Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு

Posted: 18 Jul 2016 03:58 PM PDT

ஒடிஸாவில் உள்ள சுமார் 8 லட்சம் இளைஞர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த பயிற்சி தொடர்பான புதுப்பிக்கப்பட்ட செயல்திட்ட அறிக்கைகளை இன்னும் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கு தலைமைச் செயலர் ஏ.பி.பதி உத்தரவிட்டுள்ளார். இளைஞர்களின் திறன் மேம்பாடு குறித்த உயரதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலர் ஏ.பி. பதி தலைமையில் புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ...

திருவள்ளுவர் தலித் என மெய்ப்பிக்கப் பட்டால் தமிழருக்கு அது பெருமைதான்: கவிஞர் வைரமுத்து

Posted: 18 Jul 2016 03:55 PM PDT

உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை கரையில் 12 அடி திருவள்ளுவர் சிலையை நிறுவ பாஜக வின் தருண் விஜய் ஏற்பாடு செய்திருந்தார். கடந்த 29-ந் தேதி ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட விழாவில் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சாதுக்களின் கடும் எதிர்ப்பால், பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை தற்காலிகமாக நிறுவப்பட்டது. ஆனால், தற்போது அங்குள்ள பூங்கா ஒன்றில் கறுப்பு நிற கவரால் சுற்றி, கட்டப்பட்ட நிலையில், கேட்பாரற்று கிடக்கிறது. ...

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்

Posted: 18 Jul 2016 03:54 PM PDT

தற்போது, எம்.பி.க்களுக்கு மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. பிற படிகளாக, 45 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. இந்த சம்பளம் போதாதென்றும், சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, எம்.பி.-க்களின் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, எம்.பி.-க்களின் சம்பளம் மற்றும் பிற படிகளை, 100 சதவீதம் உயர்த்த பரிந்துரைத்தது. இந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை குழு ...

வியட்நாமில் சுபாசுக்கு உதவிய தமிழன் தியாகி. லியோன் புருசாந்தி

Posted: 18 Jul 2016 12:25 PM PDT

லெயோன் புருஷாந்தி(Leon Prouchandy) லெயோன் புருஷாந்தி (Leon Prouchandy) அவர்கள் புதுச்சேரியில் 1901 மே மாதம் முதல் தேதியில் பிறந்தவர். பிரெஞ்சுக் கல்வியில் "பிரவே" வகுப்பு வரை பயின்றவர். பிரெஞ்சு மொழியைப் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். இவர் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சைக்கோனில் வேளாண்மை வங்கியில் கணக்குப்பிரிவில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். 1932 இல் காந்தியடிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தம் வேலையைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தவர். பெரும் செல்வ ...

டி.வி.நாடகங்களால் ஏற்படும் விளைவுகள்…

Posted: 18 Jul 2016 11:43 AM PDT

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் ! சன் டிவி 'யின் நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரி, உரக்கக் கத்திப் பேசுதல், சோக மற்றும் இழவு இசைகள் உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்து கெடுத்துவிடும். – இதனால் வீட்டில் பணம் தாங்காமல் போகும், வீண் செலவுகள் ஏற்படும். அது மட்டுமின்றி உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும். இதனால் தலைவலி, ரத்த அழுத்தம், இதய கோளாறுகள், மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்… – முக்கியமாக பிறரை எப்படிக் கெடுப்பது, ...

காதலுக்கு வயது தடையில்லை…

Posted: 18 Jul 2016 11:43 AM PDT

- அமெரிக்காவின் டென்னிசியில் வசிக்கிறார் 71 வயது அல்மெடா. சமீபத்தில் அவரது மகன் இறந்து போனார். துக்கம் விசாரிக்க வந்தார் 17 வயது கேரி ஹார்ட்விக். அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூறிய கேரியை அல்மெடாவுக்குப் பிடித்துப் போனது. கேரிக்கும் அல்மெடா மீது அன்பு. ஒருவாரத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். நீண்ட நேரம் பேசினர். இருவரது கருத்துகளும் ஒத்துப் போயின. கேரி தன் காதலை அல்மெடாவிடம் தெரிவித்தார். தன் பேரனை விட 3 வயது குறைவான கேரியைத் திருமணம் செய்ய முடியாது என்றார் அல்மெடா. "வயது ...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! :) இது என்னுடைய 50000 வது பதிவு!

