Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மறதி

Posted: 20 Jul 2016 01:59 PM PDT

சில்லென்று வீசிய காற்றின்
குளுமை உணரவில்லை
வண்டுகளின் ரீங்கார சத்தமோ
சிறிதும் கேட்கவில்லை
சங்கீதமாய் ஒலிக்கும் மெல்லிசையும்
செவிகளை வந்தடையவில்லை
அழகிய மலர்ந்த பன்னீர்
ரோஜாக்களின் மணமும்
நாசி உணரவில்லை
விருந்துணவின் சுவைக்கூட
என் நாவறியவில்லை
உன் நினைவில் மூழ்கிவிட்டால்
சுற்றம் மட்டுமா
என்னையும் சேர்தே
மறந்து விடுகறேன் தன்னாலே!

திருமண சடங்குகள்(சைவ முறைப்படி)

Posted: 20 Jul 2016 01:39 PM PDT

திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்கு களை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசி யுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ் வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை "மாங்கல்ய தாரணம்" எனக் கூறுவர். ...

சைக்கிள் உடலுக்கு நல்லது…

Posted: 20 Jul 2016 01:20 PM PDT

@mekalapugazh சைக்கிள் உடலுக்கு நல்லது… ரீசைக்கிள் சமூகத்துக்கு நல்லது! – —————————————- – ஊர் சைடு மினி பஸ்ல போடற பாட்டெல்லாம் எங்கருந்து புடிக்கறாங்கன்னே தெரியல. எதையுமே கேட்டதில்ல. ஆனா எல்லாமே சுகமா இருக்கு! – – ஜெயச்சந்திர ஹஷ்மி – —————————————– – தமிழகம் மூன்று பக்கம் டாஸ்மாக்காலும், ஒரு பக்கம் கொலை கொள்ளையாலும் சூழப்பட்டுள்ளது. – – அம்புஜா சிமி – ——————————————–

நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் :)

Posted: 20 Jul 2016 01:17 PM PDT

நெருப்புடா - கபாலி ரீமிக்ஸ் (கபாலி = சம்சாரி) விலையேற்றத்துக்கு எதிரான போராட்ட பாடல் பருப்பு டா வாங்கு டா முடியுமா பயமா  ஹா ஹா பருப்புடா நெருங்குடா பாப்போம் நெருங்குனா ஓடுற கூட்டம் வாங்குற சமைக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் ஏறினா வாங்குற ஆளா நீ ஆசையை துறக்குற துறவியா நீ விலையெல்லாம் மதிக்கிற ஆளா நீ விடியல விரும்பிடும் சம்சாரி மகிழ்ச்சி துறவியாய் மாறு கவலைகளை அரு இதயத்தில் ஒரு இருக்கும் வரம் ஒரு யாவும் இங்கே மாயம் மாயம் உன் வீரம் எங்கும் சீறி ...

கைபேசி

Posted: 20 Jul 2016 01:14 PM PDT

என்ன அமுத முத்து ஒரு மாதிரியா இருக்க என்றபடி வந்தார் ஆறுமுகம். ம் ... என் பையன் கைபேசி கேட்டு அடம்பிடிக்கிறான் . "ஒழுங்கா சாப்பிட கூட மாட்டேங்கிறான் " அதான் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சுட்டு இருக்கேன் . இந்த காலத்து பசங்களே இப்படித்தான் .... நீ அவரசர படாத நாளைக்கு பாக்கும்போது மத்தத பேசிக்கலாம் இப்ப நான் வரட்டுமா. என்று விடைபெற்று கொண்டார் ஆறுமுகம். அமுதமுத்துவின் பையன் இளந்தமிழ் பதினோராம் வகுப்பு படிப்பவன் . அந்த தனியாருக்கு சொந்தமான பள்ளியும் கண்டிப்புக்கும் , கல்வி தரத்திற்கும் ...

சின்ன வீடு போதும்னு சோசியர் சொன்னார்…!

