Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சூரிய மின்தகடு விசாரணை ஆணையத்திடம் முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கம் குறித்து தகவல்

Posted: 19 Jul 2016 01:31 PM PDT

சூரிய மின்தகடு முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு உள்ள தொடர்பு குறித்த தகவல், விசாரணை ஆணையத்திடம் கடிதம் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

உயர் மருத்துவப் படிப்புகள்: ஜூலை 26-இல் கலந்தாய்வு

Posted: 19 Jul 2016 01:30 PM PDT

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

14 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கு ஐ.ஜி. தாமரைக்கண்ணன் நியமனம்

Posted: 19 Jul 2016 01:29 PM PDT

காவல் துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 14 பேரை பணியிட மாற்றம் செய்து உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தாயிடமிருந்து சேய்க்கு எய்ட்ஸ் பரவுவது முற்றிலும் தடுப்பு: அமைச்சர் தகவல்

Posted: 19 Jul 2016 01:29 PM PDT

தமிழகத்தில் 16 மாவட்டங்களில், தாயிடம் இருந்து குழந்தைக்கு எய்ட்ஸ் வைரஸ் தொற்றுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

கிருஷ்ணகிரி சிறுவன் தனுஷுக்கு சென்னையில் மருத்துவச் சிகிச்சை:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 19 Jul 2016 01:28 PM PDT

முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள கட்டியால் அவதியுற்றுவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் தனுஷுக்கு, சென்னையில் மருத்துவச் சிகிச்சை அளிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர அரசைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம்

Posted: 19 Jul 2016 01:28 PM PDT

பாலாற்றில் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு உயர்த்தி யதைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேட்டூர் அணை: நீர்மட்டம் உயர்வு

Posted: 19 Jul 2016 01:27 PM PDT

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5.27 அடி உயர்ந்துள்ளது.

தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 அதிகரிப்பு

Posted: 19 Jul 2016 01:27 PM PDT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.64 அதிகரித்து, ரூ.23,552-க்கு விற்பனையானது.

பி.எஸ்ஸி. வேளாண் படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு

Posted: 19 Jul 2016 01:25 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 23இல் தொடங்குகிறது.

பல கட்சியை பார்த்தவருக்கு தானே அனுபவம் அதிகமா இருக்கும்..!

Posted: 19 Jul 2016 01:22 PM PDT

பரவும் வெறுப்பு நெருப்பு...!

Posted: 19 Jul 2016 01:18 PM PDT

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஜூலை 14, 1789-இல் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர். நைஸ் நகரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடக்கும்போதுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.

மண்ணுக்குள்ளே சில மூடர்...

Posted: 19 Jul 2016 01:17 PM PDT

தாய்மையடைந்திருக்கின்ற பெண்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக மக்களின் அன்பிற்கும், அக்கறைக்கும், பாதுகாப்பிற்கும் உரியவர்களாக விளங்குகிறார்கள். அவர்களை உன்னதமான நிலைக்கு உயர்த்தி இலக்கியங்களைப் படைப்பதும், பாராட்டுவதும், உலக மக்களின் பன்னெடுங்காலப் பண்புகளாக இருந்து வருகின்றன.

பெட்டிக்கடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு

Posted: 19 Jul 2016 12:58 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பெட்டிக்கடை உரிமையாளரிடம் திங்கள்கிழமை கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடிவருகின்றனர். 

புத்தகத் திருவிழா: 4 நாள்களில் ரூ. 25 லட்சத்துக்கு விற்பனை

Posted: 19 Jul 2016 12:57 PM PDT

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 4 நாள்களில் ரூ. 25 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

பேருந்து சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் சாவு

Posted: 19 Jul 2016 12:57 PM PDT

தஞ்சாவூர் காட்டுத்தோட்டம், காளிங்கராயர் தெருவைச் சேர்ந்தவர் ஜயபால் மகன் சுதர்சன் (20). இவர் புனல்குளம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

வானமாமலை கிளை மடங்களில் ரூ. 2.30 கோடியில் திருப்பணிகள்: மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தகவல்

Posted: 19 Jul 2016 12:56 PM PDT

நாங்குனேரி வானமாமலை மடத்திற்கு உட்பட்ட கிளை மடங்களில் ரூ. 2.30 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது என்றார் மதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகள்.

