Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்கு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் பரிசு:தினமணி ஆசிரியர் இன்று வழங்குகிறார்

Posted: 08 Jul 2016 01:31 PM PDT

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறுகதைப் போட்டியில் வென்றவர்களுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சனிக்கிழமை பரிசுகளை வழங்குகிறார்.

இன்று மழைக்கு வாய்ப்பு

Posted: 08 Jul 2016 01:30 PM PDT

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு சனிக்கிழமை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 08 Jul 2016 01:30 PM PDT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இம்மாதம் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

பான்மசாலா, குட்கா தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் வீடு, கிட்டங்கிகளில் வருமான வரிச் சோதனை :ரூ.100 கோடி வரி ஏய்ப்பு ஆவணங்கள் சிக்கின

Posted: 08 Jul 2016 01:28 PM PDT

பான்மசாலா, குட்கா தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் வீடுகள், கிட்டங்கிகளில் என 30 இடங்களில் வருமான வரித்துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். இதில், ரூ. 100 கோடி வரி ஏய்ப்பு செய்தற்கான ஆவணங்களும், கணக்கில் வராத ரூ. 76 லட்சம் ரொக்கமும் சிக்கியது.

சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்

Posted: 08 Jul 2016 01:27 PM PDT

சுவாதி கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியைக் காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

துறைமுகத்தில் திடீரென மூழ்கிய விசைப்படகு!

Posted: 08 Jul 2016 01:26 PM PDT

புதுச்சேரி, தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு திடீரென, கடலில் மூழ்கியது.

துணைவேந்தர்களை நியமிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Posted: 08 Jul 2016 01:25 PM PDT

காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு: ரூ.12 லட்சம் மது புட்டிகள் நாசம்

Posted: 08 Jul 2016 01:25 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீக்கிரையானது. கடையில் இருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள மது புட்டிகள் நாசமாயின.

காவல் துறை வற்புறுத்தலால் மேற்கு வங்கம் செல்கிறோம்:ஐ.எஸ். இயக்க ஆதரவாளர் மனைவி

Posted: 08 Jul 2016 01:24 PM PDT

காவல் துறையினரின் வற்புறுத்தல் காரணமாகத் தங்களது சொந்த மாநிலமான மேற்குவங்கத்துக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மோஸிருதீனின் மனைவி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே ஊருணியில் கொட்டப்பட்ட சாக்லெட் குவியல்

Posted: 08 Jul 2016 01:22 PM PDT

கோவில்பட்டியையடுத்த வில்லிசேரி அய்யனார் ஊருணி பகுதியில் காலாவதியான சாக்லெட்டுகள் வெள்ளிக்கிழமை கொட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.

குமரி, கேரள மீனவர்களைக் கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்

Posted: 08 Jul 2016 01:22 PM PDT

குமரி மற்றும் கேரள மீனவர்களைக் கண்டித்து தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை தீவிரம்

Posted: 08 Jul 2016 01:21 PM PDT

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

காற்றாலையில் காப்பர் கம்பிகள் திருட்டு: காவலாளிகள் 4 பேர் பணியிடை நீக்கம்

Posted: 08 Jul 2016 01:21 PM PDT

ஆரல்வாய்மொழி காற்றாலையில் காப்பர் கம்பிகள் திருட்டு தொடர்பாக காவலாளிகள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்குவாரியில் 3 பேர் சாவு: உரிமதாரர், மேலாளர் சிறையில் அடைப்பு

Posted: 08 Jul 2016 01:21 PM PDT

மதுரை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து 3 பேர் இறந்த சம்பவத்தில் குவாரி உரிமதாரர், மேலாளர் ஆகியோர் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேமுதிகவிலிருந்து கரூர் மாவட்ட நிர்வாகி நீக்கம்

Posted: 08 Jul 2016 01:20 PM PDT

தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கரூர் மாவட்ட அவைத் தலைவர் பஞ்சப்பட்டி கே.பாலன் நீக்கப்படுகிறார் என்றும் அவருடன் கட்சியினர் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் மாயமான குழந்தை தூத்துக்குடியில் கொன்று புதைப்பு: உடலை தோண்டி எடுக்க போலீஸார் முடிவு

Posted: 08 Jul 2016 01:20 PM PDT

தாயால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் 3 வயதுக் குழந்தை, தூத்துக்குடியில் புதைக்கப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

திமுகவிலிருந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்

Posted: 08 Jul 2016 01:20 PM PDT

திமுகவுக்கு அவப்பெயரும், களங்கமும் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சிலரை இடைநீக்கம் செய்து, கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வளம் கொழிக்காத கொப்பரை கவலையில் விவசாயிகள்!