Posted: 20 Jul 2016 01:12 PM PDT

காதலன் நான் எப்போதுமே தோல்வியைக் கண்டு பயப்படாதவன்! – காதலி அப்போ நல்லதா போச்சு…இந்தாங்க என்னோட திருமணப் பத்திரிகை! – —————————————— – கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான் இது என்ன காலம்? – கொசுவே இல்லாத காலம் சார்! – ——————————– – அப்பா, நாளையிலிருந்து நாம பணக்காரர் ஆகிவிடலாம்! – எப்படிடா? – நாளைக்கு எங்க கணக்கு டீச்சர், பைசாவை ரூபாயா மாத்தறது எப்படின்னு சொல்லித் தரப் போறாங்களாம்! – —————- வீடு கட்ட லோன் வாங்கின பணத்துல இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டியாமே நிஜமா? – இப்போதைக்கு ...

கண்களைத் திறந்தபடி காதலியுங்கள்

Posted: 20 Jul 2016 01:06 PM PDT

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஓர் அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல, மனங்களைக் கோர்த்து இணைவது காதல், ஆசைப்பார்வைகள் காதல் அல்ல, மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல், ஆனால், இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது. காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற பார்முலாவை இளைஞர் ...

ராமனுக்காக காத்திருந்த சூர்ப்பணகை!

Posted: 20 Jul 2016 12:56 PM PDT

வயதானதால் கூனியான கிழவி த்ரிவக்ரை, கூடை நிறையப் பூக்கள் மற்றும் அரைத்த சந்தனத்துடன் தினமும் அதிகாலை நேரத்தில் வீட்டைப் பூட்டிவிட்டு மதுரா நகரில் உள்ள அரண்மனைக்குப் புறப்படுவாள். இது அவளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பணி! அரண்மனையை அடைந்ததும், மகாராஜா கம்சனிடம் பூக்களையும் சந்தனத்தையும் கொடுத்துவிட்டு, வீடு திரும்பி வந்து மறுபடியும் கதவை மூடிக் கொள்வாள். அதன் பின் கதவு திறக்காது. எத்தனையோ முறை விளையாட்டாகச் சிறுவர்களும், உண்மையாகவே கம்சனின் காவலர்களும் தட்டிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், கதவு திறந்ததில்லை! ...

நெட்டிசன் நோட்ஸ்: 'கபாலி' டிக்கெட்டும் பேங்க் லோனும்!

Posted: 20 Jul 2016 12:36 PM PDT

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் 'கபாலி' படத்தின் முதல் நாள் டிக்கெட்டுக்கு கடுமையாக போட்டி நிலவி வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் குறைகூறியுள்ளனர். அதிக விலை டிக்கெட் விற்பனை குறித்து ட்விட்டர் தளத்தில் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ட்விட்டரில் கொட்டப்பட்ட பல பதிவுகளில் இருந்து ஒரு சிறு தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்... Sushima Shekar ₹2500க்கு கபாலி டிக்கெட் வாங்கினேன் ...

போலியான சிம் கார்டுகள் உஷார் !!!

Posted: 20 Jul 2016 12:28 PM PDT

கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களுக்கு செல்போன்களும் ஒரு காரணமாககூறப்படும் நிலையில், ஒரே விலாசத்தில் ஏராளமான சிம் கார்டுகளை விற்பனை செய்துள்ளதாக கோவையில், சிம் கார்டு விநியோகிப்பாளர் கிருஷ்ணன் என்பவர், துணிச்சலாக போலீசுக்குப் போய் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புகாரைக் கொடுத்தார். "தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் கூட்டத்தை விரிவுபடுத்தி, விற்பனை இலக்கை எட்ட ஒருவருடைய இருப்பிட சான்றிதழை மட்டுமே பயன்படுத்தி கணக்கிலடங்கா சிம்கார்டுகளை புழக்கத்தில் விடுகின்றன... ஒரே காலனியில் மட்டும் ...

கணினி,தொலைக்காட்சி போன்றவற்றை அதிகம் பாக்காதீர்கள் ,கொடுத்தவங்களே சொல்றாங்க!!!

Posted: 20 Jul 2016 12:17 PM PDT

கணினி, டிவி முன் முழுநேரத்தையும் செலவிடுவதை விடுத்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்த சிஷ்யா பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறினார். சென்னை அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களுடன் நேற்று புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றிப் பார்க்க வந்தனர். தலைமைச் செயலக கட்டிடத்தின் தெற்கு பகுதியில், முதல்வர் வருகை தரும் வாசல் பகுதியில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஜெயலலிதா ...

என் அறிமுகம் - ருக்மணி

Posted: 20 Jul 2016 10:43 AM PDT

பெயர்:ருக்மணி
சொந்த ஊர்:திருநெல்வேலி
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்
பொழுதுபோக்கு:எழுதுவது ,இன்டர்நெட் கேம்ஸ் விளையாடுவது
தொழில்:ஓய்வு பெற்ற இல்லத்தரசி
மேலும் என்னைப் பற்றி:தாய் தந்தைக்கு அன்பு மகள் ,உடன்பிறந்தோருக்கு பாசமான சகோதரி ,கணவருக்கு கடமை  தவறாத மனைவி,குழந்தைகளுக்கு அன்பான தாய்  .

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

Posted: 20 Jul 2016 10:09 AM PDT

60 திருமணம் புரட்டாசி மாதம் நடத்தலாமா?

கனவில் வந்த தேவதை

Posted: 20 Jul 2016 10:09 AM PDT

கனவில் வந்த உன் முகம் கண்டு
மயங்கி சரிந்தேன் தலையணையில்
தத்தி தத்தி நீ நடந்து வரும் அழகு
என் இரு கண்களையும் நிறைக்க
உன் கால் கொலுசு சப்தம்
என் செவிகளை தாக்க
கல கல என நீ சிரிக்கும் சிரிப்பு
என் உள்ளத்தை கொள்ளை கொள்ள
உன் பிஞ்சு விரல்களால் என் கன்னம் வருடி
உன் தளிர் கரங்களால் என்னை அணைக்கும் நாள் நோக்கி
உயிர் வாழ்கிறேன் என் தங்கமே
எப்போது வரப் போகிறாயடி என் செல்லமே

எவரெஸ்ட் சிகரத்தில் முதன் முதலில் கால்பதித்த எட்மன்ட் ஹிலாரி பிறந்த தினம் இன்று - சிறப்பு பகிர்வு

Posted: 20 Jul 2016 10:02 AM PDT

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும்,எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி,ஞாபக மறதி,மயக்கம்,பசி இழப்பு,உடல் செயல்பாடுகள் ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும் ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் ...

அறுபதிலும் எண்பதிலும் என்ன விசேஷங்க?

Posted: 20 Jul 2016 09:58 AM PDT

அசிந்தயா வ்யக்தரூபாய நிர்குணாய குணாத்மனே | ஸமஸ்த ஜகதாரமூர்தயே ப்ரம்ஹணே நம: || கர்பூர கௌரம் கருணாவதாரம் ஸம்ஸாரஸாரம் புஜகேந்த்ர ஹாரம் | ஸதா வஸந்தம் ஹ்ருதயாரவிந்தே பவம் பவானீஸஹிதம் நமாமி || யத்ரைவ யத்ரைவ மனோ மதீயம் தத்ரைவ தத்ரைவ தவ ஸ்வரூபம் | யத்ரைவ யத்ரைவ ஸிரோ மதீயயம் தத்ரைவ தத்ரைவ பதத்யம்தே || ஸாக்ஷாத் ஸர்வேச்வரனான பரப்ரம்ஹத்தின் லீலையினால் தோன்றிய ஜகத் ஸ்ருஷ்டியில் எண்ணற்ற ஜீவராசிகள் இப்பூமண்டலத்தில் வாழ்ந்து வருகின்றன. இவற்றுள் கிடைத்தற்கரிய விவேகமுள்ள மனிதப் பிறவியில்தான் வேத, சாஸ்த்ரங்களில் ...

கனவு நீங்கிய தருணங்கள்

Posted: 20 Jul 2016 09:48 AM PDT

- நிலைப்படி தாண்டாத மனத்தின் விரலிடுக்கில் புரையோடிப் போயிருந்தது களிம்பிடாமல் வைத்திருந்த இருத்தலின் காயங்கள் – நித்தமும் எரிந்து சமைத்துச் சலித்திருக்கும் அடுப்பில் பொங்கிப் பரவியிருந்த பாலின் கறையை சுத்தம் செய்யாமலே உறங்கச் செல்கின்றாள் இரவுகளுக்கும் விடியல்களுக்கும் இடைப்பட்ட பொழுதுகளில் – வெகுதூரம் பயணிக்கிறாள் அவள் ஆணிவேர்களை அலட்சியம் செய்து விட்டு உதிரும் இலையென இலகுவாய் மிதந்து காற்றில் அலைகிறாள் – காய்ந்த சிறகுகளில் பெரும் அனல் மூட்டி கையில் திணிக்கப்பட்ட வழிகாட்டி ...

ஆவிகளுக்கும் டிசைனர் சாரி, நெக்லஸ்னு ஓவர் மேக்கப்! –

Posted: 20 Jul 2016 09:48 AM PDT

- சினிமா/சீரியல்கள்ல முன்னாடில்லாம் ஆவிங்களுக்கு வெள்ளைப் புடவைதான் காஸ்ட்யூமா இருந்துச்சு. இப்போ என்னடான்னா அதுங்களுக்கும் சேர்த்து டிசைனர் சாரி, நெக்லஸ்னு ஓவர் மேக்கப்! – – செள செளமியா – —————————————— @writernaayon மிடில் கிளாஸில் திடீர் செலவுகளுக்காக பணம் சேமித்திருப்பவர்களைவிட, பணம் எப்படி புரட்டப் போகிறோம் என்ற கவலையை சேமித்திருப்பவர்களே அதிகம். – —————————————- – @Baashhu ''நியூஸ் பாத்தீங்களா? உபரி மின்சாரத்தை வெளி மாநிலத்துக்குக் கொடுக்குறாங்களாமே?'' – ''அப்படியா? ...

அறுபதாம் கல்யாணம்

Posted: 20 Jul 2016 09:42 AM PDT

சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும். நம்மள போல வேலை செய்பவர்களும் ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம். அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது... கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது.. 20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் ...

அதி துல்லியமான லேசர் ‘டிவி’ புரஜக்டர்!

Posted: 20 Jul 2016 09:28 AM PDT

இப்போது உலகெங்கும் இருக்கும், 50 அங்குலத்துக்கும் மேற்பட்ட அகலமுள்ள, 'டிவி'க்களில் எல்.சி.டி., தொழில் நுட்பமே அதிகமாக இருக்கிறது. ஆனால், பெரிய திரைகளுக்கு லேசர் தொழில்நுட்பமே சரியானது என்கிறது சீனாவைச் சேர்ந்த ஹைசென்ஸ். குறிப்பாக, 'அல்ட்ரா ஹை டெபனிஷன்' திரைகளுக்கு லேசர் தான் சரிப்படும் என்பது ஹைசென்சின் வாதம். சில நாட்களுக்கு முன், 100 அங்குல அகலமும், 4,000 பிக்செல் துல்லியமும் கொண்ட லேசர் புரஜக்டர், 'டிவி' ஒன்றை பாரிஸ் நகரில் ஹைசென்ஸ் அறிமுகப் படுத்தியது. இது இதே அகலமும், துல்லியமும் ...

பிரிய(கி)ங்கா? - காங்கிரஸ் உத்தி தேறுமா? தேறாதா?

Posted: 20 Jul 2016 07:19 AM PDT

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற இடத்துக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம், பிரியங்கா காந்திக்கான முக்கியத்துவம், ஏற்கெனவே சோனியா, ராகுலின் பிரசாரக்குழு மேலாளராகச் செயல்பட்ட வரை, விரைவில் நடைபெறவிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தல் பிரசார குழுவுக்குத் தலைவராக்கியுள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் இல்லாத பாரதம் - சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்ற ஹோதாவில் வலம்வந்து கொண்டிருந்த காங்கிரஸ், தனது 130 ஆண்டுகால வரலாற்றில் ஆகப்பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ...

விடுதலை செய்ய கோரிய நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம்: சென்னை ஹைகோர்ட்

Posted: 20 Jul 2016 06:40 AM PDT

சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தம்மை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரிய நளினி மனு மீது தமிழக அரசு முடிவெடுக்கலாம் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணண நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் நடைபெற்று வந்தது இந்த விசாரணையின் முடிவில் தம்மை முன்கூட்டிய ...

சேவை வரி:வாய் தவறி கூறிவிட்டார் நிதியமைச்சர்

Posted: 20 Jul 2016 06:07 AM PDT

சேவை வரி வருவாய், மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாய் தவறி, தவறாகக் கூறிவிட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறினார். இதுதொடர்பாக, சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சேவை வரி உள்பட அனைத்து வரி வருமானமும் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன; ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி வாய் தவறி, தவறாகக் கூறிவிட்டார் என்று சிதம்பரம் தனது ...

ஒரு பக்க (கடி)கதை

Posted: 20 Jul 2016 05:39 AM PDT

சிவா வசுமதி புதிதாக கல்யாணம் செய்த தம்பதிகள் .சிவா தன் படிப்புக்கேற்ற தொழிலான இயந்திர உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறான் .எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டு இருப்பான் .அன்று விடுமுறை நாள் .ஆனால் எப்போதும் எழுந்து கொள்வது போல் ஆறு மணிக்கு எழுந்து விட்டான் .பக்கத்தில் அவன் மனைவி வசு தூங்கி கொண்டு இருந்தாள்.சிவா த்ன் மனைவியை எழுப்பினான் .ஆனால் அவள் எழும்பவில்லை . உடனே சிவா பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்வார்கள் .என் பத்தினி இப்படி இருக்கிறாளே என்று புலம்பினான் ...

ஆழமான கவிதை ...!

Posted: 20 Jul 2016 04:21 AM PDT

அவளின் நினைவுகள்
என்
இதயத்தில்
சூடு வைக்கும் போதெல்லாம்
சுருக்கமின்றி பிறக்கிறது
ஆழமான கவிதை ...!

ஆன்மீக புத்தகங்கள் தரவிறக்கு கொள்ளுங்கள் !

Posted: 20 Jul 2016 02:57 AM PDT

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQlZjV0tjeWNZc0k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gRkZOV1BkbUV2OE0/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gM0VwVmpFMEUtS1k/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gUVFPUkdnZ3lLTzQ/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gQWVwd1MxeElDYUk/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gNHBzNFNoY3Faams/view?usp=ஷரிங் https://drive.google.com/file/d/0B20KmkM-I85gdkljbG1rU1F2TXc/view?usp=ஷரிங் https://drive.google.com/open?id=0B20KmkM-I85gemlGV0Q3eWN0UHM

கபாலிக்கு தடை கிடையாது: ஐகோர்ட் உத்தரவு -எப்படி தடை விதிக்க முடியும் எனவும் கேள்வி

Posted: 19 Jul 2016 10:09 PM PDT

கபாலி திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேவராஜன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கபாலி திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியுள்ளார். இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது, படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், ரசிகர்களே கூடுதல் கட்டணம் கொடுப்பதால் எப்படி தடை விதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். - நக்கீரன்

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா??!!

