Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா?

Posted: 01 Jul 2016 11:49 AM PDT

ஆகமமுறைப்படி வழிபாடுகள் செய்யவேண்டுமா? SRM பல்கலைக்கழகமும் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் இணைந்து "தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப்படிப்பை" நடத்தி வருகிறது. இதுவரை 5 வருடங்கள் வெற்றிகரமாக இந்தப்படிப்பு நடந்து வருகிறது. ஆறாவது ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கிவிட்டது. விருப்பம் இருப்பவர்கள் இந்த படிப்பில் சேர்ந்து பயன் அடையலாம். இதுவரை 500 மாணவர்கள் இந்தப்பயிற்சி எடுத்துள்ளனர். வகுப்புகள் மாதம் இரண்டு சனி ஞாயிறு மட்டுமே நடைபெறும். (தொடரும்)

இஞ்சி முரப்பா !

Posted: 01 Jul 2016 10:39 AM PDT

இஞ்சி முரப்பா ! அநேகமாய் இது எல்லோருக்கும் பிடித்த வஸ்த்து என்று நினைக்கிறேன். ரொம்ப சுலபம் இதை செய்வது. இப்போ , இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானவை : இஞ்சி - தோல் சீவி விழுதாக அரைத்தது 1 கப் சர்க்கரை 2 கப் ஒரு சிட்டிகை உப்பு செய்முறை: அடி கனமான வாணலி அல்லது உருளி இல் சர்க்கரையைப் போட்டு , 1 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு 10 நிமிடத்தில் திக்காக ஆகும், ஆனால் ஒரு இழை பாகு வரவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அப்போது, அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை ...

பொதுஅறிவு-தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Posted: 01 Jul 2016 10:25 AM PDT

தொப்புள்கொடி(umbilical cord )? இது தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள இணைப்பு, குழந்தை பிறந்ததும் வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட பின் 3-4 செ.மீ. அளவில் இருந்து 5-15 நாட்களில் காய்ந்து விழுந்து விடுகிறது. தற்போது தொப்புள்கொடியில் இருக்கும் குருதி-cord blood stem cells – பாதுகாத்து வைக்கப்பட்டு,அந்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படக்கூடிய குருதி சம்பந்தமானதும்,உயிராபத்து நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது. எண்பதுக்கு அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தாயின் ...

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III

Posted: 01 Jul 2016 10:22 AM PDT

வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் !

நல்லது செய்யாவிட்டாலும் ....

Posted: 01 Jul 2016 09:34 AM PDT

ஒரு ஊரில் கருத்து கந்தசாமி என்ற பெயர் கொண்டவன் ஒருவன் இருந்தான் . அவன் பெரிய மேதாவி . எல்லா விஷயங்களும் தனக்குத் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்வான் . இருவர் பேசிக்கொண்டு இருந்தால் இடையிலே மூக்கை நுழைத்துத் தன் கருத்தைச் சொல்வான் . எனவே எல்லோரும் அவனைக் கருத்து கந்தசாமி என்று அழைத்தனர் . ஒரு சமயம் ஒரு வேலை நிமித்தமாகக் கருத்துக் கந்தசாமி வெளியூருக்குப் போயிருந்தான் . அப்போது முதியவர் ஒருவர்  அங்குவந்து , " தம்பி ! அண்ணாசாமி தெரு எங்குள்ளது ? " என்று கேட்டான் . கருத்துக் கந்தசாமிக்கு அந்த ...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

Posted: 01 Jul 2016 08:54 AM PDT

படம் : சூரியகாந்தி இசை : MS விஸ்வநாதன் பாடியவர் : TM சௌந்தர்ராஜன் பாடல் வரிகள் : கண்ணதாசன் – ————————– – பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது.. – உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை ...

சாதி – கவிதை

Posted: 01 Jul 2016 08:12 AM PDT

– "சாதிகள் இல்லையடி – பாப்பா குலம் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல் பாவம்" - பாரதி உன் மீது எனக்குக் கோபம்! – பாப்பாவுக்கு மட்டும் இதைச் சொன்னதால் இன்னும் பல பெரியவா… மன்னிக்கவும் பெரியவர்கள் – இதைக் கேட்பதே இல்லை. – சாதி! சாதி! சாதி! சாதிப்பது என்ன? நாம்? யோசிப்பது அத்தியாவசியம்! – ————————– -ஞா.சிவகாமி ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது – கவிதை தொகுப்பிலிருந்து

பிரார்த்தனை – கவிதை

Posted: 01 Jul 2016 06:42 AM PDT

- – நாம் கோவிலுக்கு போகிறோம் சாமி கும்பிட… – நாம் தேவாலயத்திற்கு போகிறோம் ஜபம் செய்ய நாம் மசூதிக்கு போகிறோம் துவா செய்ய நன்று மிக நன்று – வேண்டியதை எல்லாம் தா வென்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறோம். – இன்று இன்றே நாம் இருக்கும் இடத்திலேயே அன்பாய் இருக்க பிரார்த்தனை செய்தால் – என்ன? நம்மை சுற்றி இருக்கும் வம்பெல்லாம் ஓடி விடுமே? செய்து பார்க்கலாமா? இப்பொழுதே! – ———————— -ஞா.சிவகாமி ஓர் ஊதாங்குழல் தமிழ் ஊதுகிறது – கவிதை தொகுப்பிலிருந்து

ரஜினிக்கு சந்திரமுகி… பிரபுதேவாவுக்கு தேவி !

Posted: 01 Jul 2016 06:34 AM PDT

- ''ஒவ்வொரு நாளும் நிறைய திறமைசாலிங்க வந்துட்டிருக்காங்க. குறும்படங்கள் எடுத்து கலக்குறாங்க. எனக்கு அடுத்து வந்த இயக்குநர்கள்கிட்ட இருந்தும் நான் நிறைய கத்துக்கிட்டிருக்கேன். 2012ல உருவான ஹாரர் கதை இது. ஒவ்வொரு வருஷமும் அப்டேட் ஆகி, இப்போதான் படமா அமைஞ்சிருக்கு. பன்னிரண்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழ்ல நடிகரா ரீ-என்ட்ரி ஆகுற பிரபுதேவா சாருக்கு பொருத்தமான கதையாவும் 'தேவி' அமைஞ்சிருக்கறது இன்னும் அழகு!'' – முதல் பட இயக்குநர் போல மெலிதான புன்னகையுடன் தன்னடக்கமாய்ப் பேசுகிறார் இயக்குநர் விஜய். - 'படத்தோட ...

லஞ்சம் – கவிதை

Posted: 01 Jul 2016 06:11 AM PDT

துட்டு கொடுத்து துட்டு கொடுத்தே பட்டு போனது சாமானியனின் வாழ்வு! – எட்டுப் போடணும் – இல்லை துட்டு நீட்டணும் – அப்பத்தான் அருகில் வரும் ஓட்டுநர் உரிமம் – அட- மருத்துவமனைக்குப் போனாலும் – அங்கேயும் கொடுக்கணும் முன் பணம்! – குழந்தை பிறந்தாலும் காசு கொடுக்கணும் பெரியவர் இறந்தாலும் காசு கொடுக்கணும்! – காசின்றி அணு அளவும் அசையாது அரசாங்க அலுவலகங்களில் – அரசு ஊழியர்களுள் இருவகை உண்டு. ஒருவர் லஞ்சம் வாங்குபவர் ஒருவர் லஞ்சம் வாங்காதவர் முன்னவர் புத்திசாலி பின்னவர் ஏமாளி! – ஒரு ...

யார் சுகவாசி?

Posted: 01 Jul 2016 06:01 AM PDT

☻ சிரித்து மகிழ்ந்து வாழ்பவன் சுகவாசி! ☻ அதிகாலையில் எழுபவன் சுகவாசி! ☻ இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் எப்போதும் சுகவாசி! ☻ முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் சுகவாசி! ☻ மண்பானைச் சமையலை உண்பவன் சுகவாசி! ☻ உணவை நன்கு மென்று உண்பவன் சுகவாசி! ☻ உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் சுகவாசி! ☻ வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன் சுகவாசி! ☻ கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன் சுகவாசி! ☻ மலச்சிக்கல் இல்லாதவன் சுகவாசி! ☻ ...

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம்

Posted: 01 Jul 2016 05:56 AM PDT

பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.

என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.

அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.

எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.

பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?"

இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினம்

Posted: 01 Jul 2016 05:54 AM PDT

ஆண்டுக்கு ஒரு நாள் அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம் மற்றும் மருத் துவர் தினம் கொண் டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத் தில் அவர்களுடைய அன்புக்காகவும், அர்ப்பணிப்புக்காகவும், தியாகத்திற்காகவும் வாழ்த்துக்களும் நினைவு பரிசுகளும் வழங்கப் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல் அமைச்சராக இருந்தவர் பிடன் சந்திர ராய் (பி.சி.ராய்). 1882-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்த இவர், ...

புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்

Posted: 01 Jul 2016 05:49 AM PDT

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக ரஜினியை நியமிக்க வேண்டும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படம் தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூலை 22ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூலை 15ம் தேதியில் இருந்து ஜூலை 22ம் தேதி 'கபாலி' வெளியீடு மாறியிருந்த தகவல் வெளியானது. அந்த தகவலை குறிப்பிட்டு, "புதுச்சேரி ...

எனது இலங்கைப் பயணம் .

Posted: 01 Jul 2016 05:35 AM PDT

எனது இலங்கைப் பயணம் ========================= சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் . இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் . என்னுடைய ...

சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு ரூ.6,750 கோடி நிதியுதவி

Posted: 01 Jul 2016 05:29 AM PDT

- பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம். —————————— இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த ...

இந்தியாவின் அறிவியல் ராஜதந்திரி!

Posted: 01 Jul 2016 05:28 AM PDT

- அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலைக் கணக்கில் கொள்வார்கள்; ராஜதந்திரிகள் அடுத்த தலைமுறையைக் கருத்தில் கொள்வார்கள். அதுபோல, உடனடி அறிவியல் சாதனைகளைவிட, அடுத்தடுத்த தலைமுறை சாதனைகளுக்கு வித்திடுபவரை அறிவியல் ராஜதந்திரி எனலாம். அத்தகையவர் தான் எம்.ஜி.கே.மேனன். – மங்களூரில் 1928, ஆக. 28-இல் பிறந்தார் கோவிந்தகுமார். (இவரே பின்னாளில் எம்.ஜி.கே. மேனன்). அவரது தந்தை மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். 1942-இல் மெட்ரிக் பள்ளி தேர்ச்சி பெற்ற கோவிந்தகுமார், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. ...

நெஞ்சிருக்ககும் வரை உன் நினைவிருக்கும்னு சொன்னா..!!

Posted: 01 Jul 2016 04:54 AM PDT

நான் பண்ணிய புண்ணியம்தான் நீங்க என் கணவரா வாய்ச்சி இருக்கிது…! – ஆனா, நான் என்ன பாவம் பண்ணினேன்னு தெரியவே இல்லியே…! – சுரேஷ் பாபு – —————————————- – கணக்கபுள்ள, என்ன செலவுன்னு தெரியாம கணக்கு மொட்டையா இருக்கு…! – பக்கத்துல பாருங்க, சந்தனம் வாங்கிய கணக்கு இருக்கும்…! – என்.சாமிநாதன் – ———————————————— – டிகிரி காபி ரொம்பவும் சூடாக இருக்கு…! – ஆமாம், இது 104 டிகிரி காபி சார்..! – ரா.அழ.சீனிவாசன் – ——————————————– – அந்த நடிகை வாஸ்துப்படி ஜாக்கெட்டில் ஜன்னல் வச்சிருக்காங்க…! – அதுக்காக ...

இந்த மாதம் 11 நாட்கள் வங்கி இயங்காது

Posted: 01 Jul 2016 04:48 AM PDT

சென்னை : இந்த மாதம்(ஜூலை), 11 நாட்கள் வங்கிகள் இயங்காது. இதில், ஐந்து நாட்கள் ஞாயிற்றுக்கிழமை; இரண்டு நாள் சனிக்கிழமை விடுமுறை; ஒரு நாள் ரம்ஜான் விடுமுறை. இதுதவிர, 12, 13, 29ம் தேதிகளில், வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. இந்த மூன்று நாள் வேலை நிறுத்தத்தையும் சேர்த்தால், இந்த மாதம், 11 நாட்கள் வங்கிகள் இயங்காது என, பொதுத் துறை வங்கி வட்டாரங்கள் கூறியுள்ளன – —————————— தினமலர்

4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்

Posted: 01 Jul 2016 04:47 AM PDT

- இந்தியாவில், அடுத்த 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடியாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்கள் சங்கத்தின் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் 250 கோடி செல்போன் இணைப்புகள் இருந்தது. இது 2020-ஆம் ஆண்டில் 3.1 சதவீத வளர்ச்சியை எட்டும். ம். இதே காலத்தில் இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ...

திருமூலர் சொல்லும்-கரு உருவாக்கம்

Posted: 01 Jul 2016 04:03 AM PDT

" மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே" மாதா வயிற்றில் மலம் இருக்கும் போது உறவு வைத்து குழந்தை உருவானால் குழந்தை மந்தமாக இருக்கும். நீரல் நீராகிய சிறுநீர் மிகுந்திருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும். இரண்டும் ஒப்ப இருக்குமானால் குழந்தை குருடாகும். இவ்வாறு நோய்யானது தாய்யிடம் இருந்து குழந்தைக்கு வரும் மகப்பேறு என்பது ஆண்டவன் திருவருள், அதனால் இருவரும் தூயராய்ச் சிவனினைவுடன் உடனுறைவின்பந் ...

கபாலி வெற்றிக்காக காளஹஸ்தி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை!

Posted: 01 Jul 2016 02:58 AM PDT

- சென்னை: கபாலி படத்தின் வெற்றிக்காக ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலில் ரஜினி மகள் சௌந்தர்யா சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். ரஜினி நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் கடந்த 11-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பாடல்கள் ரசிகர்களின் அமோக வரவேற்வை பெற்றுள்ளன. இந்த நிலையில் நேற்று படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. 35 நொடிகள் ஓடக்கூடிய அந்த முன்னோட்டப் படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 'கபாலி' படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை ...

குவைத்தில் தீவிபத்து ஆசியாவை சேர்ந்தவர்கள் 9 பேர் பலி

Posted: 01 Jul 2016 02:49 AM PDT

தோகா, குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமள வென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட னர். அவர்களில் 9 பேர் உடல் கருகி ...

அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு

Posted: 30 Jun 2016 11:46 PM PDT

சென்னை

தமிழக அரசு ஊழியர்கள் மீது லஞ்சப் புகார் வந்தால்
தமிழக அரசிடம் ஒப்புதல் பெற்றபிறகே நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய அரசாணை
ஒன்றை பிறப்பித்தது

இந்த அரசாணையை எதிர்த்து வக்கீல் புகழேந்தி தொடர்ந்த
வழக்கில் சென்னை ஐக்கோர்ட் தலைமை நீதிபதி
தலைமையிலான அமர்வு, தமிழக அரசின் புதிய அரசாணையை
ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி

தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்

Posted: 30 Jun 2016 07:13 PM PDT

----------------------------- தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின் - சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில் உள்ள 19,157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆங்காங்கு நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால் அனைத்துத் தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரயில்வே ...

கின்னஸ் சாதனைக்காக ஒளி நடனம்!

Posted: 30 Jun 2016 07:07 PM PDT

- மனித மனதின் கற்பனை வளம் கணக்கிலடங்காதது. பல்வேறு அரிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாவதற்கு முன்னர் கற்பனைத் திறத்துடன் அக்கண்டுபிடிப்புகளுக்கு தன் மனதில் உயிர் கொடுத்து மனிதன் நிறைவேற்றிக் காட்டினான். மனிதனின் கற்பனைத் திறத்துடன் கணினியும் கைக் கோர்த்து உருவான சாதனைகள் இவ்வுலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன; மூழ்கடிக்கின்றன. – அவ்வாறான ஒரு சாதனையைத்தான் கணிப்பொறி தொழில்நுட்ப உலகில் முன்னிலை வகிக்கும் இன்டெல் நிறுவனம் நிகழ்த்திக் காட்டி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. தரையில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™