Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வீரர்களுக்குச் சீருடை வழங்காததற்கு விஜயகாந்த் கண்டனம்

Posted: 20 Jul 2016 01:24 PM PDT

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட இந்திய மாணவர்களுக்குச் சீருடை வழங்காததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீட்டு நடத்தி ரூ. 60 கோடி மோசடி என புகார்

Posted: 20 Jul 2016 01:23 PM PDT

கோவையில் சீட்டு நடத்தி ரூ. 60 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

Posted: 20 Jul 2016 01:23 PM PDT

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு: மலேசிய விமானம் திருச்சியில் நிறுத்தம்

Posted: 20 Jul 2016 01:22 PM PDT

திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் ஏர் ஏசியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்திலேயே செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது. பயணிகள் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

சென்னை - மும்பை அதிவேக ரயில் வழித்தடத்துக்கான சாத்தியக்கூறு ஆய்வு

Posted: 20 Jul 2016 01:21 PM PDT

சென்னை - மும்பை இடையே அதிவேக ரயில்களுக்கான வழித்தடம் அமைப்பது குறித்த சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ளும் பணி, சர்வதேச ரயில்வே நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

அப்துல் கலாம் சமாதியில் தமிழக வருவாய்த் துறைச் செயலர் ஆய்வு

Posted: 20 Jul 2016 01:20 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சமாதி பகுதியில் மத்திய அரசு அமைக்கவுள்ள கண்காட்சி மற்றும் அறிவுசார் மையத்துக்குத் தேவையான நிலங்களை வழங்குவதற்காக, தமிழக அரசின் வருவாய்த் துறைச் செயலர் அந்தப் பகுதியில் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விரிவான விவாதம் தேவை!

Posted: 20 Jul 2016 01:19 PM PDT

குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தல் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மக்களவையில் ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், இந்த மசோதா சட்டமாவதில் எந்த இடையூறும் இருக்கப்போவதில்லை.

புகழுடன் தோன்றுவார்!

Posted: 20 Jul 2016 01:17 PM PDT

தேசிய அளவில் தெய்வப்புலவர் திருவள்ளுவரைச் சிலைவடிவில் கொண்டுபோய் நிறுத்துவதில் சிரமம் இருக்கலாம், சில சிக்கல்களும் இருக்கலாம். அரசியல் சார்ந்த ஒருவர் அதனை முன்னெடுத்திருப்பதால் அந்த முயற்சியின்மீது அரசியல் வண்ணமும் பூசப்படலாம். எதில்தான் அரசியல் இல்லை?

வேறென்ன சொல்ல?

Posted: 20 Jul 2016 01:16 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய போபியா என்ற கிராமம் அது. "எல்லை வேலி பக்கம் தவறியும்கூட செல்லக் கூடாது' என்பது ராணுவத்தின் கண்டிப்பான அறிவுறுத்தல். ஆனால், கிராமவாசியின் கன்றுக்குட்டிக்கு அதெல்லாம் தெரியுமா என்ன?

கோவில்பட்டியில் காவல் துறை - பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 20 Jul 2016 01:08 PM PDT

கோவில்பட்டியில் காவல் துறை மற்றும் பொதுமக்கள் கலந்தாய்வுக் கூட்டம்  நடைபெற்றது.

திருச்செந்தூர் வீரமாகாளி அம்மன் கோயில் கொடை விழா

Posted: 20 Jul 2016 01:07 PM PDT

திருச்செந்தூரில் விஸ்வகர்மா சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை

Posted: 20 Jul 2016 01:06 PM PDT

கோவில்பட்டியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிநீர்க் குழாயை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2016 01:06 PM PDT

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் புதிதாக கட்டுவதற்கு 50 சதவீதம் மானியம்: ஆட்சியர் தகவல்

Posted: 20 Jul 2016 01:05 PM PDT

ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் புதிதாக கட்டுவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம்

Posted: 20 Jul 2016 01:04 PM PDT

தக்கலை கல்வி மாவட்ட சாரண, சாரணியர் குடியரசுத் தலைவர் விருதுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளியில் நடைபெற்றது.

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பழங்குடியின மாணவர்கள் தவிப்பு: முதன்மைச் செயலரிடம் புகார்

Posted: 20 Jul 2016 01:04 PM PDT

குமரி மாவட்டத்தில் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக முதன்மை செயலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு அருகே பள்ளி வளாகத்தை சீரமைத்த திமுகவினர்

Posted: 20 Jul 2016 01:03 PM PDT

திருவட்டாறு அருகே அரசுப் பள்ளி வளாகத்தை திமுகவினர் சீரமைத்தனர்.