Posted: 08 Jul 2016 01:20 PM PDT

ஆண்டுதோறும் தேங்காய் சீசன் காலத்திலேயே தென்மேற்கு பருவமழை சீசனும் தொடங்குவதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு கொப்பரை உற்பத்தி என்பது லாபம் தரும் தொழிலாக அமைவதில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

வள்ளியூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 Jul 2016 01:19 PM PDT

வள்ளியூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை தலைமையில் நடைபெற்றது.

இருக்கன்குடி கோயிலில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள காணிக்கை முடி திருட்டு

Posted: 08 Jul 2016 01:19 PM PDT

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள காணிக்கை முடி திருடப்பட்டுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 Jul 2016 01:19 PM PDT

முதலியார்பட்டியில் பெருநாள் சந்திப்பு மற்றும் கடையம் ஒன்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உயர் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு:தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கலாம்

Posted: 08 Jul 2016 01:19 PM PDT

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

அண்ணாமலைப் பல்கலை.யில் துணைப் பதிவாளர் மீது தாக்குதல்:2 ஊழியர்கள் மீது வழக்கு

Posted: 08 Jul 2016 01:18 PM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளரை தாக்கியதாக ஊழியர்கள் இருவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

சுரண்டை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம்

Posted: 08 Jul 2016 01:18 PM PDT

சுரண்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 Jul 2016 01:18 PM PDT

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அம்பாசமுத்திரம் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சமச்சீர் பாடத்திட்டத்தை சீராய்வு செய்ய கோரிக்கை

Posted: 08 Jul 2016 01:17 PM PDT

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தைச் சீராய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வள்ளியூர் புறவழிச்சாலையில் பைக் மீது லாரி மோதல்: மர வியாபாரி சாவு

Posted: 08 Jul 2016 01:17 PM PDT

வள்ளியூர் புறவழிச்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு பைக் மீது லாரி மோதியதில் மர வியாபாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கடையநல்லூர் தொகுதியில் அரசுக்குச் சொந்தமான இடங்களை கண்டறியும் பணி: எம்.எல்.ஏ. தகவல்

Posted: 08 Jul 2016 01:16 PM PDT

கடையநல்லூர் தொகுதியில் அனைத்து வகை அரசுக் கட்டடங்களையும் கொண்டு வருவதற்கு வசதியாக அரசுக்குச் சொந்தமான இடங்களை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது என கடையநல்லூர் பேரவைத் தொகுதி உறுப்பினர் முகமதுஅபுபக்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் 17 இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 01:16 PM PDT

ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 17 இடங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குளத்தில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

Posted: 08 Jul 2016 01:15 PM PDT

ஆலங்குளத்தில் வெள்ளிக்கிழமை குளிக்கும்போது கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்  இறந்தார்.

திருட்டுச் சம்பவம்: இரு இளைஞர்கள் கைது; 38 பவுன் நகை மீட்பு

Posted: 08 Jul 2016 01:15 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை பத்தமடை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 38 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

பைக்-அரசுப் பேருந்து மோதல்: கட்டடத் தொழிலாளி பலத்த காயம்

Posted: 08 Jul 2016 01:15 PM PDT

பாவூர்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லையில் மாவட்ட அளவிலான இருபாலருக்குமான வலுதூக்குதல் போட்டிகள்

Posted: 08 Jul 2016 01:14 PM PDT

திருநெல்வேலி மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள், பெண்கள், வலுதூக்கும் மற்றும் சீனியர் ஆண்கள் பெஞ்ச் பிரஸ் போட்டிகள் வரும் 16, 17 ஆண் தேதிகளில் நடைபெறுகிறது.

ஆலங்குளம் அருகே அபாயக் குழியை மூடக் கோரிக்கை

Posted: 08 Jul 2016 01:14 PM PDT

ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையில் உள்ள அபாயக் குழியை மூட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தமிழகம் கட்சி ஒன்றியச் செயலர்கள் கூட்டம்

Posted: 08 Jul 2016 01:13 PM PDT

திருநெல்வேலி மேற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலர்கள் கூட்டம் தென்காசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வள்ளியூரில் பசுமை இயக்கம் தொடக்கம்

Posted: 08 Jul 2016 01:13 PM PDT

வள்ளியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை பசுமையாக மாற்றும் நோக்கத்தில் வள்ளியூரில் பசுமை இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 01:12 PM PDT

பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகனேரி அய்யா தாங்கலில் திருஏடு வாசிப்பு தொடக்கம்

Posted: 08 Jul 2016 01:12 PM PDT

ஆறுமுகனேரி சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு அய்யா தாங்கலில் வெள்ளிக்கிழமை இரவு அகில திரட்டு அம்மானை திரு ஏடு வாசிப்பு தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டத்தில் புனித சந்தியாகப்பர் ஆலய பீடம் புதுப்பிப்பு

Posted: 08 Jul 2016 01:12 PM PDT

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் எம்.பி. ஆய்வு

Posted: 08 Jul 2016 01:11 PM PDT

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

குரும்பூர் ஸ்ரீமுத்துவிநாயகி அம்மன் கோயிலில் நாளை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Posted: 08 Jul 2016 01:11 PM PDT

குரும்பூர் அருகேயுள்ள மைக்கன்நார்குடியிருப்பு ஸ்ரீமுத்துவிநாயகி அம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சாத்தான்குளம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

Posted: 08 Jul 2016 01:10 PM PDT

சாத்தான்குளம் ஆர்.சி. வடக்குத் தெரு அருள்மிகு தேவிஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு  நடைபெற்றது.

கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 01:10 PM PDT

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி கோயில் ஆனித் திருவிழா: சுவாமி-அம்பாள் பச்சை சாத்தி பவனி

Posted: 08 Jul 2016 01:10 PM PDT

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் ஆனி உத்திரப் பெருந்திருவிழாவின் 8ஆம் நாளான வெள்ளிக்கிழமை சுவாமி- அம்பாள் பச்சை சாத்தி சப்பர பவனி நடைபெற்றது.

இலவச வீட்டுமனை பெற பணம் கொடுக்காதீர்கள்: மீனவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

Posted: 08 Jul 2016 01:09 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வீட்டுமனை பெற, யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத் தினார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.

விளாத்திகுளம் அருகே பைக் - டிராக்டர் மோதல்: வியாபாரி சாவு

Posted: 08 Jul 2016 01:09 PM PDT

விளாத்திகுளம் அருகே எல். வெங்கடேஸ்வரபுரத்தில் பைக்கும் தண்ணீர் டிராக்டரும் மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலேயே  இறந்தார்.

உடன்குடியில் 11இல் இலவச மருத்துவ முகாம்

Posted: 08 Jul 2016 01:08 PM PDT

உடன்குடி ஜெய்கபீஷா மருத்துவமனை, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் சார்பில் இலவச மருத்துவ முகாம் திங்கள்கிழமை(ஜூலை 11)  நடைபெறுகிறது.

சாத்தான்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Posted: 08 Jul 2016 01:08 PM PDT

சாத்தான்குளத்தில் இருந்து திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றும் முதற்கட்டப் பணியை வருவாய்த்துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 08 Jul 2016 01:07 PM PDT

தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து வேலிடுபட்டி கிராம மக்கள் விளாத்திகுளம் ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

இலவச பட்டா இடத்தை அளந்து தரக் கோரி மக்கள் மனு

Posted: 08 Jul 2016 01:07 PM PDT

இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை முறையாக அளந்து தரக் கோரி தெற்கு சுப்பிரமணியபுரம் பொதுமக்கள் கோட்டாட்சியரிடம்  வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

கோவில்பட்டியில் டி.எஸ்.பி. அலுவலகம் முற்றுகை

Posted: 08 Jul 2016 01:06 PM PDT

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்கம் மற்றும் அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பினர் டி.எஸ்.பி. அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

சாலையை சீரமைக்கக் கோரி கழுகுமலையில் திடீர் சாலை மறியல்

Posted: 08 Jul 2016 01:06 PM PDT

கழுகுமலையில் கயத்தாறு - கழுகுமலை - சிவகாசி சாலைகளை செப்பனிடக் கோரி பாஜகவினர் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கக் கோரி திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Posted: 08 Jul 2016 01:06 PM PDT

குடிநீர் வழங்க கோரி மேலஅரசூர் பொதுமக்கள், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.

"விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகள் பெறலாம்'

Posted: 08 Jul 2016 01:05 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கிழக்கு கோபுர சீரமைப்புப் பணிகள் தொடக்கம்

Posted: 08 Jul 2016 01:05 PM PDT

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கிழக்கு கோபுரம் சீரமைக்கும் திருப்பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

"குளச்சல் வர்த்தக துறைமுகத்தை எதிர்க்க கேரள அரசுக்கு உரிமையில்லை'

Posted: 08 Jul 2016 01:04 PM PDT

குளச்சல்(இனயம்)  வர்த்தக துறைமுகத்தை எதிர்ப்பதற்கு கேரள மாநிலத்துக்கு உரிமையில்லை என்றார்  கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்.

நாவல்காட்டில்  13 இல் இரண்டாம் கட்ட மனுநீதி முகாம்

Posted: 08 Jul 2016 01:04 PM PDT

நாவல்காட்டில் இரண்டாம் கட்ட மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை(ஜூலை 13) நடைபெறுகிறது.

குமாரகோவிலில் முடி காணிக்கைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்

Posted: 08 Jul 2016 01:03 PM PDT

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை செலுத்தவரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கோயில் விழாக் கமிட்டியினர் புகார் கூறியுள்ளனர்.

குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் நாளை சர்ப்பக் காவடித் திருவிழா

Posted: 08 Jul 2016 01:03 PM PDT

கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) சர்ப்பக் காவடித் திருவிழா நடைபெற உள்ளது.

ரமலான் விடுமுறை: குமரி சுற்றுலா தலங்களில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Posted: 08 Jul 2016 01:02 PM PDT

ரமலான் விடுமுறையைத் தொடர்ந்து குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளில் வருகை அதிகரித்துள்ளது.

11இல் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் குடமுழுக்கு

Posted: 08 Jul 2016 01:02 PM PDT

நாகர்கோவில் வடசேரி தழுவிய மகாதேவர் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை(ஜூலை 11) நடைபெறுகிறது.

குமரி அரசு கலைக்கல்லூரி 2017 இல் புதிய கட்டடத்தில் செயல்படும்: ஆட்சியர்

Posted: 08 Jul 2016 01:02 PM PDT

கன்னியாகுமரியை அடுத்த பால்குளத்தில் ரூ. 7.25 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கட்டடத்தில் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தக்கலை அருகே சிவன் கோயிலில் திருட்டு

Posted: 08 Jul 2016 12:54 PM PDT

தக்கலை அருகே சிவன்கோயில் பூட்டை உடைத்து தங்க, வெள்ளி நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குழித்துறை அரசு மருத்துவமனையில் குழந்தையிடம் நகை திருடிய இருவர் கைது

Posted: 08 Jul 2016 12:53 PM PDT

குழித்துறை அரசு மருத்துவமனையில் குழந்தையிடம் தங்கச் சங்கிலி திருடிய இளம்பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

குழித்துறை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட முயற்சி

Posted: 08 Jul 2016 12:53 PM PDT

குழித்துறை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் புகுந்து திருட முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரயிலிலிருந்து தவறி விழுந்து குமரியைச் சேர்ந்தவர் சாவு

Posted: 08 Jul 2016 12:52 PM PDT

திருச்சி அருகே வியாழக்கிழமை இரவு ரயிலிலிருந்து தவறி விழுந்து கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

குமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 12:52 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள காணிக்கை முடி திருட்டு

Posted: 08 Jul 2016 12:51 PM PDT

விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சுமார் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள காணிக்கை முடி திருடப்பட்டுள்ளது.

பி.எஸ்.குமாரசாமிராஜா 118 ஆவது பிறந்தநாள்

Posted: 08 Jul 2016 12:51 PM PDT

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், ஒரிஸா மாநில முன்னாள் ஆளுநருமான பி.எஸ்.குமாரசாமிராஜாவின் 118 ஆவது பிறந்தநாள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விபத்தில் சிக்கியவர்களை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மீது லாரி மோதல்: 2 பேர் சாவு

Posted: 08 Jul 2016 12:51 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளிக்கிழமை லாரி மீது சுற்றுலா வேன் மோதியது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் மீது மற்றொரு லாரி மோதியது. இச்சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

அமராவதிபுதூர் பகுதியில் ஜூலை 11 இல் மின்தடை

Posted: 08 Jul 2016 12:50 PM PDT

காரைக்குடி அருகே அமராவதிபுதூர் துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 11) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநிதியில் வளர்ச்சிப் பணிகள்: மானாமதுரை பேரூராட்சி ஒப்புதல்

Posted: 08 Jul 2016 12:50 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேரூராட்சி பொது நிதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாம்பன் மீனவர் வலையில்  1 டன் திருக்கை மீன்கள் சிக்கின

Posted: 08 Jul 2016 12:49 PM PDT

பாம்பன் மீனவர் ஒருவருக்கு வெள்ளிக்கிழமை ஒரு டன்னுக்கு மேலாக திருக்கை மீன்கள் கிடைத்தன. 

மானாமதுரை ஸ்ரீவீரழகர் கோயில் ஆடி பிரமோற்சவ விழா: நாளை மறுநாள் தொடங்குகிறது

Posted: 08 Jul 2016 12:49 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயில் ஆடிப் பிரமோற்சவ விழா வரும் ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது.

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 12:49 PM PDT

ராமாநாதபுரத்தில் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் "திடீர்' ஆர்ப்பாட்டம்

Posted: 08 Jul 2016 12:48 PM PDT

சிவகங்கையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரிந்த ஊழியர்கள், தங்களை ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுத்ததாக, ஆட்சியரின் நேர்முக உதவியாளரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் கோயில் மஹாகும்பாபிஷேக விழா: யாக பூஜை தொடக்கம்

Posted: 08 Jul 2016 12:48 PM PDT

பரமக்குடி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை யாக பூஜை தொடங்கியது.

இருசக்கர வாகனம் திருடியவர் விற்க முயன்றபோது பிடிபட்டார்

Posted: 08 Jul 2016 12:47 PM PDT

திருச்சியில் திருடிய இரு சக்கர வாகனத்தை திருப்பத்தூரில் விற்க முயன்ற நபரை போலீஸார்  வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சிலம்பாட்டம்: கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவிக்குப் பாராட்டு

Posted: 08 Jul 2016 12:47 PM PDT

மாநில அளவில் சிலம்பாட்டப் போட்டியில் 3 ஆம் இடம் பெற்ற கீழச்சிவல்பட்டி பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் 17 பெட்டிக் கடைகளில் ரூ.1 லட்சம் போதைப்பொருள்கள் பறிமுதல்

Posted: 08 Jul 2016 12:46 PM PDT

ராமநாதபுரத்தில் 17 பெட்டிக் கடைகளில் இருந்து ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

காரைக்குடியில் பேருந்து ஓட்டுநர் கொலை: தாய், தந்தையிடம் விசாரணை

Posted: 08 Jul 2016 12:46 PM PDT

காரைக்குடியில் தனியார் பேருந்து ஓட்டுநர் குடும்பத் தகராறில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாயார் மற்றும் தந்தை உள்ளிட்ட மூவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு காவல் நீட்டிப்பு

Posted: 08 Jul 2016 12:45 PM PDT

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேருக்கு இம்மாதம் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

சிவகங்கை அரசு கல்லூரியில் முதுகலை மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க ஜூலை 12 ஆம் தேதி இறுதி நாள்

Posted: 08 Jul 2016 12:45 PM PDT

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு வரும் ஜூலை 12 ஆம் தேதி கடைசி நாள் என்று அக்கல்லூரியின் கூடுதல் முதல்வர்(பொறுப்பு) மு.பரிபூரணம் தெரிவித்தார்.

