Tamil News | Online Tamil News |
- ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை
- லஞ்சம் வாங்கும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் இனி...தப்ப முடியாது!வழக்கு தொடர அரசு அனுமதி தேவையில்லை என ஐகோர்ட் அதிரடி
- விமானப் படையில் 'தேஜஸ்' போர் விமானம்... இணைந்தது: இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது
- மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- கறுப்பு பணத்தை மீட்க உதவுங்க! ஆடிட்டர்களிடம் பாரிக்கர் வலியுறுத்தல்
- அகிலேஷ் அரசுக்கெதிராக குற்றப்பத்திரிகை: உ.பி., மக்களிடம் வழங்க பா.ஜ., திட்டம்
- தடுப்பணை விவகாரத்தில் நெருக்கடி முற்றுகிறது!:பாலாறு பாலைவனமாகும் அபாயம்
- ஜனாதிபதி மாளிகையில் 3 பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு
- 'ஷீனாவை கழுத்தை நெரித்து கொன்றது இந்திராணிதான்'
- ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன?
- சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்
- ராபர்ட் வாத்ரா நிறுவனத்துக்கு நில மோசடி வழக்கில் 'நோட்டீஸ்'
- முழுவதும் மின்சார மயம் : இந்திய ரயில் வே திட்டம்
- ஒன்றன் பின் ஒன்றாக தமிழக நீர்நிலைகள் பாதிப்பு ஆந்திர பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகளால் நாசம்
| ஜாதி பிரச்னையில் சிக்கிய திருவள்ளுவர் சிலை வைக்க உத்தரகண்டில் இடமில்லை Posted: 01 Jul 2016 08:33 AM PDT உத்தரகண்ட் மாநிலத்தில், திருவள்ளுவர் சிலை அதிகாரப்பூர்வமாக நிறுவப்படாத தகவல் வெளியாகி உள்ளது. ஜாதிப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், திருவள்ளுவர் சிலைக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கங்கைக் கரையில்.:உத்தரகண்ட், ஹரித்து வாரில், கங்கை கரையில் தமிழ்ப் புலவர் திருவள்ளுவரின் சிலையை அமைக்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் முயற்சி மேற்கொண்டார். அதற்காக, சிலையுடன் கன்னியாகுமரியில் இருந்து, பல ஊர்கள் வழியாக யாத்திரை மேற்கொண்ட அவர், ஹரித்துவாரை கடந்த வாரம் அடைந்தார். அங்கு கங்கைக் கரையில், ஹர் கி பவுடி என்ற இடத்தில், திருவள்ளுவர் சிலை ... |
| Posted: 01 Jul 2016 10:42 AM PDT சென்னை:'அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க உத்தர விடும் முன் அரசிடம் இருந்து லஞ்ச ஒழிப்பு துறை கருத்துக்களை பெற்று பரிசீலிக்க தேவையில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையையும் ரத்து செய்துள்ளது. இதனால் லஞ்சம் வாங்கும் அரசு உயர் அதிகாரிகள், ஊழியர்கள் இனி தப்ப முடியாது என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது.கடந்த பிப்ரவரி மாதம், தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், கூறப்பட்டிருந்ததாவது:உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் ... |
| விமானப் படையில் 'தேஜஸ்' போர் விமானம்... இணைந்தது: இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டது Posted: 01 Jul 2016 10:54 AM PDT பெங்களூரு:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' என பெயரிடப்பட்டுள்ள, இலகு ரக போர் விமானம், இந்திய விமானப் படையில் நேற்று இணைந்தது. இந்த விமானம், இந்திய விஞ்ஞானிகளின், அயராத உழைப்பால் உருவானது. இந்திய விமானப் படைக்கு உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிக்கும் திட்டம், கடந்த, 1983ல் உருப்பெற்றது. பெங்களூரில் உள்ள அரசு நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. இதற்காக, 'ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜன்சி' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, ஆராய்ச்சிகள் நடந்து வந்தன.கடந்த, 2011ல் முதல் ... |
| மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 01 Jul 2016 11:02 AM PDT புதுடில்லி:'தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் மட்டுமே உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்' எனக் கட்டுப்படுத்த முடியாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ''வரும், 10ம் தேதி நடக்கவுள்ள நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை, 2ம் தேதியிலிருந்து மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்,'' என, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.இது தொடர்பாக, டாக்டர் சந்தீப் ... |
| கறுப்பு பணத்தை மீட்க உதவுங்க! ஆடிட்டர்களிடம் பாரிக்கர் வலியுறுத்தல் Posted: 01 Jul 2016 11:29 AM PDT புதுடில்லி:''கறுப்புப் பணத்தை மீட்கும் பிரதமர் மோடியின் முயற்சிகளுக்கு, சார்டர்ட் அக்கவுன்டன்ட்கள் உதவ வேண்டும் என மனோகர் பாரிக்கர் கறினார். உங்களுடைய வாடிக்கையாளர்கள் யாராவது கறுப்புப் பணம் வைத்திருந்தால், அதை தெரிவிக்கும்படி வலியுறுத்த வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் வலியுறுத்தினார்.சார்டர்ட் அக்கவுன்டன்ட் மையம் சார்பில், டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது: கறுப்புப் பணம் குறித்த தகவல்களை தாமாகவே முன்வந்து தெரிவிக்கும் சிறந்த வாய்ப்பு தற்போது ... |
| அகிலேஷ் அரசுக்கெதிராக குற்றப்பத்திரிகை: உ.பி., மக்களிடம் வழங்க பா.ஜ., திட்டம் Posted: 01 Jul 2016 11:40 AM PDT லக்னோ : உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் அரசுக்கெதிராக குற்றப்பத்திரிகை தயாரித்து, அதன் பிரதிகளை மாநிலம் முழுவதும், மக்களிடம் வழங்க, பா.ஜ., முடிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடக்கஉள்ளது. இம்முறை, மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், தேர்தல் பணிகளை பா.ஜ., இப்போதே தொடங்கி விட்டது. இது பற்றி, உ.பி., மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர், விஜய் பகதூர் கூறியதாவது: நான்காண்டு கால அகிலேஷ் ஆட்சியில், ... |
| தடுப்பணை விவகாரத்தில் நெருக்கடி முற்றுகிறது!:பாலாறு பாலைவனமாகும் அபாயம் Posted: 01 Jul 2016 11:49 AM PDT பாலாற்றில், ஆந்திரா தடுப்பணை கட்டும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. இப்பணியை தடுத்து நிறுத்தும் வகையில், வழக்கு தொடர்வது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகம்- - ஆந்திரா இடையே, பாலாறு தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கு காரணமாக, பாலாற்றில் எவ்விதமான கட்டு மானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என ஆந்திர அரசுக்கு, மத்திய நீர்வளத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதையும் மீறி, ஏற்கனவே, தமிழகத்தின் புல்லுார் என்ற இடத்திற்கு அருகே, ஆந்திர அரசு, 5 அடி உயரத்திற்கு தடுப்பணையை கட்டியுள்ளது. தற்போது, ... |
| ஜனாதிபதி மாளிகையில் 3 பகுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பு Posted: 01 Jul 2016 11:56 AM PDT புதுடில்லி : ஜனாதிபதி மாளிகையை முக்கிய சுற்றுலா தலமாக்கும் முயற்சியில், மேலும் மூன்று பகுதிகளை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து டில்லிக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஜனாதிபதி மாளிகையை பார்க்காமல் செல்வதில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவியேற்றபின், ஜனாதிபதி மாளிகையை பொது மக்கள் பார்வையிட அனுமதி அளித்தார். ஆண்டுதோறும், மாளிகையின் தோட்டத்தில் நடக்கும் மலர் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசிக்கின்றனர். சமீபத்தில், ஜனாதிபதி மாளிகையின் மேலும் மூன்று பகுதிகளை சுற்றுலா ... |
| 'ஷீனாவை கழுத்தை நெரித்து கொன்றது இந்திராணிதான்' Posted: 01 Jul 2016 12:20 PM PDT மும்பை : 'ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்தது இந்திராணிதான்' என, இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள டிரைவர், ஷியாம்வர் ராய் கூறினார். பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை நிர்வாகியாக இருந்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது இரண்டாவது மனைவி இந்திராணி, 43. இந்திராணிக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போரா. பீட்டர் முகர்ஜிக்கு முதல் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுல். ராகுலும், ஷீனாவும் காதலித்தனர். இதை ஏற்காத இந்திராணி, ஷீனா போராவை கொலை செய்தார். இந்த கொலைக்கு, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவும், கார் டிரைவர் ஷியாம்வர் ராயும் ... |
| ரஷ்ய விமானம் மாயம்: 10 பேர் கதி என்ன? Posted: 01 Jul 2016 12:28 PM PDT மாஸ்கோ : ரஷ்யாவில், காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடச் சென்ற விமானம், 10 பேருடன் மாயமானது. சைபீரியாவில் உள்ள காடுகளில் ஏற்பட்ட தீயை அணைக்க, 10 பேருடன், புறப்பட்டு சென்ற விமானம், திடீரென மாயமானது. அதைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏழு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காட்டுத்தீயால் அப்பகுதியில் பெரும் புகை மயமாக இருப்பதால், காணாமல் போன விமானத்தை தேடும் பணி சிக்கலாக இருப்பதாக தகவல்கள் ... |
| சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர் Posted: 01 Jul 2016 12:30 PM PDT
சென்னை: சென்னையில் மென்பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். |
| ராபர்ட் வாத்ரா நிறுவனத்துக்கு நில மோசடி வழக்கில் 'நோட்டீஸ்' Posted: 01 Jul 2016 12:34 PM PDT புதுடில்லி:ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில், நில மோசடியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய நிறுவனத்துக்கு, அமலாக்கத் துறை, மீண்டும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானிரில், 374.44 ஹெக்டேர் நிலம்,மோசடி செய்து போலியான பெயர்களில் பதிவு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், ராபர்ட் வாத்ராவுக்கு தொடர்புடைய, 'ஸ்கைலைட் ஹால்பிடாலிட்டி' என்ற நிறுவனத்துக்கு, அமலாக்கத் துறை கடந்த மாதம் ... |
| முழுவதும் மின்சார மயம் : இந்திய ரயில் வே திட்டம் Posted: 01 Jul 2016 01:06 PM PDT ரயில்பாதை அனைத்தையும் நுாறு சதவீத மின்சார மயமாக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் விரைவில் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்படி, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் 35,000 கி.மீ., துார ரயில் பாதைகளை மின்மயமாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான செலவு தான் ரயில்வே துறைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்தது. தற்போது மத்திய எரிசக்தி துறை அமைச்சகத்துடன் கைகோர்த்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஏனெனில், எரிசக்தி அமைச்சகம் செலவை ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளது. பின் ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து செலவுக்கான தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள முடிவு ... |
| ஒன்றன் பின் ஒன்றாக தமிழக நீர்நிலைகள் பாதிப்பு ஆந்திர பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகளால் நாசம் Posted: 01 Jul 2016 01:19 PM PDT கும்மிடிப்பூண்டி:தமிழக ஏரிக்கு வரும் நீர் வரத்து கால்வாயை ஒட்டி, ஆந்திராவில் உள்ள பழச்சாறு தொழிற்சாலையின் கழிவுகள் குவிக்கப்பட்டு வருவதால், தமிழக பகுதிக்கு உட்பட்ட நீர்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாசு அடைந்து, தண்ணீர் கருமை நிறத்துடன் காணப்படுவதால், கிராமவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பாலகுண்டா என்ற கிராமத்தில் தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையின் கழிவுகள், தமிழக எல்லையை ஒட்டியுள்ள பகுதியில், 10 ஏக்கர் பரப்பில் பள்ளம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 02,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |