Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
- ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார்? ஜூலை-15க்குள் தெரிந்துவிடும்
- என்எஸ்ஜியில் இந்தியா சேர சீனா முட்டுக்கட்டையா?: வி.கே. சிங் மறுப்பு
- திமுக எம்எல்ஏக்களுக்கான அறையை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்
- சொத்து விவரங்களை வெளியிட்டார் ஜேட்லி: கடந்த ஆண்டைவிட ரூ.2.83 கோடி குறைவு
- மருத்துவ மாணவியின் படிப்புச் செலவு ஏற்பு: ஜெயலலிதா அறிவிப்பு
- விவசாயத்துக்கான முக்கிய உரங்களின் விலை குறைப்பு: மத்திய அரசு முடிவு
- இறைப் பற்றுள்ளோரை எந்தத் துன்பமும் அணுகாது: முதல்வர் ஜெயலலிதா பேச்சு
- உ.பி.: கல்லூரி ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை குறித்த விசாரணைக்கு பாஜக கோரிக்கை
- சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரம் அதிகரிப்புஆந்திர அரசுக்கு பல்வேறு கட்சியினர் கண்டனம்
- வெள்ளக்கல் காப்புக்காடு சாலை சீரமைக்கப்படுமா?
- தேசிய அளவில் தமிழக உயர்கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி.வீரமணி
- உயர் நீதிமன்ற விவகாரம்: ஆந்திரம், தெலங்கானா முதல்வர்கள் பேசித் தீர்வு காண வேண்டும்
- பாலாற்றில் போலி மணல் குவாரி முறைகேடு: முதல்வருக்கு மின்னூர் கிராம மக்கள் புகார் மனு
- செவிலிய மாணவிகளுக்கு ஆண்டுத் தேர்வு தொடக்கம்
- மருத்துவர்கள் உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும்:ஆட்சியர் அறிவுரை
- மாநில நிதிக்குழு மானியத்தை வழங்க ஊராட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
- அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது வேல்ஸ்
- சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி சாவு
- பெண்ணைத் தாக்கிய வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது
- போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 25 லட்சம் மோசடி: ஒருவர் கைது
- நில மோசடி வழக்கில் இருவர் கைது
- ஒலிம்பிக் தகுதிச்சுற்று: உசேன் போல்ட் விலகல்
- மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- பாத்திரக் கடையில் ரூ. 4.60 லட்சம் திருட்டு
- மேல்விஷாரத்தில் இப்தார் நோன்பு திறப்பு
- அரக்கோணத்தில் உணவுத் திருவிழா
- டி20 கிரிக்கெட்: ஆம்லா-பிராவோ ஜோடி உலக சாதனை
- ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர்க்கை:விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
- வேலம் ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம்
- கொலையான என்டிஎம்சி, என்ஐஏ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி:கேஜரிவால் வழங்கினார்
- கனடா ஓபன்: அரையிறுதியில் ஜெயராம், பிரணீத்
- மயூர் விஹாரில் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: தில்லி போலீஸுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்
- என்சிஆர் டெங்கு நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தனிப் பதிவேடு:மத்திய அமைச்சர் நட்டா தகவல்
- தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடுமுதல் தகவல் அறிக்கை நகலை கோருகிறார் அமைச்சர் கபில் மிஸ்ரா
- ரூ.42 லட்சத்தில் விளம்பரம்: "மக்களைதிசை திருப்பும் தில்லி அரசின் நடவடிக்கை'
- இரு பிரிவினரிடையே மோதல்: 25 பேர் கைது
- தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று "வைரமுத்து சிறுகதைகள்' அறிமுக விழா
- தீர்ப்புக்கு அஞ்சி தில்லி அரசு மனு
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தில்லி மாணவர்களுக்கு முன்னுரிமை:சிசோடியா வலியுறுத்தல்
- ஆதார் அட்டையிலும் "ஆம் ஆத்மி'யை எதிர்க்கும் மத்திய அரசு
- மனைவி, மகளைக் கொன்று சமையல்காரர் தற்கொலை
- கட்டுமானதாரர் கொலைவழக்கில் மகன் கைது:மனைவி தலைமறைவு
- ஊழலுக்கு இடம் கொடுக்காததால் தடைகளை எதிர்கொள்கிறோம்:கேஜரிவால்
- அரசு மருத்துவமனையில் ஆட்சியர், எம்.பி. ஆய்வு
- உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் காயம்
- விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி
- வீட்டின் சுவரை இடித்து கொள்ளையடிக்க முயற்சி
- வாங்கிய காருக்கு பணம் தராமல் மோசடி
- கத்தி முனையில் நகை திருட்டு
- காய்கறி கடை அருகே பிடிபட்ட கருநாகம்
- கால்வாய் பணியால் குடிநீர் விநியோகம் பாதிப்பு
- மாமல்லபுரத்தில் சோதனை:232 பழங்கால சிலைகள் பறிமுதல்
- லாரி மோதி ஒருவர் சாவு
- வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர்
- மத்திய அரசின் நிதியில் முறைகேடு?தொடர்ந்து மூன்றாவது நாளாக தணிக்கை
- அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்கள் பறிமுதல்
- 6 நாடுகள் ஹாக்கி: இந்தியா-ஆர்ஜென்டீனா ஆட்டம் டிரா
- ஜூலை 6-இல் புனவாசலில் ஆட்சியர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம்
- நாப்கினை எரித்து அழிக்கும் மின் இயந்திரம் அரசுப் பள்ளிகளுக்கு அளிப்பு
- அண்ணனை வெட்டிய தம்பி கைது
- மரம் வெட்டிய தகராறில் நால்வர் கைது
- நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
- ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு
- நீடாமங்கலம் வட்டாட்சியர் பொறுப்பேற்பு
- கமலாலயக் குளத்தில் மின்னொளியில் தெப்பத் திருவிழா
- இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
- நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
- முத்துப்பேட்டை பகுதியில் ரூ.1.72 கோடியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு
- பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் பட்டுவாடா
- ஸ்ரீவைகுண்டத்தில் முக்கிய வீதிகள், கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு
- "துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் போராட்டம்'
- 11 வயது சிறுமியுடன் ஜார்க்கண்ட் பாஜக தலைவரின் மகன் திருமணம்
- சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம்
- இயற்கை வளங்களை பாதுகாக்க இளைஞர்கள் போராட தயங்கக் கூடாது:மத்திய அரசின் உதவி தலைமை அரசியல் ஆலோசகர்
- மாவட்ட செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசு
- கால்பந்தாட்டப் போட்டி: புன்னக்காயல் பள்ளிக்கு சுழற்கோப்பை
- தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பட்டியல்
- கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம்
- ஆத்தூரில் கோயில் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் காயம்
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: காவல் துறை
- தூத்துக்குடியில்5இல் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- உடலுறுப்பு தானத்தை சமுதாய இயக்கமாக மாற்ற வேண்டும்
- பள்ளி மாணவர்களுக்கான செய்முறை கண்காட்சி
- கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப் பிரதோஷம்
- 4ஆவது பைப் லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற திமுக வலியுறுத்தல்
- மும்பை ரசாயன ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி
- கார் டயர் வெடித்து விபத்து:ஓட்டுநர் உள்பட 6 பேர் காயம்
- ராகிங் செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு அரசு வேலை: கேரள அரசு உறுதி
- கொங்கு கலை,அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
- சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
- நாளை நொய்யல் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
- கரூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
- பெரம்பலூரில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் கிடக்கும் வயர்கள்
- வெளிநாட்டு தங்கம் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய தந்தை, மகன் :6 ஆண்டு கடுங்காவல் சிறை
- பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு
- தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
- பாபநாசம் அருகே இருதரப்பினர் மோதல்: காவலர் உள்பட 11 பேர் மீது வழக்கு
| கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு Posted: 02 Jul 2016 02:18 PM PDT கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் ஏற்கெனவே சேர்ந்துள்ளனர். |
| ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார்? ஜூலை-15க்குள் தெரிந்துவிடும் Posted: 02 Jul 2016 02:16 PM PDT இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய ஆளுநரின் பெயர் வரும் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படலாம்; இந்தப் பதவிக்கு ஆர்பிஐ-யின் முன்னாள் துணை ஆளுநர்களான சுபீர் கோகர்ண், ராகேஷ் மோகன் ஆகியோரின் பெயர்கள் இறுதிக்கட்ட பரிசீலனையில் உள்ளன என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. |
| என்எஸ்ஜியில் இந்தியா சேர சீனா முட்டுக்கட்டையா?: வி.கே. சிங் மறுப்பு Posted: 02 Jul 2016 02:13 PM PDT அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா சேருவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுவதாகக் கூறப்படுவது வெறும் ஊகம்தான் என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்தார். |
| திமுக எம்எல்ஏக்களுக்கான அறையை பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின் Posted: 02 Jul 2016 02:13 PM PDT தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை பார்வையிட்டார். |
| சொத்து விவரங்களை வெளியிட்டார் ஜேட்லி: கடந்த ஆண்டைவிட ரூ.2.83 கோடி குறைவு Posted: 02 Jul 2016 02:11 PM PDT மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, அவருக்கு ரூ.68.41 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் ரூ.2.83 கோடி குறைவாகும். |
| மருத்துவ மாணவியின் படிப்புச் செலவு ஏற்பு: ஜெயலலிதா அறிவிப்பு Posted: 02 Jul 2016 02:10 PM PDT புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி மேகலாவின் மருத்துவப் படிப்புக்கான செலவு முழுவதும் அதிமுகவே ஏற்றுகொள்ளும் என்று கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| விவசாயத்துக்கான முக்கிய உரங்களின் விலை குறைப்பு: மத்திய அரசு முடிவு Posted: 02 Jul 2016 02:10 PM PDT விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய உரங்களின் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் திங்கள்கிழமை வெளியிடப்பட இருக்கிறது. |
