Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பலசாலி தேங்காய் மட்டை!

Posted: 19 Jul 2016 02:32 PM PDT

தேங்காய் மட்டையை உரிப்பது எவ்வளவு சிரமம் என்பது அதை உரிப்பவர்களுக்கு தான் தெரியும். இயற்கை உருவாக்கிய தேங்காய் மட்டையின் உள்ளே உள்ள பலத்தை, கட்டடங்களுக்கு பயன்படுத்த முடியுமா என, ஜெர்மனியைச் சேர்ந்த பிரெய்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். தேங்காய் மட்டைகளில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன. மேலே உள்ள தோல், நார் மிக்க நடுப்பகுதி, கடினமான உள் ஓட்டுப்பகுதி.உரிக்காத தேங்காயை பல கிலோ எடை கொண்டு வேகமாக தாக்கி, அதன் உட்பகுதி எப்படி உடையாமல் தன்னை காத்துக் கொள்கிறது என்று விஞ்ஞானிகள் ...

மலர்கள்

Posted: 19 Jul 2016 02:05 PM PDT

அழகிய மலர்கள் பற்பல கதிரவனின் பார்வையில் கண்மலரும் சில அந்தியில் இதழ்விரிக்கும் மலர்கள் சில மெல்லிய கொடியில் படர்ந்தவை சில முட்கள் நிறைந்த செடியில் பல புதரில் பூக்கும் மலர்களும் பல நீர் தடாகத்தில் சில மணம் கமழும் மலர்கள் ஆலய வழிபாட்டிற்கு சில அழகிய கூந்தலுக்கு சில அலங்கரிக்கும் மாலைக்கு சில அழகூட்ட இல்லத்திற்கு சில அன்பின் பரிமாற்றமாய் சில பறிக்கப்படாத மலர்களும் சில கனியாய் கனிந்திடும் சில பறவைகளுக்கு தேன்குடமாய் சில வண்டுக்கு  உணவாய் (மகரந்தம்) சில உதிர்ந்து ...

அறிமுகம் - காயத்ரி !

Posted: 19 Jul 2016 02:01 PM PDT

பெயர்: காயத்ரி (புனைப் பெயர்)
சொந்த ஊர்: சென்னை
ஆண்/பெண்: பெண்
ஈகரையை அறிந்த விதம்: Google
பொழுதுபோக்கு: பாடல் கேட்பது, படிப்பது
தொழில்: கணினி துறையில்
மேலும் என்னைப் பற்றி: பெரிதாக சொல்லி கொள்ள ஒன்றும் இல்லை.

அறிமுகம்

Posted: 19 Jul 2016 12:01 PM PDT

பெயர்:  லக்ஷ்மி
சொந்த ஊர்:  சென்னை  
ஆண்/பெண்:  பெண்
ஈகரையை அறிந்த விதம்:  
பொழுதுபோக்கு:  படிப்பது (ஆன்மிகம், புதுக்கவிதைகள்  )
தொழில்:  கணினி துறை  
மேலும் என்னைப் பற்றி:  கொஞ்சம் தமிழ் ஆர்வம், இசை ஆர்வம்

மனிதன் இன்று நிலவில் காலடி வைத்த தினம்!

Posted: 19 Jul 2016 11:46 AM PDT

வானில் தெரியும் நிலவைக் காட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவர். அந்த நிலவையே தொட்டு சாதித்தார் நீல் ஆம்ஸ்ட்ராங்.47 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான் முதன் முதலாக நிலவில் மனிதன் காலடி பதித்தான். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து நாசா விண்வெளி மையத்தின் சார்பில் 1969, ஜூலை 16ம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலம் நிலவுக்கு பயணமானது.இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ் மற்றும் பைலட் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் பயணித்தனர். இந்த விண்கலம் ஜூலை 20ம் தேதி ...

கடவுளை காண்பது எப்படி??