மலங்கரை கல்வி நிறுவனம் சிஏ-சிபிடி தேர்வில் சாதனை

Posted: 20 Jul 2016 01:03 PM PDT

சிஏ-சிபிடி தேர்வில் களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை ஸ்கூல் ஆப் காமர்ஸ் கல்வி நிறுவனத்தின் 32 சதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

குமரியில் கடல் சீற்றம்: படகுப் போக்குவரத்து ரத்து

Posted: 20 Jul 2016 01:02 PM PDT

கன்னியாகுமரியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு புதன்கிழமை முழுவதும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

குமரி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

Posted: 20 Jul 2016 01:01 PM PDT

கன்னியாகுமரி ஏ.வி.கே. நகர் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் 2 நாள் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

களியக்காவிளை அருகே பைக் திருட்டு: இளைஞர் கைது

Posted: 20 Jul 2016 01:01 PM PDT

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கோட்டாறு அருகே அம்மன் கோயிலில் திருட முயற்சி

Posted: 20 Jul 2016 01:00 PM PDT

நாகர்கோவில் அருகே கோயிலில் புகுந்து திருட முயன்ற மர்ம நபர்களை  போலீஸார் தேடிவருகின்றனர்.

குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

Posted: 20 Jul 2016 01:00 PM PDT

மார்த்தாண்டம் அருகே குளத்தில் விழுந்த தேங்காயை எடுக்க இறங்கிய முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

"எஸ்.சி.,எஸ்.டி. பள்ளிகளில் சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்'

Posted: 20 Jul 2016 01:00 PM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (எஸ்.சி., எஸ்.டி.) பள்ளிகளில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

3 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்

Posted: 20 Jul 2016 12:59 PM PDT

அம்மா திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள், வெள்ளிக்கிழமை (ஜூலை 22)  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் நடைபெறவுள்ளன.

கபடிப் போட்டி: திருநயினார்குறிச்சி அணிக்கு முதல் பரிசு

Posted: 20 Jul 2016 12:59 PM PDT

காமராஜர் பிறந்தநாளையொட்டி, நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில் திருநயினார்குறிச்சி அணி முதல் பரிசு பெற்றது.

ஊதியம், பதவி உயர்வு கோரி நாகர்கோவிலில் ஊரக வளர்ச்சித் துறையினர் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2016 12:58 PM PDT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் நாகர்கோவிலில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

குமரியில் 5 அம்மா உணவகங்களில் ரூ.62.52 லட்சம் வருவாய்: ஆட்சியர்

Posted: 20 Jul 2016 12:58 PM PDT

குமரி மாவட்டத்தில் இயங்கும் 5 அம்மா உணவகங்கள் மூலம் அரசுக்கு ரூ. 62 லட்சத்து 52 ஆயிரத்து 106 வருவாய் கிடைத்துள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார்.

வைக்கோல் படப்புக்கு தீ வைத்த 4 பேர் மீது வழக்கு

Posted: 20 Jul 2016 12:58 PM PDT

திருவாடானை தாலுகா, தொண்டி அருகே முகிழ்த்தகம் மேலகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி, சூசை என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கமுதி பசும்பொன் தேவர் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை

Posted: 20 Jul 2016 12:57 PM PDT

கமுதி பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரிக்கு வியாழக்கிழமை முதல் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்

Posted: 20 Jul 2016 12:57 PM PDT

முதுகுளத்தூர் அருள்மிகு ஸ்ரீவடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் மற்றும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

"நல்லாசிரியர் விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்'

Posted: 20 Jul 2016 12:56 PM PDT

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்குவதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

Posted: 20 Jul 2016 12:56 PM PDT

ராமேசுவரம் அருகே  மெய்யம்புளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோர காட்டுக் கருவேல் மரங்களுக்கிடையே ஆண் சடலம் கிடப்பதாக, தங்கச்சிமடம் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

சிங்கம்புணரி போக்குவரத்து போலீஸாருக்கு இலவச ஒலிபெருக்கி

Posted: 20 Jul 2016 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போக்குவரத்து போலீஸாருக்கு அரிமா சங்கம் சார்பில் இலவச ஒலிபெருக்கி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1200 கிராம் கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Posted: 20 Jul 2016 12:54 PM PDT

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் நாகூர்கனி (48), அப்துல்லா மகன் அன்வர் என்ற ஆட்டோ அன்வர் (56) ஆகிய இருவரும் புதன்கிழமை அக்கிராம பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ரோந்து வந்த தேவிபட்டினம் போலீஸார் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இவர்கள் இருவரையும் விசாரித்து சோதனையிட்டனர். அதில், அவர்கள் 1200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து, அவர்களை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயில் தேரோட்டம்

Posted: 20 Jul 2016 12:54 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடிப் பிரம்மோற்சவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு தேரோட்டம் நடைபெற்றது.