| இறைப் பற்றுள்ளோரை எந்தத் துன்பமும் அணுகாது: முதல்வர் ஜெயலலிதா பேச்சு Posted: 02 Jul 2016 02:09 PM PDT இறைப் பற்றுள்ளோரை எந்தத் துன்பமும் அணுகாது என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கூறினார். |
| உ.பி.: கல்லூரி ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை குறித்த விசாரணைக்கு பாஜக கோரிக்கை Posted: 02 Jul 2016 01:29 PM PDT உத்தரப் பிரதேச மாநில அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு சாதாரண ஆங்கில வார்த்தைகளையே உச்சரிக்கத் தெரியவில்லை எனவும், அவர்களுக்குப் போதுமான பொது அறிவு இல்லை எனவும் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மாநில ஆளுநரை பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம் Posted: 02 Jul 2016 01:26 PM PDT சர்வதேச அளவில் பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒருங்கிணைந்த ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் விரைவில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரம் அதிகரிப்புஆந்திர அரசுக்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் Posted: 02 Jul 2016 01:25 PM PDT வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே 12 அடி உயரத்துக்கு ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்திக் கட்டியுள்ளதற்கு, திமுக, பாஜக, பாமக, பாலாறு பாதுகாப்பு சங்க அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். |
| வெள்ளக்கல் காப்புக்காடு சாலை சீரமைக்கப்படுமா? Posted: 02 Jul 2016 01:25 PM PDT சேதமடைந்துள்ள வெள்ளக்கல் காப்புக்காடு சாலை சீரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களிடையே இருந்து வருகிறது. |
| தேசிய அளவில் தமிழக உயர்கல்வித் தரம் உயர்வு:அமைச்சர் கே.சி.வீரமணி Posted: 02 Jul 2016 01:24 PM PDT தேசிய அளவில் தமிழகத்தின் உயர் கல்வித்தரம் உயர்ந்துள்ளதாக அரக்கோணம் விழாவில் தமிழக வணிக வரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார். |
| உயர் நீதிமன்ற விவகாரம்: ஆந்திரம், தெலங்கானா முதல்வர்கள் பேசித் தீர்வு காண வேண்டும் Posted: 02 Jul 2016 01:24 PM PDT ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தை பிரித்துக் கொள்வது தொடர்பான பிரச்னைக்கு ஆந்திரம், தெலங்கானா முதல்வர்கள்தான் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். |
| பாலாற்றில் போலி மணல் குவாரி முறைகேடு: முதல்வருக்கு மின்னூர் கிராம மக்கள் புகார் மனு Posted: 02 Jul 2016 01:24 PM PDT மின்னூர் பாலாற்றில் மணல் குவாரி செயல்படுவது போன்று பொதுப்பணித் துறையினர் போலியாக ஆவணங்களைத் தயாரித்துள்ள முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மின்னூர் கிராம மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். |
| செவிலிய மாணவிகளுக்கு ஆண்டுத் தேர்வு தொடக்கம் Posted: 02 Jul 2016 01:24 PM PDT செவிலியர் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. செவிலியர் (நர்சிங்) கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் 3-ஆம் ஆண்டு வரையில் பயிலும் மாணவிகளுக்கான ஆண்டுத் தேர்வை மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 தனியார் நர்சிங் கல்லூரிகள் மற்றும் அரசு செவிலியக் |
| மருத்துவர்கள் உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும்:ஆட்சியர் அறிவுரை Posted: 02 Jul 2016 01:23 PM PDT மருத்துவர்கள் தங்களை முதலில் முழுமையாக பரிசோதனை செய்து கொண்டு உடல்நலத்தை பேணிக் காக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால். |
| மாநில நிதிக்குழு மானியத்தை வழங்க ஊராட்சித் தலைவர்கள் வலியுறுத்தல் Posted: 02 Jul 2016 01:23 PM PDT மாநில நிதிக்குழு மானியத்தை ஊராட்சிகளுக்கு அரசு வழங்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது வேல்ஸ் Posted: 02 Jul 2016 01:02 PM PDT யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் வேல்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தனது காலிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை தோற்கடித்தது. |
| சிலிண்டர் வெடித்ததில் பலூன் வியாபாரி சாவு Posted: 02 Jul 2016 01:00 PM PDT பலூனுக்கு காற்றடித்தபோது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சனிக்கிழமை பலூன் வியாபாரி உயிரிழந்தார். |
| பெண்ணைத் தாக்கிய வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது Posted: 02 Jul 2016 12:59 PM PDT பெண்ணைத் தாக்கிய வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். |
| போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 25 லட்சம் மோசடி: ஒருவர் கைது Posted: 02 Jul 2016 12:59 PM PDT குடியாத்தத்தில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| நில மோசடி வழக்கில் இருவர் கைது Posted: 02 Jul 2016 12:59 PM PDT அரக்கோணம் அருகே ரூ. 10 லட்சம் நில மோசடி செய்த வழக்குத் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர். இதில் தொடர்புடையதாகக் கூறப்படும் பாமக ஒன்றியக் குழு உறுப்பினர் உள்ளிட்ட ஐவரை போலீஸார் தேடி |
| ஒலிம்பிக் தகுதிச்சுற்று: உசேன் போல்ட் விலகல் Posted: 02 Jul 2016 12:59 PM PDT ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றான ஜமைக்கா தடகளப் போட்டியின் 100 மீ. ஓட்டத்தின் இறுதிச்சுற்றிலிருந்து உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான உசேன் போல்ட் விலகியுள்ளார். |
| மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 02 Jul 2016 12:59 PM PDT குடியாத்தம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நாலரை பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| பாத்திரக் கடையில் ரூ. 4.60 லட்சம் திருட்டு Posted: 02 Jul 2016 12:58 PM PDT திருப்பத்தூரில் பாத்திரக் கடையில் ரூ. 4.60 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மேல்விஷாரத்தில் இப்தார் நோன்பு திறப்பு Posted: 02 Jul 2016 12:58 PM PDT மேல்விஷாரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வங்கியின் கிளை மேலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மண்டல மேலாளர் பி. ரவி பெரும |
| Posted: 02 Jul 2016 12:58 PM PDT வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா அரக்கோணம் நகர அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| டி20 கிரிக்கெட்: ஆம்லா-பிராவோ ஜோடி உலக சாதனை Posted: 02 Jul 2016 12:58 PM PDT கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா-மேற்கிந்தியத் தீவுகளின் டுவைன் பிராவோ ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 5-ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையைப் படைத்தது. |
| ஆதிதிராவிடர் நல விடுதியில் சேர்க்கை:விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் Posted: 02 Jul 2016 12:58 PM PDT வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் திங்கள்கிழமைக்குள் (ஜூலை 4) விண்ணப்பிக்க வேண்டும். |
| வேலம் ஊராட்சியில் "அம்மா' திட்ட முகாம் Posted: 02 Jul 2016 12:57 PM PDT வேலம் ஊராட்சியில் நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சோளிங்கர் எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் வழங்கினார். |
| கொலையான என்டிஎம்சி, என்ஐஏ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிதி உதவி:கேஜரிவால் வழங்கினார் Posted: 02 Jul 2016 12:57 PM PDT தில்லியில் கொலையான புது தில்லி முனிசிபல் கவுன்சில் அதிகாரி எம்.எம்.கான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் கொலையான தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி தன்சில் அகமது ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழங்கினார். |
| கனடா ஓபன்: அரையிறுதியில் ஜெயராம், பிரணீத் Posted: 02 Jul 2016 12:57 PM PDT கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், சாய் பிரணீத் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். |
| மயூர் விஹாரில் சிறுவன் உயிரிழந்த சம்பவம்: தில்லி போலீஸுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ் Posted: 02 Jul 2016 12:56 PM PDT தில்லி மயூர் விஹார் பகுதியில் இரு சிறுவர்கள் தாக்கியதில் கேரள சிறுவன் ரஜத் மேனன் (14) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமதமாக நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தில்லி காவல் துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| என்சிஆர் டெங்கு நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் தனிப் பதிவேடு:மத்திய அமைச்சர் நட்டா தகவல் Posted: 02 Jul 2016 12:56 PM PDT தில்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் தேசியத் தலைநகர் வலயப் பகுதியைச் சேர்ந்த டெங்கு நோயாளிகளுக்கு தனிப் பதிவேடு பராமரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். |
| தண்ணீர் லாரிகள் ஒப்பந்த முறைகேடுமுதல் தகவல் அறிக்கை நகலை கோருகிறார் அமைச்சர் கபில் மிஸ்ரா Posted: 02 Jul 2016 12:55 PM PDT தில்லியில் தண்ணீர் லாரிகளுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டதில் ரூ.400 கோடி அளவில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) நகலை அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் (ஏசிபி) தில்லி நீர்வளத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா கோரியுள்ளார். |
| ரூ.42 லட்சத்தில் விளம்பரம்: "மக்களைதிசை திருப்பும் தில்லி அரசின் நடவடிக்கை' Posted: 02 Jul 2016 12:55 PM PDT தில்லி அரசு சார்பில் 20 பத்திரிகைகளில் சுமார் ரூ.42 லட்சம் செலவில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரங்களில் மாநகராட்சிகள் தில்லி அரசின் ஆளுகையில் கீழ் இல்லை என்று கூறியிருப்பது மக்களைத் திசை திருப்புவதாக உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. |