Posted: 19 Jul 2016 11:42 AM PDT

அன்று பவுர்ணமி. குருகுலத்தில் தன் சீடர்களுக்குச் சில நெறிகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார் குரு. அன்று குருகுலத்திற்கு அநேகம் பேர் வந்து குருவை நமஸ்கரித்து, ஆசி பெற்றுச் சென்றனர். வந்தவர்கள் குருவிற்குப் பழங்களை காணிக்கையாகத் தந்ததால் நிறைய பழங்கள் சேர்ந்துவிட்டன. குரு தமது சீடர்களில் ஒருவனைக் கூப்பிட்டுப் பழங்களை எல்லோருக்கும் விநியோகிக்கும்படிக் கூறினார். சீடனுக்கோ பழத்தை யாரிடம் முதலில் தர வேண்டும் என்பதில் சந்தேகம் உண்டானது. குருவிடம் கேட்டான். உனக்கு யார் மேல் நம்பிக்கை அதிகமாக ...

57.3% சதவிகித மருத்துவர்கள் மருத்துவம் படிக்கவில்லையாம்! - அதிர்ச்சி கிளப்பும் ஆய்வு

Posted: 19 Jul 2016 11:32 AM PDT

சென்ற ஆண்டின் பிற்பகுதி, வடதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த நேரம். வேலூர் மாவட்ட ஆட்சியர், டெங்கு காய்ச்சலுக்காக எடுக்கப்பட்ட முன்னேற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக, பள்ளிகொண்டா பகுதியில் இருந்த அகரம் கிராமத்திற்குச் செல்கிறார். அப்போது அங்கிருந்த சிறிய மருத்துவமனையைப் பார்த்தவருக்கு சந்தேகம் உண்டாகிறது. உடன் வந்த அதிகாரிகளை விசாரிக்கச் சொல்கிறார். அதிகாரிகள், தன் மருத்துமனைக்கு வருவதைக் கண்ட மருத்துவர், அங்கிருந்து தப்பிச் செல்கிறார். பின் அதிகாரிகள் தீவிர ...

50,000.00 பதிவுகள் கடந்த கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 19 Jul 2016 11:23 AM PDT

50,000.00 பதிவுகள் கடந்த ஈகரையில் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க .  

கோவிலில் வளாகத்தில் வளர்க்க வேண்டிய மரங்கள் என்னென்ன?

Posted: 19 Jul 2016 11:08 AM PDT

அன்பர்களே!  நண்பர்களே! எங்கள் ஊர் கோவிலை சுற்றி (1000 ம் ஆண்டு பழமையான சிவாலயம்.  சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுரங்க வழி தொடர்பில் இருந்த கோவில்) மருத்துவ குணமும் தெய்வீக அம்சமும் கொண்ட மரங்களை வளர்க்க இருக்கிறோம். அதற்கான பட்டியலை கொடுத்து உதவுங்கள் - நன்றி! நான் அறிந்த சில மரங்கள் 1. வில்வ மரம் 2. விலா மரம் 3. வன்னி மரம் 4. ருத்ராட்ச மரம் 5. சுந்தர வேம்பு மற்றும் மலை வேம்பு 6. திருவோடு மரம் 7. பிராய் மரம் (மின்னலைத் தாக்கும் விருட்சம் என்ற பெயரும் இந்த மரத்துக்கு உண்டு) 8. ...

முதன்முதலில் பகவத்கீதை உபதேசிக்கப்பட்டது யாருக்கு தெரியுமா?

Posted: 19 Jul 2016 11:05 AM PDT

பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையை உபதேசம் செய்தார். இதை யாருக்கு உபதேசம் செய்தார் என்று கேட்டால் அனைவரும் அர்ஜுனனுக்கு என்று தான் சொல்வார்கள். ஆனால் இந்த பகவத்கீதை முதன் முதலில் சூரிய பகவானுக்கு தான் உபதேசம் செய்யப்பட்டது என்பதே உண்மை. ராமாயணமும், மகாபாரதமும் பாரத தேசத்தின் ஒப்பற்ற இதிகாசங்கள். இவற்றைக் கதை என்றோ, காப்பியம் என்றோ சொல்லாமல், வடமொழியில் இதிகாசம் என்று சொல்லுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வால்மீகியும் வியாசரும் எழுதிய இவை உண்மையாக நம் தேசத்தில் நடந்தவை. இதி-ஹாசம் என்றால் இது நடந்தது ...