கேட்பாரற்று கிடந்த 6 பைக்குகள் மீட்பு

Posted: 20 Jul 2016 12:54 PM PDT

திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் அருகே வெள்ளையபுரத்தில் கடந்த பல நாள்களாக 6 இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு சக்கர வாகனங்களைக் கைப்பற்றினர். பின்னர், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்புல்லாணியில் 63 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: கூடுதல் விலைக்கு விற்றவர் கைது

Posted: 20 Jul 2016 12:53 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே கோரைக்கூட்டம் கிராமத்தில் 63 ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் பொறியியல் கல்லூரியில் கல்விக் கடன் வழங்கும் விழா

Posted: 20 Jul 2016 12:53 PM PDT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் கனரா வங்கியின் சார்பில், கல்விக் கடன் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெளிக்காட்டப்படாத வருமானத்தை செப். 30-க்குள் தெரிவிக்க வேண்டும்: வருமானவரித் துறை துணை ஆணையர்

Posted: 20 Jul 2016 12:52 PM PDT

வருமானத்தை தானாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் கீழ், இதுவரை வெளிக்காட்டப்படாத வருமானத்தை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென, வருமானவரித் துறை துணை ஆணையர் ஆர். மலர்க்கொடி எச்சரித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் 17 பேர் வட்டாட்சியர்களாக பதவி உயர்வு

Posted: 20 Jul 2016 12:51 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றிய துணை வட்டாட்சியர்கள் 17 பேரை, வட்டாட்சியர்களாகப் பதவி உயர்வு செய்து மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அப்துல் கலாம் சமாதியில் தமிழக வருவாய்த் துறை செயலர் ஆய்வு

Posted: 20 Jul 2016 12:51 PM PDT

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சமாதி பகுதியில் மத்திய அரசு அமைக்கவுள்ள கண்காட்சி மற்றும் அறிவுசார் மையத்துக்கு தேவையான நிலங்களை வழங்குவதற்காக, தமிழக அரசின் வருவாய்த் துறை செயலர் அப்பகுதியில் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காரைக்குடி நூறடிச் சாலைக்கு வள்ளல் அழகப்பர் பெயர் சூட்ட நகர்மன்றத்தில் சிறப்பு தீர்மானம்

Posted: 20 Jul 2016 12:51 PM PDT

காரைக்குடியிலுள்ள நூறடிச் சாலைக்கு வள்ளல் அழகப்பர் பெயர் சூட்ட தமிழக அரசிடம் அனுமதி கோரி, புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண எம்.பி. வேண்டுகோள்

Posted: 20 Jul 2016 12:50 PM PDT

ராமேசுவரம் பகுதி மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என, அத்தொகுதி மக்களவை உறுப்பினர் அ. அன்வர்ராஜா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

புத்தாக்க பயிற்சியில் அரசு பள்ளி மாணவர் சிறப்பிடம்

Posted: 20 Jul 2016 12:50 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மா.ஆலம்பட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் புத்தாக்க அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

காரைக்குடி பள்ளி மாணவர்கள் களப் பயணம்

Posted: 20 Jul 2016 12:49 PM PDT

காரைக்குடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை நகராட்சிப் பூங்காவிற்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 20 Jul 2016 12:49 PM PDT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரணையூர் கிராமத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் சிறப்புப் புகைப் படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டிருந்தது.

மின்நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

Posted: 20 Jul 2016 12:49 PM PDT

ராமநாதபுரம் மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தில் ஜூலை 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

Posted: 20 Jul 2016 12:48 PM PDT

ராமநாதபுரத்தில் நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனையை தடுக்க கோரிக்கை

Posted: 20 Jul 2016 12:48 PM PDT

பரமக்குடி பகுதியில் கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கல் விற்பனை செய்வதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2016 12:47 PM PDT

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

கல்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 20 Jul 2016 12:46 PM PDT

காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்கத் துறை தனித்துணை ஆட்சியர் தியாகராஜன் வழங்கினார். இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டதில், 18 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து பயனாளிகள் 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை, தனித்துணை ஆட்சியர் தியாகராஜன் வழங்கினார்.

