Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இலவச மின்சாரம்

Posted: 15 Jul 2016 10:52 AM PDT

இலவச மின்சாரம் சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை , மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது . அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை . இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் . போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724 இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396 கணிசமாக தொகை குறைந்து இருக்கு ரமணியன்

ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்

Posted: 15 Jul 2016 09:14 AM PDT

நான் ஈகரையில் புதிய உறுப்பினர் , ஸ்ருதி வினோவின் நாவல்கள் பிடிஎப் போர்ம் or நோவேல்ஸ் எங்க ரீட் பண்ணலாம் அல்லது நோவேல் லின்க்கை தாருங்கள் pls .

அடடே… ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!

Posted: 15 Jul 2016 08:29 AM PDT

- ரவி கம்ப்யூட்டரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பக்கமாக வந்த ரகு, ரவியைப் பார்த்து புன்னகைத்தார். "சார்… உங்களுக்காகத்தான் காத்துக் கிட்டிருந்தேன். குண்டு 'டி', குச்சி 'டி' சந்தேகத்தை இன்னைக்கு நீங்க தீர்த்தே ஆகணும்…" என்றபடி இருக்கையை விட்டு எழுந்தான் ரவி. அவன் தோளில் கைபோட்டபடி வெளியே நடந்த ரகு, வரவேற்றையில் அமர்ந்தார்."ரவி… ஆங்கிலத்தைப் பொறுத்தவரை, எழுத்தோட ஒலி அடையாளத்துக்கு குச்சி; குண்டு; பெரியது; சின்னது-ன்னெல்லாம் சொல்லக்கூடாது. உதாரணத்துக்கு, ஒரு பெண்ணோட பேரு, ...

நினைவு – ஒரு பக்க கதை

Posted: 15 Jul 2016 08:17 AM PDT

பல வருடங்களுக்குப் பிறகு சொந்த கிராமத்துக்கு ஆர்வத்துடன் போனாள் வேணி. 'சென்னைக்கு வந்து குடியேறும்போது, கிராமத்தில் அப்பா விற்றுவிட்ட நம்ம வீட்டை ஒரு பார்வை பார்க்கணும். – இப்போதெல்லாம் வீட்டை வாங்கினதும் இடிச்சு உருவையே மாத்திடறாங்க. சின்ன வயசில நான் ஓடியாடின கல்யாணக் கூடம் இப்ப எந்த ரூபத்தில் இருக்கோ? சிறுவயதில் விளையாடிய பொம்மைகளை எல்லாம் பரணில் வைத்துவிட்டு வந்தோமே, அதெல்லாம் எந்த காயலான் கடைக்குப் போனதோ? – சுவரில் மாட்டியிருந்த பழைய குடும்பப் படங்களை எல்லாம் அதனுடைய அருமை தெரியாமல் ...

உதவி..! – ஒரு பக்க கதை

Posted: 15 Jul 2016 08:16 AM PDT

ஓய்வு பெற்ற சுந்தரேச வாத்தியார், தனக்கு வந்த பி.எஃப். பணத்தில், வீட்டிற்கு முன் நான்கைந்து கடைகளைக் கட்டி வாடகைக்கு விட ஏற்பாடு செய்தார். ரோட்டுக்கு மேலேயே இருந்ததால் அனைத்துக் கடைகளுக்கும் உடனே ஆள் வந்தார்கள். கடைசியாக ஒரு கடைக்கு, சுந்தரேச வாத்தியாரின் பழைய மாணவர்கள் இருவரும் போட்டி போட்டனர். ஒன்று மொபைல் கடை, இன்னொன்று சலூன் கடை… ரொம்பவும் யோசித்த பின் கடைசியில் சலூன் கடைக்கே வாடகைக்கு விட்டார் வாத்தியார். ''என்னப்பா நீங்க, டீசன்ட்டா மொபைல் கடைக்கு கொடுக்காம, இப்படி சலூன் கடை ...

அனுபவத் துளிகள்

Posted: 15 Jul 2016 08:09 AM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க - விஜயலட்சுமி பந்தையன்.

