Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மூளைக்குணவு

Posted: 16 Jul 2016 09:07 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

விகடன் வெளியீடு - அக்பர்

Posted: 16 Jul 2016 08:46 AM PDT

விகடன் வெளியீடு - அக்பர் புத்தகம் கிடைக்குமா, நண்பர்களே ? நன்றி

உலக சினிமா - செழியன்

Posted: 16 Jul 2016 08:44 AM PDT

உலக சினிமா - செழியன் புத்தகம் (பகுதி 1) கிடைத்தால் இனிது .. கிடைக்குமா, நண்பர்களே ? நன்றி

தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!

Posted: 16 Jul 2016 08:44 AM PDT

நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப் பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். உணவுப்  பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான  டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்த  டீக்கடைகள் ...

பாலகுமாரனின் மெர்குரி பூக்கள்

Posted: 16 Jul 2016 08:40 AM PDT

ஹலோ ஹலோ ஹலோ ... பாலகுமாரனின் மெர்குரி பூக்கள் புத்தகம் இருந்தால் கொடுக்கவும். நன்றி. அனைத்து லின்க் தேடி பார்த்து விட்டேன் கிடைக்கவில்லை https://tamilmagazinespdf.wordpress.com/2013/02/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82/

விருந்தினர்களுக்கு எப்பவும் ரசம் கண்டிப்பா உண்டு!

Posted: 16 Jul 2016 08:39 AM PDT

-
எங்க வீட்ல சாப்பிடும் விருந்தினர்களுக்கு
எப்பவும் ரசம் கண்டிப்பா உண்டு!
-
ஈசியா ஜீரணம் ஆகணும்னா?
-
இல்ல, ஈசியா தட்டை கழுவணும்னு...!
-
பாப்பனப்பட்டு வ.முருகன்
-
----------------------------------------
-
அமைச்சரே...நான் சுயசரிதை எழுதப் போகிறேன்..!
-
அதெப்படி மன்னா...தங்களால் பயசரிதை தானே
எழுத முடியும்...!
-
பர்வின்யூனூஸ்
-----------------------------------------

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 16 Jul 2016 06:11 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

கைகேயியின் சகோதரர்கள் பெயர் தெரியுமா?

Posted: 16 Jul 2016 06:07 AM PDT

இராமாயணத்தில் கைகேயியின் தந்தை பெயர் அஸ்வபதி என்றும், அவருக்கு 7 சகோதரர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கைகேயியின் 7 சகோதரர்கள் பெயரும், தாயின் பெயரும் யாருக்கேனும் தெரியுமா?

நன்றி

soplangi

எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா...!

Posted: 16 Jul 2016 06:02 AM PDT

சார் எம் பொண்டாட்டி எது கிடைச்சாலும் மேல வீசுறா... எத்தனை நாளா..? மூனு மாசமா சார்... அதுக்கு இப்ப கம்ளைண்ட் குடுக்கிற... இப்ப தான் சார் குறி பார்த்து வீசுறா..!! - --------------------------------- - நள்ளிரவில் வீட்டுக்குள் நுழைந்த திருடனை அடித்து உதைத்து பிடித்து விட்டீர்களே ... வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது.. - லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப்புட்டேனுங்க..!! - ------------------------------------

சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

Posted: 16 Jul 2016 05:43 AM PDT

திருவள்ளூர்: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் சிலர் கூறுகையில், 'டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல் விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 21 வயதுக்கும் குறைவாக ...

அன்றாடப் பூ

Posted: 16 Jul 2016 05:39 AM PDT

- வெற்றுப் பாறைகள் வழி மறிக்கின்றன கால வெளியில் நதியின் நடை ஒரு தாளகதி திருகி முருகி விரையும் காலத்தின் ஏகச் சுழற்சியில் - கண்டங்கள் தாழ்ந்தும் மலைகள் ஆழ்ந்தும் சிகரங்கள் உயர்ந்தும் சமுத்திரம் பொங்கியும் யுகாந்தம் பிரளயச்சீற்றத்தில் பஃருளியாறும் சரஸ்வதி நதியும் போய்ச் சேர்ந்ததெங்கே... - தன் பாட்டுக்குச் சுழல்கின்றது பூமி அன்றாடம் பூக்கும் பூப்போல! - ----------------------------- கவிஞர் எஸ்.ஆர்.ஜி.சுந்தரம் பூஞ்சிட்டுகள் ஆட தேன் சொட்டும் பாடலகள் கவிதை தொகுப்பிலிருந்து -

துருக்கியில் தமிழக மாணவ, மாணவிகள் 20 பேர் தவிப்பு

Posted: 16 Jul 2016 02:54 AM PDT

துருக்கியில் நடைபெறவிருந்த பள்ளி ஒலிம்பிக்ஸ் போட்டிக்காக சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 20 மாணவ, மாணவிகள் அங்கு ஏற்பட்ட திடீர் ராணுவக் கிளர்ச்சியில் சிக்கிக் கொண்டுள்ளனர். - அவர்கள் நிலை குறித்து இங்குள்ள அவரது பெற்றோர்கள் பதற்றத்தில் உள்ள நிலையில், அங்கிருந்து பிரியதர்ஷினி சுரேஷ் என்ற சென்னை முகப்பேரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவர் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். - " நாங்கள் அனைவரும் டிராப்சோனில் நிறுவப்பட்டுள்ள விளையாட்டு கிராமத்தில் தங்கியுள்ளோம். ...