ராஜபாளையத்தில் நாளை கறவை மாடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி பயிற்சி

Posted: 20 Jul 2016 12:46 PM PDT

ராஜபாளையத்தில் ஜூலை 22 ஆம் தேதி காலை கறவை மாடு வளர்ப்பு மற்றும் பசுந்தீவன உற்பத்தி பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

விருதுநகரில் நாளை தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

Posted: 20 Jul 2016 12:46 PM PDT

விருதுநகர் சிட்கோ வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் ஜூலை 22 இல்  (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

ராஜபாளையம் பாஜக நகர தலைவர் நியமனம்

Posted: 20 Jul 2016 12:45 PM PDT

ராஜபாளையம் நகர பாஜக தலைவராக பி.சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், கோட்ட பொறுப்பாளர் ரா.ஸ்ரீநிவாசன் ஆகியோர் ஒப்புதலுடன் மாவட்டத் தலைவர் ஜி.டி.சோலையப்பன் நியமித்துள்ளார்.

காரியாபட்டி, அருப்புக்கோட்டையில் அடுத்தடுத்து 11 பவுன் நகைபறிப்பு: தப்பிய இருவரில் ஒருவர் பிடிபட்டார்

Posted: 20 Jul 2016 12:45 PM PDT

காரியாபட்டி, அருப்புக்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 பெண்களிடம் 11 பவுன் நகைகளை பறித்த மர்ம நபர்களில் ஒருவர் போலீஸில் சிக்கினார்.

ஸ்ரீவிலி. அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு

Posted: 20 Jul 2016 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

3 பவுன் நகை திருட்டு: இளைஞர் மீது வழக்கு

Posted: 20 Jul 2016 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடுபுகுந்து 3 பவுன் நகையை திருடியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடைபாதை பிரச்னை: விவசாயிக்கு வெட்டு

Posted: 20 Jul 2016 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை நடைபாதை பிரச்னையில் விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸார் கைது செய்தனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஆக. 6 முதல் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி

Posted: 20 Jul 2016 12:43 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வில் கலந்து கொள்ள ஜூலை 28 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தெரிவித்தார்.

ஊதிய உயர்வு கோரி ஊராட்சி செயலர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2016 12:36 PM PDT

ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்று கொண்ட கோரிக்கைகளை அரசாணையாக வெளியிடக் கோரி  விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

கொடைக்கானலில் திமுக எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

Posted: 20 Jul 2016 12:31 PM PDT

கொடைக்கானல் மேல்மலைக் கிராம மக்களுக்கு பழனி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை விலை குறைவு

Posted: 20 Jul 2016 12:31 PM PDT

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு செவ்வாய்க்கிழமை முருங்கை மற்றும் தக்காளி வரத்து அதிகமாக இருந்ததால், அவற்றின் விலைகள் குறைந்தன.   கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 33 வரை விற்பனையானது. அதேபோல், 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 300 வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கிலோ முருங்கை ரூ. 27-க்கும், தக்காளி ஒரு பெட்டி ரூ. 180-க்கும் விற்பனையானது.  மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: ஒரு கிலோ பீட்ரூட் ரூ.14, கத்தரிக்காய் (30 கிலோ) ரூ. 300, பீன்ஸ் ரூ.14, சுரைக்காய் ரூ.6, பூசணிக்காய் ரூ.12.50, தட்டப்பயறு ரூ.15, சின்னவெங்காயம் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனையானது.

தேனியில் சாலையோர ஆட்டோ நிறுத்தங்களால் போக்குவரத்து குளறுபடி

Posted: 20 Jul 2016 12:30 PM PDT

தேனியில் நெடுஞ்சாலையோரங்களில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் ஆட்டோ நிறுத்தங்களால், போக்குவரத்து குளறுபடி மற்றும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டிபட்டி அருகே கரும்புத் தோட்டத்தில் தீ

Posted: 20 Jul 2016 12:30 PM PDT

ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றியதில் ரூ.பல லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமாயின.

