Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


துருக்கியில் நள்ளிரவில் நடந்த ராணுவ புரட்சி...முறியடிப்பு! பல மணி நேர சண்டையில் 200 பேர் பலி; 1,200 பேர் காயம்

Posted: 16 Jul 2016 09:49 AM PDT

அங்காரா:துருக்கி நாட்டில், நள்ளிரவில் நடந்த ராணுவ புரட்சி, மக்களின் கடும் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிபர் எர்டோகன், மக்கள் ஆதரவுடன், நாட்டை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ராணுவ தாக்குதலில், 200 பேர் கொல்லப்பட்டனர்; 1,200 பேர் காயமடைந்தனர். புரட்சியில் ஈடுபட்ட, 2,839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆசியா கண்டத்தை ஒட்டியுள்ள ஐரோப்பிய நாடான, துருக்கியின் அதிபராக இருப்பவர் எர்டோகன், 62. இவர் நேற்று முன்தினம், விடுமுறையை கழிப்பதற்காக, துருக்கியின் கடற்கரை நகரமான மர்மாரிஸுக்கு சென்றார்.தலைநகர் அங்காராவில், அதிபர் இல்லாத ...

டிசம்பருக்குள் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைப்பது... சந்தேகம் ! ஆதார் அட்டை 'ஸ்கேன்' கருவிகள் வழங்குவதில் சுணக்கம்

Posted: 16 Jul 2016 09:56 AM PDT

ஆதார் அட்டையை, 'ஸ்கேன்' செய்ய தேவையான, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவியை ரேஷன் கடைகளுக்கு வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், வரும் டிசம்பருக்குள், பொதுமக்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு கிடைப்பது சந்தேகமே என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகள் வழங்கி, 11 ஆண்டுகளாகிறது. இதனால், அவை கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன. அதனால், ஸ்மார்ட் கார்டு வடிவில், நவீன ரேஷன் கார்டுகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்காக, ரேஷன் கடைகளுக்கு, பாயின்ட் ஆப் சேல் என்ற கருவி வழங்கப்பட்டு ...

அருணாச்சல பிரதேச அரசியலில் திடீர்... திருப்பம்! பெமா காண்டுக்கு முதல்வராகும் வாய்ப்பு

Posted: 16 Jul 2016 10:00 AM PDT

இடாநகர்,:வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் அதிரடி திருப்பமாக, முதல்வர் நபாம் துகி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக, காங்., கட்சியின் சட்டசபை தலைவராக பெமா காண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்; அதிருப்தி தலைவர் கலிகோ புல், அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்து, இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைக்க, பெமா கண்டு உரிமை கோரியுள்ளார்.

அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர் உடையது; இதில், இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 உறுப்பினர் பலத்துடன், நபாம் துகி தலைமையில் காங்., ஆட்சி அமைத்தது. ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு ...

உள்நாட்டு அரசியல் பிரச்னையை திசை திருப்ப பாக்., தந்திரம் ! பிரதமர் நவாஷ் ஷெரீபின் இரண்டாவது அத்தியாயம்

Posted: 16 Jul 2016 10:07 AM PDT

பயங்கரவாதி பர்ஹான் வானியை சுட்டுக் கொன்றதற்கு எதிராக ஜூலை, 19ல், கறுப்பு தினம் அனுசரிக்கப் போவதாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப், தங்கள் உள்நாட்டு அரசியல் பிரச்னையை மீண்டும் திசை திருப்பி உள்ளார்.

தன் முந்தைய ஆட்சி காலத்திலும், அவர் இதுபோன்றே செய்தார். அவருக்கு முன்னும், பின்னும், பாக்., பிரதமராக பதவி வகித்தவர்களும், தங்கள் உள்நாட்டு அரசியல் மற்றும் அரசு சார்ந்த பிரச்னையை கையாள்வதற்கு, இதே தந்திரத்தை பின்பற்றினர்.நம் நாடு சுதந்திரம் பெற்றதும், தேர்தல் ஜனநாயகம், ஜனநாயக சோஷலிசம் என்பன போன்ற சமூக பொருளாதார அரசியல் ...

புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்ள மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி யோசனை

Posted: 16 Jul 2016 10:10 AM PDT

புதுடில்லி, :டில்லியில் நேற்று நடந்த, மாநிலங்கள் இடையிலான கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ''உள்நாட்டு பாதுகாப்பு கருதி, புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வதில், மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்,'' என வலியுறுத்தினார்.

தலைநகர் டில்லியில் நேற்று, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின், மாநிலங்கள் இடையிலான கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது; அப்போது, மோடி பேசியதாவது:உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் எழும் சவால்களை எதிர்கொள்வதில், மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். புலனாய்வு தகவல்களை, மாநில ...

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி? : கருணாநிதி - ஸ்டாலின் கருத்து மோதல்

Posted: 16 Jul 2016 10:15 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிடுவது குறித்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தோல்விக்கு, காங்கிரசுக்கு கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கியது தான் காரணம் என, தி.மு.க., செயற்குழுவிலேயே பலரும் குமுறினர். காங்கிரசை கூட்டணியில் சேர்த்திருக்கவே கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர்.இதனால், வரும் அக்டோபரில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., தனித்தே போட்டியிட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி ...

தமிழக எம்.பி.,க்களுக்கு புதிய சவால் மழைக்கால கூட்டத்தொடருக்கு தயாரா?

Posted: 16 Jul 2016 10:18 AM PDT

முன் எப்போதும் இல்லாத வகையில், தமிழகம் சார்ந்த பல முக்கிய பிரச்னைகள் வரிசை கட்டி நிற்பதால், அவை அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு பார்லிமென்ட்டில், பெரும் சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத்தொடருக்காக, நாளை பார்லிமென்ட் கூடவுள்ளது. ஒவ்வொரு கூட்டத் தொடர் துவங்கும்போதும், முக்கிய பிரச்னைகளை எழுப்பவும், அது குறித்த விரிவான தகவல்களுடனும், மற்ற மாநில எம்.பி.,க்கள் பார்லிமென்ட்டிற்கு வருகின்றனர்.இதற்கு முன் இல்லாத வகையில், தமிழகம் சார்ந்த பிரச்னைகள், இந்த கூட்டத்தொடரில் அதிகம் வெடிக்கலாம் என தெரிகிறது. ...

தமிழக மாணவர்கள் 11 பேர் நாடு திரும்புவதில் சிக்கல்: துருக்கி ராணுவ புரட்சியால் பதற்றம்

Posted: 16 Jul 2016 10:44 AM PDT

துருக்கி நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டு பதற்றம் உருவாகி உள்ளது.

இதனால், சர்வதேச விளையாட்டு போட்டியில் பங்கேற்க துருக்கி சென்ற தமிழகத்தை சேர்ந்த, 11 மாணவ, மாணவியர் உட்பட, இந்தியாவை சேர்ந்த, 189 பேர் தாய்நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
20 ஆயிரம் பேர்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில், பள்ளி மாணவர்களுக்கான சாம்பியன் விளையாட்டு போட்டிகள், ஏதாவது ஒரு நாட்டில் நடக்கும். இந்த ஆண்டு, துருக்கி நாட்டில், டிரோப்சான் என்ற நகரில் உள்ள விளையாட்டு கிராமத்தில் நடந்து வருகிறது. இதில், பல நாடுகளை சேர்ந்த, 20 ஆயிரம் மாணவ, மாணவியர் ...

பார்லி., கேபினட் குழுவிலிருந்து ஸ்மிருதி இரானி நீக்கம்

Posted: 16 Jul 2016 10:47 AM PDT

புதுடில்லி,:பார்லி., விவகாரங்களுக்கான கேபினட் குழுவிலிருந்து, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நீக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு மாற்றப்பட்டார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக, பிரகாஷ் ஜாவடேகர் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், சி.சி.பி.ஏ., எனப்படும், பார்லி., விவகாரங்களுக்கான கேபினட் குழுவிலிருந்து, ஸ்மிருதி இரானிநீக்கப்பட்டு உள்ளார்; அவருக்கு பதில், பிரகாஷ் ஜாவடேகர், ...

பாஸ்போர்ட்டில் தந்தை பெயர் அவசியமா?: மேனகா போர்க்கொடி

Posted: 16 Jul 2016 01:44 PM PDT

புதுடில்லி : டில்லியில், கணவரை பிரிந்து, தனியாக வசித்து வரும் பிரியங்கா குப்தா என்பவர், தன் மகள் கரீமாவுக்கு பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தில், தந்தையின் பெயரை குறிப்பிடாததால், பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். 'என்னையும், என் மகளையும் கைவிட்டு சென்ற கணவனின் பெயரை, என் மகளின் பாஸ்போர்ட்டில் குறிப்பிட விருப்பமில்லை' என, பிரியங்கா குறிப்பிட்டார்; அதிகாரிகள், அதை ஏற்கவில்லை. இதையடுத்து, அவர், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகாவுக்கு மனு அளித்தார்.
இந்நிலையில் பிரியங்காவுக்கு, அமைச்சர் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™