Posted: 15 Jul 2016 08:05 AM PDT

-- உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வழிகளை சொல்கிறார் மனோசக்தி நிபுணர் விஜயலட்சுமி பந்தையன். * மற்றவர்களது உணர்வுகளை மதியுங்கள். சந்தேகத்துக்கு குட்பை சொல்லுங்கள் * எப்பொழுதும் மென்மையான வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். அதனால் உங்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமல் நீங்கள் என்றும் இளமையாக இருப்பீர்கள். இந்த ரகசியத்தை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள். - * கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்களை பெரிய சைஸ் ரப்பரை எடுத்து வேகவேகமாக மனதிலிருந்து அகற்றிவிடுங்கள். - * உங்கள் வாழ்வில் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (168)

Posted: 15 Jul 2016 07:58 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

தூக்கணாங் குருவிக் கூடு !

Posted: 15 Jul 2016 07:45 AM PDT

தூக்கணாங் குருவிக் கூடு ! தூக்கணாங் குருவி (Ploceus philippinus)   கட்டும் கூடு  அதிசயமானது !  பார்க்கப் பார்க்கக் கொள்ளை  இன்பம் தருவது ! சிறந்த கவிதையைப் படிக்கும் இன்பத்தை ஒரு தூக்கணாங் குருவிக்கூடு நமக்குத் தந்துவிடும் ! தூக்கணாங் குருவி கட்டும் கூடானது பல நிலைகளில் (stages) அமையும் ! கீழே காணப்படும்    கூடு அவற்றில் ஒரு   நிலை ! நாகை மாவட்டத்து ஆனாங்கூர் என்ற ஊர்த்     தென்னை மரத்திலிருந்து  விழுந்தது  இது ! கூட்டின் மேற்புற நார் ஒன்றை உருவி எளிதில் எடுத்துவிடலாம்  என்று நினைக்காதீர்கள் ...

மூச்சில் முன்னூறு விஷயம்

Posted: 15 Jul 2016 07:16 AM PDT

- மூச்சு வாங்குது. - மூச்சு திணறுது. - மூச்சுவிட கஷ்டமா இருக்கு. - மூச்சு நின்னுடுச்சு. இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு' என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்' என்றும் நாம் சொல்வதுண்டு. நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை. சுவாசித்தல், நுரையீரல் ...

ரமணி ஹைக்கூ

Posted: 15 Jul 2016 06:38 AM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 15 Jul 2016 06:28 AM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்

Posted: 15 Jul 2016 05:13 AM PDT

- மகாராஷ்ட்டிர மாநிலம் புனேயில் தங்க சட்டை அணிந்து சென்றவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலையில் ஈடுபட்டவர் யார் என இன்னும் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை . புனேயை சேர்ந்ந்த பிரபல பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் தத்தாத்ரேயா புகே. இவர் வீட்டில் இருந்து 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தி செல்லப்பட்டார். இரவில் ஒரு இடத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ...

தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Posted: 15 Jul 2016 05:07 AM PDT

--------------- சென்னை: தமிழகத்தில் வரும் 17, 18ம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகே வானில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக ...

உடல் மெலிய வைக்கும் உபகரணம் ..!

Posted: 15 Jul 2016 05:02 AM PDT

- @udaya_Jisnu ''மச்சி, சாக்லெட் சாப்பிட்டதும் மயக்கமா வருதே… போதை சாக்லெட்டா இருக்குமோ?'' ''நல்லா பாரு நாயே! அது எக்ஸ்பயரி ஆகி ரெண்டு வருஷம் ஆகுது!'' – ————————————- – @arattaigirl கவலையைப் போல் உடல் மெலிய வைக்கும் உபகரணம் எதுவுமில்லை! – ————————————— @teakkadai வேலை இழப்புக்குப்பின்தான் அனாவசிய செலவுகள் எவ்வளவு செய்திருக்கிறோம் என்பதே உறைக்கிறது. – ——————————————— – ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்பொழுதே மனைவிகள் மனநிலையை கெஸ் பண்ணலாமே! – ''ஏங்க! அத்தை சொன்னாங்க…'' – ''ஏங்க! ...

வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

Posted: 15 Jul 2016 05:01 AM PDT

நாசாவின் ஜுனோ விண்கலம், வியாழன் கிரகத்தின் 3 நிலவுகளை முதல்முறையாக படம்பிடித்து பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வியாழன் கிரகத்தை ஆராய் வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2011, ஆகஸ்டில் கேப்கனா வெரலில் இருந்து ஜுனோ விண்கலத்தை செலுத்தியது. இந்த விண்கலம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பயணித்து, கடந்த 4-ம் தேதி வியாழனை அடைந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த உயர் திறன் கொண்ட கேமரா மூலம் 43 லட்சம் கி.மீ தொலைவில் இருந்தபடி ...

தேவாரம் :திருவாசகம் தேவை

Posted: 15 Jul 2016 05:01 AM PDT

தேவாரம்-விளக்கவுரை :
திருவாசகம் - விளக்கவுரை
இருந்தால் கொடுக்கவும். Pdf வடிவில் கிடைக்கவில்லை. இருந்தால் கொடுக்கவும். நன்றி...

பிரான்ஸ்: கூட்டத்தில் டிரக்கை மோதச் செய்து தாக்குதல்; 80 பேர் பலி

Posted: 15 Jul 2016 04:58 AM PDT

நைஸ் : பிரான்சில் நைஸ் நகரில் பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் கண்டய்னர் லாரியை ஏற்றியதில், 80 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நைஸ் நகரில் நடந்த வாண வேடிக்கையை காண மக்கள் பலர் குழுமியிருந்தனர். இந்நிலையில் திடீரென வந்த கண்டெய்னர் லாரி ஒன்று, மக்கள் குழுமியிருந்த கூட்டத்தை நோக்கி பாய்ந்தது. இத்தாக்குதலில் 80 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ...

ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால்,...

Posted: 15 Jul 2016 04:56 AM PDT

- பாரதியாரோ, "எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங்கே இளைப்பில்லை காண்…" என்றார். ஆனால் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழியும் உண்டு. ஆணுக்கு பெண் அறிவில் நிகர் என்றால், இன்னும் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? சத்குருவிடம் இதைக் கேட்டபோது… வளைகுடா நாடுகளுக்கு வந்திருந்த ஒரு அமெரிக்க வீரன் அங்கே ஒரு வித்தியாசமான காட்சியைப் பார்த்தான். உள்நாட்டைச் சேர்ந்த ஒருவன் தெருவில் நடந்து வர, இருபதடி இடைவெளிவிட்டு நான்கு பெண்கள் அவனைத் தொடர்வதைக் கவனித்தான். விசாரித்தான். "நான்கு பேரும் ...

ஒருவனின் குணம் அறிய…

Posted: 15 Jul 2016 04:55 AM PDT

தமிழகம் மூன்று பக்கம் டாஸ்மாக்காலும், ஒரு பக்கம் கொலை கொள்ளையாலும் சூழப்பட்டுள்ளது. – – அம்புஜா சிமி – ——————————————– – பாலத்தில் செல்லும் ரயில் பெட்டிகளைப் பார்த்து ''பெரிய மௌத் ஆர்கன் போல இருக்கிறது'' என்கிறது குழந்தை. எனக்குள் கரை தொடுகிறது பாலத்தின் கீழ் சுழிக்கும் பெருநதி. – – கலாப்ரியா – ——————————————— – எங்க ஸ்மிர்தி அக்காவைத் தூக்கிக் கடாசிட்டு யாரோ ஒரு தாடிக்காரரை அங்க போட்டாங்க. டெக்ஸ்டைல் மினிஸ்ட்ரில போட்டு ஒண்ணுமில்லாம பண்ணிரலாம்னு பாக்கறாங்க. அதான் நடக்காது. ...

வலி – ஒரு பக்க கதை

Posted: 15 Jul 2016 04:47 AM PDT

''பெரியவரே! இதெல்லாம் ஓல்டு மாடல் போன்… இப்ப பார்ட்ஸ் கிடைக்காது. அதுவுமில்லாம இப்பல்லாம் யாரும் போனை ரிப்பேர் பண்றதில்ல. தூக்கிப் போட்டுட்டு வேற வாங்கிடுங்க!'' – – செல்போன் கடைக்காரர் அலட்சியமாய் சொல்லிவிட்டு கடையை சாத்திக் கொண்டிருந்தார். பெரியவர் நகரவில்லை. – ''என்னங்க..?'' ''நானும் மூணு கடைகள்ல கேட்டுட்டேங்க. யாரும் இதை ரிப்பேர் பண்ணித் தர ரெடியாயில்ல. என் பொண்ணு கண்மணி, ஆக்ஸிடென்ட் ஆவறதுக்கு முந்தி எனக்கு அனுப்பிய வாய்ஸ் மெயில் இதுலதான்யா இருக்கு. செத்துப் போன எம் பொண்ணோட குரலை ...