போடி அருகே விஷச் செடி சாப்பிட்டு இறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2016 12:24 PM PDT

போடி அருகே விஷச்செடி சாப்பிட்டு உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா

Posted: 20 Jul 2016 12:24 PM PDT

பெரியகுளம் கௌமாரியம்மன் கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி பக்தர்கள் புதன்கிழமை தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

மாநில அளவிலான ஜூடோ போட்டி:  உத்தமபாளையம் பள்ளி மாணவிக்கு தங்கப்பதக்கம்

Posted: 20 Jul 2016 12:23 PM PDT

மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ போட்டியில், உத்தமபாளையம் பள்ளி மாணவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 20 Jul 2016 12:23 PM PDT

ஆட்சி அலுவலர் பணியிடங்களை நிரப்பக் கோரி வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போடிமெட்டு மலைச்சாலையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலத்த காயம்

Posted: 20 Jul 2016 12:22 PM PDT

போடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

சமூகப் பிரிவினையை தூண்டுகிறது மோடி அரசு:சோனியாகாந்தி குற்றச்சாட்டு

Posted: 20 Jul 2016 12:21 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

முதலீடுகளுக்கு முழு ஒத்துழைப்பு:ஜெர்மனி நாட்டுத் தூதரிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதி

Posted: 20 Jul 2016 12:21 PM PDT

தமிழகத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜெர்மனி நாட்டுத் தூதரான மார்ட்டின் நேவிடம், முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.

திருவள்ளுவர் சிலை: உத்தரகண்ட் முதல்வருக்கு கருணாநிதி நன்றி

Posted: 20 Jul 2016 12:19 PM PDT

திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வரும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி கூறியுள்ளார்.

என்எஸ்ஜி விவகாரம்: சீனாவுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்போம்:மக்களவையில் சுஷ்மா அறிவிப்பு

Posted: 20 Jul 2016 12:17 PM PDT

அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராகும் விஷயத்தில் சீனாவுடனான வேறுபாடுகளைத் தீர்ப்போம் என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

Posted: 20 Jul 2016 12:16 PM PDT

இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் புதன்கிழமை அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

பணிக்கு திரும்பாவிட்டால் தகுதி நீக்கம்:வழக்குரைஞர்களுக்கு இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை

Posted: 20 Jul 2016 12:16 PM PDT

தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞர்கள் தங்கள் போராட்டத்தை வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 22) திரும்பப் பெறாவிட்டால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இளைஞர் திறன் மேம்பாட்டு நடவடிக்கை: தமிழகத்துக்கு மக்களவையில் பாராட்டு

Posted: 20 Jul 2016 12:15 PM PDT

தமிழகத்தில் மாநில அரசு மேற்கொண்டு வரும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மக்களவையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

உத்தரகண்ட் அதிருப்தி எம்எல்ஏக்கள் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

Posted: 20 Jul 2016 12:14 PM PDT

உத்தரகண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரை தகுதிநீக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இறுதிக் கட்டத்தில் கல்பாக்கம் ஈனுலை:மத்திய அரசு தகவல்

Posted: 20 Jul 2016 12:13 PM PDT

கல்பாக்கம் ஈனுலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Jul 2016 12:13 PM PDT

அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தங்களது கோரிக்கைகளை அரசாணையாக வெளியிட வலியுறுத்தி புதன்கிழமை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் நாளை "அம்மா' திட்ட குறைதீர் முகாம்

Posted: 20 Jul 2016 12:13 PM PDT

தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அம்மா திட்டத்தின் கீழ் 5 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

தலித்துகள் தாக்கப்பட்டதை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு:பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

Posted: 20 Jul 2016 12:12 PM PDT

குஜராத் மாநிலம், உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக கூறி, தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு ஓரளவு ஆதரவு கிடைத்தது.

பழனியில் விவசாயத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

Posted: 20 Jul 2016 12:12 PM PDT

பழனி ஒன்றிய அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற விவாதத்தின்போது தூங்கிய ராகுல் காந்தி

Posted: 20 Jul 2016 12:12 PM PDT

குஜராத்தில் தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதன்கிழமை காரசார விவாதம் நடைபெற்ற போது, காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்க, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியோ தூங்கி வழிந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கோரிக்கை

Posted: 20 Jul 2016 12:12 PM PDT

நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் உள்ள பேரணையில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு மாவட்ட நிர்வாகத்துக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்.பி. நோட்டீஸ்

