Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் வாரிய பிரச்னைகள் என்ன? : அறிக்கை கேட்கிறது தமிழக அரசு

Posted: 19 Jul 2016 08:17 AM PDT

தமிழ்நாடு மின் வாரியத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, தமிழக அரசு கேட்டு உள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளுக்கு, 500 யூனிட் வரை மானிய விலையிலும்; குடிசைகள் மற்றும் வேளாண் இணைப்புகளுக்கு, இலவச மின்சாரமும் வழங்கி வருகிறது. இதற்கான மானிய செலவை மின் வாரியத்திற்கு, தமிழக அரசு வழங்குகிறது. தற்போது, மின் வாரியத்தின் கடன், 80 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இந்த நிலையில், மின் வாரியம், புதிய மின் நிலையங்கள், துணை மின் நிலையங்களை அமைத்துவருகிறது. இந்த பணிகளுக்கு இடம் மற்றும் நிதி உதவி கிடைப்பது சிரமமாக உள்ளது. இதையடுத்து, ...

ரூ.23,000 கோடி! 13 பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி ரூ.77 ஆயிரம் கோடி கடன் வசூலாகாததால் உதவி

Posted: 19 Jul 2016 09:41 AM PDT

புதுடில்லி :கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், பொதுத்துறை வங்கிகளின், கடன் வளர்ச்சி வீதம் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது; மேலும், வங்கிகள் அளித்த, 77 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூலிக்கப்படாததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னைகளில் இருந்து மீட்கும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 13 பொதுத்துறை வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்க, 23 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கியுள்ளது.பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன், முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. கொடுத்த கடன் தொகையும், அதற்கான வட்டியும் வசூலிக்கப்படாமல், வங்கிகள் பெரிய ...

ஆர்.எஸ்.எஸ்., மீது பழி சுமத்திய ராகுலுக்கு...கண்டிப்பு ! வழக்கை சந்திக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 19 Jul 2016 09:51 AM PDT

'ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது தொடர்பான அவதுாறு வழக்கை சந்திக்க வேண்டும்' என, காங்., துணைத் தலைவர் ராகுலுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மஹாராஷ்டிர மாநிலத்தில் பேசிய ராகுல், 'மகாத்மா காந்தியை கொன்றது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு. ஆனால், மகாத்மா காந்தி குறித்து, அதன் ஆதரவு அமைப்பான, பா.ஜ., பேசுகிறது' என்றார். இது தொடர்பாக, தானே மாவட்டம், பிவாண்டி கோர்ட்டில், ராகுலுக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப்பட்டு, கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து ராகுல் தொடர்ந்த வழக்கை, மும்பை ...

'சோலார் பேனல்' மோசடி விவகாரம்: தமிழக 'மாஜி' அமைச்சருக்கு சிக்கல்?

Posted: 19 Jul 2016 09:56 AM PDT

கோவை: 'சோலார் பேனல்' மோசடி வழக்கில் சிக்கியுள்ள மலையாள நடிகை, சரிதா நாயர், தமிழக முன்னாள் மத்திய அமைச்சர் மீது, திடீரென குற்றஞ்சாட்டியுள்ளது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோலார் பேனல் அமைப்பதில், கோவையில் மோசடி செய்ததாக, கேரளாவைச் சேர்ந்த சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர், பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு, கோவை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது.
24 வழக்குகள் : மாஜிஸ்திரேட் ராஜவேலு முன்னிலையில்,சரிதா நாயர் நேற்று ஆஜரானார். வழக்கு விசாரணை
ஆக., 19ம் தேதிக்கு ஒத்தி ...

கலாம் நினைவிட பிரச்னையால் அமளி, ரகளை : கடுப்பேற்றிய திரிணமுல்; வெறுப்பான அ.தி.மு.க.,

Posted: 19 Jul 2016 10:02 AM PDT

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, நினைவிடம் அமைக்க வலியுறுத்தி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., கோரிக்கை வைத்த போது, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஏற்படுத்திய

அமளியால், ராஜ்யசபாவில் ரகளை ஏற்பட்டது.
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., யான டெரக் ஓ பிரெய்ன், நேற்று ராஜ்யசபாவில் பேசியதாவது:
இன்று, குருபூர்ணிமா தினம். குரு ஸ்தானத்தில் இருந்து, நமக்கு நல்ல விஷயங்களை கற்பித்தவர்களுக்கு மரியாதை செய்யும் நாள். ஆனால், அவ்வாறு நாம் செய்துள்ளோமா? சென்னையிலிருந்து, பல கி.மீ.,க்கு அப்பால் ராமேஸ்வரத்தில், மிகப்பெரிய குருவாகவும், நாட்டின் தலைசிறந்த ஆசிரியருமாக ...