ஹிரோ…! – ஒரு பக்க கதை

Posted: 15 Jul 2016 04:33 AM PDT

டாப் ஸ்டார் தமிழரசனை வைத்து, புதிய படமொன்றை இயக்கிக் கொண்டிருந்தார் பிரபல இயக்குநர் ராகவேந்தர். படத்தை அடுத்த மாதமே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்ததால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ராகவேந்தரின் யூனிட் ஆட்கள் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர். – கேமராமேனுடன் அடுத்த ஷாட் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த ராகவேந்தரை நெருங்கிய அந்த வடநாட்டு ஹீரோயின், தயங்கித் தயங்கிப் பேசினாள். – ''சார்! நாளைக்கு காலை மும்பைல ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் இருக்கு, என் காட்சிகளை எல்லாம் இன்னைக்கு ராத்திரியே முடிச்சிட்டா நல்லாயிருக்கும்!''சற்று ...

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிக்கான கால அட்டவணை அறிவிப்பு

Posted: 15 Jul 2016 04:24 AM PDT

மும்பை, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 3, 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் போட்டி நவம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. 2-வது டெஸ்ட் 17 ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3-வது டெஸ்ட் ...

காதல் – ஒரு பக்க கதை

Posted: 15 Jul 2016 04:15 AM PDT

''பொறக்குறது பையன்னா மோகன்… பொண்ணுன்னா மோகனா!'' என மேடிட்ட வயிற்றை நீவிக்கொண்டே அவள் சொல்ல, அவன் மனதில் ஃப்ளாஷ்பேக் ஓடியது. – அவர்கள் சாதி கடந்து மணம் செய்து ஊரை விட்டு ஓடி வந்தவர்கள். அவள் உயர்ந்த சாதியாம். அதனால் அவள் சாதிக்காரர்கள் அவனை வேட்டையாட வெறியோடு அலைந்தார்கள். – தொலைதூர ஊரில் ஒரு நிறுவனத்தில் அவன் வேலையில் சேர்ந்தான். நிம்மதி நீடிக்கவில்லை. ஒரு நாள் அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து அங்கும் வந்துவிட்டனர். – முதலாளியைப் பார்த்த ஒருவன், ''அட… ஐயாவோட கம்பெனியா இது? ஐயாவும் ...

இந்தியாவின் சூப்பர் முதல்வர் இவர்தானாம்!

Posted: 15 Jul 2016 04:10 AM PDT

நாட்டில் மக்களுக்காக செயல்படுத்தும் நலத்திட்டங்களை மையமாக வைத்து, நாட்டின் மிகச்சிறந்த முதல்வர் யார் என்பதை தெரிவு செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். ஐ.பி மற்றும் தனியார் ஏஜென்சிகள் இந்த பணியில் ஈடுபட்டு வந்தன. கடந்த ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையில் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது சூப்பர் முதல்வர் யார் என தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதலிடத்தை பிடித்துள்ளார். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 'பகீராதா' திட்டத்தின் கீழ், ...

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு

Posted: 15 Jul 2016 03:57 AM PDT

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'கர்ம வீரர்' காமராஜரின் பிறந்தநாள். ஜூலை 15: கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் இன்று.. சிறப்பு பகிர்வு காமராஜரின் பிறந்தநாள் இன்று என்று நமக்கெலாம் தெரியும். காலா காந்தி என்று அறியப்பட்ட பெருமனிதர் அவர். சங்கரர், பட்டினத்தார் ஆகியோரால் கூட துறக்க முடியாத அன்னை பாசத்தை துறந்தவர் அவர். அம்மா அருகில் இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்து ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று அவர்களை அருகேயே அண்ட விடவில்லை அவர். விதிகளை மீறி அம்மாவுக்கு குழாய் இணைப்பு கொடுத்த ...

இளம் நெஞ்சே வா - நாவல்

Posted: 15 Jul 2016 12:42 AM PDT

லட்சுமி பிரபா அவர்களின் 'இளம் நெஞ்சே வா' நாவலை டவுன்லோட் செய்ய
https://www.mediafire.com/?7fyz7oaods1e37y

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 14 Jul 2016 11:38 PM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள்

Posted: 14 Jul 2016 11:36 PM PDT

ஓஷோ - விழிப்புணர்வுக் கதைகள்



மொழிபெயர்த்து மின்னூலாய் அளித்துள்ள ஓஷோ சித் எனும் ராஜகோபால் அவர்களுக்கு நன்றி.

