Tamil News | Online Tamil News |
- 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?
- * சுவாதியை கொன்றவன் போலீஸ் பிடியில் சிக்கியது.. எப்படி? . * கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம்
- இந்தியர்களின் வரி ஏய்ப்பை தடுக்க.. அதிரடி ! . சைப்ரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம்
- போனில் கவனம் வைக்காதீங்க!: அமைச்சர்களை கண்டித்த மோடி
- அமாவாசையில் அமைச்சரவை மாற்றம்
- தமிழ்நாடு மின்சார வாரிய செயல்பாடு சரியில்லை அதிருப்தி ! .. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல்
- பஞ்சாயத்து அமைப்புகளை முடக்க திட்டம் : பா.ஜ., அரசு மீது கருணாநிதி காட்டம்
- புதுமுகங்களுக்கு அடிக்குது யோகம்!: அ.தி.மு.க., தலைமை முடிவு
- 'ரிசர்வ் வங்கி கணக்கையும் சி.ஏ.ஜி., தணிக்கை செய்யணும்'
- கின்னஸ் சாதனைக்கு உ.பி., அரசு தயார்
- சிறுமியுடன் திருமணம் பாஜ., தலைவர் மகன் மீது போலீசார் வழக்கு
- 9-ம் தேதி கெஜ்ரிவால் குஜராத் பயணம்
- யூரோ கோப்பை: அரைறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி
| 'ஓபி' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்? Posted: 02 Jul 2016 08:06 AM PDT
தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. சொந்த ஊர் : தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய ... |
| Posted: 02 Jul 2016 09:49 AM PDT ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய, சுவாதி படுகொலை வழக்கில், தலைமறைவாக இருந்த கொலையாளி ராம்குமார் பிடிபட்டான். நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள குக்கிராமத்தில் மறைந்திருந்த அவன், போலீஸ் பிடியில் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சுவாதியை கொன்றதற்கான காரணம் குறித்தும், அவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன் 24ம் தேதி, மென்பொறியாளர் சுவாதி, அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கொலை தொடர்பாக, ஒரு வாரமாக நீடித்து வந்த மர்மம், நேற்று முன்தினம் ... |
| இந்தியர்களின் வரி ஏய்ப்பை தடுக்க.. அதிரடி ! . சைப்ரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் Posted: 02 Jul 2016 09:58 AM PDT புதுடில்லி,: மொரீஷியஸ் நாட்டுடன், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் செய்து கொண்ட மாற்றம் போல், சைப்ரஸ் நாட்டுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளது. வருமான வரி குறைவாக உள்ள நாடுகளும், வரியே இல்லாத நாடுகளும், வரி கட்டாமல் ஏமாற்றுபவர்களுக்கு, வசதியான நாடுகளாக உள்ளன. மொரீஷியஸ், பஹாமா, சைப்ரஸ், பனாமா போன்ற நாடுகள், வரி ஏய்ப்பாளர்களுக்கு மிகவும் சாதகமான நாடுகள். இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும், முதலீட்டின் டிவிடெண்டுக்கான வரி, மற்றும் பங்குகள் விற்கும்போது கிடைக்கும் மூலதன லாபத்திற்கும், வரி கட்டத் தேவை இல்லை.வரி ... |
| போனில் கவனம் வைக்காதீங்க!: அமைச்சர்களை கண்டித்த மோடி Posted: 02 Jul 2016 10:00 AM PDT புதுடில்லி:ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள், மொபைல் போனை பயன்படுத்தியதால் வெறுத்துப் போன பிரதமர் நரேந்திர மோடி, 'உங்கள் இலாகா திட்டங்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். போனில் நேரத்தை வீணடிக்காதீர்கள்' என, கடிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு இலாகாக்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில் டில்லியில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய, நிதித்துறை செயலர் சக்தி காந்த தாஸ், பட்ஜெட்டில் பல்வேறு ... |
| Posted: 02 Jul 2016 10:03 AM PDT திங்கள் கிழமையான நாளை அமாவாசை; நல்ல நாள் என்பதால், மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. இந்த நாள் தான் நல்லது என, பா.ஜ., தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமான ஜோதிடர் நாள் குறித்துக் கொடுத்தாராம். மிகவும் சிறிய அளவில் தான், அமைச்சரவை மாற்றம் இருக்கும் என, சொல்லப்படுகிறது. எப்போது, அமைச்சரவை மாற்றம் நடைபெற்றாலும், அதற்கு, 48 மணியிலிருந்து, 72 மணி நேரத்திற்கு முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காரணம், இதற்கென பல ஏற்பாடுகளை அவர்கள் செய்ய வேண்டியிருக்கும். முதலில் பதவியேற்புவிழா நடக்கும் அசோகா ஹாலில், 8 மணி நேரம், 'ஏசி' ஓட ... |
| Posted: 02 Jul 2016 10:08 AM PDT தமிழ்நாடு மின் வாரியத்தின் துணை நிறுவனமான, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய மின் துறை அமைச்சகம், 'ஸ்டேட் டிஸ்ட்ரிபியூஷன் யுடிலிட்டிஸ் ஆனுவல் இண்டகிரேட்டர்டு ரேட்டிங்' எனப்படும், மாநில மின் பகிர்மான கழகங்களின் மதிப்பீட்டு அறிக்கையை, 2013 முதல் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கை, மின் பகிர்மான கழகங்களின் மின் உற்பத்தி, மின் வினியோக பணிகளை உள்ளடக்கிய செயல்பாடு, நிதி நிலைமை, ஒழுங்கு முறை, சீர்திருத்த நடவடிக்கை அடிப்படையில் தயார் செய்யப்படுகிறது. ... |