Posted: 19 Jul 2016 09:37 PM PDT

ஸ்மார்ட்போனுக்கு நீங்கள் அடிமையா? தனிமையில் இருக்கும்போது ஸ்மார்ட்போனைத் தொடாமல் உங்களால் எத்தனை நேரம் இருக்க முடியும்? இதற்கான பதில் நொடிகளில் இருந்தால் உங்கள் ஊகம் சரியென வைத்துக்கொள்ளலாம். நிமிடங்கள் எனில் நீங்களும்கூட உங்கள் ஸ்மார்ட்போன் பழக்கம் பற்றி சரியாக அறிந்திருக்கவில்லை என முடிவுக்கு வர வேண்டும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்பான ஆய்வு இந்த எண்ணத்தைத்தான் ஏற்படுத்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை நிறுவனமான காஸ்பெர்ஸ்கி லேப் சார்பில் வர்ஸ்பர்க் மற்றும் நாட்டிங்கம் ...

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் :)

Posted: 19 Jul 2016 07:49 PM PDT

ஆலுமா டோலுமா - வேதாளம் - ரீமிக்ஸ் படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா அரை குறையா கிறுக்கி விட்டா லோக்கலு பளிச்சுன்னு பளபளக்குது பாஸ் மார்க் கலக்கலு டமுக்குனா டுமுக்குனா பேப்பரை தான் திருத்தினா குமுக்குனா டூமாங்கோலி எப்படி போனா எனக்கென்னா அறிகினா முறுக்கினா ரிசல்ட்ட தான் எறக்கினா ஜஸ்ட் பாஸ் பண்ணினா தான் உனக்கின்னா படிப்போமா எழுதுவோமா ஐசாலக்கடி மாலுமா பரீட்சை கலீஜுன்னு அரியர்ஸ் விட்டா சாலுமா

ரூ.43 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வெளிவந்தது: மாநிலங்களவையில் தகவல்

Posted: 19 Jul 2016 06:10 PM PDT

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.43,829 கோடி கருப்புப் பணம் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. கருப்புப் பணம் தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியதாவது: கடந்த இரு நிதியாண்டுகளில் தாமாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவித்து வரி கட்டும் திட்டத்தின்கீழ் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் ரூ.43,829 கோடி கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.2,476 ...

சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது

Posted: 19 Jul 2016 05:32 PM PDT

- மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு ஒளவையார் விருது வழங்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, 2012-ஆம் ஆண்டில் இருந்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், சிறந்த சேவையாற்றுபவருக்கு ஒளவையார் விருது, ரூ.1 லட்சம் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றிதழ்-பொன்னாடை ஆகியன ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மனநல மருத்துவர் எம்.சாரதா மேனனுக்கு விருதை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அப்போது ...

பீகாரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்

Posted: 19 Jul 2016 05:25 PM PDT

பாட்னா, பீகாரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான கமாண்டோ வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. தேடுதல் வேட்டை பீகார் மாநிலத்தின் கயா–அவுரங்காபாத் மாவட்ட எல்லையையொட்டிய துமரிநலா காட்டுப்பகுதிகளுக்கு மாவோயிஸ்டு தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக மத்திய ரிசர்வ் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதன் 205–வது படைப்பிரிவின் கமாண்டோ வீரர்கள் நேற்று முன்தினம் காலை அங்கு விரைந்தனர். நேற்று மாலை அவர்கள் தேடுதல் வேட்டைக்காக துமரிநலா காட்டுப்பகுதிக்குள் ...

தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.

Posted: 19 Jul 2016 05:18 PM PDT

தி.மு.கவில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அ.இ.அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா இன்று தி.மு.கவில் இணைந்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் தி.மு.க.வில் சேர்ந்தார். 2011-2016ல் நடந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை துறைமுகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக் வார விழாவில் பேசும்போது அரசின் மீது சில விமர்சனங்களை முன்வைத்ததையடுத்து, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™