| இரு பிரிவினரிடையே மோதல்: 25 பேர் கைது Posted: 02 Jul 2016 12:55 PM PDT தெற்கு தில்லியின் ஃபதேபூர் பேரி பகுதியில் இரு பிரிவினரிடையே நிகழ்ந்த மோதலில் போலீஸார் உள்பட சிலர் காயமடைந்தனர். |
| தில்லி தமிழ்ச் சங்கத்தில் இன்று "வைரமுத்து சிறுகதைகள்' அறிமுக விழா Posted: 02 Jul 2016 12:54 PM PDT தில்லி தமிழ்ச் சங்கத்தில் கவிஞர் வைரமுத்து சிறுகதைகள் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) நடைபெறவுள்ளது. |
| தீர்ப்புக்கு அஞ்சி தில்லி அரசு மனு Posted: 02 Jul 2016 12:54 PM PDT தில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் தொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் உள்ள 11 வழக்குகளில் தங்களுக்கு எதிராக தீர்ப்பு வெளியாகும் என அஞ்சி, தில்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தெரிவித்தார். |
| அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தில்லி மாணவர்களுக்கு முன்னுரிமை:சிசோடியா வலியுறுத்தல் Posted: 02 Jul 2016 12:54 PM PDT தில்லி பல்கலைக்கழகத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அரசால் செலவிடப்படுவதால், தலைநகர் மாணவர்களுக்கு கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தில்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா வலியுறுத்தினார். |
| ஆதார் அட்டையிலும் "ஆம் ஆத்மி'யை எதிர்க்கும் மத்திய அரசு Posted: 02 Jul 2016 12:53 PM PDT தில்லி பாஜக மூத்த தலைவர் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஆதார் அட்டையில் ஆம் ஆத்மி (சாதாரண மனிதன்) என்ற வார்த்தையை குறிப்பிடுவதை கைவிட்டுள்ளது மத்திய அரசு. |
| மனைவி, மகளைக் கொன்று சமையல்காரர் தற்கொலை Posted: 02 Jul 2016 12:53 PM PDT தென்கிழக்கு தில்லி, ஓக்லா பேஸ்-2 பகுதியில் மனைவி, குழந்தை ஆகிய இருவரையும் கொன்ற சமையல்காரர் தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். |
| கட்டுமானதாரர் கொலைவழக்கில் மகன் கைது:மனைவி தலைமறைவு Posted: 02 Jul 2016 12:53 PM PDT தேசியத் தலைநகர் வலயம், காஜியாபாதில் உள்ள கவிநகர் பகுதியில் கட்டுமானதாரரை அவரது மகனும், மனைவியும் கொலை செய்து சடலத்தை காட்டுப் பகுதியில் வீசியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். |
| ஊழலுக்கு இடம் கொடுக்காததால் தடைகளை எதிர்கொள்கிறோம்:கேஜரிவால் Posted: 02 Jul 2016 12:52 PM PDT ஊழலுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால், ஆம் ஆத்மி அரசு பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறது என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். |
| அரசு மருத்துவமனையில் ஆட்சியர், எம்.பி. ஆய்வு Posted: 02 Jul 2016 12:50 PM PDT திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, அரக்கோணம் எம்.பி. கோ.அரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். |
| உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 02 Jul 2016 12:50 PM PDT உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பள்ளிப்பட்டு வட்டத்தில் 527 பயனாளிகளுக்கு ரூ. 22.22 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| பணியின்போது மின்சாரம் பாய்ந்து மின் வாரிய ஊழியர் காயம் Posted: 02 Jul 2016 12:50 PM PDT பணியின்போது, மின்சாரம் பாய்ந்ததில் மின்வாரிய ஊழியர் பலத்த காயமடைந்தார். |
| விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி Posted: 02 Jul 2016 12:49 PM PDT விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். |
| வீட்டின் சுவரை இடித்து கொள்ளையடிக்க முயற்சி Posted: 02 Jul 2016 12:49 PM PDT கும்மிடிப்பூண்டியில் வீட்டின் சுவரை இடித்து கொள்ளைய டிக்க முயற்சி நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி, சரண்யா நகரைச் சேர்ந்தவர் வில்சன் (49). வெள்ளிக்கிழமை இரவு, வீட்டின் கீழ் தளத்தில் இவர் உறங்கினார். அவரது குடும்பத்தார் மேல்தளத்தில் உறங்கினர். |
| வாங்கிய காருக்கு பணம் தராமல் மோசடி Posted: 02 Jul 2016 12:48 PM PDT திருவள்ளூர் அருகே காரை வாங்கிவிட்டு, அதற்கான பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வருகின்றனர். |
| Posted: 02 Jul 2016 12:48 PM PDT கவரப்பேட்டை அருகே கத்தி முனையில் நகை திருடப்பட்டது. கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே கீழ்மேனி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (52), தேநீர்க் கடை நடத்தி வருகிறார். |
| காய்கறி கடை அருகே பிடிபட்ட கருநாகம் Posted: 02 Jul 2016 12:48 PM PDT கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி. சாலையில் காய்கறி கடை அருகே இருந்த கருநாகத்தை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர். |