அடடே !..ஆங்கிலத்தில் இவ்வளவு வேடிக்கை உள்ளதா ?

Posted: 15 Jul 2016 11:51 PM PDT

ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி (English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார். அதை நிரூபிக்கும் முகமாக ஒரு காகிதத்தை எடுத்து GHOTI என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். எல்லோரும் கோட்டி என்று உச்சரித்தார்கள். ஆனால் பெர்னாட்ஷா சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH என்று. ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள் ஆகிய GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு F, அதேபோல் WOMEN என்கிற வார்த்தையில் O என்கிற எழுத்து I என்கிற உச்சரிப்பைத் தருகிறது ...

கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை!

Posted: 15 Jul 2016 11:49 PM PDT

- "12ஆவது வயதில் நான் ஒரு திருநங்கை என்பது தெரிந்தவுடன் தற்கொலை செய்து கொள்ள தோன்றியது. ஆனால் வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் என்னுள் எழுந்ததால் கல்லூரி படிப்பை முடித்து திருநங்கைகளுக்காக பாடுபட வேண்டும் என்று தீர்மானித்ததின் விளைவு இன்று எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது'' என்கிறார் அக்கை பத்மாஷாலி. திருநங்கைகளுக்காக "ஆன்டேட்' என்ற அமைப்பை உருவாக்கி சேவை செய்வதை பாராட்டி, பாரதிய வித்யாபவனின் "இந்தியன் விர்ச்சுவல் யூனிவர்சிட்டி ஃபார் பீஸ் அண்ட் எஜூகேஷன்' ...

தங்க சேமிப்பு பத்திரம் 18ம் தேதி வெளியீடு

Posted: 15 Jul 2016 11:06 PM PDT

புதுடில்லி : மத்திய அரசு, நான்காவது தவணையாக, வரும் 18ம் தேதி, தங்க சேமிப்பு பத்திரங்களை வெளியிடுகிறது. – நடப்பு நிதியாண்டில், முதன் முதலாக மேற்கொள்ளப்படும் இவ்வெளியீட்டில், குறைந்தபட்ச முதலீடு, 2 கிராமில் இருந்து, 1 கிராம் ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவர், அதிகபட்சமாக, 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு, 2.5 சதவீதம் ஆண்டு வட்டி அடிப்படையில், அரையாண்டிற்கு ஒருமுறை வட்டித் தொகை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட, தங்க பத்திரங்களில், 5, 6 மற்றும் 7 ஆண்டுகளில், ...

தீயில் கருகிய இளம் ரோஜாக்கள்

Posted: 15 Jul 2016 08:59 PM PDT

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் கருகிய இளம் மொட்டுகளுக்கு 12 ஆண்டு நினைவு அஞ்சலி கருகிப்போன பிஞ்சுகளின்   நீங்காத நினைவுகள் உதிர்ந்துவிட்ட பூக்களின் உலராத வாசனை இழந்த அப்பாக்களின் நீங்காத பொழுதுகள் இதயம் துடிக்கும் வரை மாறாது நினைப்பு அனல் தாயின் பசியில் அன்பான பிஞ்சுகள் காலம் இழப்பின் காயத்தை மாற்றும் காலம் கடந்தாலும் நீங்காது நினைவுகள்…. தீயில் கருகிய ரோஜாக்களுக்கு ஒரு நினைவஞ்சலி....

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

Posted: 15 Jul 2016 08:38 PM PDT

டார்ஜிலிங் அருகே குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டார்ஜிலிங்கில் தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை இன்று வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார். இதையடுத்து, தில்லி செல்வதற்காக டார்ஜிலிங்கிலிருந்து பஹ்டோக்ராவுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாகனத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தைத் தொடர்ந்து 6 பாதுகாப்பு வாகனங்கள் ...

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசு குறைப்பு

Posted: 15 Jul 2016 07:22 PM PDT

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்த புதிய விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த ஜூன் 30-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ...

வேலன்:-வித்தியாசமான தேடுபொறி -யூசி ப்ரவ்சர்.

Posted: 15 Jul 2016 06:13 PM PDT

தேடுதல் பொறிகள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசபடுகின்றன. அந்த வகையில் இந்த தேடுபோறி பல வித்தியாசங்களை கொண்டுள்ளது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்.இமெயில்.வாட்ச்அப் முதலியவற்றை முதலிலேயே கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நாம் நேரடியாக அதனுடைய தளத்திற்கு செல்லாம். அடுத்து வலது பக்கத்தில் ஸ்பிட் ...

சரியான போட்டி வேண்டும்! - ஒம்பிக்ஸ் செல்லும் டூட்டி சந்த்

Posted: 15 Jul 2016 04:47 PM PDT

- டூட்டி சந்த் - ஓட்டப்பந்தய வீராங்கனை. டூட்டி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். டூட்டியின் சொந்த மாநிலம் , ஒடிஸா. 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், டூட்டி கடைசி நிமிடத்தில் விலக்கப்பட்டார். இம்முறை இந்திய விளையாட்டு சம்மேளனம் டூட்டியின் உடலில் அளவுக்கு அதிகமாக ஆண்டிரோஜன் ஹார்மோன் இருப்பதாகக் காரணம் காட்டி டூட்டியை போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. அனைவரும் டூட்டி தவறு செய்து விட்டதாகப் பார்த்தார்கள். யாரும் டூட்டிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™