Posted: 20 Jul 2016 12:11 PM PDT

தேனி மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு- ஆய்வாளர்களுக்கு சட்டம்- ஒழுங்கு பிரச்னை மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு செவ்வாய்க்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அகவிலைப்படி விவகாரம்:உச்ச நீதிமன்றத்தை அணுக திரிபுரா அரசு முடிவு

Posted: 20 Jul 2016 12:10 PM PDT

திரிபுரா மாநில அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்குமாறு அந்த மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிராமங்களுக்கு பேருந்து வசதி: கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை

Posted: 20 Jul 2016 12:09 PM PDT

கொடைக்கானல் அருகே அஞ்சுவீடு உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு பேருந்து இயக்குவது குறித்து புதன்கிழமை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

காஷ்மீரில் இருந்து வெளியேறும் பிற மாநில தொழிலாளர்கள்

Posted: 20 Jul 2016 12:09 PM PDT

ஜம்மு - காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு பிற மாநிலத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காட்டெருமைகள் தொல்லை: கொடைக்கானலில் தனியார் பள்ளியை பெற்றோர் முற்றுகை

Posted: 20 Jul 2016 12:09 PM PDT

காட்டெருமைகள் தொல்லை அதிகரித்திருப்பதால், பள்ளி வளாகத்துக்குள் தங்கள் வாகனங்களை அனுமதிக்கக் கோரி கொடைக்கானலில் பள்ளியை புதன்கிழமை பெற்றோர் முற்றுகையிட்டனர்.

காஷ்மீர்: 6-ஆவது நாளாக நாளிதழ்கள் நிறுத்தம்

Posted: 20 Jul 2016 12:08 PM PDT

நாளிதழ்கள் வெளியிட தடை விதிக்கப்படவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவித்த பிறகும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ந்து 6-ஆவது நாளாக புதன்கிழமையும் நாளிதழ்கள் வெளியாகவில்லை.

ஆடிப் பட்ட விதைப்புக்கு மானிய விலையில் காய்கறி விதைகள்

Posted: 20 Jul 2016 12:08 PM PDT

தேனி மாவட்டத்தில் ஆடிப் பட்ட விதைப்புக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் மானிய விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் அருணாசல் முதல்வர் வெற்றி

Posted: 20 Jul 2016 12:08 PM PDT

அருணாசலப் பிரதேச முதல்வராக அண்மையில் பதவியேற்ற பெமா காண்டு தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த மாநில சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

"குறைதீர்ப்பு அதிகாரிகள் புதன்கிழமைகளில் புகார் மனுவைப் பெறுவார்கள்'

Posted: 20 Jul 2016 12:07 PM PDT

மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் நியமிக்கப்பட்டுள்ள குறைதீர்ப்பு அதிகாரிகள், இனி ஒவ்வொரு புதன்கிழமையும் மக்கள் அளிக்கும் புகார்களைப் பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேனி மாவட்ட அளவில் ஜூலை 26 இல் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 20 Jul 2016 12:06 PM PDT

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஜூலை 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

மாநில தடகளப் போட்டிக்கு ஜூலை 28 இல் திண்டுக்கல் மாவட்ட வீரர்கள் தேர்வு

Posted: 20 Jul 2016 12:06 PM PDT

மாநில தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ள திண்டுக்கல் மாவட்ட வீரர்களுக்கான தேர்வு, ஜூலை 28ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கோபாலசமுத்திரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுமா?

Posted: 20 Jul 2016 12:05 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க  அருகில் உள்ள கோபாலசமுத்திரக் குளத்திலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இடம் தேர்வை விரைவுப்படுத்த உத்தரகண்ட் முதல்வர் உத்தரவு

Posted: 20 Jul 2016 12:05 PM PDT

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் இடம் தேர்வு செய்யும் நடவடிக்கையை விரைவுப்படுத்த அந்த மாவட்ட ஆட்சியர் ஹர்பன்ஸ் சிங் சுக்குக்கு உத்தரகண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி பெண் தொண்டர் மர்ம சாவு: விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவு

Posted: 20 Jul 2016 12:04 PM PDT

தில்லி நரேலா பகுதியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பெண் தொண்டர் மர்மச் சாவு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கிராம ஊராட்சிகளும் கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்படும்:மத்திய அரசு

Posted: 20 Jul 2016 12:03 PM PDT

"டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின்கீழ், அனைத்து கிராம ஊராட்சிகளும் வரும் 2018-ஆம் ஆண்டுக்குள் கண்ணாடி இழை (ஆப்டிகல் ஃபைபர்) கேபிள் மூலம் இணைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™