Posted: 18 Jul 2016 11:43 AM PDT

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள் ! இது என்னுடைய 50000 வது பதிவு! 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் ஏற்கனவே இந்த திரி இல் எல்லாம் சொல்லிவிட்டேன்.....என்றாலும்......50000 பதிவுகள் என்பது .......எனக்கே மிகவும் மலைப்பாகத் தோன்றுகிறது...............எப்படி இவ்வளவு type  செய்தோம் என்று ..........எல்லாம் உங்கள் அனைவரின் ஊக்கத்தால், ஆதரவால் தான் ..............அது தொடர வேண்டுகிறேன்..............     இது வரையில் நான் யார்மனதும் புண்பட நடந்தது இல்லை, ஒருவேளை என்னை அறியாமல் யார்மனதாவது என் ...

கவிதை,எந்நேரத்திலும் வெளிவரும்.

Posted: 18 Jul 2016 11:24 AM PDT

காலம் காற்றைப்போல
தாட்சண்யம் பாராமல்
கவிதைகளை வைத்து
கதவை சாத்திவிட்டுப்
போகிறது..!

ஆனால் அதுவே
பின்னாளில் திறந்து விட்டும்
செல்கிறது.

கவிதைகள் ஒன்றும்
மூச்சுத் திணறி மரித்துப்
போவதில்லை.
அவை எந்நேரத்திலும்
வெளிவரும்.

——————————
– ராஜகோபால் மீனாட்சிசுந்தரம்

புதுக்கவிதை

Posted: 18 Jul 2016 11:21 AM PDT

பொறுப்பு…!! * இன்று விடிந்ததிலிருந்தே வெளுத்தப்படியே இருக்கிறது மேகங்களற்ற வெப்ப வானம். இன்று விடிந்ததிலிருந்தே தகிக்கும் வெப்பம் மனிதர்களையும் பறவைகளையும் வெளியில் போக வேண்டாமென அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள். இன்று விடிந்ததிலிருந்தே எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ? எந்தத் திசைவழியாயும் சென்றும் திரும்புகின்றது வெப்பக் காற்று. இப்பவே இப்படியென்றால், இன்னும் கத்திரித் தொடங்கினால் எப்படி அனல் பறக்குமோ? வெயில் என்றாலே மனிதர்களுக்கு நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு நெருப்பு. அதுவும் ...

அறிமுகம் - nagomi

Posted: 18 Jul 2016 11:20 AM PDT

பெயர்:nagomi
சொந்த ஊர்:chennai
ஆண்/பெண்:aan
ஈகரையை அறிந்த விதம்:net
பொழுதுபோக்கு:சித்த vaidyam
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?

Posted: 18 Jul 2016 11:16 AM PDT

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் அழுகையின் போது அசைக்கப்படுகிறது. இந்த சிஸ்டம் அசைக்கப்ட்டாலே நமக்கு அமைதி (Relaxation) கிடைக்கும். அதாவது நிம்மதியைத் தருகிற, மன அழுத்தத்தைக் குறைக்கிற நரம்புகளை உணர்ச்சி தட்டி எழுப்பும். தொடர்ந்து OPIODS என்கிற இரசாயன வஸ்துவை நமது கண்ணீர் தட்டி எழுப்புகிறது. மேலும் நம்முடைய சந்தோஷத்தைத் தூண்டுகிற இயற்கை இரசாயனங்களையும் ...

உடல் மெலிய வைக்கும் உபகரணம் ..!

Posted: 18 Jul 2016 10:59 AM PDT

- @udaya_Jisnu ''மச்சி, சாக்லெட் சாப்பிட்டதும் மயக்கமா வருதே… போதை சாக்லெட்டா இருக்குமோ?'' ''நல்லா பாரு நாயே! அது எக்ஸ்பயரி ஆகி ரெண்டு வருஷம் ஆகுது!'' – ————————————- – @arattaigirl கவலையைப் போல் உடல் மெலிய வைக்கும் உபகரணம் எதுவுமில்லை! – ————————————— @teakkadai வேலை இழப்புக்குப்பின்தான் அனாவசிய செலவுகள் எவ்வளவு செய்திருக்கிறோம் என்பதே உறைக்கிறது. – ——————————————— – ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்பொழுதே மனைவிகள் மனநிலையை கெஸ் பண்ணலாமே! – ''ஏங்க! அத்தை சொன்னாங்க…'' – ''ஏங்க! ...

கருணாநிதிக்கு தபாலில் கங்கை நீர் - விபூதியை அனுப்பிய இந்து மக்கள் கட்சியினர்!

Posted: 18 Jul 2016 10:45 AM PDT

காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே ...

47% இந்தியர்கள் ஓய்வு காலத்துக்கு சேமிப்பதில்லை: ஹெச்எஸ்பிசி ஆய்வில் தகவல்

Posted: 18 Jul 2016 10:42 AM PDT

இந்தியாவில் பணிபுரிபவர்களில் 47 சதவீதத்தினர் ஓய்வு காலத்துக்காக சேமிக்கவில்லை என ஹெச்எஸ்பிசி ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இதில் ஓய்வு காலத்துக்காக சேமிப்பை தொடங்காதவர்களும் உள்ளனர். சேமிப்பை தொடங்கி அதனை தொடரமுடியாதவர்களும் உள்ளனர். - ஓய்வுகாலத்துக்காக சேமிக்காதவர்களின் சர்வதேச சராசரி 46 சதவீதம். ஆனால் இந்தியாவில் 47 சதவீதத்தினர் சேமிக்கவில்லை. - 17 நாடுகளில் 18,207 நபர்களிடம் இணையதளம் மூலம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜென் டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ...

உறக்கம் கலைந்த பின்னும் உனைபற்றி ஓயாத கனவலைகள்.......

Posted: 18 Jul 2016 10:35 AM PDT

அன்பானவளே! கரும் பருக்களுக்கு கூட உன் மேல் காதல் போல அதனால் தான் -உன் கன்னங்களை ஆட்கொண்டதோ! உன் ஆந்தை விழி பார்வையால் என்னை அடிமைபடுத்தி போனவளே-உன் அழகு கன்னங்களை கிள்ள என்னுள் ஆயிரம் ஆசை உண்டாகுதடி!! புவியீர்ப்பு விசையென்னை ஓரிடத்தில் நிறுத்திய போதும் - உன் விழியீர்ப்பு விசையென்னை உன்னிடம் விரைந்திழுத்து செல்லுதடி!! ஒற்றை வரி கவிதையாய் உன் ஓரப்பார்வை தெரியுதடி!- உன் ஒய்யார நடையோ என்னை உன் பின்னே வர சொல்லுதடி! இரண்டு வினாடி மின்னலாய் வந்து -என் இதயம் தொட்டு ...

விநாயக சண்முகன் காக்க!

Posted: 18 Jul 2016 10:19 AM PDT

விநாயக சண்முகன் காக்க! பிரசன்னைகளை அகற்றிய பிரசன்ன விநாயகர் காக்க கருணை உள்ளம் படைத்த கற்பக விநாயகர் காக்க ரக்ஷித்து பக்தர்களை காத்தருள்கிற ரக்ஷ கணபதி காக்க மனதில் தைரியம் கொடுத்து வாழவைக்கிற மகா கணபதி காக்க சித்தத்தை சிறப்புடன் சிந்தனை செயல்பட வைக்கும் சித்தி விநாயகர் காக்க - வந்த நோய் நொடி எல்லாம் விரட்டி அடிக்க்கிற வரசக்தி விநாயகர் காக்க நம்பியவர்க்கு நிச்சயம் கிருபை புரியும் நர்த்தன விநாயகர் காக்க செய் வினைகள் பாவங்கள் எல்லாம் போக்கும் செண்பக விநாயகர் காக்க குரல் கொடுத்தவுடன் ...

கர்ணன் ஏன் இடது கையால் தானம் தந்தான்?

Posted: 18 Jul 2016 10:04 AM PDT

கொடையளிப்பதில் இவனுக்கிணை வேறு எவருமே இல்லை என்று போற்றப்பட்டவன் கர்ணன். அவன் கொடுப்பதை என்றுமே இழப்பாக எண்ணியதில்லை. அவன் செய்த தர்மங்களுக்கு அளவேயில்லை. அதனால் குற்றுயிராக கர்ணன் போர்க் களத்தில் கிடந்தபோது அவன் செய்த தர்மங்கள் அவன் உடலிலிருந்து உயிரைப் போக விடாமல் காத்து நின்றன. இதைக் கண்ட கர்ணன், நீ செய்த தர்மத்தின் பலன் யாவும் தந்துதவுக, என்று வேண்டுகிறான். மார்பில் புதைந்த அம்பை எடுத்துக் கொட்டும் செங்குருதியில் அவன் செய்த தர்மத்தின் பலன் யாவையும் கண்ணனுக்கு அர்ப்பணிக்கிறான் கர்ணன். இவ்வளவு ...

நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா !

Posted: 18 Jul 2016 09:54 AM PDT

ஐக்கிய நாடுகள் சபை இந்நாளை மண்டேலா தினம் என்று பெருமைப்படுத்தியுள்ளது. நெஞ்சில் நிறைந்த நெல்சன் மண்டேலா ! நம் நெஞ்சத்தில் நிலைத்து இருக்கும் நெல்சன் மண்டேலா சிறுவயதில் கழுதை, மீது சவாரி செய்துகொண்டு இருந்தார் மண்டேலா. அப்போது கழுதை அவரைக் கீழே தள்ளிவிட்டது. மண்டேலாவின் உடலில் முட்கள் குத்தி, ரத்தம் கசிந்தது. சுற்றி இருந்தவர்கள் கிண்டல்செய்து சிரித்தார்கள். ஒருவர் தோற்றால், மற்றவர்கள் எப்படிக் காயப்படுத்துவார்கள் என்பதை அப்போது உணர்ந்தார். நாம் அப்படி யாரையும் வருத்தப்படுத்தக் கூடாது ...

கண்களுக்கு பயிற்சி

Posted: 18 Jul 2016 09:35 AM PDT

இதுதான் முதல் நிலைப் பயிற்சி. அதாவது, கண்களுக்கு நேரே கைகளை வைத்துக் கொண்டு, இரண்டு கட்டைவிரல்களின் நகங்களைப் பார்த்தல்; அடுத்து, கைகள் வலது பக்கம் நகரும்போது, அந்த நகப் பகுதிகளுடனேயே நம்முடைய கண்கள், அதாவது பார்வை மட்டும் பயணித்தல்; பிறகு, வலதில் இருந்து இடது பக்கத்துக்குக் கைகள் பயணிக்க, அந்தக் கைகளுடன், கட்டை விரல்களுடன், விரல்களின் நகங்களுடன் நம் கண்களும் பயணம் செய்யட்டும். இப்படி ஐந்து முறை செய்யுங்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வது கடினமாகத் தெரியவில்லைதானே? ...

பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு 90 நாள் விடுப்பு

Posted: 18 Jul 2016 09:18 AM PDT

மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் 90 நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அளிக்கும் புகார் மனு தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மேற்கொள்வதற்காக இச்சலுகை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள ஆணையில், "பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் பெண் ஊழியர்களுக்கு விசாரணைக் காலத்தின்போது அதிகபட்சமாக 90 நாள்கள் வரை விடுப்பு வழங்கப்படும். புதிய விதிமுறையின்படி ...

பிள்ளையார் பக்தி பாடல்கள் mp3 தரவிறக்கம்

Posted: 18 Jul 2016 09:07 AM PDT

முதலாவது பாடல் கணபதி காக்க ( பிள்ளையார் பட்டி ) ஒருமணி நேரம் பக்தி பரவசமூட்டும் இந்த பாடலை பாடியவர் உன்னிகிருஸ்ணன் ... http://eegarai.com/mp3/devotional/Ganapathy_kakka.mp3 அடுத்தபாடல் வருகின்றது ...

வெவ்வேறு வகையான வீட்டுக் கடன்... தேவைக்கேற்ற திட்டத்தை தேர்வு செய்யுங்கள்!

Posted: 18 Jul 2016 08:49 AM PDT

நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை. நம் சொந்த வீட்டுக் கனவை வீட்டுக் கடன் திட்டங்கள் நிஜமாக்கியுள்ளன. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்ற கடன்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதோடு, வரிச் சலுகைகளும் தரப்படுவது கூடுதல் சந்தோஷம்.   கடந்த பத்து வருடங்களில் இந்தியாவில் வீட்டுக் கடன் பெற்றோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் தினமும் ஏராளமானவர்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ...

மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி

Posted: 18 Jul 2016 08:32 AM PDT

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் இந்த கொலை நடந்துள்ளது. இது ஆணவகொலை என்று திருமாவளவன் கூறினார். மதம் மாறி காதலித்ததால் சுவாதி ஆணவக்கொலை: திருமாவளவன் பேட்டி பண்ருட்டி: பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:– சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த சுவாதி கொலைக்கு ஒருதலை காதல் காரணம் அல்ல. மதம் விட்டு மதம் மாறி காதலித்ததால் ...

வீடு – கவிதை

Posted: 18 Jul 2016 08:22 AM PDT

மேல்தட்டு உறவினர் வீட்டுக்கு வரும்போது இயல்பு மாறுகிறது வீடு – அதிகப்படுத்திய மின்விசிறி அளவான ஒலியுடன் சம்பிரதாயமாய் தொலைக்காட்சி – போலியான முகம் பொய்யான சிரிப்புடன் வரவேற்கிறது வீடு – விசாரிப்புகளைத் தொடர்ந்து அளவோடு தொடர்கிறது ஒப்பனையுடன் உரையாடல் – எல்லாம் சரியாய் நடக்க வேண்டுமென திட்டமிடுகிறது மனம் – நாகரிகப் பேச்சுகள் நயமான பதில்களோடு கழிகின்றன நிமிடங்களில் – விடைபெறும்போது நம்முடன் சேர்த்துகொண்டு பெருமூச்சு விடுகிறது வீடு – ———————— மணிகண்ட பிரபு நன்றி- ஆனந்த ...

திபெத் பனிச்சரிவில் 9 பேர் பலி; நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழப்பு

Posted: 18 Jul 2016 04:37 AM PDT

திபெத்தின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான எருதுகளும், செம்மறி ஆடுகளும் பனிப்பாறைகளில் புதையுண்டு உயிரிழந்தன. இமயமலை பகுதியிலிருந்து சுமார் 1000 மீட்டர் தொலைவில் திபெத்தின் மேற்கே சீனக் கட்டுப்பாட்டை ஓட்டிய கிராமத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுகுறித்து சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்ட தகவலில், 26 அடி உயரத்திலிருந்து பனிப் பறைகள் கீழே விழுந்ததில் கால்நடை மேய்ப்பர்கள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 எருதுகள், 350 ...

நொங்கு தரும் குளிர்ச்சி

Posted: 18 Jul 2016 03:57 AM PDT


-
வேகாத
வெய்யில்ல
வெட்டி வெட்டி
விற்கும்
அக்காவுக்கு
எல்லா
நொங்கும்
தீந்தப்பறம்தான்
குளிர்ச்சி!

– செம்மலர் அன்னம்

பாம்படம் அழகுக்கல்ல…

Posted: 18 Jul 2016 03:54 AM PDT

பாம்படம் அழகுக்கல்ல பாம்படம் போட்டவளில்லை ஆயா அதை மாட்டும் காலம் வருமென காதோட்டையில் பெரும் தக்கையைப் போட்டிருந்தவளுக்கு கடைசியில் தக்கையே பாம்படமாகிப் போனது. – 'காலமெல்லாம் தனியாளா உழைச்சவளுக்கு ஒரு பவுன் பாம்படம் கூட வாய்க்கலையேன்னு ஆயா செத்த அன்னைக்கு சேக்காளி கிழவிகளெல்லாம் ஒரே குரலில் ஒப்பாரிவைத்தார்கள். – 'பெத்த ஐஞ்சையும் கவர்மெண்ட்டு ஆபீஸராக்கினவளுக்கு பாம்படமெல்லாம் தூசு'ன்னு ஒரு குரல் ஓங்கிச் சொன்னபோது ஆயா உதட்டோரம் சிரிப்பிருந்ததை பார்த்த கண்கள் அழத்தொடங்கின. – ————————————- – ...

முகநூலில் ரசித்தவை

Posted: 18 Jul 2016 03:51 AM PDT


கோபம்
சித்தார்த்தன் என்ற நிலையை தாண்டின
புத்தனுக்கு கூட வந்திருக்கலாம்.
ஞானத்திற்கான எல்லைகளை, வரைமுறைகளை
தீர்மானித்து வைத்தவர்கள் யாரும்
புத்தனின் கோபத்தை எழுதிவைக்கவில்லை
என்பது தான் உண்மை.

– ஜனார்த்தனன் நியோகி

——————————-

குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடம் …

Posted: 18 Jul 2016 03:50 AM PDT


-
குச்சிப்புடி நடனத்தின் பிறப்பிடம் ஆந்திரா

குங்குமப் பூவின் தாயகம் பாரசீகம்

குங்குமப்பூ அதிகமாக விளைவது ஸ்பெயினில்

கீரை வகைகளில் அதிக அளவில் புரதச்சத்து
உள்ளது முருங்கைகை கீரை

கீரிப்பிள்ளையின் தாயகம் ஆப்பிரிக்கா

———————————-

பந்தம், தீப்பந்தம் ஆவது ஏன்?

Posted: 18 Jul 2016 03:46 AM PDT

பந்த பாசங்களை, வேஷங்கள், மோசங்கள் என்போர் கவனிக்க! பந்தம் என்றால், உறவு; ஆனால், அது, ஒற்றைச் சொல் அல்ல. சொல்லும் போதே பாசம் என்பதையும் சேர்த்து, பந்த பாசம் என்று சொல்வதே மரபு! உறவு என்பதே பாசத்துடன் இணைந்த ஒன்று தான். என் உடன்பிறந்தோரில் அக்கா, தம்பி, தங்கை உண்டு; அண்ணன் இல்லை. இதனால், 'அண்ணன் இல்லையே...' என்ற ஏக்கமும், 'நமக்கு அண்ணன் என்கிற கொடுப்பினை இல்லையே...' என்றும் எண்ணியது உண்டு. ஆனால், 'தாய்வழி பெரியம்மாக்கள் மூலம், உனக்கு ஐந்து அண்ணன்கள் இருக்கின்றனரே... இவர்களை ஏன் நீ, அண்ணன்களாக ...

மாடுகளைக் காப்பாற்ற சிறந்த டெக்னிக்

Posted: 18 Jul 2016 03:25 AM PDT

வண்ணத்துப்பூச்சி மீன், விட்டில் பூச்சிகள் போன்றவற்றின் பின்பக்கம் கண்கள் போன்ற வட்டங்கள் இருக்கின்றன. இவற்றைத் தாக்க வரும் எதிரிகள், கண்கள் என்று நினைத்துப் பின்வாங்கிவிடுகின்றன. இயற்கை அளித்த தகவமைப்பு இது. – இந்த உத்தியைப் பின்பற்றி, வருகிறார் டாக்டர் நீல் ஜோர்டன். மனிதர்களின் செயல்களால் ஆப்பிரிக்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. காடுகளின் இருப்பிடம் குறைவதால், சிங்கங்கள் உணவு தேடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து, மாடுகளை வேட்டையாடி விடுகின்றன. – "சிங்கங்களுக்கும் ...

விளையாட வந்த மழை

Posted: 18 Jul 2016 03:23 AM PDT

- – பள்ளி முடித்து வீடு திரும்புகையில் இரு சிறுமிகள் பாட்டில் தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொண்டே கல கலப்பில் தெருவே நனைந்து கொண்டிருந்தது – அவ்வழியே வந்த ஒரு நாய்க்குட்டியும் தப்பவில்லை இவர்களின் தெளிப்பு விளையாட்டில் அலுவல் சுமைகளை சற்றொப்ப மறந்து பரவசத்தோடு அவ்வழி கடந்தபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது – அது மேலும் வலுத்து காற்றைக் கூட்டிக்கொண்டு சிறுமிகளின் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது – ————————————— சுஜய் ரகு நன்றி- ஆனந்த விகடன்

ஈச்சங்குலை...!!

Posted: 18 Jul 2016 02:21 AM PDT

சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *.

கபாலி’ வெளியாகும் நாளில் இந்திப்படம் ரிலீஸ்

Posted: 18 Jul 2016 01:50 AM PDT

- மும்பை நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' வெளியாகும் அதே நாளில் (22–ந் தேதி), இந்தி நடிகர் இர்பான்கான் நடித்த 'மதாரி' என்ற இந்திப்படமும் வெளியாகிறது. குழந்தைகளுக்காக, 'மதாரி' படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இர்பான்கானிடம், 'கபாலி'யுடன் அவரது படம் மோதுவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு இர்பான்கான் கூறியதாவது:– இது மோதல் அல்ல. ரஜினிகாந்த், ஒரு பெரிய மனிதர். உலகம் முழுவதும் தெரிந்த பெரிய நடிகர். அவருக்கு நான் சமம் அல்ல. அவர் படத்துடன் என் படம் ...

இதுதான் வாழ்க்கையோ!!?

Posted: 18 Jul 2016 01:34 AM PDT

விரும்பும்போது
கிடைக்காத ஒன்று
வெறுக்கும்போது
தேடிவருகிறதே -இதுதான்
வாழ்க்கையோ?.........

                                                  க.சரவணன் ........

படித்ததில் பிடித்தது :) -பூஜை பொருட்களில் கலப்படம்!

Posted: 18 Jul 2016 12:06 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள்

Posted: 18 Jul 2016 12:00 AM PDT

புதுடெல்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 31–ந் தேதி கடைசி நாள் ஆகும். வருமான வரித்துறை அறிக்கை வருமான வரி வரம்புக்குள் வரும் தனிநபர்கள் உள்பட அனைவரும் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். 2016–2017–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31–ந் தேதி கடைசி நாள் ஆகும். இதுகுறித்து வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை அனுப்பி உள்ள செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:– வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை நினைவுபடுத்தவே இந்த அறிக்கை. ...

தி கிரேட் கண்ணதாசன் !

Posted: 17 Jul 2016 11:58 PM PDT

தி கிரேட் கண்ணதாசன் ! "பாவமன்னிப்பு" படத்தில் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்கள் முதன்முதலாக படத்தில் தோன்றும் காட்சியில் ஒரு அற்புதமான பாடலை வைத்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார் படத்தின் இயக்குனர் ஏ.பீம்சிங். "மெல்லிசை மன்னர்கள்" விஸ்வநாதன் - ராமமூர்த்தி, "கவியரசு" கண்ணதாசன் ஆகியோரோடு அந்த அற்புதமான சூழ்நிலைக்கு அமர்ந்தார்கள். படத்தின் கதைப்படி சிவாஜி கணேசன் அவர்கள் முஸ்லீமாக இருந்தாலும், பிறப்பால் ஒரு இந்து வீட்டில் எம்.ஆர். ராதாவுக்கு மகனாக பிறந்திருப்பார். அதன்படி, ...