http://s000.tinyupload.com/index.php?file_id=09761844370884921524

பூக்க மறந்த பூக்கள்

Posted: 14 Jul 2016 11:08 PM PDT

ஆயிரமாயிரம் கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கைகள் இவையாவும் நமக்கானவை அல்ல என்ற புரிதல்களோடு வாழ்வின் எதிர்பார்ப்புகள் ஒரு வேளை உணவின் தேடலில் உலகத்து இன்பத்தை எய்தும் மொட்டுகள்!! கயவர்களின் வன்ம பார்வைக்கு விலகி ஒதுங்க இடமில்லாமல் சாலையோரமாய் ஒதுங்கி தன் வதனத்தையும் தன் அந்தரங்கத்தையும் மறப்பதற்கு கிழிசல்களை தேடித் தேடித் தொலைவதிலும் கருகும் மொட்டுகள்!! இரவின் ஒளியில் இச்சையை தீர்த்துக் கொள்ள நினைக்கும் காம வெறியர்களின் பிடியில் விலகி நித்திரைக்கான ...

இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

Posted: 14 Jul 2016 10:13 PM PDT

துடில்லி: இந்தியாவில் விரைவு ரயில் திட்டம் கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதன்படி ஸ்பெயின் நாட்டு தயாரிப்பான டால்கோ நிறுவனத்தின் விரைவு ரயில் இன்ஜின் முதல் கட்ட சோதனை ஓட்டம் கடந்த 9-ம் தேதி மதுரா-பால்வால் இடையே உள்ள 84 கி.மீ. தூரத்தில் இயக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாம் கட்ட சோதனையில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு 38 நிமிடங்களில் இலக்கை அடைந்தது. இதன் மூலம் சோதனை வெற்றி கரமாக நடத்தப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட சோதனை ஓட்டம் ...

துபாயில் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு நிகழும்

Posted: 14 Jul 2016 10:03 PM PDT

துபாய்: வளைகுடா நாடான துபாய் உள்ளிட்ட நகரங்களில் கோடை வெப்பம் 64 டிகிரி செல்சியஸ் வெப்பம் போன்ற உணர்வு ஏற்படும்.என தகவல்கள் வெளியாகியுள்ளது. வளைகுடா நாடான யு.ஏ.இ. யில் அடுத்த வாரம் கோடை காலம் துவங்குகிறது. இங்கு சாதாரண நிலையில் அதிகபட்சமாக 45 முதல் 49 டிகிரி செல்சியஸ் வரை கோடை வெப்பம் நிகழும். இன்னும் ஓரிரு தினங்களில் கோடைகாலம் துவங்க உள்ளது. இது குறித்து அந்நாட்டு தேசிய வானிலை மற்றும் பூகம்பவியல் மையத்தின் (எம்.சி. எம்.எஸ்) நிபுணர் அகமது ஹபீப் , கூறியது,, துபாய்,அபுதாபி ...

குத்துப் பாட்டு பாட தெரிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி...!!

Posted: 14 Jul 2016 07:37 PM PDT

ஈசாப் கதைகள்

Posted: 14 Jul 2016 05:46 PM PDT

நண்பனா, பகைவனா? ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத் தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது. முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி ஊளையிட்டது. " வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக் கதற வைத்தாயே! சரியா? நியாயமா? " " நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும் தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? " " ஆம். உண்மைதான், உதவி கேட்டு ...

நம்பினால் நம்புங்கள்

Posted: 14 Jul 2016 05:36 PM PDT

– *ஐபேடில் சேகரிக்க முடிவதை விட ஆயிரம் மடங்கு அதிக தகவல்களை பூனையின் மூளையில் சேமிக்க முடியும்! - ------------------------------------------ - *உறவினர் என்றாலே பயங்கொள்ளும் ஃபோபியாவும் உண்டு. இதற்குப் பெயர் Syngenesophobia. - --------------------------------------------- *2015ல் சீனாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் கரப்பான் பூச்சிகளை 'மூளையிலிருந்து மூளைக்கு' தகவல் பரிமாறும் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தும் முயற்சியில் வெற்றி ண்டுள்ளனர். - ------------------------------------------ *ஈ ...

சுவாமி விவேகானந்தர்

Posted: 14 Jul 2016 05:08 PM PDT

சமுதாயமானாலும் அரசியலானாலும் அதன் அமைப்புக்கு அடிப்படையாக உள்ளது மனிதனின் நற்குணமே. பாராளு மன்றம் இதை வகுத்து ,அதைவகுத்து என்ற காரணங்களால் ஒரு நாட்டை நல்லது என்றோ , பெருமை மிக்கது என்றோ கூற முடியாது........
சுவாமி விவேகானந்தர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™