| கால்வாய் பணியால் குடிநீர் விநியோகம் பாதிப்பு Posted: 02 Jul 2016 12:47 PM PDT திருவள்ளூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணியால் சி.வி.நாயுடு சாலையில் உள்ள கடைகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. |
| மாமல்லபுரத்தில் சோதனை:232 பழங்கால சிலைகள் பறிமுதல் Posted: 02 Jul 2016 12:47 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அருகே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 232 பழங்கால சிலைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 02 Jul 2016 12:47 PM PDT காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஒருவர் சனிக்கிழமை இறந்தார். |
| வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் Posted: 02 Jul 2016 12:46 PM PDT வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலையை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவினை தமிழக முதல்வருக்கு வட்டாட்சியர் மூலம் அனுப்ப வேண்டி மன்னார்குடி வட்டாட்சியரை சந்தித்து தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவினை வெள்ளிக்கிழமை அளித்தனர். |
| மத்திய அரசின் நிதியில் முறைகேடு?தொடர்ந்து மூன்றாவது நாளாக தணிக்கை Posted: 02 Jul 2016 12:46 PM PDT வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய அரசின் நிதியில் முறைகேடு நடந்தது தொடர்பாக மூன்றாவது நாளாக கணக்குகளைத் திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தினர் சனிக்கிழமையன்றும் தணிக்கை செய்தனர். |
| அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்கள் பறிமுதல் Posted: 02 Jul 2016 12:46 PM PDT மன்னார்குடியில் மொத்த மளிகை பொருள்கள் விற்பனை நிறுவனத்திற்கு சொந்தமான பொருள்கள் இருப்பு அறையிலிருந்து 600 கிலோ அயோடின் இல்லாத உப்பு பொட்டலங்களை திருவாரூ மாவட்ட, உணவுப் பாதுகாப்பு, மருந்து நிர்வாகப் பிரிவினர் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்து பறிமுதல் செய்தனர். |
| 6 நாடுகள் ஹாக்கி: இந்தியா-ஆர்ஜென்டீனா ஆட்டம் டிரா Posted: 02 Jul 2016 12:45 PM PDT ஆறு நாடுகள் இடையிலான சர்வதேச ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 3-3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவுடன் டிரா செய்தது. |
| ஜூலை 6-இல் புனவாசலில் ஆட்சியர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் Posted: 02 Jul 2016 12:45 PM PDT நீடாமங்கலம் வட்டம், கூத்தாநல்லூர் சரகம் புனவாசல் கிராமத்தில் கஸ்தூரிபாய் காந்தி தொடக்கப் பள்ளியில் சித்தனக்குடி, வெங்காரம் பேரையூர், பூந்தாழங்குடி மற்றும் கீழமணலி ஆகிய கிராமங்கள் பயன் பெறும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ம.மதிவாணன் தலைமையில் வரும் 6-ம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறவுள்ளது. |
| நாப்கினை எரித்து அழிக்கும் மின் இயந்திரம் அரசுப் பள்ளிகளுக்கு அளிப்பு Posted: 02 Jul 2016 12:45 PM PDT மன்னார்குடி அரசு கிளை நூலகத்தில் மன்னை ஜேசிஐ அமைப்பின் சார்பில் சுரக்ஷ திட்டத்தின் மூலம் நாப்கினை எரித்து அழிக்கும் மின்சார சாதனம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 02 Jul 2016 12:45 PM PDT நன்னிலம் அருகே அண்ணனை வெட்டிய தம்பியை போலீஸார் கைது செய்தனர். நன்னிலம் அடுத்துள்ள முடிகொண்டான் மேலத்தெரு முருகையன் மகன்கள் பாலகிருஷ்ணன், பிரகாஷ், கணேசன். இவர்களுக்கிடையே சொத்துகளைப் பிரிப்பது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது. |
| மரம் வெட்டிய தகராறில் நால்வர் கைது Posted: 02 Jul 2016 12:44 PM PDT நன்னிலம் அருகே மரம் வெட்டிய தகராறில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நன்னிலம் அடுத்துள்ள நாகக்குடியைச் சேர்ந்த மரகதம் அவரது கணவர் ராஜேந்திரன் ஆகிய இருவரும் பொது இடத்திலிருந்த மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். இதைப் |
| நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் Posted: 02 Jul 2016 12:44 PM PDT நாகை ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் செளந்தரவல்லித் தாயார் ஆனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. |
| ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு Posted: 02 Jul 2016 12:44 PM PDT ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
| நீடாமங்கலம் வட்டாட்சியர் பொறுப்பேற்பு Posted: 02 Jul 2016 12:44 PM PDT நீடாமங்கலம் வட்டாட்சியராக ஜி.ஜானகி பொறுப்பேற்றுள்ளார். இங்கு பணியாற்றிய வட்டாட்சியர் மதியழகன் |
| கமலாலயக் குளத்தில் மின்னொளியில் தெப்பத் திருவிழா Posted: 02 Jul 2016 12:43 PM PDT திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் கமலாலயக் குளத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை இரவு தெப்பத் திருவிழா விடிய விடிய நடைபெற்றது. |
| இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி Posted: 02 Jul 2016 12:42 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை - ஜாம்பவானோடை தர்காவில் மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் Posted: 02 Jul 2016 12:42 PM PDT நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்து எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| முத்துப்பேட்டை பகுதியில் ரூ.1.72 கோடியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆய்வு Posted: 02 Jul 2016 12:42 PM PDT முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.1 கோடியே 72 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மா.மதிவாணன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முத்துப்பேட்டை ஒன்றியம் சங்கேந்தி |
| பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் பட்டுவாடா Posted: 02 Jul 2016 12:42 PM PDT வணிகக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான நிறுவனங்களும் பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் ஊதியம் வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார் தொழிலாளர் துறை அலுவலர் கவிஅரசு. |
| ஸ்ரீவைகுண்டத்தில் முக்கிய வீதிகள், கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு Posted: 02 Jul 2016 12:35 PM PDT ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள், முக்கிய வீதிகள், கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது என, காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. |
| "துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் போராட்டம்' Posted: 02 Jul 2016 12:35 PM PDT தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு தரைவழி போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலத் தலைவர் மு.கணேஷ் தெரிவித்தார். |
| 11 வயது சிறுமியுடன் ஜார்க்கண்ட் பாஜக தலைவரின் மகன் திருமணம் Posted: 02 Jul 2016 12:35 PM PDT ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராண்டியின் மகன் முன்னா 11 வயது சிறுமியை திருமணம் செய்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
| சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் போராட்டம் Posted: 02 Jul 2016 12:35 PM PDT புதிய சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இயற்கை வளங்களை பாதுகாக்க இளைஞர்கள் போராட தயங்கக் கூடாது:மத்திய அரசின் உதவி தலைமை அரசியல் ஆலோசகர் Posted: 02 Jul 2016 12:35 PM PDT தாமிரவருணி உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக, இளைஞர்கள் போராடவும் தயங்கக் கூடாது என மத்திய அரசின் உதவி தலைமை அரசியல் ஆலோசகர் ஜீ.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார். |
| மாவட்ட செஸ் போட்டியில் வென்றோருக்கு பரிசு Posted: 02 Jul 2016 12:34 PM PDT தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் |
| கால்பந்தாட்டப் போட்டி: புன்னக்காயல் பள்ளிக்கு சுழற்கோப்பை Posted: 02 Jul 2016 12:34 PM PDT ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயலில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கால் பந்தாட்டப் போட்டியில், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்று, ஜோசப் பர்ணாந்து சுழற் கோப்பையை தட்டிச் சென்றது. |
| தூத்துக்குடி மாவட்ட பாஜக நிர்வாகிகள் பட்டியல் Posted: 02 Jul 2016 12:34 PM PDT பாஜக தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் ம. பாலாஜி வெளியிட்ட அறிக்கை: |
| கோவில்பட்டியில் கலந்தாய்வுக் கூட்டம் Posted: 02 Jul 2016 12:34 PM PDT கோவில்பட்டியில் காவல் துறை மற்றும் வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. |
| ஆத்தூரில் கோயில் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் காயம் Posted: 02 Jul 2016 12:33 PM PDT ஆத்தூரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவர் காயமடைந்தார். |
| பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும்: காவல் துறை Posted: 02 Jul 2016 12:33 PM PDT தூத்துக்குடி மாநகரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் கண்டிப்பாக கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என மாநகரக் காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தெரிவித்தார். |
| தூத்துக்குடியில்5இல் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 02 Jul 2016 12:33 PM PDT தூத்துக்குடியில் ஜூலை 5 ஆம் தேதி நடைபெறும் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ கலந்துகொண்டு பேசுகிறார். |
| உடலுறுப்பு தானத்தை சமுதாய இயக்கமாக மாற்ற வேண்டும் Posted: 02 Jul 2016 12:33 PM PDT எதிர்காலத்தில் மனித உறுப்புகளின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என்பதை கருத்தில்கொண்டு, உடலுறுப்பு தானத்தை ஒரு சமுதாய இயக்கமாகவே மாற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வலியுறுத்தினார். |