விமானம் தாமதமானால் இனி நோ கவலை: பயணிகளுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்

Posted: 19 Jul 2016 09:55 AM PDT

புது தில்லி: இந்திய உள்நாட்டு விமானங்கள் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ, பயணிகளை ஏற்ற மறுத்தாலோ சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பு அறிவித்துள்ளது. சமீபத்தில் விமான நிறுவனங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்து கழகம் சில வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி விமானம் தாமதமானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ அந்த குறிப்பிட்ட விமான நிறுவனம், பயணிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இதுவரை ரூ.4 ஆயிரம் இழப்பீடாக வழங்கி ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 19 Jul 2016 08:26 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

லோக்சபாவில் கேள்வியே கேட்காத சோனியா, ராகுல்

Posted: 19 Jul 2016 08:24 AM PDT

புதுடில்லி: 16வது லோக்சபா அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. 8 முறை லோக்சபா கூடியபோதும், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோர் எந்தவித கேள்வியும் கேட்கவில்லை. பல விவாதங்களில் அவர்கள் கலந்து கொண்டாலும் அவர்கள் எ ந்த கேள்வியும் கேட்காதது, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே லோக்சபாவில் 128 கேள்விகள் கேட்டுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி., சுப்ரீயா சாலே, லோக்சபாவில் அதிகளவில் கேள்வி கேட்டுள்ளார். ...

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 19 Jul 2016 08:19 AM PDT

"மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ் தான் என்று கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வழக்கை சந்திக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள சோனாலி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் 'மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்' என்று பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தானே மாவட்ட ...

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (Fonts ) -தரவிறக்கம்

Posted: 19 Jul 2016 05:23 AM PDT

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ?... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் தரவிறக்க சுட்டி -- தமிழ் வார்ஸ்

வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவையா?

Posted: 19 Jul 2016 05:17 AM PDT

வீட்டுக் கடன் இன்ஷூரன்ஸ் என்ற உடனேயே "நான்தான் ஏற்கெனவே பாலிசி எடுத்திருக்கி றேனே! இன்னொரு பாலிசி எதற்கு'' என்றுதான் பலரும் கேட்கிறார்கள். வீட்டுக் கடனுக்கும், தனி நபருக்கும் ஏன் தனித்தனியாக லைஃப் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும், குறைந்த பிரீமியத்தில் என்னென்ன லைஃப் இன்ஷூ ரன்ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பதைப் பற்றி ஃபண்ட்ஸ் இந்தியா டாட் காம் நிறுவனத்தின் இன்ஷூரன்ஸ் நிபுணர் எஸ்.ஸ்ரீதரனிடம் கேட்டோம். விளக்கமாகச் சொன்னார் அவர். ஏன் தனித்தனி பாலிசி? '' ஏற்கெனவே எடுத்த லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி ...

சாணக்கியர் நீதி pdf கிடைக்குமா?

Posted: 19 Jul 2016 02:12 AM PDT

சாணக்கியர் நீதி என்னும் புத்தகம் மென் நூல் இருந்தால் கொடுத்து உதவுங்கள். நன்றி!

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 19 Jul 2016 01:04 AM PDT


-

-
-

பேல்பூரி

Posted: 19 Jul 2016 12:52 AM PDT

கண்டது (வேலூர் - ஆரணி சாலையிலுள்ள ஒரு கடையின் பெயர்) வீட்டு சாமான் கடை வெ.ராம்குமார், வேலூர். (நெல்லை - திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் ஓர் இளைஞர் அணிந்திருந்த டி ஷர்ட்டில் இதயம் படம் வரையப்பட்டு இருந்தது. அதன் அருகே உள்ள வாசகம்) இது காலியா இருக்கு... நான் ஜாலியா இருக்கேன். க.சுல்தான், காயல்பட்டினம். (திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு எதிரே உள்ள ஓர் உணவகத்தின் பெயர்) மிஸ்டர் அன்டு மிசஸ் இட்லி ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி. கேட்டது (சிதம்பரம் மாரியப்பா ...

