந்த நாளிலும் சீருடை அணிவது கட்டாயம்; கல்வித்துறை உத்தரவு

Posted: 20 Jul 2016 10:45 AM PDT

கோவை: பள்ளிக்கு வரும் மாணவர்கள், பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில் வர வேண்டும். மொபைல் போன், இரு சக்கர வாகனங்கள் கொண்டு வருவதற்கு தடை உள்ளிட்ட, 11 விதிகளை பின்பற்ற வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளி துவங்கி இரு மாதங்கள் ஆகிவிட்டன. மாணவர் சேர்க்கை, வளாக பராமரிப்பு, கல்வி திட்டங்கள் பின்பற்றுதல் உள்ளிட்ட, பல்வேறு நடைமுறைகளுக்கு, கல்வித்துறை சார்பில், விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அறிவுறுத்துவது வழக்கம். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகள் பின்பற்றுவதை, கட்டாயமாக்கும் விதமாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், ...

துணை மின்நிலையம் அமைக்க ரூ.2,500 கோடி மத்திய அரசிடம் கேட்கிறது மின்வாரியம்

Posted: 20 Jul 2016 10:50 AM PDT

வட சென்னை மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட உள்ள, 765 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திற்காக, 'பவர் பைனான்ஸ்' நிறுவனத்திடம், 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், அதிக மின்சாரத்தை கொண்டு செல்லவும், மின் இழப்பு மற்றும் திருட்டை தடுக்கவும், 765 கி.வோ., திறன் உடைய துணை மின் நிலையம் அமைக்க, முடிவு செய்துள்ளது. மின் வாரியத்திற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில், எண்ணுார் மற்றும் வட சென்னையில், அனல் மின் நிலையங்கள் உள்ளன.
கோவை வழியாக
மேலும், எண்ணுார் விரிவாக்க திட்டம், 660 மெகாவாட்; எண்ணுார் சிறப்பு ...

ஆதாருக்கு தனி அமைச்சகம்!

Posted: 20 Jul 2016 12:23 PM PDT

புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஆதார் எண்ணுக்காக, தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இரண்டாக பிரிக்கப்பட்டுஉள்ளது. இதற்காக, மத்திய அரசின் அமைச்சக ஒதுக்கீடு விதிகள், 1961, திருத்தப்பட்டுள்ளன; இதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்:
* மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொலை ...

கேரளா ஐகோர்ட் வளாகத்தில் நிருபர் மீது வக்கீல்கள் தாக்குதல்

Posted: 20 Jul 2016 01:06 PM PDT

திருவனந்தபுரம்: கேரளாவில் கோர்ட் விசாரணையை செய்தி சேகரிக்க வந்த நிருபர் மீது வக்கீல்கள் தாக்குதல்நடத்தினர். இதனால் ஐகோர்ட் வளாகத்தி்ல கடும் மோதல் ஏற்பட்டது. கேரளாவில் கொச்சியில் பெண் ஒருவரை மானபங்க செய்ய முயற்சித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்தது. இதன் விசாரணை குறித்து செய்தி சேகரிக்க சென்ற டி.வி.நிருபருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த நிருபரை வக்கறிஞர்கள் சிலர் கும்பலாக தாக்கினர். அவர் காயமடைந்து எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை ...

ஐதராபாத்தில் நாய் குட்டிகள் உயிருடன் எரிப்பு; அதிர்ச்சி வீடியோ

Posted: 20 Jul 2016 03:09 PM PDT

ஐதராபாத் : ஐதராபாத்தில் மூன்று நாய் குட்டிகளை, 5 இளைஞர்கள் சேர்ந்து உயிருடன் எரித்து, அதனை வீடியோவாக எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் முஷீராபாத் பகுதியில், 5 இளைஞர்கள் சேர்ந்து தீமூட்டி அதில் உயிருடன் 3 நாய் குட்டிகளை வீசினர். நாய் குட்டிகள் தப்பிக்க முயற்சிக்கும் போது குட்டிகளை மீண்டும் தீயில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்றுள்ளனர். இக்கொடூர சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து தங்கள் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™