Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


20 ரூபாய் அரிசி விலையை மேலும் குறைக்க யோசனை

Posted: 18 Jul 2016 09:38 AM PDT

கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியின் விலையை குறைக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 2013ல், வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்ந்தது. இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின், 'அமுதம்' மற்றும் கூட்டுறவு அங்காடிகளில், ஒரு கிலோ அரிசி, 20 ரூபாய்க்கு விற்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, அதே ஆண்டு துவக்கி வைத்தார்.

இதற்காக, இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து, ஒருகிலோ அரிசி, 19 ரூபாய், 11 காசு என்ற விலையில், நுகர்பொருள் வாணிபக் கழகம், ஒரு லட்சம் டன் வாங்க முடிவு செய்தது. தற்போது, கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடி என, 300 கடைகளில், ...

பாலாற்றில் தடுப்பணையை ஆந்திரா உயர்த்தியதை எதிர்த்து... வழக்கு! இடிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

Posted: 18 Jul 2016 09:59 AM PDT

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் வகையில் ஆந்திரா மேற்கொண்டுள்ள கட்டுமானப் பணியை நிறுத்தும்படியும், அதை இடிக்க உத்தரவிடக் கோரியும், சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில், பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில், 93 கி.மீ., ஆந்திராவில், 45 கி.மீ., துாரம் பாய்ந்து, தமிழக எல்லையான புல்லுார் அருகே நுழைந்து, வாணியம்பாடி வழியாக, தமிழகத்தில், 222 கி.மீ., துாரம் பாய்ந்து, கல்பாக்கம் அருகே, வங்கக்கடலில் கலக்கிறது.வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய ...

ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன்...இணைப்பு? தனியாக தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முழுக்கு

Posted: 18 Jul 2016 10:06 AM PDT

புதுடில்லி:ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் சமர்ப்பிக்கும் வழக்கத்தை மாற்றி, பொது பட்ஜெட்டுடன் சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய திட்டக்கமிஷனுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட, 'நிடி ஆயோக்' அமைப்பு, ரயில்வே பட்ஜெட் தொடர்பான ஆய்வறிக்கையை, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்ப்பித்தது. அதில், 'கடந்த, 1924 முதல் நடைமுறையில் இருக்கும், ரயில்வேக்கென, தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை கைவிட்டு, பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யலாம்' என, ஆலோசனை கூறப்பட்டிருந்தது. ரயில்வே பட்ஜெட்டை தனியாக சமர்ப்பிப்பதால், ...

இரு மடங்காகிறது எம்.பி.,க்கள் சம்பளம்

Posted: 18 Jul 2016 10:08 AM PDT

புதுடில்லி, :எம்.பி.,க்களின் சம்பளத்தை, 100 சதவீதம் உயர்த்துவதற்கான பரிந்துரைக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் சம்பள உயர்வு குறித்து, ஆய்வு செய்த எம்.பி.,க்கள் கமிட்டி, 'சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தலாம்' என, கூறி பரிந்துரைத்தது. இப்பரிந்துரைகளுக்கு, அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, கேபினட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. அடுத்தகட்டமாக, பிரதமர்மோடியின் ஒப்புதல் கிடைத்தால்,நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில், பார்லிமென்ட்டின் அனுமதி பெறப்படும். ...

பொற்கோவிலில் பாத்திரம் கழுவி பரிகாரம் தேடினார் கெஜ்ரிவால்

Posted: 18 Jul 2016 10:23 AM PDT

அமிர்தசரஸ்,: பஞ்சாப் தேர்தல் அறிக்கை சர்ச்சையில், ஆம் ஆத்மி சிக்கியதையடுத்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சீக்கியர்களின் பொற்கோவிலுக்கு சென்று, மன்னிப்பு கேட்டு, பரிகார சேவை செய்தார்.

பஞ்சாப் மாநிலத்தில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை சமீபத்தில் வெளியானது. அப்போது, அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆஷிஷ் கேதன், சீக்கியர்களின் புனித நுாலான குரு கிரந்த சாஹிப்புடன், தேர்தல் அறிக்கையை ...

சுவாதி கொலை வழக்கில் ராம்குமாருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 18 Jul 2016 10:26 AM PDT

சென்னை,: மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாருக்கு, மேலும், 15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கி, சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், சுவாதி, 24; மென்பொறியாளர். அவர், ஜூன், 24ல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் போலீசார், நெல்லை மாவட்டம், செங்கோட்டை அடுத்த, டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த, ராம்குமார், 24, என்பவனை, ஜூலை, 1ல் கைது செய்தனர்.அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உரிய சிகிச்சைக்கு பின், சென்னை, ...

நீதி விசாரணை வேண்டும்: கருணாநிதி

Posted: 18 Jul 2016 10:27 AM PDT

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகரத்தில் ஓடி, மழைநீர், கடலில் கலக்கும் அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்ஹாம் கால்வாய்களை முறையாக துார் வாரவில்லை. கால்வாயை அகலப்படுத்த, தமிழக அரசு, 154 ரூபாய் கோடி ஒதுக்கி, அது செலவழிக்கப்படவில்லை.கடந்த 2015 மே மாதம், கூவம் கால்வாய் புனரமைப்பு பணிக்கு, 60 கோடி ரூபாய், கொசஸ்தலையாறு பணிக்கு, 38 கோடி ரூபாய், ஆரணியாறு பணிக்கு, 36 கோடி ரூபாய், அடையாறு பணிக்கு, 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஒட்டு மொத்தமாக டெண்டர் விடப்பட்டுள்ளது.இந்த பணிகளை மேற்கொள்ள, பொன்னேரி நிறுவனம்,மதுரை நிறுவனம், ...

காவிரி வழக்குகளுக்கு எப்போ முடிவு: விரக்தியில் டெல்டா விவசாயிகள்

Posted: 18 Jul 2016 10:38 AM PDT

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட, 'டெல்டா' மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக, ஆண்டுதோறும், 193 டி.எம்.சி., காவிரி நீரை, தமிழகத்திற்கு, கர்நாடக அரசு வழங்க வேண்டும்.

இதுதொடர்பான உத்தரவை, 2007 பிப்ரவரி மாதம் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்தது. ஆனால், கர்நாடக அரசு வழங்க மறுத்தது. நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியிடப்படாததை, கர்நாடக அரசு, தனக்கு சாதகமாக பயன்படுத்தியது. தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் பயனாக, 2013 பிப்., மாதம், நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியானது.
முரண்டு
இதையடுத்து, ...

சென்னை வெள்ளத்திற்கு காரணம் என்ன?பதிலளிக்க அரசுக்கு கோர்ட் அவகாசம்

Posted: 18 Jul 2016 10:53 AM PDT

சென்னை,:சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கனமழைசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், 2015 நவம்பர், டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதும் நிரம்பின. இந்நிலையில், டிச., 1ம் தேதி, நள்ளிரவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், சென்னை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது; ஏராளமானோர் ...

பீகார்: மாவோயிஸ்ட் தாக்குதலில் 3 வீரர்கள் பலி; 5 பேர் காயம்

Posted: 18 Jul 2016 11:34 AM PDT

பாட்னா: பீகார் மாநிலம் கயாவில் துணை ராணுவப படை - மாவோயிஸ்ட்கள் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்தனர்.

மாவோயிஸ்ட்களுக்கு எதிரான சண்டை பல மணி நேரமாக தொடர்ந்து ...

பசு கணக்கெடுப்பு நடத்துகிறது பா.ஜ.,

Posted: 18 Jul 2016 01:17 PM PDT

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், பசுக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பை, பா.ஜ., ஆதரவு அமைப்பு நடத்துவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கிருந்து, அண்டை நாடான வங்கதேசத்திற்கு பசுக்கள் கடத்திச் செல்லப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், அம்மாநிலத்தில், கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இதையடுத்து, 'பசுக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தில், பசுக்கள் ...

நலிந்த பொது துறை நிறுவனங்கள்; மத்திய அரசு புதிய முடிவு

Posted: 18 Jul 2016 03:04 PM PDT

புதுடில்லி : நலிவடைந்த பொதுத் துறை நிறுவனத்தை தேர்வு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்ட பின், அடுத்த நிறுவனத்தை கையிலெடுக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கடந்த ஜூன் மாதம், 'நிடி ஆயோக்' அமைப்பு, நலிந்த பொதுத் துறை நிறுவனங்கள் குறித்த பட்டியலை, பிரதமர் அலுவலகத்திடம் அளித்திருந்தது. அதில், மூட வேண்டிய நிறுவனங்கள் குறித்தும், தனியார்மயமாக்க வாய்ப்புள்ள நிறுவனங்கள் பற்றியும், இரு வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நலிவடைந்த பொதுத் துறை நிறுவனங்கள் குறித்து, மத்திய அரசு, புதிய கொள்கை முடிவு எடுத்துள்ளது. ...

நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளரும்: சி.ஐ.ஐ.,

Posted: 18 Jul 2016 03:35 PM PDT

புதுடில்லி : நடப்பு, 2016 - 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம், 7 - 8 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான - சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்து, 200க்கும் மேற்பட்ட, குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 60 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7 - 8 சதவீதமாக இருக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளன. விற்பனை உயரும் என, 61 சதவீதம்; புதிய 'ஆர்டர்' அதிகரிக்கும் என, 65 ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™