அறிவோம் அர்த்த சாஸ்த்திரம் - தொடர் பதிவு - முடிவடைந்தது

Posted: 18 Jul 2016 11:33 PM PDT

இந்திய நாட்டில் வாழ்ந்து மறைந்த ஞானிகளில் சாணக்கியர் மிக முக்கியமானவர். இவர் சந்திராகுப்தா மௌரியரின் அமைச்சராக இருந்து அவர்க்கு மீண்டும் அரச பதவி கிடைக்க துணையாக நின்றவர். விதுர நீதி, பிரிகஸ்பதி, ஷூக்ரச்சார்யா, பார்த்தியகரி, விஷ்ணுஷர்மா போன்றவர்கள் நீதி சாஸ்த்திரம் குறித்து பல விஷயங்கள் கூறினாலும் சாணக்கியரின் அர்த்த சாஸ்த்ரத்திர்க்கு ஒரு தனி மரியாதை உண்டு, இவர் நீதி சாஸ்த்திரம் மட்டும் அல்லாமல் பொருளாதாரம் குறித்தும் பல விஷயங்கள் கூறியுள்ளார். அவரின் அர்த்த சாஸ்த்திரத்தின் சில முக்கிய அறிவுரைகளை ...

unicode fonts

Posted: 18 Jul 2016 11:19 PM PDT

நண்பர்களே யூனிகோடு பாண்ட்ஸ் தங்களிடம் இருந்தால் லின்க் கொடுக்கவும். நன்றி

ஓஷோ சொன்ன கதை...!!

Posted: 18 Jul 2016 11:14 PM PDT

ஒரு நாள் இரவு நண்பர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு ஹோட்டலில் பெரிய விருந்து ஏற்பாடு செய்தனர். அவர்கள் விடியும்வரை நன்றாகக் குடித்து, உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் விருந்து முடிந்து போகும்போது அந்த ஹோட்டலின் முதலாளி தனது மனைவியுடன் இப்படி நிறைய எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை அனுப்பியதற்காக கடவுளுக்கு நன்றி கூறும்படி கூறினார். இப்படிப்பட்ட கூட்டம் தொடர்ந்து வந்தால் தாங்கள் பணக்காரர்களாகிவிடலாம் என்றும் அவர் மனைவியிடம் கூறினார். அந்த விருந்தை ஏற்பாடு செய்தவர் ஹோட்டல் முதலாளியிடம் விருந்துக்கான தொகையைக் ...

சூரிய ஒளியால் இயங்கும் விமானம்

Posted: 18 Jul 2016 11:12 PM PDT

அப்படீங்களா! சூரிய ஒளி ஆற்றலால் இயங்கக் கூடிய மோட்டார் சைக்கிள், கார் பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். சூரிய ஒளி ஆற்றலால் இயங்கக் கூடிய விமானம்? சூரிய ஒளியால் இயங்கக் கூடிய காரிலோ, மோட்டார் சைக்கிளிலோ உள்ள ஆற்றல் தீர்ந்துவிட்டால், ஓடாமல் அவை நின்றுவிடும். அப்படி நின்று போனாலும் பெரிய பாதிப்பில்லை. ஆனால் வானில் பறந்து கொண்டிருக்கும்போது, சூரிய ஒளி விமானத்தில் ஆற்றல் தீர்ந்துவிட்டால்...? நினைக்கவே பயமாக இருக்கிறது அல்லவா? சூரிய ஒளி விமானம் பறந்து செல்லும்போது சூரிய ...