| பள்ளி மாணவர்களுக்கான செய்முறை கண்காட்சி Posted: 02 Jul 2016 12:32 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், கல்லூரி- தகவல் கோட்பாடு சமூகம் ஆகியன சார்பில் 2 நாள்கள் பள்ளி மாணவர்களுக்கான செய்முறைக் கண்காட்சி நடைபெற்றது. |
| கோவில்பட்டிசெண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப் பிரதோஷம் Posted: 02 Jul 2016 12:32 PM PDT கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சனிப் பிரதோஷம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு பூஜையும், 4.30-க்கு நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. |
| 4ஆவது பைப் லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற திமுக வலியுறுத்தல் Posted: 02 Jul 2016 12:32 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் 4ஆவது பைப் லைன் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என திமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் எஸ். ஜோயல் வலியுறுத்தியுள்ளார். |
| மும்பை ரசாயன ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி Posted: 02 Jul 2016 12:31 PM PDT மும்பை புறநகரான செம்பூரில் உள்ள ரசாயனம், உரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை கொதிகலன் வெடித்ததில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர். |
| கார் டயர் வெடித்து விபத்து:ஓட்டுநர் உள்பட 6 பேர் காயம் Posted: 02 Jul 2016 12:31 PM PDT கரூர் அருகே டயர் வெடித்ததில்,கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரின் ஓட்டுநர் உள்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். |
| ராகிங் செய்யப்பட்ட தலித் பெண்ணுக்கு அரசு வேலை: கேரள அரசு உறுதி Posted: 02 Jul 2016 12:31 PM PDT கர்நாடக மாநிலம், குல்பர்கா நகரில் உள்ள செவிலியர் கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கேரளத்தைச் சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் கே.பி.அஸ்வதிக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையை கேரள அரசு வழங்கியது. அத்துடன், தனது படிப்பை அந்தப் பெண் முடித்ததும் அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது. |
| கொங்கு கலை,அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 02 Jul 2016 12:30 PM PDT கரூர் கொங்கு கலை,அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் Posted: 02 Jul 2016 12:30 PM PDT சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. |
| நாளை நொய்யல் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் Posted: 02 Jul 2016 12:28 PM PDT புகழூர் துணை மின் நிலையத்தில் ஜூலை 4 (திங்கட்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்,இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வேலாயுதம்பாளையம், புன்செய் புகழூர்,தோட்டக்குறிச்சி,தளவாபாளையம்,தவிட்டுப்பாளையம்,நடையனூர்,சேமங்கி, நொய்யல் ஆகிய பகுதிகளில் |
| கரூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது Posted: 02 Jul 2016 12:28 PM PDT கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாம் அருகே சிலர் கஞ்சா விற்பதாக பசுபதிபாளையம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று |
| பெரம்பலூரில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் கிடக்கும் வயர்கள் Posted: 02 Jul 2016 12:27 PM PDT பெரம்பலூர் நகரில் பாதுகாப்பின்றி சாலையோரத்தில் கிடக்கும் தொலைபேசி, மின்சார வயர்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினரும், நகராட்சி நிர்வாகமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வெளிநாட்டு தங்கம் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய தந்தை, மகன் :6 ஆண்டு கடுங்காவல் சிறை Posted: 02 Jul 2016 12:27 PM PDT புதுக்கோட்டை அருகே வெளிநாட்டிலிருந்து வந்த தங்கத்தைத் தருவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றி, கொல்ல முயற்சித்த தந்தை, மகனுக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. |
| பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு Posted: 02 Jul 2016 12:27 PM PDT கும்பகோணம் அருகே உள்ள குமரங்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் பழனிவேல் மனைவி அமிர்தவல்லி (37) என்பவருக்கும், அவரது அண்ணன் பூமிநாதனுக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. |
| Posted: 02 Jul 2016 12:26 PM PDT கும்பகோணம் சோலையப்பன் தெரு பரிசல் துறையைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் செல்வராஜ் (45). கூலித் தொழிலாளி. மது பழக்கம் உள்ள இவர் தனது 2-வது மகன் சந்துருவை பொறியியல் கல்லூரியில் சேர வலியுறுத்தினாராம். |
| பாபநாசம் அருகே இருதரப்பினர் மோதல்: காவலர் உள்பட 11 பேர் மீது வழக்கு Posted: 02 Jul 2016 12:26 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வியாழக்கிழமை இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு காவலர் உள்பட இரு தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |