ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சத்தும் சுவையும் மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி!
- ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் !
- சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது
- உன் அன்பிற்கும் ஈடாக…
- ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
- தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம்
- டாக்கா உணவு விடுதியில் புகுந்து ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல்: பணையக்கைதிகள் 20 பேர் மீட்பு
- தர்மம் – ஒரு பக்க கதை
- திருமணம் – ஒரு பக்க கதை
- வாய்ப்பு – ஒரு பக்க கதை
- நியாயம் – ஒரு பக்க கதை
- வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
- எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?
- சுவாமி விவேகானந்தர்
- தெய்வத்தின் சிலை…
- நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்
- ரமணியின் கவிதைகள்
- 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
- கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது...
- பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம்
- ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
- #வெற்றி உன்வசம் #
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- "இளமையில் வறுமை"
- எங்கே சொர்க்கம் ……
- சட்டம்
- பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்!
- கதை கேளு , கதை கேளு...
- அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…!
- நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!
- வேலன்:-கணிணி வேலைநேர பயன்பாட்டினை அறிந்துகொள்ள
| சத்தும் சுவையும் மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி! Posted: 02 Jul 2016 12:54 PM PDT சத்தும் சுவையும் மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி ! தேவையான பொருட்கள்: பச்சரிசி - 150 கிராம் சிறும்பருப்பு - 1 கப் சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது) வெந்தயம் - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1/2 டீஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது) பிரியாணி இலை - 1 கொத்தமல்லி - சிறிது புதினா - சிறிது தேங்காய் பால் - 1 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 1 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: ... |
| ஜூலை (1 - 15) மாத ராசி பலன்கள் ! Posted: 02 Jul 2016 12:28 PM PDT மேஷம் ஜூலை 1 முதல் 15 வரை சொந்த முயற்சியாலும், மனத்துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு வக்ர நிவர்த்தி ஆகிறார். தொழில் லாபாதிபதி சனியுடன் இருக்கும் அவரால் காரியங்களில் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்னைகளில் ... |
| சுவாதி கொலை வழக்கு: தேடப்பட்ட நபர் நெல்லையில் கைது Posted: 02 Jul 2016 11:57 AM PDT சென்னை இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்பட்ட நபரை போலீஸ் தனிப்படை நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் கைது செய்தது. போலீஸ் தகவல்: கைது நடவடிக்கை குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு போலீஸ் உயரதிகாரி ஒருவர் அளித்தப் பேட்டியில், "நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்திலிருந்து ராம்குமாரை கைது செய்தோம்.ராம்குமார் பொறியியல் பட்டதாரி. வயது 22. இவர் கடந்த சில மாதங்களாக சென்னை சூளைமேட்டில் ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், சுவாதியை ... |
| Posted: 02 Jul 2016 11:10 AM PDT என்றைக்குத் தந்திருக்கிறேன் உனக்கு ஒரு கோப்பை அதிகாலைத் தேநீர்? ஆனால் விதவிதமாய் வாங்கி வருவேன் பீங்கான் கோப்பைகள் – எப்போதிருந்திருக்கிறது அவகாசம் குழந்தைக்கு கையசைத்துப் பள்ளிக்கனுப்ப? – பிட்ஸாவும் ஐஸ்கிரீமும் கொடுத்து விடுமா என் கையசைப்பின் மகிழ்ச்சி புரிதலுடன் நீ விட்டுக்கொடுத்த இரவுகளின் பரிவால் நிரம்பியிருக்கிறது என் வாசிப்பும் எழுத்தும் – உன் புரிதலுக்கும் அள்ளிக்கொடுக்கும் அன்பிற்கும் ஈடாக வேறென்ன செய்துவிட முடியும் நான் இந்த 17 வரிக் கவிதையைத் தவிர? – ——————————— -தாரா ... |
| ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன? Posted: 02 Jul 2016 11:06 AM PDT மாஸ்கோ : ரஷ்யாவில், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடச் சென்ற விமானம், 10 பேருடன் மாயமானது. - சைபீரியாவில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க, 10 பேருடன், புறப்பட்டு சென்ற விமானம், திடீரென மாயமானது. - அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏழு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காட்டுத்தீயால் அப்பகுதியில் பெரும் புகை மயமாக இருப்பதால், காணாமல் போன விமானத்தை தேடும் பணி சிக்கலாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. - ------------------------------ தினமலர் |
| தத்துவ விசாரம்: ஒரு முகூர்த்தகாலம் நரகம் Posted: 02 Jul 2016 11:05 AM PDT - புஷ்பக விமானத்தில் ஏறி மனித உடலுடன் தருமன் சொர்க்கம் சென்றான். சொர்க்கத்தில் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. துரியோதனனும் மற்ற கெளரவர்களும் சொர்க்கத்தில் இருந்தார்கள். தன் தம்பிகள், திரௌபதி, அபிமன்யு ஆகியோரை அவன் கண்கள் தேடின. அவர்களைக் காணவில்லை. பாண்டவர்கள் இல்லாத அந்த சொர்க்கத்தில் கெளரவர்கள் சூரியனைப் போலப் பிரகாசித்துக்கொண்டு களங்கமற்ற மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை. தன்னுடன் வந்த தேவதூதர்களைப் பார்த்து, "என்னுடைய தம்பிகள் எங்கே? அவர்கள் இருக்கும் இடத்துக்குப் ... |
| டாக்கா உணவு விடுதியில் புகுந்து ஐ.எஸ் அமைப்பினர் தாக்குதல்: பணையக்கைதிகள் 20 பேர் மீட்பு Posted: 02 Jul 2016 10:51 AM PDT - டாக்கா, - வங்காளதேசத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அதிகம் நிறைந்துள்ள முக்கிய பகுதியான குல்ஷன் பகுதியில் உள்ள ஹோலி ஆர்டிசன் பேக்கரி உணவகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். வெளிநாட்டினர் அதிகம் வந்து செல்லும் இந்த உணவு விடுதிக்குள் 20 க்கும் மேற்பட்டோரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பொறுப்பேற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சண்டையில் ... |
| Posted: 02 Jul 2016 10:49 AM PDT - நெடுஞ்சாலை போக்குவரத்து இரவிலும் ஓய்வின்றி நடந்து கொண்டிருந்தது. திருச்சியிலிருந்து சரக்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு டிரைவ் செய்து கொண்டிருந்தான் தணிகைவேல். தன்னந்தனி பயணம்! – தொழுதூரைத் தாண்டியதும் யாரோ ஒரு பெண் லாரியை நிறுத்தும்படி சைகை செய்தாள். வண்டியை நிறுத்தியவன், ''என்னம்மா?'' என்றான். – ''ஐயா, பஸ் எதுவும் நிற்க மாட்டேங்குது. விழுப்புரத்தில் இறக்கிடுங்க! அவசரமா போகணும்!'' – ஏற்றிக்கொண்டான். இப்படி நெடுஞ்சாலையில் வழிமறிக்கும் பெண்கள் பற்றி சில டிரைவர்கள் ... |
| Posted: 02 Jul 2016 10:48 AM PDT - ''ஏய் சங்கவி… ஊர்ல உள்ளவளுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது. உனக்கு ஒரு ராஜகுமாரன் ஏன்டி இன்னும் வரமாட்றான்?'' போகிற போக்கில் பாக்கியம் பாட்டி கேட்டுவிட்டுச் சென்றாள். சங்கவிக்கு எரிச்சல் வந்தது. பாக்கியம் என்றில்லை, ஊரில் எல்லாருமே இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். சங்கவியின் வருத்தத்திற்குக் காரணம், அவர்கள் கேள்வி கேட்பது மட்டும் அல்ல. இந்தக் கேள்வியை அவளுடன் வரும் உயிர்த்தோழி ஸ்வேதாவிடம் யாரும் கேட்பதில்லை! – இருவரும் ஒரே தெரு, ஒரே வயது, பள்ளி… பின்னர் கல்லூரி என்று சேர்ந்தே சுற்றியவர்கள். ... |
| Posted: 02 Jul 2016 10:40 AM PDT - 'டைரக்டர், இசையமைப்பாளர், நடிகர்கள்… அனைவருமே புதுசு. இந்தப் படத்தில் நான் பாடமாட்ேடன்!'' – பிரபல பாடகர் பத்மராகவன் கோபத்தோடு மறுத்தார். – 'எவ்வளவு பெரிய பாடகர் இவ்வளவு ஈகோ பிடித்தவராய் இருக்கிறாரே!' – இளம் டைரக்டர் இந்திரனுக்குக் கோபம், கொதிப்பு. தன்னிடம் பலமுறை வாய்ப்பு கேட்டு வந்த வசந்தனைப் பாட வைத்தான். – அத்தனை பாடல்களும் ஹிட். எங்கும் அந்தப் பாடல்களே ஒலித்தன. எவரும் அதைப் பற்றியே பேசினர். அந்தப் பாடல்களால் படமும் ஹிட். பத்மராகவனே பாடியிருந்தால் கூட இவ்வளவு ஹிட் ஆகியிருக்குமா தெரியாது. ... |
| Posted: 02 Jul 2016 10:39 AM PDT ' -- 'எத்தனை தடவை சொல்றது? உள்ளே போங்க. மத்தவங்களும் ஏறணுமில்ல…'' – பேருந்தில் முட்டி மோதி ஏறிக்கொண்டிருந்தவர்களிடம் இருந்து அந்தக் கீச்சுக் குரல் தனித்துத் தெரிந்தது. இரண்டு பேருந்துகள் பிரேக் டவுன் ஆகி வராமல் போனதற்குப் பிறகு இந்தப் பேருந்து வந்ததால், அத்தனை கூட்டம்! ''ஏன்யா, நீங்க மட்டும் வசதியா நின்னுட்டீங்களே. வெளிய இருக்கற நாங்களும் மனுஷங்கதானே? உள்ள நகருங்கய்யா! சே, எருமை மாடு கணக்கா நிக்கிறாங்களே தவிர, அசையறானுங்களா? கண்டக்டர், நீங்களாவது சொல்லக் கூடாதா..? – இப்படி எல்லோரும் ... |
| வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு Posted: 02 Jul 2016 10:28 AM PDT - - - |
| எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? Posted: 02 Jul 2016 10:19 AM PDT எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? - கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, எந்தெந்த விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. - விபூதியை எடுக்க சில விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்க ளை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும். ஆகவே விபூதியை எடுக்கும்போது, ... |
| Posted: 02 Jul 2016 10:17 AM PDT சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........ சுவாமி விவேகானந்தர். |
| Posted: 02 Jul 2016 09:55 AM PDT - உருட்டிய கண்களுடன் நீட்டிய பற்களுடன் தொங்கும் நாக்குடன் ஓங்கிய கைகளுடன் தூக்கிய கால்களுடன் கரிய உருவத்துடன் நின்றிருந்தது பேயினுடையதாகவும் இருந்திருக்கலாம். – 'தெய்வத்தின் சிலை' என்று சொல்லி வைத்தேன் குழந்தையிடம். கற்பிதத்தில்தானே உருவெடுக்கிறது சாமிக்கும் சாத்தானுக்குமான முதல் உருவம்! – சாளரங்களற்ற அறைக்குள் யாரோ திறந்த கதவின்வழி சடுதியில் நுழைந்த வண்ணத்துப்பூச்சி அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தது. மரமென்று நினைத்து நெருங்கி பிறகு ஓவியம்தானென தெரிந்துகொண்டு திசையை ... |
| நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் Posted: 02 Jul 2016 09:11 AM PDT விசாகப்பட்டினம், நைஜீரியா நாட்டில் 2 இந்திய என்ஜினீயர்கள் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். ஆந்திர என்ஜினீயர்கள் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்குள்ள பெனியூ மாகாணத்தின், போகோ நகரின் டான்கோட் சிமெண்டு ஆலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரைச் சேர்ந்த சாய் சீனிவாஸ், அனிஷ் சர்மா என்ற 2 என்ஜினீயர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இருவரும் அங்குள்ள சிபோக் நகரில் தங்கியிருந்து தினமும் வேலைக்குச் சென்று வருவது ... |
| Posted: 02 Jul 2016 08:43 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு Posted: 02 Jul 2016 08:31 AM PDT சென்னை, 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி 28–ந்தேதி அன்று கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான 813 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை நடத்தியது. அதில் 7லட்சத்து 70 ஆயிரத்து 860 பேர் பங்கேற்றனர். அவர்களில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 42 நபர்களின் தேர்வு முடிவு, அவர்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை (www.tnpsc.gov.in ) தேர்வாணைய இணையதளத்தில் ... |
| கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது... Posted: 02 Jul 2016 08:29 AM PDT பரீட்சை ஹாலில் கீதோபதேசம் -~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~-~ பதில் தெரீலயே என்று விழிக்காதே... எதை நீ படித்தாய் எழுதுவதற்கு? எதை எழுதுவாய் ஆசிரியர் படிப்பதற்கு? கேள்வி கேட்டவருக்கே பதிலும் தெரியும்... இடையில் நீ யார் பதில் எழுத? நடந்த பரீட்சை எல்லாம் நாடகமே... நடக்கும் பரீட்சையும் நாடகமே... இனி நடக்கப் போகும் பரீட்சைகள்கூட நாடகமே... இடையில் நீ எழுதி என்ன சாதிக்கப் போகிறாய்? எழுந்திரு... கபாலி ஷோ உனக்காகக் காத்திருக்கிறது... கடமையை செய்! - =================================== வாட்ஸ் ... |
| பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித யாத்திரை தொடக்கம் Posted: 02 Jul 2016 08:26 AM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஆண்டுதோறும் 48 நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை, பலத்த பாதுகாப்புகளுடன் வெள்ளிக்கிழமை (ஜூலை 1) தொடங்கியது. மாநில துணை முதல்வர் நிர்மல் சிங் கொடியசைத்து வைக்க, 1,282 பேர் இடம்பெற்றுள்ள முதலாவது யாத்ரீகர்கள் குழு அமர்நாத் பனி லிங்கத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றது. அப்போது நிர்மல் சிங் பேசுகையில், ""இந்த ஆண்டில் மேற் கொள்ளப்படும் அமர்நாத் புனித யாத்திரை சுமுகமாகவும், அமைதியாகவும் நடைபெற போதுமான பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன'' என்று ... |
| ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Posted: 02 Jul 2016 08:24 AM PDT உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. - கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன் கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற் கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். - அங்கு ... |
| Posted: 02 Jul 2016 08:18 AM PDT ஆ போட பழகும் போது அடிகள் பல வாங்கினேன் அத்தனையும் வெற்றிப் படிகளாக மாற உன்வசம் தான் உள்ளது என்றாள் அம்மா .... நடை பழகும் போது விழுந்து விழுந்து அழுதேன் இந்த தழும்புகள் எல்லாம் ஓர் நாள் இரும்பாகும் என்பதை உணர்த்தினார் அப்பா இரண்டையும் இன்று இணைத்துக் காட்டினேன் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருப்பது வெறும் இயலாமையே என்று ...! |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 02 Jul 2016 08:02 AM PDT ![]() |
| Posted: 02 Jul 2016 07:58 AM PDT பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறினேன் அக்காவின் பழமை எனக்கு புதுமையாக காட்சியளித்தது கிழிந்த கோனார் நோட்ஸ்யை மலிந்த விலையில் வாங்கி பொழிந்த முகத்துடன் படிக்கையில் அங்கே குறித்துவைத்திருந்த குறிப்புகள் முக்கியமாக காட்சியளித்தது எண்ணிரண்டு வயதைக் கடந்து எங்க ஊர் கல்லூரிக்கு செல்கையில் பக்கத்து வீட்டு அக்காவின் பழைய சுடிதார்கள் எனக்கு சரியாக பொருந்தும் போது இன்னொரு அக்காவாக காட்சியளித்தது இரவல் படிப்பை முடித்து இளைப்பாறும் தருணத்தில் இறந்த அப்பாவின் ... |
| Posted: 02 Jul 2016 07:53 AM PDT - குரு ஒருவரிடம் செல்வந்தர் ஒரு கேள்வி கேட்டார். என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை என்றார். புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார். – ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே ... |
| Posted: 02 Jul 2016 07:47 AM PDT ஒருவரின் தவறான முறையற்ற செயல்களுக்கு துணை போதல், ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவைகள் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 25ன்கீழ் வருகிறது. உரிமையியல்டை முறை சட்டம் பிரிவு 91(1908)ன்கீழ் நமக்கு இடையூராய் மற்றவர் செய்யும் செயல் (உ.ம்) நம் வீட்டருகேஇரைச்சல் மிஷின் சத்தம் >>இதை கு.ந.மு.சட்டம் பிரிவு 156(3)ன்கீழ் புகார் செய்து உருத்து கட்டளை பெறலாம்.. |
| பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்! Posted: 02 Jul 2016 02:03 AM PDT [img]https://www.filepicker.io/api/file/uFAods1VRImTdHAxulxZ+dates_2914259f.jpg[/img - பகல் முழுவதும் நோன்பு, இரவுகளில் பிரத்யேகத் தொழுகைகள் என்று சுழற்சியான ஓர் அற்புதமான சூழல் கொண்ட மாதம் ரமலான். பகலில் பசி, தாகம் மற்றும் உடல் இச்சைகளிலிருந்து விலகி இருந்தும், இரவில் பிரத்யேகத் தொழுகை, திருக்குா்ஆன் வாசிப்பு மற்றும் இறை வணக்கங்கள் என்று படைத்தவனைச் சரணடைவதற்குப் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் மாதம். அதேபோல, தான தர்மங்கள், தேவையுள்ளோர்க்கு உதவிகள் என்று உள்ளம் ஈந்து கனியும் காலம் ... |
| Posted: 01 Jul 2016 11:53 PM PDT கதை கேளு கதை கேளு:- X, Y ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள்.... ஒரு நாள் X ஆபீஸ் முடிஞ்சி வீட்டுக்கு போயிட்டு இருந்தான்.... - திடீர்ன்னு நல்ல மழை, வண்டி வேற ஆப் ஆயிடிச்சி, சைடு ஸ்டான்ட போட்டுட்டு கால கீழ வைக்க அங்க ஒரு பெரிய சகதி நெறஞ்ச குழியில கால் மாட்டிகிச்சு . போன வாரம் வாங்கின புது செருப்பு அதுல மாட்டிக்கிச்சி. முன்னூறு ரூவா செருப்பாச்சேன்னு கைய விட்டு எடுத்தான், ஒரு பக்கம் பிஞ்சிடிச்சி. இத இப்டியே கொண்டுபோக சங்கடப் பட்டுகிட்டு பக்கத்துல இருக்க நண்பன் Y வீட்ல வச்சிட்டு, ... |
| அவ சமையல் பிடிக்கலைன்னு சொன்னது தப்பா போச்சு…! Posted: 01 Jul 2016 08:55 PM PDT ![]() |
| நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்! Posted: 01 Jul 2016 07:45 PM PDT சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார். சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். ... |
| வேலன்:-கணிணி வேலைநேர பயன்பாட்டினை அறிந்துகொள்ள Posted: 01 Jul 2016 07:25 PM PDT அலுவலகம் மற்றும் இல்லங்களில் கணிணியின் உபயோகத்தினை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எவ்வளவு நேரம் எந்த எந்த இணையதளம் பயன்படுத்தினார் என்பதனை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் பேஸ்புக்.விளையாட்டு.இன்டர்நெட் மற்றும் கணிணி உபயோகம் என தனிதனியே நேரங்கள் டிஸ்பிளே ஆகும். கணிணியின் மொத்த உபயோகம் கிளிக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