கல்லூரி பேருந்து மோதி தொழிலாளி சாவு

Posted: 19 Jul 2016 12:56 PM PDT

பாபநாசம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் நடந்து சென்ற விவசாய தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

Posted: 19 Jul 2016 12:55 PM PDT

தஞ்சாவூரில் பெண்ணிடம் 6 பவுன் தங்கச் சங்கிலியை திங்கள்கிழமை பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

பாபநாசம் அருகே இருதரப்பினர் மோதல்: ஒருவர் கைது

Posted: 19 Jul 2016 12:55 PM PDT

பாபநாசம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் தாக்கிக்கொண்டதில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறுவை தொகுப்புத் திட்டத்தில் ஜூலைக்குள் இலக்கை எட்ட அறிவுரை

Posted: 19 Jul 2016 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தில் ஜூலை மாதத்துக்குள் இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசுச் செயலருமான ககன்தீப் சிங் பேடி.

தஞ்சாவூர் அருகே 5 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

Posted: 19 Jul 2016 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே முள்புதரில் கிடந்த 5 ஐம்பொன் சிலைகள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

பாகுபாடின்றி நிதி ஒதுக்க ஆட்சியரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

Posted: 19 Jul 2016 12:53 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கட்சி பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆட்சியரிடம் சட்டப்பேரவை திமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினர்.

மயானம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

Posted: 19 Jul 2016 12:53 PM PDT

புதுக்கோட்டை அருகே மயானத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி செய்தவர் மீது பெண் புகார்

Posted: 19 Jul 2016 12:53 PM PDT

புதுக்கோட்டை அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெண் ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

நற்சாந்துபட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

Posted: 19 Jul 2016 12:52 PM PDT

புதுக்கோட்டை அருகே நற்சாந்துபட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புதுகை ஓசிஐயு- நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துணை கண்காணிப்பாளர் கணேசன் உத்தரவின்பேரில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் நற்சாந்துபட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த அரிமளம் செட்டியாபட்டியைச் சேர்ந்த க. வெள்ளைச்சாமி, புதுகை கலீப் நகரைச்சேர்ந்த மு. அப்துல்கரீம் ஆகியோரைக் கைது செய்து அவர்களிடமிருந்த 41, 250 லாட்டரி சீட்டுகளையும், ரூ. 16 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

"திருவாசகம் தமிழுக்குக் கிடைத்த அருள்கொடை'

Posted: 19 Jul 2016 12:52 PM PDT

திருவாசகம் தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த அருள்கொடை என்றார் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் முனைவர் ச.வே. சுப்பிரமணியன்.

பரம்பூரில் நாளை சித்த மருத்துவ முகாம்

Posted: 19 Jul 2016 12:50 PM PDT

முகாம் வியாழக்கிழமை (ஜூலை 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்த மருத்துவத் துறை சார்பில் மாவட்டந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென முதல்வர் அறிவுறுத்தியுள்ளதன் அடிப்படையில் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு மூலம் புதுக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், விராலிமலை, குடுமியான்மலை, கீரனூர் ஆகிய இடங்களில் இலவச சித்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்கள் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பயனடைந்துள்ளனர்.

ஜூலை 27-ல் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

Posted: 19 Jul 2016 12:50 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 27-ல் நடைபெறுகிறது.

வேகுப்பட்டியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 19 Jul 2016 12:49 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகள் குறித்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் மார்க்சிஸ்ட் பிரசார இயக்கம்

Posted: 19 Jul 2016 12:49 PM PDT

பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், வேலைவாய்ப்பை உருவாக்க கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கந்தர்வகோட்டை பகுதியில் தொழில்பூங்கா அமைக்கக் கூடாது

Posted: 19 Jul 2016 12:48 PM PDT

கந்தர்வகோட்டைப் பகுதியில் தொழில் பூங்கா அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றார் தேசிய மற்றும் தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு.

அறந்தாங்கி அருகே வெறிநாய் கடித்து ஒரே நாளில் 17 ஆடுகள் சாவு

Posted: 19 Jul 2016 12:48 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வெறிநாய்கள் கடித்து செவ்வாய்க்கிழமை  ஒரே நாளில் 17 ஆடுகள் உயிரிழந்தன.

விராலிமலையில் பக்தர்கள் வசதிக்காக குளியலறை, கழிவறை திறப்பு

Posted: 19 Jul 2016 12:47 PM PDT

விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சுற்றுலாத் துறை சார்பில் கட்டப்பட்ட நவீன குளியலறை, கழிவறையை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி முலம் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.

எசனை பகுதியில் ஜூலை 21 மின் தடை

Posted: 19 Jul 2016 12:47 PM PDT

பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் விநியோகம் பெறும் பகுதிகளான கோனரிப்பாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டமலை சந்து, அனுக்கூர், சோமண்டாபுதூர், வேப்பந்தட்டை, பாலையூர் உள்ளிட்ட கிராமங்களில் வியாழக்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் க. அறிவழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 19 Jul 2016 12:46 PM PDT

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரோட்டரி சங்கம் சார்பில் 17 ஆவது நிர்வாகிகள் பதவியேற்பு விழா கல்லூரி கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது

Posted: 19 Jul 2016 12:46 PM PDT

அரியலூர் அருகே அயன் ஆத்தூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் செண்பகம் (19). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த கார்த்திக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கார்த்திக்கின் வீட்டுக்குச் சென்ற செண்பகம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு கார்த்திக், தன்னை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செண்பகம் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் அலமேலு மங்கைத்தாயார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.

வெறிச்சோடிய அரியலூர் புத்தகக் கண்காட்சி

Posted: 19 Jul 2016 12:45 PM PDT

அரியலூரில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சிக்கு போதுமான மக்கள் வராததால் புத்தக விற்பனையாளர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Jul 2016 12:45 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர் க. முனுசாமி.

மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

Posted: 19 Jul 2016 12:44 PM PDT

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளியில் 15 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

தெருமுனை பிரசாரக் கூட்டம்

Posted: 19 Jul 2016 12:44 PM PDT

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிராம சுயவேலைவாய்ப்பு மையத்தின் மூலம் 2,100 பேருக்கு வேலைவாய்ப்பு

Posted: 19 Jul 2016 12:43 PM PDT

பெரம்பலூரில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராம சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் 2,100 பேர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்றார் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரும், கிராம சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநருமான (பொ) பா. அருள்தாசன்.

அரசு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி: அரியலூர் மாவட்டத்தில் 388 ஆசிரியர்களுக்கு விருது

Posted: 19 Jul 2016 12:43 PM PDT

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு பெற்றுத் தந்த அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 223 பட்டதாரி ஆசிரியர்கள், 122 முதுநிலை ஆசிரியர்கள், 43 தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளையும்,பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

பனை விதைகள் நடும் பணியில் பள்ளி மாணவர்கள்

Posted: 19 Jul 2016 12:42 PM PDT

உறுதியான உயர்ந்த பசுமையான ஓலையும், வேரிலிருந்து நுனிவரை ஒவ்வொரு பாகமும் மக்களுக்குப் பயன்படும் மரம் பனைமரமாகும். தமிழகத்தில், தற்போது பயனற்ற மரமாகவும், வீணாக உள்ளதாகவும் நினைத்து விவசாயிகளால் வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது. 

கரூர் பேருந்து நிலையப் பகுதிகளில் காலாவதியான குளிர்பானங்கள், குட்கா பொருட்கள் பறிமுதல்

Posted: 19 Jul 2016 12:42 PM PDT

கரூர் பேருந்து நிலையப் பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.10,000 மதிப்பிலான காலாவதியான குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ எதிர்ப்பு: கரூர் திருக்குறள் பேரவை கண்டனம்

Posted: 19 Jul 2016 12:42 PM PDT

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ எதிர்ப்பு தெரிவிப்போருக்கு கரூர் திருக்குறள் பேரவையினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"வள்ளுவன் வழியைப் பற்றினால் வாழ்வு செழித்தோங்கும்'

Posted: 19 Jul 2016 12:40 PM PDT

வள்ளுவன் காட்டிய வழியைப் பின்பற்றினால் வாழ்வு செழித்தோங்கும் என்றார் கரூர் திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவனர் மருத்துவர் பி. இரமேஷ்.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 12 கோடி நிலுவைத் தொகை வழங்க தீர்மானம்

Posted: 19 Jul 2016 12:39 PM PDT

கரூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆலை வழங்க வேண்டிய ரூ.12 கோடியை உடனே வழங்க வேண்டும் என கரூரில் அண்மையில் நடைபெற்ற புகழூர் சர்க்கரை ஆலை கரும்பு வளர்ப்போர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை கரூரில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்

Posted: 19 Jul 2016 12:39 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்டப் பிரிவின் சார்பில்  மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் 21 ஆம் தேதி(வியாழக்கிழமை) மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா தெரிவித்துள்ளார்.

பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி சாவு

Posted: 19 Jul 2016 12:38 PM PDT

சின்னதாராபுரம் அருகே பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

பி.ஏ.வித்யாபவன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

Posted: 19 Jul 2016 12:38 PM PDT

கரூர் பி.ஏ.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக அண்மையில் கொண்டாடப்பட்டது.

பழனி மானூர் சுவாமிகள் ஜீவ சமாதியில் குரு பௌர்ணமி பூஜை

Posted: 19 Jul 2016 12:37 PM PDT

பழனி அருகே கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீ மானூர் சுவாமிகள் ஜீவ சமாதியில் குரு பௌர்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் கைது

Posted: 19 Jul 2016 12:37 PM PDT

பழனியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மதுரை நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதம்

Posted: 19 Jul 2016 12:37 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனி மாவட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

மூன்று குழுக்களின் பரிந்துரை திருப்தியில்லாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம்: எஸ்ஆர்எம்யூ அகில இந்திய துணைத் தலைவர்

Posted: 19 Jul 2016 12:36 PM PDT

ஏழாவது ஊதிய கமிஷன் முரண்பாடு உள்ளிட்டவை குறித்து, மத்திய அரசு நியமித்துள்ள 3 குழுக்கள் 4 மாதத்தில் திருப்திகரமான பரிந்துரைகளை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என,  தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தின் (எஸ்ஆர்எம்யூ) அகில இந்திய துணைத் தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

மாநில கைப்பந்து அணிக்கு நிலக்கோட்டை பள்ளி மாணவி தேர்வு

Posted: 19 Jul 2016 12:36 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை குமரப்ப மெட்ரிக்குலேஷன்  பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ். பூஜா 2016-17 ஆம் ஆண்டுக்கான மாநில கைப்பந்து அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் 3 பேரை கொலை செய்தவர் கொடைக்கானலில் கைது

Posted: 19 Jul 2016 12:35 PM PDT

கோயம்புத்தூரில் 3 பேரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவரை, கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கொடைக்கானல் அருகே கணவன்-மனைவி தற்கொலை

Posted: 19 Jul 2016 12:35 PM PDT

கொடைக்கானல் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, கணவன்-மனைவி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு

Posted: 19 Jul 2016 12:34 PM PDT

தேனியில் செவ்வாய்க்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 9 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

பழனி விடுதியில் கேரள காதல் ஜோடி தற்கொலை

Posted: 19 Jul 2016 12:34 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் கேரள கள்ளக்காதல் ஜோடி செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டது.

கொடைக்கானலில் கார் மோதியதில் பைக்கில் சென்ற 3 மாணவர்கள் காயம்

Posted: 19 Jul 2016 12:34 PM PDT

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்

Posted: 19 Jul 2016 12:33 PM PDT

திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சின்னமனூரில் தொடர் திருட்டு: ரோந்து  போலீஸாரை நியமிக்க கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:33 PM PDT

தேனி மாவட்டம், சின்னமனூரில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களைக் கட்டுப்படுத்த, இரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிப்படை வசதிகள் இல்லாத பொம்முராஜபுரம்: மாற்று வாழ்வாதாரம் வழங்க மலைகிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:32 PM PDT

ஆண்டிபட்டி வட்டாரம், பொம்முராஜபுரத்தில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் மலைகிராம மக்கள், தங்களுக்கு மாற்று வாழ்வதாரத்தை ஏற்படுத்தித் தரக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடசாலத்திடம் மனு அளித்தனர்.

உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நாற்றாங்கால் அமைக்க முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கூடுதல் நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:32 PM PDT

உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நாற்றாங்கால் அமைத்திட  முல்லைப் பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனியில் ஜூலை 20 மின்தடை

Posted: 19 Jul 2016 12:31 PM PDT

தேனி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

மருதா நதி அணை சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:26 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் இருந்து மருதாநதி அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விஸ்வகர்மா நிர்வாகிகள் கூட்டம்

Posted: 19 Jul 2016 12:26 PM PDT

வத்தலகுண்டுவில் விஸ்வகர்மா நிர்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிராம தூய்மைக் காவலர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கக் கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:25 PM PDT

பெரியகுளம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த கிராம தூய்மை காவலர்கள், தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்கக் கோரி ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

பாம்பன் கடலில் குதித்து கரூர் பெண் தற்கொலை

Posted: 19 Jul 2016 12:25 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து கரூரைச் சேர்ந்த பெண் கடலில் குதித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்தூர் பகுதியில் ஜூலை 20 மின் தடை

Posted: 19 Jul 2016 12:25 PM PDT

திருவாடானை தாலுகா ஆர்.எஸ். மங்கலம், ஆனந்தூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

பாம்பன் கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

Posted: 19 Jul 2016 12:24 PM PDT

பாம்பன் தெற்கு கடலோரப் பகுதியில் கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர்.

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் ஜூலை22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

Posted: 19 Jul 2016 12:22 PM PDT

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காரைக்குடி, கல்லல் பகுதிகளில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் ஆய்வு

Posted: 19 Jul 2016 12:21 PM PDT

காரைக்குடி, கல்லல், சிவகங்கை பகுதிகளில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பாம்பன் ரயில் பாலம் தண்டவாளப் பகுதியில் சீரமைப்புப் பணிகள்

Posted: 19 Jul 2016 12:21 PM PDT

பாம்பன் ரயில் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளம் மற்றும் தூக்குபாலம் பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழா

Posted: 19 Jul 2016 12:21 PM PDT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் உள்ள சித்தர் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் 159 ஆவது அவதார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ண மடத்தில் குருபூர்ணிமா நிகழ்ச்சி

Posted: 19 Jul 2016 12:20 PM PDT

ராமநாதபுரம் ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை குருபூர்ணிமா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.12 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

Posted: 19 Jul 2016 12:20 PM PDT

இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் ரூ.12 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ராமேசுவரத்தில் தமிழர் தேசிய முன்னணி ஆர்ப்பாட்டம்

Posted: 19 Jul 2016 12:20 PM PDT

ராமேசுவரம் நகராட்சியைக் கண்டித்து தமிழர் தேசிய முன்னணியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அருணாசல் விவகாரத்தை எழுப்பி மக்களவையில் காங்கிரஸ் அமளி

Posted: 19 Jul 2016 12:20 PM PDT

அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதை சுட்டிக்காட்டி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் கார் மோதியதில் முதியவர் சாவு

Posted: 19 Jul 2016 12:20 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா ஜூலை 25இல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 19 Jul 2016 12:19 PM PDT

ராமநாதபுரம் ரோட்டரி மகாலில் ஜூலை 25 ஆம் தேதி (திங்கள்கிழமை)புத்தகத் திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

Posted: 19 Jul 2016 12:18 PM PDT

திருவாடானை வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான கோயில் திருவிழா கடந்த 12ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதையடுத்து, தினமும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

காஷ்மீர் பிரச்னைக்கு துப்பாக்கி குண்டுகளால் தீர்வு கிடைக்காது:மாநிலங்களவையில் திருச்சி சிவா பேச்சு

Posted: 19 Jul 2016 12:18 PM PDT

ஜம்மு காஷ்மீர் மக்களின் பிரச்னைக்கு துப்பாக்கிக் குண்டுகளால் தீர்வு கிடைக்காது என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.

வேன்-சரக்கு வாகனம் மோதல்: பெண் சாவு

Posted: 19 Jul 2016 12:18 PM PDT

திருவாடானை அருகே வேனும் சரக்கு வாகனமும் மோதியதில் பெண் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர்.

திருவாடானை அருகே இடி தாக்கி விவசாயி, 8 ஆடுகள் சாவு

Posted: 19 Jul 2016 12:17 PM PDT

திருவாடானை அருகே இடி தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார். மேலும்,8ஆடுகள் உயிரிழந்தன.  

வங்கிகளில் ரூ.76,685 கோடி கடன் மோசடி:மத்திய அரசு தகவல்

Posted: 19 Jul 2016 12:17 PM PDT

வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்களின் எண்ணிக்கை 8,167-பேராக உள்ளது என்றும், வங்கிகளுக்கு அவர்கள் நிலுவை வைத்துள்ள தொகை ரூ.76,685 கோடி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரம் வெட்ட தமிழகம் அனுமதி கோரவில்லை

Posted: 19 Jul 2016 12:16 PM PDT

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரம் வெட்டுவதற்கு தமிழக அரசிடம் இருந்து எவ்விதக் கோரிக்கையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வரவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அனில் மாதவ் தவே தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகரை தூய்மையாக வைத்திருக்க ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 19 Jul 2016 12:16 PM PDT

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் சேர்ந்து விடாமல் எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் செவ்வாய்க்கிழமை நகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

அழிவிலிருந்து மீட்கப்படுமா சங்கரபதி கோட்டை?

Posted: 19 Jul 2016 12:16 PM PDT

தேவகோட்டை அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டைய அழிவிலிருந்து மீட்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நான்கு அதிமுக உறுப்பினர்கள் மாநிலங்களவையில் பதவி ஏற்பு

Posted: 19 Jul 2016 12:15 PM PDT

மாநிலங்களவைக்கு அண்மையில் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த நான்கு அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.

கலசலிங்கம் பல்கலை.யில் கருத்தரங்கு

Posted: 19 Jul 2016 12:15 PM PDT

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பைதான் தொழில்நுட்ப செயல்முறை கருத்தரங்கு, கணினி பயன்பாட்டுயில் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை சாலையில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரிக்கை

Posted: 19 Jul 2016 12:15 PM PDT

அருப்புக்கோட்டை ஸ்ரீஅமுதலிங்கேசுபரர் கோயில் அருகே செம்பட்டி நோக்கிச் செல்லும் சாலையில் பள்ளி தொடங்கும், விடும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டும்:நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Posted: 19 Jul 2016 12:14 PM PDT

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் திருட்டு

Posted: 19 Jul 2016 12:14 PM PDT

அருப்புக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

பயங்கரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்:சுமித்ரா மகாஜன் வலியுறுத்தல்

Posted: 19 Jul 2016 12:14 PM PDT

பயங்ரவாதத்தை எள் முனையளவும் சகித்துக் கொள்ளாமல் அதை வேரறுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று மக்களவைத் தலைவர் சுமித்ரா மஹாஜன் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் கண்காட்சி ஜூலை 22,25இல் தொடக்கம்

Posted: 19 Jul 2016 12:14 PM PDT

விருதுநகர் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி ஜூலை 22, 25 ஆகிய தேதிகளில் விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதாக மாவட்ட சுற்றுச் சுசூழல் ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி ராஜன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

வேட்பாளருக்கு எப்படி வருவாய் கிடைக்கிறது?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Posted: 19 Jul 2016 12:13 PM PDT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது வருவாய் விவரத்துடன், அந்த வருவாய் எப்படிக் கிடைத்தது என்பதையும் தெரிவிக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

விருதுநகரில் ஜூலை 22இல் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

Posted: 19 Jul 2016 12:13 PM PDT

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் ஜூலை 22இல் நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்படும்:உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதி

Posted: 19 Jul 2016 12:13 PM PDT

ஹரித்துவார் கங்கைக் கரை அருகே உள்ள பகுதியில் இருந்து அகற்றப்பட்டு பூங்கா வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை அடுத்த சில நாள்களில் வேறு இடத்தில் நிறுவப்படும் என்று உத்தரகண்ட் மாநில முதல்வர் ஹரீஷ் ராவத் உறுதியளித்தார்.

சாத்தூரில் கூலி உயர்வு கேட்டு சாலை மறியல்: 93 பேர் கைது

Posted: 19 Jul 2016 12:13 PM PDT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி உயர்வு வழங்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 93 பேரை செவ்வாய்க்கிழமை போலீஸார் கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™