Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்று துவங்கும் பார்லி., மழைக்கால கூட்டத்தொடரில்... அருணாச்சல் உட்பட பல பிரச்னைகளை எழுப்ப காங்., தயார்

Posted: 17 Jul 2016 09:54 AM PDT

புதுடில்லி,: இன்று துவங்கும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் கலைப்பு, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், இத்தொடரில் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்ட், மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. ஆகஸ்ட், 12ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தொடரில், ஜி.எஸ்.டி., உள்ளிட்ட, 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்தியில் ஆளும் தே.ஜ., கூட்டணிக்கு, ...

அருணாச்சல் முதல்வராக பெமா காண்டு.பதவியேற்பு !அமைச்சரவை குறித்து விரைவில் முடிவு

Posted: 17 Jul 2016 09:59 AM PDT

இடாநகர், :கடந்த ஒரு வாரமாக, பல்வேறு அரசியல் திருப்பங்களை சந்தித்த, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் முதல்வராக, காங்கிரஸ் கட்சியின் பெமா காண்டு, 37, நேற்று பதவியேற்றார். அவருடன், சவ்னா மேயின், துணை முதல்வராக பதவியேற்றார். விரைவில், அமைச்சரவை குறித்து முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்தம், 60 தொகுதிகள் உடைய அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, கடந்த 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, முதல்வர் நபாம் துகி தலைமையிலான அரசு அமைந்தது.இதனிடையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில், சில ...

விமர்சகர்களுக்கு ரகுராம் ராஜன் சவால்

Posted: 17 Jul 2016 10:05 AM PDT

மும்பை,:''பொருளாதார வளர்ச்சிக்கு நான் எதையும் செய்யவில்லை என்று விமர்சனம் செய்பவர்கள், பணவீக்கம் எப்படி குறைந்தது என்பதை விளக்க முடியுமா?'' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் சவால் விடுத்தார்.

மும்பையில், குறிப்பிட்ட சில பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், அவர் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சியின் வேகம் மிகவும் குறைவாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மழை பொய்த்தது,சர்வதேச அளவில் மந்தமான பொருளாதாரம், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியது என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பல்வேறு ...

மத்திய அரசு வழியில் மாநில அரசுகள்?: 'நிடி ஆயோக்' கூட்டத்தில் வலியுறுத்த திட்டம்

Posted: 17 Jul 2016 10:10 AM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும், 30ம் தேதி நடைபெற உள்ள, 'நிடி ஆயோக்' நிர்வாகக் குழு கூட்டத்தில், 'விரைவான முன்னேற்றத்துக்கும், உயர்ந்த பொருளாதார வளர்ச்சிக்கும், மத்திய அரசின் கொள்கைகளைப் பின்பற்றும்படி மாநிலங்கள் வலியுறுத்தப்படும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்த உடன், திட்டக் கமிஷனுக்கு மாற்றாக, 'நிடி ஆயோக்' என்ற புதிய அமைப்பு அமைக்கப்பட்டது. ஐந்தாண்டு கால திட்டங்களுக்கு மாற்றாக, புதிய செயல் திட்டங்களையும், நீண்டகால கொள்கைகளையும் இந்தக் குழு வகுக்கும் என அறிவிக்கப்பட்டது.நிடி ...

திருத்தி கொள்ளாத முதல்வர் : கருணாநிதி காட்டம்

Posted: 17 Jul 2016 10:12 AM PDT

சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அவ்வப்போது, உரிய பதில்களை சொல்லத் திராணியும், தைரியமும் இல்லாதவர்கள் தான், அவதுாறு வழக்குகள் என்ற பெயரால், அரசு செலவில் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்திப் பழிவாங்கும் வகையில், கொல்லைப்புற வழியில் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து, நல்ல பாடம் புகட்டும் வகையில் தான், தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,'அவதுாறு வழக்கில், வழக்கை பதிவு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட பேச்சில், கருத்தில் அவதுாறு இருக்கிறதா என்று ஆராய வேண்டும். ...

பாலாற்றில் வருகிறது தடுப்பணை பட்ஜெட்டில் அறிவிக்க ஏற்பாடு

Posted: 17 Jul 2016 10:17 AM PDT

பாலாற்றில் தடுப்பணை கட்டுவது குறித்த அறிவிப்பை, பட்ஜெட்டில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில், 222 கி.மீ., பாலாறு பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. ஆனாலும், பாலாற்றில் நீரை சேமிப்பதற்கான எவ்விதமான கட்டுமான பணிகளையும், அரசு செய்யவில்லை. ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டாலும், அவை செயல்பாட்டிற்கு வரவில்லை. தமிழகத்தின் அனுமதியின்றி, தங்கள் மாநில எல்லையில் பாயும் பாலாற்றில், 33 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புல்லுார் என்ற இடத்தில்கட்டப்பட்டுள்ள தடுப்பணை உயரத்தை ...

'பேஸ்புக்'கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் : பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை

Posted: 17 Jul 2016 10:21 AM PDT

'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.
உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்; மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.இந்த ...

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தள்ளி வைக்க ஆணையம் திட்டம்

Posted: 17 Jul 2016 10:28 AM PDT

உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துவங்கியுள்ளதால், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகலாம் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது. அதற்கு முன் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அதிகமாக இருந்தது எனக்கூறி, இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை தேர்தல் கமிஷன் ஒத்தி வைத்தது. பின், இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்தது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவேல் ...

ஜெ., பங்கேற்காதது வருத்தம்: வெங்கையா

Posted: 17 Jul 2016 10:50 AM PDT

சென்னை:''நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற வேண்டியது அவசியம்,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஜி.எஸ்.டி., மசோதா, மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். சர்வதேச அளவில், சீனா உட்பட பல நாடுகளின் பொருளாதாரம் சரிவு அடைந்துள்ளநிலையில், நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து உள்ளது.நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பெற, ஜி.எஸ்.டி., மசோதா, பார்லிமென்டில் நிறைவேற வேண்டியது அவசியம். இந்த மசோதா நிறைவேறினால், ...

பயங்கரவாதிக்கு உதவிய 2 பேர் கைது

Posted: 17 Jul 2016 11:32 AM PDT

பாரிஸ் ; பிரான்சின் நீஸ் நகரில் பார்வையாளர் கூட்டத்திற்குள், கன்டெய்னர் லாரியை பயங்கர வேகத்தில் மோகச் செய்த நபருக்கு உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில், தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர் கூட்டத்திற்குள், கன்டெய்னர் லாரியை பயங்கரவாதி முகமது லாகவுஜ் பவுலெல் ஓட்டிச் சென்றதில், 84 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதியை போலீசார் சுட்டுக் கொன்றனர். முகமதுக்கு லாரியை வாடகைக்கு கொடுத்த, அதன் உரிமையாளர் உட்பட இரண்டு பேரை பிரான்ஸ் போலீசார் கைது ...

ஹர்திக் படேலுக்கு வலைவிரிக்கும் அரசியல் கட்சிகள்

Posted: 17 Jul 2016 11:46 AM PDT

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி போராடிய ஹர்திக் படேலை தங்கள் பக்கம் இழுக்க, எதிர்க்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.
குஜராத் மாநிலத்தில், படேல் சமூகத்தினருக்கு பிற்பட்டோர் இடஒதுக்கீடு கோரி, ஹர்திக் படேல் போராட்டம் நடத்தினார். குஜராத் பெண் முதல்வர் ஆனந்திபென் படேல் தலைமையிலான அரசு, தேசத் துரோக வழக்கில் ஹர்திக் படேலை கைது செய்து சிறையில் அடைத்தது. ஒன்பது மாத சிறைவாசத்திற்கு பின், குஜராத் ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஹர்திக் ...

'தி.மு.க.,வுடன் உறவு கிடையாது'

Posted: 17 Jul 2016 12:36 PM PDT

திருச்சி;''அரசியல் இலக்கணம் படைத்தவர்களை தேடிச் செல்வோம்; தலைக்கனம் பிடித்தவர்களை அல்ல,'' என்று லட்சிய தி.மு.க., தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திருச்சியில், நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க.,வை உடைத்து, வைகோ வெளியேறிய போது, தி.மு.க.,வுக்கு உதவியவன் நான். எனக்கும், தி.மு.க.,வுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு.தி.மு.க.,வை வழிநடத்துவது கருணாநிதி அல்ல. ஆனால், வழி நடத்துவோரால் அக்கட்சியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.
அரசியலுக்கு இலக்கணம் படைத்தவர்களை தேடிச் செல்வோம்; தலைக்கனம் படைத்தவர்களை அல்ல. லட்சிய தி.மு.க., இனி, தி.மு.க.,வோடு உறவு ...

பிளாட்பார கடைக்காரர்களுக்கு கோர்ட் கண்டனம்

Posted: 17 Jul 2016 01:17 PM PDT

புதுடில்லி ; 'பிளாட்பாரங்கள் மற்றும் பொது இடங்களில், பொருட்களை விற்பவர்கள், அருகில் உள்ள கடைக்காரர்களின் அடிப்படை உரிமையை ஆக்கிரமிக்கின்றனர்' என, டில்லி கோர்ட் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
தெற்கு டில்லியில், நேரு பிளேஸ் மார்க்கெட் பகுதியில், பொது இடத்தில், பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்த ஒருவரை அங்கிருந்து காலி செய்யுமாறு, மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அவர் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், 2005ல் இருந்து, அந்த பகுதியில் பொருட்களை வைத்து விற்பனை செய்து வருவதாக அவர் கூறியிருந்தார். ...

மூன்று தனுஷ் பீரங்கிகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு

Posted: 17 Jul 2016 02:21 PM PDT

போபால் : உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மூன்று தனுஷ் பீரங்கிகள், ராணுவத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.
இந்திய ராணுவத்துக்காக, ஸ்வீடன் நாட்டிலிருந்து போபர்ஸ் பீரங்கிகள், கடந்த, 1980களில் வாங்கப்பட்டன. அப்போது, பீரங்கி தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
தகவல்கள்:
இந்நிலையில், போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதனால், போபர்ஸ் தொழில்நுட்ப தகவல்களின் அடிப்படையில் உள்நாட்டிலேயே பீரங்கிகள் தயாரிக்கும் திட்டம் தற்காலிகமாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™