Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:20 PM PDT

மத்திய அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதாகக் கூறி, கோவையில் திராவிடர் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பள்ளிக் கட்டடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Posted: 01 Jul 2016 02:20 PM PDT

வால்பாறையை அடுத்த சோலையாறு எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியை வியாழக்கிழமை இரவு யானைகள் சேதப்படுத்தின.

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 6 பேருக்குப் பணி நியமன ஆணை

Posted: 01 Jul 2016 02:19 PM PDT

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா என்ஜினீயரிங் நிறுவனத்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

போலி தங்க மண் குப்பை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: போலீஸில் ஆந்திர வியாபாரி புகார்

Posted: 01 Jul 2016 02:19 PM PDT

கோவையில் போலி தங்க மண் குப்பை கொடுத்து ஆந்திர வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

காவல் துறையினரின் பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள புதிய திட்டம்

Posted: 01 Jul 2016 02:17 PM PDT

காவல் துறையினரின் அன்றாடப் பணிகளை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக (நோ யூவர் போலீஸ்) என்ற திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி: பொள்ளாச்சி மாணவிக்குப் பரிசு

Posted: 01 Jul 2016 02:16 PM PDT

தபால் துறை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியில் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவி ரின்ஷா பாத்திமா ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.

சட்ட நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 01 Jul 2016 02:16 PM PDT

வழக்குரைஞர்கள் சட்ட விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்யக்கோரி, கோவையில் சட்ட நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த இளைஞர் சாவு

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்காலில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற காரைக்கால் மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை உடனடியாக வழங்க வலியுறுத்தல்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்தில்  ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு  2 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கவேண்டுமென ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

மருத்துவர் தினம்: தூய்மை குறித்து உறுதிமொழி ஏற்பு

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்கால் மருத்துவமனையில், மருத்துவர் தினத்தையொட்டி தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இஃப்தார் நோன்பு திறப்பு; என்.ரங்கசாமி பங்கேற்பு

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்காலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி கலந்துகொண்டார்.

பாரத ஸ்டேட் வங்கி ஸ்தாபன நாள் விழா

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்காலில் பாரத ஸ்டேட் வங்கி ஸ்தாபன நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதிய சட்டத் திருத்த நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

வழக்குரைஞர் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தைக் கைவிட வலியுறுத்தி காரைக்கால் வழக்குரைஞர்கள் திருத்த நகல் எரிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் சூரியமின் சக்தி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்கால் தொழில்நுட்பக் கல்லூரியில் சூரியமின் சக்தி குறித்து சான்றிதழ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாமென அக்கல்லூரி முதல்வர் டி.சந்தனசாமி தெரிவித்துள்ளார்.

மலிவு விலை உணவகத்தில் "சீல்' அகற்றம்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

காரைக்கால் மலிவு விலை உணவகத்துக்கு வைக்கப்பட்ட "சீல்' நீதிமன்ற உத்தரவுபடி வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

சீர்காழியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலர் பதவியேற்பு

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

நாகை மாவட்ட கல்வி அலுவலராக(பொறுப்பு) மு. வேதரெத்தினம் வியாழக்கிழமை பதவியேற்றார்.

மனைவிக்கு சித்திரவதை: கணவர் கைது

Posted: 01 Jul 2016 02:15 PM PDT

குத்தாலம் வட்டம், பாலையூர் அருகே குழந்தை இல்லாததால், மனைவியை சித்திரவதை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவியை காணவில்லை

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

பள்ளிக்குச் சென்ற மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்துள்ளனர்.

"கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை உறுதி செய்ய வேண்டும்'

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ற வகுப்பறை சூழலை ஆசிரியர் பயிற்றுநர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாகை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

விவசாயத் தொழிலாளர்களின் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் தமிழ் மாநில விவசாயத் தொழிளார் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 9-இல் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

நாகை மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் ஜூலை 9 -ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜூலை 11 -இல் காளான் வளர்ப்பு பயிற்சி முகாம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

சிக்கல், வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் செயல்விளக்கப் பயிற்சி முகாம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சட்ட நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை, சீர்காழி, மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் சட்ட நகலை எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் அருகே டாஸ்மாக் கடையில் தீ

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம்  அருகே டாஸ்மாக் கடையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே பொண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

மக்களுக்கு இடையூறாக செயல்படும் மதுபானக் கடையை அகற்றக்கோரி மனு

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

திருவாரூர் அருகே பொது மக்களுக்கு இடையூறாகச் செயல்படும் அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி பகுதி பொது மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளிப்பு

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டார விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை மனுவை முன்னாள் எம்எல்ஏ கே.உலகநாதன் வெள்ளிக்கிழமை துணை வட்டாட்சியரிடம் வழங்கினார்.

முன்விரோதம்: ஆட்டோக்களை சேதப்படுத்திய ஓட்டுநர் கைது

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

திருத்துறைப்பூண்டி அருகே சுமை ஆட்டோக்களை  தாக்கி சேதப்படுத்திய வழக்கில் சுமை ஆட்டோ ஓட்டுநர் வெள்ளிக்கிழமை  கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

மத்திய அரசு சம்ஸ்கிருதத்தை திணிக்க முயல்வதை கண்டித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பால்வண்டி மோதி சிறப்பு ஆய்வாளர் பலத்த காயம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மீது பால் வண்டி மோதியதில் பலத்த காயமடைந்தார்.

திருவாரூரில் வழக்குரைஞர்கள் சட்ட நகலை எரித்து போராட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

திருவாரூரில் வெள்ளிக்கிழமை வழக்குரைஞர்கள் சட்ட மசோதாவை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலித் மக்கள் மீது தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தக்கோரி தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தினர் நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மஞ்சனவாடி திருராமேஸ்வரம் ஊராட்சியில் திட்டப் பணிகள் ஆய்வு

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மஞ்னவாடிதிருராமேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஒன்றியக்குழுத் தலைவர் த.உதயகுமாரி வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாணவியை கடத்திச் சென்ற காதலன் கைது

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

மன்னார்குடி அருகே திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மாணவியை கடத்திச் சென்ற காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மத்திய அரசின் நிதியில் முறைகேடு செய்த ஒன்றிய ஆணையர்: பினாமி வீட்டை விற்று பணம் செலுத்தியது அம்பலம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் மத்திய அரசின் நிதியில் முறைகேடு நடந்தது தொடர்பாக இரண்டாவது நாளாக கணக்குகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை தணிக்கை செய்தது.

காவல்துறையை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 02:14 PM PDT

சென்னையில் நிகழ்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை இதுவரை கைது செய்யாத காவல்துறையின் செயல்பாடுகளைக் கண்டித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணிடம் நகை திருடியவர் கைது

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

திருவாரூர் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் நகை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

மாங்குடியில் கோயில் உண்டியல் உடைப்பு

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

திருவாரூர் அருகே மாங்குடியில் உள்ள அங்காளம்மன் கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பொருட்கள் திருட்டு போனது.

அரிவாளுடன் நின்ற இளைஞர் கைது

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

திருவாரூரில் வியாழக்கிழமை அரிவாளுடன் பொது இடத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

காவல்துறை வாகனம் மோதி பெண் காயம்

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

திருவாரூர் அருகே காவல்துறையினரின் வாகனம் மோதியதில் பெண்  காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகும் ஆதரவு தேடும் ஏழை நெஞ்சம்

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டில் மருத்துவப் படிப்பில் இடம்கிடைத்து சேர்ந்து விட்டபோதிலும், இதர செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறார் திருச்சியைச் சேர்ந்த மாணவர் பி. கோகுலநாதன்.

மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 2.43 கோடி போதைப்பொருள் திருச்சியில் பறிமுதல்: ஒருவர் கைது

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

மலேசியா கடத்த முயன்ற ரூ. 2.43 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது. அதை கடத்திச்செல்ல முயன்ற ராமநாதபுரம் இளைஞரை சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தீண்டாமை இல்லாத கிராமங்களாக திருவிளையாட்டம், உமையாள்பதி தேர்வு: ஜூலை 7-க்குள் ஆட்சேபங்களை தெரிவிக்கலாம்

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

நாகை மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத கிராமங்களாக திருவிளையாட்டம், உமையாள்பதி ஆகிய கிராமங்கள் உத்தேசமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஆட்சேபங்கள் இருந்தால், அதனை ஜூலை 7-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

குடிநீர் கள பரிசோதனை செயல்விளக்கக் கூட்டம்

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி செயலர்களுக்கு ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பருகக்கூடிய தன்மையில் குடிநீர் உள்ளதா? என கள பரிசோதனை செயல்விளக்கம் அளிக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

"சந்தா நிலுவை செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மீது குற்ற நடவடிக்கை'

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய சந்தா நிலுவைத் தொகை மற்றும் மாதாந்திர சந்தாவை செலுத்தாத கேபிள் டி.வி.  ஆபரேட்டர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில மகளிர் அணி: செயலராக முத்துலட்சுமி தேர்வு

Posted: 01 Jul 2016 02:13 PM PDT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு பகுதியைச் சேர்ந்த பி. முத்துலட்சுமி பாஜக மாநில மகளிர் அணி செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுவாதி கொலை வழக்கு:செங்கோட்டையில் சந்தேக நபர் கைது

Posted: 01 Jul 2016 01:24 PM PDT

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சந்தேக நபர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு தொடக்கம்

Posted: 01 Jul 2016 01:20 PM PDT

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்புப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினர். ஜூலை 4-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பணியில் ஈடுபடுகின்றனர்.

புதுதில்லி தேமுதிக செயலர் நீக்கம்

Posted: 01 Jul 2016 01:19 PM PDT

கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், புதுதில்லி மாநிலச் செயலர் வி.என்.தட்சிணாமூர்த்தி, இளைஞரணி துணைச் செயலர் பி.டி.அன்பரசன் ஆகிய இருவரும் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்

சுவாதி கொலை வழக்கு:பேருந்து, ரயில் நிலையங்களின் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

Posted: 01 Jul 2016 01:19 PM PDT

சுவாதி கொலை வழக்கில் துப்பு துலக்கும் விதமாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

பாலாற்றில் தடுப்பணை உயர்த்தி கட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்:மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

Posted: 01 Jul 2016 01:18 PM PDT

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பணம் திருடிய வழக்கில் மேலும் 5 பேர் கைது

Posted: 01 Jul 2016 01:18 PM PDT

போலி ஏடிஎம் கார்டுகளை தயாரித்து விழுப்புரத்தில் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடவுச்சீட்டு சேவைகளை கட்செவி அஞ்சலில் பெறும் வசதி:முதன் முறையாக மதுரையில் அறிமுகம்

Posted: 01 Jul 2016 01:16 PM PDT

கடவுச்சீட்டு சேவையைக் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பெறும் வசதியை நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் அறிமுகம் செய்துள்ளது.

நிதித் துறை கூடுதல் செயலாளர் உமாநாத் மாற்றம்

Posted: 01 Jul 2016 01:16 PM PDT

நிதித் துறை கூடுதல் செயலாளர் பி.உமாநாத் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்தார்.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணிக்கு 2 ஆண்டு பணி நீட்டிப்பு

Posted: 01 Jul 2016 01:15 PM PDT

இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளரும், துறையின் செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பவருமான வீரசண்முகமணிக்கு, இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வழங்கினார்.

தைலமரக் காட்டில் தீ விபத்து: ஏராளமான மரங்கள் தீக்கிரை

Posted: 01 Jul 2016 01:15 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பிலான தைலமரக் காட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான தைலமரங்கள், வாழை, முந்திரி மரங்கள் தீக்கிரையாகின.

யோகா, நீச்சலுக்கு முக்கியத்துவம்:அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு

Posted: 01 Jul 2016 01:14 PM PDT

 யோகா, நீச்சல் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்து, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான விருதுகள்:12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 01 Jul 2016 01:14 PM PDT

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 12 ஆம் தேதி கடைசியாகும். இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பிவைக்கும் தரகர் கைது

Posted: 01 Jul 2016 01:14 PM PDT

இலங்கை அகதிகளை கேரள கடல் பகுதி வழியாக ஆஸ்திரேலியாவுக்கு திருட்டுத்தனமாக அனுப்பிவைக்கும் பணியில் ஈடுபட்டதாக தரகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

விஷ்ணுபிரியா வழக்கு கடந்து வந்த பாதை...

Posted: 01 Jul 2016 01:13 PM PDT

சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டுவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு 9 மாதங்களுக்குப் பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக - ஆந்திர எல்லையில் பதற்றம்:இருமாநில போலீஸார் குவிப்பு

Posted: 01 Jul 2016 01:12 PM PDT

வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்தியதைக் கண்டித்து, தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அணைப்பகுதி அருகே இரு மாநில போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்

Posted: 01 Jul 2016 01:12 PM PDT

ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலர் என்.கண்ணையா தெரிவித்தார்.

22 போலி பல்கலை.: பட்டியலை வெளியிட்டது யுஜிசி

Posted: 01 Jul 2016 01:11 PM PDT

22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

திமுகவில் தேமுதிக மாவட்டச் செயலர்

Posted: 01 Jul 2016 01:10 PM PDT

தேமுதிக நாமக்கல் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.சம்பத்குமார் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

ஓய்வூதியர் சங்க குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 01 Jul 2016 12:43 PM PDT

தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வரும் 4-ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஓய்வூதியர் சங்க மாவட்ட, வட்ட கிளைச் சங்க பொறுப்பாளர்களுக்கான குறை தீர் கூட்டம் 12-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கேபிளில் புதிய திரைப்படம்: உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

Posted: 01 Jul 2016 12:42 PM PDT

கும்பகோணத்தில் உள்ளூர் சேனலில் (கேபிளில்) கடந்த 21-ம் தேதி மனிதன் என்ற புதிய திரைப்படத்தை ஒளிபரப்பியதாக அதன் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டப் பணிகள் ஆய்வு

Posted: 01 Jul 2016 12:42 PM PDT

மதுக்கூர் வட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டப்  பணிகள் நடைபெற்று வருகின்றன.

சம்ஸ்கிருத திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 12:41 PM PDT

பாஜக அரசின் சம்ஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் எதிரில் திராவிடர் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசத்தில் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

Posted: 01 Jul 2016 12:41 PM PDT

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கான சட்ட விதிகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து, பாபநாசம் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பாபநாசம் வழக்குரைஞர்கள் சங்க தலைவர் வி.சி. கம்பன் தலைமையில் வழக்குரைஞர்கள் சட்ட நகலை எரித்தனர். அப்போது அங்கிருந்த போலீஸார் இதை தடுத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.  போராட்டத்தில் வழக்குரைஞர்கள் அண்ணாமலை, அரியராஜபூபதி, ஜெகதீசன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 12:41 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 200 நாள்கள் வேலை வழங்க வலியுறுத்தி, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் சார்பில் "நலந்தானா' சேவை அறிமுகம்

Posted: 01 Jul 2016 12:40 PM PDT

பி.எஸ்.என்.எல். நிறுவனம் நலந்தானா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் கும்பகோணம் காவிரி நதி படுகை தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் சி.வி. வினோத் தெரிவித்தார்.

சட்டத்திருத்த நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 01 Jul 2016 12:40 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் எதிரில் புதிய சட்டத்திருத்த நகல்களை வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை எரித்து போராட்டம் நடத்தினர்.

சுவாதி, வினுப்பிரியா, காவலர் முனுசாமி ஆன்மா சாந்தி அடைய மோட்சதீபம்

Posted: 01 Jul 2016 12:39 PM PDT

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட மென்பொருள் பொறியாளர் சுவாதி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண் வினுபிரியா, ஓசூர் நகர் காவல்துறையின் முதன்மை காவலர் முனுசாமி ஆகியோரின் ஆன்மா சாந்தி அடைய கும்பகோணம் மகாமக குளத்தில் வெள்ளிக்கிழமை மாலை மோட்சதீபம் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கண்டியூரில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 01 Jul 2016 12:39 PM PDT

தஞ்சாவூர் அருகேயுள்ள கண்டியூர் ஊராட்சியில் ரூ. 23.55 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் என். சுப்பையன் ஆய்வு செய்தார்.

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 12:38 PM PDT

சுவாதி படுகொலையைக் கண்டித்து, தஞ்சாவூர் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கச் செய்வது ஆன்மிகப் பண்பாடு': தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் ஜி.பாஸ்கரன்

Posted: 01 Jul 2016 12:38 PM PDT

இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கச் செய்வது ஆன்மிகப் பண்பாடு என்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் கூறினார்.

குடந்தையில் பஜார் அஞ்சலகத்தை மூடுவதற்கு வணிக நிறுவனங்கள் எதிர்ப்பு

Posted: 01 Jul 2016 12:37 PM PDT

கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான தொழில் வணிக நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பயன்பட்டு வரும் கும்பகோணம் பஜார் துணை அஞ்சலகத்தை மூடினால் போராட்டம் நடத்தப்படும் என கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது.

1.66 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடைகள் அளிப்பு

Posted: 01 Jul 2016 12:37 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 1.66 லட்சம் மாணவ, மாணவிகளுக்குப் பாடப் புத்தகஙகள், பாட குறிப்பேடு, சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

குடந்தையில் ரூ. 3.52 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Posted: 01 Jul 2016 12:36 PM PDT

கும்பகோணத்தில் உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் 2 நாள்கள் நடத்திய சோதனையில் 3,52,250 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சையில் ஜூலை 6-ல் திமுக பொதுக்கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

Posted: 01 Jul 2016 12:35 PM PDT

தஞ்சாவூரில் வரும் 6-ம் தேதி மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

விராலிமலை ஒன்றிய பாஜக தலைவர் நியமனம்

Posted: 01 Jul 2016 12:35 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றிய பாஜக தலைவராக வழக்குரைஞர் சி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 12:34 PM PDT

புதுக்கோட்டையில் திராவிட கழகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகுடியில் மருத்துவர் தின விழா

Posted: 01 Jul 2016 12:34 PM PDT

அறந்தாங்கி அருகே நாகுடியில் மருத்துவர் தின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுகையில் சட்ட நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்

Posted: 01 Jul 2016 12:33 PM PDT

புதுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் முகத்தில் கருப்புத்துணி அணிந்து சட்ட நகலை எரிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

எங்களுக்கு வேண்டியது வியாபாரம்..!

Posted: 01 Jul 2016 12:33 PM PDT

பொன்னமராவதியில் ஜூலை 4-ல் மின்தடை

Posted: 01 Jul 2016 12:32 PM PDT

பொன்னமராவதி மற்றும் மேலத்தானியம் பகுதியில் ஜூலை 4-ம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

கறம்பக்குடி அருகே  தைலமரக் காட்டில் தீ விபத்து: ஏராளமான மரங்கள் தீக்கிரை

Posted: 01 Jul 2016 12:32 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே சுமார் 500 ஏக்கர் பரப்பிலான தைலமரக்காட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான தைலமரங்கள், வாழை, முந்திரி மரங்கள் தீக்கிரையாகின.

விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 01 Jul 2016 12:32 PM PDT

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலத்தின் தேவை!

Posted: 01 Jul 2016 12:31 PM PDT

இரு நாள்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கவாதிகள் எனக் கருதப்படும் 5 நபர்கள், இந்தியாவின் முதன்மை நகரங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலும் அரசு அலுவலகங்களிலும் குண்டுவெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

Posted: 01 Jul 2016 12:31 PM PDT

மருத்துவர்கள் தினத்தையொட்டி மதுரை யங் இண்டியா அமைப்பு, பொன்னமராவதி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து பொன்னமராவதியில் தொடுமுன் காப்போம்- பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தின. பேரணிக்கு சிதம்பரம் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக இயக்குநர் விஎஸ்டி.பிஎல். சிதம்பரம் தலைமை வகித்தார். மதுரை யங் இண்டியா அமைப்பின் தலைவர் ரக்சனா பினானி தொடுமுன் காப்போம் நிகழ்வின் தலைவர் திவ்யா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். மாம்பழத்தான் ஊரணி அருகே தொடங்கிய பேரணி புதுப்பட்டி, அண்ணாசாலை, பேருந்துநிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியே வந்து சிவன்கோயில் திடலில் நிறைவடைந்தது.

அகண்ட பாரதமே தீர்வு!

Posted: 01 Jul 2016 12:31 PM PDT

பிரிவினை - இதைப்பற்றி நினைத்தாலே நெஞ்சை வலிக்கும் சூழலில் அதற்கு மருந்திடும் விதமாக வந்திருக்கிறது ஒரு வார்த்தை.

"சிசு, பிரசவ மரணங்களைத் தடுக்க வேண்டும்'

Posted: 01 Jul 2016 12:30 PM PDT

சிசு மரணம், பிரசவ மரணங்களைத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

நல்லதோர் வீணை செய்தே...

Posted: 01 Jul 2016 12:30 PM PDT

நாட்டு விடுதலையைத் தன் உயிர்மூச்சாகக் கருதி, வீர சுதந்திரம் வேண்டி, வேறொன்றும் கொள்ளாது நின்ற மகாகவி பாரதியார், விடுதலையை மாற்றாரிடமிருந்து பெறுமுன், இந்திய இனம் பெண்மைக்கு விடுதலை அளிக்க வேண்டுமென விரும்பினார். பெண் விடுதலை இயக்கம் உருவானது.

கடலில் தத்தளித்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேர் மீட்பு

Posted: 01 Jul 2016 12:30 PM PDT

புதுக்கோட்டை மாவட்ட கடல்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் சாவு

Posted: 01 Jul 2016 12:29 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளி மான் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது.

செந்துறையில் இரு பிரிவினரிடையே மோதல்: 12 பேர் கைது

Posted: 01 Jul 2016 12:29 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறையில் வியாழக்கிழமை இரவு இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக திமுக, பாமக பிரமுகர்கள் உட்பட 12 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

Posted: 01 Jul 2016 12:29 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வியாழக்கிழமை திருடப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™