'பல ஆயுள் தண்டனைகளை ஒரே சமயத்தில் அனுபவிக்கலாம்'

Posted: 19 Jul 2016 10:17 AM PDT

புதுடில்லி: 'குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகளை, ஒரே சமயத்தில் அனுபவித்தால் போதும்; ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் உட்பட, பலர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில், 'ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனைகள் விதிக்கப்படும் பட்சத்தில், அவற்றை, குற்றவாளிகள் ஒரே சமயத்தில் அனுபவிக்கலாமா அல்லது ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டுமா' என்பது உள்ளிட்ட, பல சந்தேகங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டிருந்தது. ...

ஆந்திர அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்: தடுப்பணை விவகாரத்தில் ஸ்டாலின் ஆவேசம்

Posted: 19 Jul 2016 10:29 AM PDT

சென்னை: ''பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசை கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் ஆந்திர அரசையும், அதை கண்டுகொள்ளாத தமிழக அரசையும் கண்டித்து வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், தி.மு.க., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, பாலாற்றில் ஆந்திர அரசு புதிய அணை கட்டுவது தவறு; இது, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அதுமட்டுமல்ல; ...

தமிழக டாக்டர் மரணம் தற்கொலை அல்ல: பிரேத பரிசோதனையில் 'திடுக்' தகவல்

Posted: 19 Jul 2016 10:34 AM PDT

'தமிழக டாக்டர் சரவணன் தற்கொலை செய்து கொள்ளவில்லை' என, டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. கவுன்சிலிங்கின் போதே, வட மாநில டாக்டர் ஒருவரால், சரவணன் மிரட்டப்பட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

திருப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சரவணன், 26. மதுரையில் எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், எம்.டி., பொது மருத்துவ படிப்பில், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார்.ஆனால், ஒன்பது நாட்களே ஆன நிலையில், ஜூலை, 9ம் தேதி இரவு, மர்மமான முறையில் தன் அறையில் இறந்து கிடந்தார். 'சரவணன் தற்கொலை செய்யவில்லை; திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்' என, ...

சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு அதிகாரிகளுக்கு அனுமதி?

Posted: 19 Jul 2016 10:39 AM PDT

புதுடில்லி, :சமூக வலைதளங்களான, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்றவற்றை, அரசு உயரதிகாரிகள் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு, விரைவில் சட்டத்திருத்தம் நிறைவேற்ற உள்ளது; ஆனால், அரசுக்கு எதிரான கருத்துகளை வெளியிட, தடை விதிக்கப்பட உள்ளது.

அகில இந்திய சேவை விதிமுறைகள் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு விதி முறைகளை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தயாரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற உயர் பதவிகளுக்கு, இந்த விதி முறைகள் பொருந்தும். அரசுக்கு ...

கவுன்சிலிங்கில் காலியிடங்கள் அதிகரிப்பு : இன்ஜி., கல்லூரிகள் சலுகை அறிவிப்பு

Posted: 19 Jul 2016 10:44 AM PDT

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

மொத்தம் உள்ள, 524 கல்லுாரிகளில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரிக்கு சொந்தமான, மதுரை தயா கல்லுாரிக்கு மட்டும், கவுன்சிலிங்கில் சேர அனுமதி இல்லை.மீதமுள்ள, 523 கல்லுாரிகளில், 2.82 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் அளித்தது. இதில், கவுன்சிலிங் மூலம் மாணவர்களை சேர்க்க, 1.92 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதன்படி, 23ம் தேதி விளையாட்டுப் பிரிவுக்கும், 24ம் ...

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது

Posted: 19 Jul 2016 11:48 AM PDT

உத்தரகண்ட் : ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது என பா.ஜ., முன்னாள் எம்.பி., தருண் விஜய் தெரிவித்தார்.
தமிழகத்தின் நாமக்கல்லில் வடிவமைக்கப்பட்ட 12 அடி உயர திருவள்ளுவர் சிலை, கடந்த ஜூன் 30-ம் தேதி நிறுவப்ப்பட்டது. இந்நிலையில் திருவள்ளுவர் சிலையை கங்கை நதிக் கரையில் நிறுவ அங்குள்ள சாதுக்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சிலையை பிளாஸ்டிக் பையில் போட்டு கயிற்றால் கட்டி தரையில் போட்டு வைத்தனர். இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ...

சீன எல்லையில் தயார் நிலையில் 100 இந்திய பீரங்கிகள்

Posted: 19 Jul 2016 01:09 PM PDT

புதுடில்லி: சீனாவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக, இந்திய - சீன எல்லையில், கிழக்கு லடாக் பகுதியில், பீரங்கிப் படையை, இந்திய ராணுவம் குவித்துள்ளது.
தற்போது, 100 பீரங்கிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன; கடந்த, 1962ல் நடந்த இந்திய - சீன போருக்கு பின், தற்போது தான் இந்தப் பகுதிக்கு, பீரங்கிகள் அனுப்பி வைக்கப்
பட்டுள்ளன.
என்.எஸ்.ஜி., எனப்படும், அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் உறுப்பினராகும் இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடைபோட்டது. இதற்கிடையே, இந்திய - சீன எல்லையில், சமீபத்தில், சீனப் படைகள் அத்துமீறி ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™