வீடு வரை உறவு வீதி வரை மனைவி

Posted: 17 Jul 2016 11:55 PM PDT

திரைப்படம்: பாதகாணிக்கை பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆண்டு: 1962 – ———————————- – ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன? – வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ? – ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடி ...

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

Posted: 17 Jul 2016 11:53 PM PDT

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் ...

பதுங்கின இடம் தெரியாமல் பதுங்கிட்டுப் போயிடணும்…!

Posted: 17 Jul 2016 11:48 PM PDT

– போருக்குப் போகும்போது எதற்கு மன்னா மொபைலும் ஹெட்போனும்? – ஓடிவரும்போது பாட்டு கேட்டுக்கிட்டே வந்தா போர் அடிக்காது, மந்திரியாரே! – அ.ரியாஸ் – ————————————- – மன்னர், சமீபத்திலேதான் அப்பா படம் பார்த்திருப்பார்-னு எப்படி சொல்றே? – பதுங்கின இடம் தெரியாமல் பதுங்கிட்டுப் போயிடணும்னு அடிக்கடி சொல்றாரே…! – தொண்டி முத்தூஸ் – —————————————— – எதுக்கடா, பட்டாஸ் வெடிக்கறே…? – தீபாவளிக்கு ஊருக்குப் போக ரயில் டிக்கெட் கன்பர்ம் ஆயிருச்சு…! – அ.ரியாஸ் – ——————————— – டைட்டில்லேயே ...

ஒருவனின் குணம் அறிய…

Posted: 17 Jul 2016 11:30 PM PDT

தமிழகம் மூன்று பக்கம் டாஸ்மாக்காலும், ஒரு பக்கம் கொலை கொள்ளையாலும் சூழப்பட்டுள்ளது. – – அம்புஜா சிமி – ——————————————– – பாலத்தில் செல்லும் ரயில் பெட்டிகளைப் பார்த்து ''பெரிய மௌத் ஆர்கன் போல இருக்கிறது'' என்கிறது குழந்தை. எனக்குள் கரை தொடுகிறது பாலத்தின் கீழ் சுழிக்கும் பெருநதி. – – கலாப்ரியா – ——————————————— – எங்க ஸ்மிர்தி அக்காவைத் தூக்கிக் கடாசிட்டு யாரோ ஒரு தாடிக்காரரை அங்க போட்டாங்க. டெக்ஸ்டைல் மினிஸ்ட்ரில போட்டு ஒண்ணுமில்லாம பண்ணிரலாம்னு பாக்கறாங்க. அதான் நடக்காது. ...

குத்துப் பாட்டு பாட தெரிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி...!!

Posted: 17 Jul 2016 11:28 PM PDT

நான்காயிரம் பணமும், நல்லாயிருந்த பையனும்!

Posted: 17 Jul 2016 10:39 PM PDT

நகரின் அழகை, வேடிக்கை பார்த்தபடி சென்று கொண்டிருந்தான், பிரபு. அவன் பேன்ட் பாக்கெட்டில், 4,000 ருபாய் இருந்தது. கை விட்டு, பணத்தை தொட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டான். எதையோ சாதித்த மாதிரி, 'த்ரில் லிங்' உணர்வு அவனுள்! 'சபாஷ்' என்று தன்னைத்தானே மனதுக்குள் பாராட்டினான். 'முதலில், ஓட்டலில் மூக்கு முட்ட சாப்பாடு; அப்புறம், சினிமா, புதுசா ரெண்டு, 'செட்' டிரஸ். எல்லாத்தையும் முடித்து, இரவு ஊருக்கு போயிடணும். அப்பா - அம்மாவுக்கு வேட்டி, சேலை வாங்கணும். மிச்ச காசை வச்சு, நண்பர்களோடு ஜாலியாய் ஊர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™