ஒன்ஸ்மோர் - (சில திருக்குறளை திருத்தணும்)

Posted: 18 Jul 2016 11:05 PM PDT

வித்துவான் தியாகராசச் செட்டியாரிடம் படித்த மாணாக்கர்களும், பழகியவர்களும் அவர் உறையூரில் இருந்தபோதும் அடிக்கடி வந்து பார்த்துப் பேசி மகிழ்ச்சியடைந்து செல்வார்கள். நூல்களை இயற்றுபவர்கள் இவர்பால் வந்து சிறப்புப் பாயிரம் பெற்றுச் செல்வார்கள். தமிழ் சம்பந்தமான விசேஷ நிகழ்ச்சி எதுவும் இவருக்குத் தெரியாமல் நடைபெறாது. ஒருநாள் இவரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். இவருடைய வீட்டை விசாரித்துக் கொண்டு வந்து இறங்கினார். ""யாரோ வெள்ளைக்காரர் ஒருவர் செட்டியாரவர்களைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்'' ...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 18 Jul 2016 10:40 PM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

குடை விரிக்கும் பயிர் உண்டு - விடுகதைகள்

Posted: 18 Jul 2016 10:01 PM PDT

1) குடை விரிக்கும் பயிர் உண்டு விதை எங்கே தெரியாது- அது என்ன? - 2) ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன? - 3) கல்லிலே மலரும் பூ காசிக்கெல்லாம் போகும் பூ தலையில் வைக்காத பூ அது என்ன? - 4) வேகமாக ஓடுபவனை வென்றவன் பற்கள் எனக்கு கிடைஃயாது - நான் யார்? - 5) ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன? - 6) கார்மேக அரசனுக்கு இரண்டு தூதுவர்கள் யார் யார்? - 7) அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன? - 8) அடிமேல் அடி வாங்கி ...

அது என் மனைவிக்குத்தான் தெரியும்..!!

Posted: 18 Jul 2016 09:10 PM PDT

திருடன்: பீரோ சாவி கேட்டா, 100 சாவி உள்ள சாவிக்கொத்தை தர்றியே, இதுல எதுய்யா பீரோ சாவி? இவர்: அது என் மனைவிக்குத்தான் தெரியும்…? திருடன்: அப்ப, அவுங்ககிட்ட கேட்டு சொல்லு…? இவர்: அவுங்க தூங்குறாங்க; எழுப்பினா கொன்னுபோட்டுடுவாங்க…! வி.ரேவதி, தஞ்சை. – ————————————————- – ""இந்த ஏரியா மக்கள்தான் போன எலக்ஷன்ல காலை வாரி விட்டாங்கன்னு தலைவர்கிட்டே சொன்னது தப்பாப் போச்சு!" ""ஏன், என்ன ஆச்சு?" ""காரைவிட்டுக் கீழே இறங்கி ஓட்டுக் கேட்கப் பயந்து நடுங்குறார்!" ஆர்.எம்.வி., வேதாரண்யம். – ————————————————— – "டாக்டர், ...

திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Posted: 18 Jul 2016 08:36 PM PDT

யானைகளுடன் பழகிய கேத்ரின் தெரசா! - - தமிழில், மெட்ராஸ், கதகளி மற்றும் கணிதன் போன்ற படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, தற்போது, ஆர்யாவுடன், கடம்பன் படத்தில், காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறார். இப்படத்தில், ஒரு காட்சியில், ஐம்பது யானைகள் ஒன்று கூடி, இவரை துரத்த, அப்போது, குறுக்கே பாய்ந்து, யானைகளிடம் சண்டை போட்டு, கேத்ரினை காப்பாற்றுவார், ஆர்யா. இக்காட்சியை, தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கிய போது, யானைகளுடன் நெருக்கமாக பழகிய கேத்ரின் தெரசா, 'யானைகள் உருவத்தில் தான் பயத்தை ஏற்படுத்துகின்றன; ஆனால், ...

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் பிரேமம் நாயகி

Posted: 18 Jul 2016 08:34 PM PDT

- தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த 'டார்லிங்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'பென்சில்' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர் நடித்துவரும் 'புருஸ்லீ', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ஆகிய படங்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ், ராஜீவ்மேனன் இயக்கும் புதிய படத்திலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™