பாம்பனில் புதிய தூக்குப்பாலம்: தலைமைப் பொறியாளர் ஆய்வு

Posted: 08 Jul 2016 12:45 PM PDT

பாம்பனில் புதிய தூக்குப்பாலம் அமைப்பது தொடர்பாக தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் எஸ்.எஸ்.குப்தா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த 2 வாரம் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

Posted: 08 Jul 2016 12:44 PM PDT

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த இரண்டு வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி. முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

மழை நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரக் கோரிக்கை

Posted: 08 Jul 2016 12:37 PM PDT

அருப்புக்கோட்டை நகரின் பெரும்பான்மையான பகுதிகளில் உள்ள மழை நீர்வரத்துக் கால்வாய்களில் குப்பைகள் அடைத்து, புதர்மண்டிக் கிடப்பதால், இவற்றை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் பட்டாசு கடை தீ விபத்து சம்பவம்: போக்குவரத்து இன்று முதல் தொடக்கம்: பட்டாசு கடை உரிமையாளர் சரண்

Posted: 08 Jul 2016 12:37 PM PDT

சிவகாசியில் கடந்த வாரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால், சிவகாசி-விருதுநகர் புறவழிச் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் போக்குவரத்து சனிக்கிழமை முதல் தொடங்குவதாக, சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

அறிவியல் இயக்கம் சார்பில் ஜூலை 15 இல் வாசிப்பு தினம்

Posted: 08 Jul 2016 12:36 PM PDT

விருதுநகரில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் எம். பழனிக்குமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகரில் தென்மண்டல அளவில் தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

Posted: 08 Jul 2016 12:36 PM PDT

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்களுக்கான தென்மண்டல அளவில் விருதுநகரில் 2 நாள்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை, வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி. முத்துக்குமரன் தொடக்கி வைத்தார்.

பணி நிரந்தரம் கோரி துப்புரவுப் பணியாளர்கள் ஆணையரிடம் மனு

Posted: 08 Jul 2016 12:35 PM PDT

விருதுநகர் நகராட்சி தினக்கூலி துப்புரவுப் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, வெள்ளிக்கிழமை ஆணையர் பழனிவேலிடம் மனு அளித்தனர்.

கோயில் புலிகுத்தி நான்குவழிச் சாலையில் சேதமடைந்த பாலத்தை சீரமைக்க கோரிக்கை

Posted: 08 Jul 2016 12:35 PM PDT

விருதுநகர் அருகே நான்குவழிச் சாலையில் கோயில் புலிகுத்தி என்ற இடத்தில் உடைந்துள்ள பாலத்தை சீரமைக்கக் கோரி பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை: பொதுமக்கள் அவதி

Posted: 08 Jul 2016 12:35 PM PDT

விருதுநகர் நகராட்சியில் கழிப்பறை வசதி இல்லாததால், பொதுமக்கள்  சிரமப்படுகின்றனர்.

ராஜபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Posted: 08 Jul 2016 12:34 PM PDT

ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காளீஸ்வரி கல்லூரியில் பன்னாட்டு உணவுக் கண்காட்சி

Posted: 08 Jul 2016 12:34 PM PDT

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மைத் துறை சார்பில், பன்னாட்டு உணவுக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் சாலை மறியல்: 477 பேர் கைது

Posted: 08 Jul 2016 12:34 PM PDT

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் மருத்துவ துணி உற்பத்தி செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய சாலை மறியல் போராட்டத்தில், 477 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க கோரிக்கை

Posted: 08 Jul 2016 12:33 PM PDT

ஆண்டிபட்டி அருகே மூடிக் கிடக்கும் மொட்டனூத்து கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர் அருகே மாட்டுக்கொட்டகையில் செயல்படும் அரசுப் பள்ளி: புதிய கட்டடத்துக்கு நிதி ஒதுக்க கோரிக்கை

Posted: 08 Jul 2016 12:33 PM PDT

சின்னமனூர் அருகே பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததையடுத்து, மாட்டுக்கொட்டகையில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் சுங்கச் சாவடியில் வாகனங்கள் நுழைவு கட்டணம் உயர்வு

Posted: 08 Jul 2016 12:32 PM PDT

கொடைக்கானல் சுங்கச் சாவடியில் வாகனங்கள் நுழைவுக் கட்டணம் வெள்ளிக்கிழமை முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

பழனி மலைக் கோயில் ரோப்கார் இயங்கத் தொடங்கியது

Posted: 08 Jul 2016 12:32 PM PDT

பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்லும் ரோப்காரின் மின்மோட்டார் பழுது சரி செய்யப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் அது இயங்கத் தொடங்கியது.

வியாபாரி மீது இரும்புக் கம்பி தாக்குதல்: 2 பேர் கைது

Posted: 08 Jul 2016 12:32 PM PDT

கொடைக்கானலில் இரும்புக் கம்பியால் வியாபாரியை தாக்கிய 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™