Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


'நோட்டீஸ்!' நத்தம் விஸ்வநாதன் மீதான புகாரில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்... மின் வாரியத்திற்கு ரூ.25,000 கோடி இழப்பு ஏற்படுத்திய விவகாரம்

Posted: 15 Jul 2016 09:35 AM PDT

சென்னை: சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததன் மூலம் மின் வாரியத்திற்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோருக்கு எதிரான புகாரை, சி.பி.ஐ.,க்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.இது தொடர்பாக, சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த எஸ்.பி.சீனிவாஸ் தாக்கல் செய்த மனு:

ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு
சூரிய மின்சக்தி உற்பத்தி ...

காவிரி வழக்கில் இருந்து நீதிபதி திடீர் விலகல்

Posted: 15 Jul 2016 09:42 AM PDT

புதுடில்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட் அமர்வில் இருந்து விலகுவதாக, நீதிபதி ஜே.சலமேஸ்வர் தெரிவித்து உள்ளார்

.காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வது குறித்து, காவிர் நடுவர் மன்றம், 2007, பிப்ரவரி, 5ல் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகா, தமிழகம், கேரளா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு விடுமுறை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள், நீதிபதிகள்,
ஜே.சலமேஸ்வர், சிவகீர்த்தி சிங், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று ...

பிரான்சில் பொதுமக்கள் கூடியிருந்த நிகழ்ச்சியில் பயங்கரவாதி.. வெறியாட்டம் ! .லாரியால் மோதி குழந்தைகள் உட்பட 84 பேரை கொன்றான்

Posted: 15 Jul 2016 09:43 AM PDT

பாரிஸ், :பிரான்ஸ் நாட்டில், 18 மாதங்களில் மூன்றாவது முறையாக, மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது.

அங்குள்ள நைஸ் நகரில், தேசிய தினத்தையொட்டி இரவில் வாணவேடிக்கையை பார்ப்பதற்காக கூடியிருந்தவர்கள் மீது பயங்கரவாதி ஒருவன் கன்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்று, மக்களை கொடூரமாககொன்று குவித்தான். உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த கொடூர தாக்குதலில், 84 பேர் கொல்லப்பட்டனர்; 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.ஐரோப்பிய நாடான, பிரான்சில், 'பாஸ்டில் தினம்' எனப்படும் தேசிய தினம், ஜூலை, 14ல் கொண்டாடப்படுகிறது. அதன்படி, அந்நாடு ...

மாநிலங்கள் கவுன்சில் கூட்டத்தில் இன்று பெரும் புயல் வீசுமா?

Posted: 15 Jul 2016 09:59 AM PDT

புதுடில்லி, : பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் இன்று நடக்க உள்ள மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில், மிகப்பெரிய புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுடன் மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளுக்கும் தீர்வு காணும் வகையில், 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது, மாநிலங்கள் இடையேயான கவுன்சில் கூட்டம்.பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்ததும், 2014ல், இதில் மாற்றம் செய்யப்பட்டு, மண்டல அளவிலான அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.இந்நிலையில், 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இன்று நடக்கவுள்ள மாநிலங்களுக்கு இடையேயான ...

தமிழக மருத்துவ மாணவர் டில்லியில் கொலையா : சி.பி.ஐ., விசாரணை கோரி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 10:16 AM PDT

டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவ கல்லுாரியில், எம்.டி., படிப்பில் சேர்ந்த ஒரு வாரத்தில், தமிழக மாணவர் சரவணன், மர்மமான முறையில் இறந்தார். இது கொலையே என்ற சந்தேகம் கிளம்பி உள்ள நிலையில், சி.பி.ஐ., விசாரணை கோரி, தமிழகம் முழுவதும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூரைச் சேர்ந்தவர், டாக்டர் சரவணன், 26; மதுரையில், எம்.பி.பி.எஸ்., முடித்த இவருக்கு, எம்.டி., பொது மருத்துவ படிப்பில், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இடம் கிடைத்தது. ஜூலை 1ம் தேதி, படிப்பில் சேர்ந்தார். 9ம் தேதி இரவு, மர்மமான முறையில், தன் அறையில் இறந்து கிடந்தார். அவரது அறை திறந்து கிடந்தது; கையில், ...

'உதய்' திட்டம் குறித்து விவாதிக்க குழு மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஜெ., உறுதி

Posted: 15 Jul 2016 10:33 AM PDT

சென்னை,:'உதய்' திட்டத்தில் தமிழகம் இணைவது குறித்து விவாதிக்க, தமிழக மின்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை, டில்லி அனுப்புவதாக, மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார்.

மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், நேற்று மாலை, 5:25 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். அவரை மின்வாரிய தலைவர் சாய்குமார் மற்றும் அதிகாரிகள் வரவேற்று, முதல்வர் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அரை மணி நேரம், முதல்வருடன் மின் திட்டங்கள் குறித்து, பியுஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அவரிடம் முதல்வர் கூறியதாவது:தமிழகம் மின் உற்பத்தியில் ...

உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்: பாக்., பிரதமருக்கு இந்தியா கண்டனம்

Posted: 15 Jul 2016 10:36 AM PDT

புதுடில்லி: 'பர்ஹான் வானி கொல்லப்பட்டதைக் கண்டித்து, ஜூலை, 19ம் தேதி கறுப்பு தினமாக அனுசரிக்கப்படும்' என்ற, பாகிஸ்தானின் அறிவிப்புக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

'இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என, கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி, சமீபத்தில் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் நடந்த வன்முறைகளால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வானி கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்ததற்கு, இந்தியா ...

முதல்வர்கள் மாநாட்டில் ஜெ.,:பங்கேற்க விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted: 15 Jul 2016 10:39 AM PDT

சென்னை: 'தமிழக மக்கள் நலனுக்காக, முதல்வர்கள் மாநாட்டில், ஜெயலலிதா கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:பிரதமர் மோடி தலைமையில், டில்லியில், இந்தியாவின் அனைத்து முதல்வர்களும் கலந்து கொள்ளும், மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.பத்து ஆண்டுகளுக்குப் பின், நடக்கவிருக்கும் இந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், முதல்வர்ஜெயலலிதா கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தமிழக பிரச்னைகள் குறித்து அந்த கூட்டத்தில் எடுத்து வைத்து, தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மைகளை பெற ...

ரேஷனில் மண்ணெண்ணெய் விலை உயருமா தமிழகத்தில் நேரடி மானிய திட்டம் 'நோ'

Posted: 15 Jul 2016 10:59 AM PDT

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மண்ணெண்ணெய் விலையை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியதால், தமிழக ரேஷன் கடைகளில் அதன் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் மண்ணெண்ணெய்க்கு, நேரடி மானிய திட்டம் அமல்படுத்த வாய்ப்பில்லை.தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், 1 லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடுகளில், இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு, மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.ஒரு சிலிண்டர் வைத்திருப்பவருக்கு, 2 லிட்டர்; சிலிண்டர் இல்லாத குடும்பங்களுக்கு, மாநகராட்சியில், 6 ...

கோவை முழுவதும் இரவில் போலீசார் திடீர் சோதனை

Posted: 15 Jul 2016 12:33 PM PDT

கோவை: கோவையில் ரயில் நிலையம், விமான நிலையம், பஸ் நிலையங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மாநகர போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கிய இடங்களில் ரோந்து பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். பணி முடித்து வீட்டிற்கு சென்றவர்களும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை ...

தன்னுயிரை கொடுத்து எஜமான் குடும்பத்தை காப்பாற்றிய ஐந்தறிவு ஜீவன்

Posted: 15 Jul 2016 01:28 PM PDT

புவேனஸ்வரம்: ஒடிசாவில் எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக 4 நாகப்பாம்புகளுடன் சண்டையிட்ட டாபர்மேன் இன நாய் பரிதாபமாக உயிரிழந்தது. ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம் சேப்கபூர் கிராமத்தை சேர்ந்தவர் திபாகர் ரய்தா, இவர் தனது வீட்டில் டாபர் மேன் இனத்தை சேர்ந்த நாயினை செல்ல பிராணியாக வளர்த்து வந்தார். தனது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராக டாபர்மேன் வீட்டின் காவலாளியாக இருந்தது.இந்நிலையில் கடந்த 11-ம் தேதியன்று காட்டுப்பகுதியில் இருந்து 4 நாகப்பாம்புகள்ல திபாகர் ரய்தாவின் வீட்டிற்குள் புகுந்தன. இதனை பார்த்த டாபர்மேன், 4 பாம்புகளையும் கடித்து ...

துருக்கியில் ராணுவம் ஆட்சியை பிடித்தது?

Posted: 15 Jul 2016 02:12 PM PDT

அங்காரா: துருக்கி நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.துருக்கியில் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கிறது. பிரதமராக பினாலி எல்ட்ரீம் உள்ளார். நேற்று துருக்கி டி.வி.சானல்களில் பரபரப்பு செய்திகள் வெளியாயின. இதில் துருக்கி ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிட்டதாக கூறப்பட்டது. இது குறித்து மற்றொரு டி.வி.சானல்ஒன்றிற்கு பிரதமர் பேட்டியளித்தார். அதில் எனது ஆட்சியை கவிழ்த்து ராணுவம் கைப்பற்ற முயற்சி செய்கிறது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ராணுவத்தை தூண்டிவிடும் பின்னணியில் உள்ளவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ...

துருக்கியில் ராணுவப் புரட்சி; ஆட்சியை கைபற்றியதாக ராணுவம் அறிவிப்பு

Posted: 15 Jul 2016 02:59 PM PDT

அங்காரா : துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாக ராணுவம் அறிவித்துள்ளது.

துருக்கியில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. ஆட்சி அதிகாரத்தை கைபற்றியதாகவும், ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித்தது. மேலும் நாடு முழுவதும் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் முக்கிய பாலங்களான போஸ்பரஸ், சுல்தான் முகமது ஆகிய பாலங்கள் மூடப்பட்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசு அலுவலகங்களிலும் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™