| பஞ்சாயத்து அமைப்புகளை முடக்க திட்டம் : பா.ஜ., அரசு மீது கருணாநிதி காட்டம் Posted: 02 Jul 2016 10:09 AM PDT சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:காந்தி, 'இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது' என்று சொன்ன, உயர்ந்த கருத்தியலுக்கு, மூடு விழா நடத்துகின்ற வகையில், மத்திய பா.ஜ., அரசு ஜனநாயகத்தின் வேர்களாகக் கருதப்படுகின்ற பஞ்சாயத்து அமைப்புக்களை அடியோடு ஒழித்துக் கட்டும் அளவுக்கு முடிவெடுத்திருப்பதாக, மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்திருப்பது மிகவும் வேதனையைத் தருகின்ற செய்தியாகும். முன்னோக்கி வரும் ஜனநாயகத்தைப் பின்னோக்கி இழுக்கும் எதிர் மறை முயற்சியாகும். ராஜிவ்பிரதமராக இருந்த போது, ... |
| புதுமுகங்களுக்கு அடிக்குது யோகம்!: அ.தி.மு.க., தலைமை முடிவு Posted: 02 Jul 2016 10:32 AM PDT உள்ளாட்சி தேர்தலில், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்திருப்பது, கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. 2011 சட்டசபை தேர்தல், அதைத் தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தல், 2014 லோக்சபா தேர்தல், 2016 சட்டசபை தேர்தல் என அனைத்திலும், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது.தமிழகத்தில், 34 ஆண்டுகளுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது, அ.தி.மு.க.,வினரிடம் மகிழ்ச்சியை ... |
| 'ரிசர்வ் வங்கி கணக்கையும் சி.ஏ.ஜி., தணிக்கை செய்யணும்' Posted: 02 Jul 2016 10:44 AM PDT 'இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்' என, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வலியுறுத்தி உள்ளது. இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பான, 'அசோசெம்' டில்லியில் நடத்திய ஒரு கருத்தரங்கில், சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி சசிகாந்த் சர்மா பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:ரிசர்வ் வங்கியின் ஆடிட்டர்களை மத்திய அரசு நியமிக்கிறது . ஆனால், ரிசர்வ் வங்கியின் கணக்குகளை தணிக்கை செய்யும் அதிகாரம், சி.ஏ.ஜி.,க்கு அளிக்கப்படவில்லை. அதேசமயம், நிதித்துறையைச் சேர்ந்த பிற ... |
| கின்னஸ் சாதனைக்கு உ.பி., அரசு தயார் Posted: 02 Jul 2016 12:49 PM PDT லக்னோ: 5 கோடி மரக்கன்றுகளை நடுவதன் மூலம் புதிய கின்னஸ் சாதனை படைக்க உ.பி., மாநில அரசு தயாராகி வருகிறது. உலக மக்கள் தொகை தினம் வரும் 11-ம் தேதி கடைபிடிக்க ப்படுகிறது அதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்து 100 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அரசு பண்ணைகளில் 80 வகைகளை சேர்ந்த 7 கோடி மரக்கன்றுகள் மாநிலம் முழுவதும் உள்ள மண்ணின் தன்மைக்கேற்ற வகையில் வளர்க்கப்பட்டுள்ளது. என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி எட்டு மணி நேரத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு ... |
| சிறுமியுடன் திருமணம் பாஜ., தலைவர் மகன் மீது போலீசார் வழக்கு Posted: 02 Jul 2016 01:40 PM PDT
ராஞ்சி: ஜார்கண்ட் மாநில பா.ஜ., தலைவர் தலா மராண்டி மகன் முன்னா 11 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் .ள்ள கோட்டா என்னும் நகரில் கடந்த மாதம் 27-ம் தேதி பா.ஜ., தலைவர் தலா மராண்டி மகன் முன்னா 11 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சிறார் திருமண தடுப்பு அமைப்பினர் சார்பில் நகரின் நீதித்துறை நடுவர் மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் முன்னா மற்றும் சிறுமியின் தந்தை பாஸ்கி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ... |
| 9-ம் தேதி கெஜ்ரிவால் குஜராத் பயணம் Posted: 02 Jul 2016 02:12 PM PDT
புதுடில்லி: டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வரும் 9-ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலுக்கு செல்ல உள்ளதாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஹர்ஸில் நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கெஜ்ரிவாலி்ன் ஒருநாள் சுற்றுப்பயணத்தின் போது கோவிலில் வழிபாடு நடத்தப்படுவதுடன் மாநில விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாகவும் இந்த கூட்டம் வரும் 2017-ம் ஆண்டில் நடைபெற உள்ள மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னோடி கூட்டமாக அமையக்கூடும் என தெரிவித்தார். முன்னதாக மாநில அரசின் நெருக்கடி காரணமாக கெஜ்ரிவால் ... |
| யூரோ கோப்பை: அரைறுதிக்கு முன்னேறியது ஜெர்மனி Posted: 02 Jul 2016 02:57 PM PDT போர்டியாக்ஸ்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இத்தாலியை வீழ்த்தி ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது. யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி அணியும், ஜெர்மன் அணியும் மோதின. பலம் வாய்ந்த இரு அணியினரும் கடைசி வரையி்ல் கோல் எதுவும் போடவில்லை. தொடர்ந்து அளிக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் இரு அணியினரும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் ‛பெனால்டி ஷூட் அவுட்‛ வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் 6-5 என்ற கோல்கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஜெர்மனி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜெர்மனி அணி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 03,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |