Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மன அழுத்தத்தில் ராம்குமார்:வழக்குரைஞர் பேட்டி

Posted: 06 Jul 2016 01:31 PM PDT

ராம்குமார் மன அழுத்தத்தில் இருப்பதாக, அவரை சந்தித்த வழக்குரைஞர் பெ.ராமராஜ் தெரிவித்தார்.

மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு

Posted: 06 Jul 2016 01:30 PM PDT

வீட்டின் நாலாவது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசிய மருத்துவ மாணவர்கள் இருவரும் போலீஸில் சரணடைந்தனர்; இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சிறைத் துறை ஏ.டி.ஜி.பி.யாக விஜயகுமார் நியமனம்

Posted: 06 Jul 2016 01:29 PM PDT

தமிழக சிறைத் துறை ஏ.டி.ஜி.பி. யாக விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.

திருச்சி, மதுரை, கோவைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

Posted: 06 Jul 2016 01:29 PM PDT

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருச்சி-சென்னை

இன்று ரம்ஜான் தலைமை ஹாஜி அறிவிப்பு

Posted: 06 Jul 2016 01:29 PM PDT

தமிழகம் முழுவதும் ரம்ஜான் வியாழக்கிழமை (ஜூலை 7) கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

Posted: 06 Jul 2016 01:28 PM PDT

ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேருந்து மோதி படுகாயமடைந்த யானை முதுமலையில் உயிரிழந்தது

Posted: 06 Jul 2016 01:27 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஆண் யானை புதன்கிழமை உயிரிழந்தது.

விவசாயக் கடனைமுழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

Posted: 06 Jul 2016 01:26 PM PDT

அனைத்து விவசாயிகளின் கடனையும் தமிழக அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் தோல்வியால் திமுக முடங்கிப் போய் விடவில்லை

Posted: 06 Jul 2016 01:26 PM PDT

தேர்தல் தோல்யால் திமுக முடங்கிப் போய் விடவில்லை என்றார் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

குற்றங்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும்

Posted: 06 Jul 2016 01:25 PM PDT

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் மதுக் கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

உயர் மருத்துவ படிப்புகளுக்கு 836 பேர் விண்ணப்பிப்பு

Posted: 06 Jul 2016 01:24 PM PDT

உயர் மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 836 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எம்.டி. ஹோமியோபதிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jul 2016 01:24 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுயநிதி ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.டி. ஹோமியோபதி படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏமாற்றமளிக்கும் மாற்றம்!

Posted: 06 Jul 2016 01:23 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். முக்கியமான துறைகளான உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளிவிவகாரம் ஆகிய துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இதை விரிவாக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.

காயாகிக் கனியாகட்டும்!

Posted: 06 Jul 2016 01:22 PM PDT

சில நாட்களாகவே காலை நேரத்தில் வீட்டுக்குள் வந்து விழும் பத்திரிகைகள் கருப்பு மையில் அச்சிடப்பட்டிருந்தாலும், அவற்றின் மேல் இரத்தக்கறை படிந்தே வருகின்றன. சின்னத்திரையைத் திறந்தால் கத்திகளும் அரிவாள்களும் வந்து விழுகின்றன. பெரிய திரைக்குச் சென்றாலோ இரயில்கள், தண்டவாளங்களில் ஓடுவதற்குப் பதிலாக மனிதர்களின் மேலேயே ஓடுகின்றன.

முயல்வோம் வெல்வோம்

Posted: 06 Jul 2016 01:21 PM PDT

புத்தகப் பேழையைக் குடைந்து கொண்டேயிருந்த நண்பரிடம், "என்ன தேடுகிறீர்கள்' என வினவினேன். "தெரியவில்லை. மறந்து போய்விட்டேன்' என்று விடை வந்தது.

ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தால் இருதரப்பு உறவு மேம்படும்:பிரதமர் மோடி நம்பிக்கை

Posted: 06 Jul 2016 01:19 PM PDT

இருதரப்பு உறவை மேம்படுத்துவதே, ஆப்பிரிக்க நாடுகளில் தான் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாஜக நிர்வாகிகள் விரைவில் மாற்றம்?

Posted: 06 Jul 2016 01:18 PM PDT

மத்திய அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து பாஜக கட்சி அமைப்பிலும் மாற்றம் நிகழக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றமாக பெயர் மாற்றம்:மத்திய அரசுக்கு கருணாநிதி பாராட்டு

Posted: 06 Jul 2016 01:17 PM PDT

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என மத்திய அரசு மாற்றியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

"கொலீஜியம்' விவகாரம்: கருத்து வேறுபாடுகளுக்கு விரைவில் தீர்வு :ரவிசங்கர் பிரசாத் நம்பிக்கை

Posted: 06 Jul 2016 01:16 PM PDT

"கொலீஜியம் வரைவு அறிக்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கும், நீதிபதிகள் குழுவுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைய முயற்சி மேற்கொள்ளப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மாமன்ற உறுப்பினர்களே மேயரை தேர்வு செய்யும் முறை:சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தது

Posted: 06 Jul 2016 01:15 PM PDT

மேயர்களை மாமன்ற உறுப்பினர்களே தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.

"ஜிஎஸ்டி மசோதாவை விரைவில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிப்போம்'

Posted: 06 Jul 2016 01:15 PM PDT

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை விரைவில் நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவோம் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் தெரிவித்தார்.

இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு மிகையானது:அமெரிக்கா சந்தேகம்

Posted: 06 Jul 2016 01:14 PM PDT

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் தெரிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரி அருகிலுள்ள கடைகளில் புகையிலை பொருள்கள் பறிமுதல்

Posted: 06 Jul 2016 12:42 PM PDT

தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி அருகிலுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திமுக நிர்வாகி குடும்பத்துக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்

Posted: 06 Jul 2016 12:41 PM PDT

பட்டுக்கோட்டையில் அண்மையில் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகர் த. மனோகரன் குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் தீவனப் பகுப்பாய்வு ஆய்வகம் தொடக்கம்

Posted: 06 Jul 2016 12:41 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிலையத்தில் உள்ள கால்நடை ஊட்டச் சத்துவியல் துறையில் கால்நடை தீவனப் பகுப்பாய்வு மற்றும் தர நிர்ணய ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் ஆக.24-ல் அகமுடையார் சங்க மாநிலப் பொதுக் குழுக் கூட்டம்

Posted: 06 Jul 2016 12:40 PM PDT

தஞ்சாவூரில் ஆக. 24-ம் தேதி மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது என தமிழக தலைமை அகமுடையார் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஆலங்குடியில் ஏடிஎம் அட்டையை மாற்றி பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் திருட்டு

Posted: 06 Jul 2016 12:40 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ரூ. 40 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

பட்டுக்கோட்டையில் மழை

Posted: 06 Jul 2016 12:39 PM PDT

பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமார் அரை மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

விளையாட்டு விடுதியில் சேர்க்கை: ஜூலை 12-ல் தேர்வு போட்டிகள்

Posted: 06 Jul 2016 12:39 PM PDT

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் சென்னையில் ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

திருவையாறில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

Posted: 06 Jul 2016 12:38 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள 15 வார்டுகளில் கருவேல மரங்களை அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

குறுவை தொகுப்புத் திட்டத்தில் பட்டுக்கோட்டையில் இயந்திர நடவுப் பணி

Posted: 06 Jul 2016 12:36 PM PDT

தமிழக முதல்வர் அறிவித்துள்ள குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் பட்டுக்கோட்டை வட்டாரத்திற்கு 570 ஏக்கர் பரப்பு இயந்திர நடவு மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகரில் 7 இடங்களில் நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி: மாநிலங்களவை உறுப்பினர் தொடங்கிவைத்தார்

Posted: 06 Jul 2016 12:35 PM PDT

தஞ்சாவூர் மாநகரில் 7 இடங்களில் அம்ரூட் (அடல் புதுப்பித்தல் மற்றும் நகர உருமாற்றத்துக்கான திட்டம்) திட்ட நிதியின்கீழ் ரூ. 45.69 கோடியில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்த வியாபாரி சாவு

Posted: 06 Jul 2016 12:35 PM PDT

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த இரும்புக் கடை வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

ஜூலை 9-ல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு முகாம்

Posted: 06 Jul 2016 12:34 PM PDT

மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிராமங்களிலும் அம்மா உணவகம்: பிராமணர் சங்கம் வலியுறுத்தல்

Posted: 06 Jul 2016 12:34 PM PDT

ஊராட்சிகளிலும் அம்மா உணவகம் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ. ஒன்றியக் கூட்டம்

Posted: 06 Jul 2016 12:33 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் வடக்கு ஒன்றிய நிர்வாகி பி. வீரமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் மழை

Posted: 06 Jul 2016 12:32 PM PDT

ஆலங்குடி பகுதியில் புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

"வாகனம் ஓட்டும்போது மாணவர்களுக்கு நிதானம் தேவை'

Posted: 06 Jul 2016 12:32 PM PDT

வாகனம் ஓட்டும்போது மாணவர்களுக்கு நிதானம் மிகவும் அவசியம் என்றார் புதுகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் த. பரிமளதேவி.

மாணவரை மீட்ட காவலருக்கு பாராட்டு

Posted: 06 Jul 2016 12:31 PM PDT

அறந்தாங்கி அருகே காணாமல்போன பள்ளி மாணவரை மீட்ட தனிப்படை காவலருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுகை அருகே  வீட்டிலிருந்த பெண்களைத் தாக்கி 14 பவுன் நகை கொள்ளை

Posted: 06 Jul 2016 12:31 PM PDT

புதுக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்களைத் தாக்கி அவர்களிடமிருந்த 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டுமானப் பணி: அமைச்சர் ஆய்வு

Posted: 06 Jul 2016 12:31 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்துறை சார்பில் ரூ. 1. 50 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டட கட்டுமானப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அண்மையில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் ஆம்ஆத்மியை பலப்படுத்தத் தீர்மானம்

Posted: 06 Jul 2016 12:30 PM PDT

தில்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய சமூக ஊடக மாநாட்டில், தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ஆம்ஆத்மி கட்சியைப் பலப்படுத்த தீவிரமாகப் பணியாற்றுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரிமளம் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

Posted: 06 Jul 2016 12:28 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ. 55.32 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்னமராவதி பள்ளிகளில் ரமலான் விழா

Posted: 06 Jul 2016 12:27 PM PDT

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் ரமலான் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுகை மன்னர் கல்லூரியில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

Posted: 06 Jul 2016 12:27 PM PDT

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரியில் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில், போட்டித் தேர்வுகளுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

"விவசாயிகள் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள நபார்டு வங்கி உதவும்'

Posted: 06 Jul 2016 12:26 PM PDT

விவசாயிகள் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ள நபார்டு வங்கி உதவத் தயாராக உள்ளது என்றார் அதன் மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். சோமசுந்தரம்.

ஆலங்குடியில் ஏடிஎம் அட்டையை மாற்றி பெண்ணிடம் ரூ. 40 ஆயிரம் திருட்டு

Posted: 06 Jul 2016 12:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக்கொடுத்து ரூ. 40 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தேசிய மாணவர் படை முகாம்: 23 பதக்கங்களுடன் மன்னர் கல்லூரி மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 06 Jul 2016 12:25 PM PDT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமில், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 23 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள்.

அரியலூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில்  ஜூலை 11-ல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது

Posted: 06 Jul 2016 12:24 PM PDT

அரியலூர் மாவட்டத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசாணைப்படி அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஒப்படைப்பு செய்யப்படும் 50 சதவீதம்) அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வுச் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 11 ஆம் தேதி தொடங்குகிறது.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவரின் திருப்பூர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

Posted: 06 Jul 2016 12:24 PM PDT

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதாகமேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட இளைஞரின் திருப்பூர் வீட்டில் இருந்து மடிக்கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இருசக்கர வாகனங்கள் மோதல்: பெண் உள்பட 3 பேர் காயம்

Posted: 06 Jul 2016 12:24 PM PDT

அரியலூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் ஆய்வு

Posted: 06 Jul 2016 12:23 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதிகளிலுள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

விளையாட்டு விடுதியில் சேர்க்கை: ஜூலை 12-ல் தேர்வு போட்டி

Posted: 06 Jul 2016 12:23 PM PDT

விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான தேர்வு போட்டிகள் சென்னையில் ஜூலை 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

பயங்கரவாதி மோஸிருதீனுக்கு ஐஎஸ் அமைப்புடன் நேரடித் தொடர்பு?

Posted: 06 Jul 2016 12:23 PM PDT

ஐஎஸ் பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்ட முகமது மோஸிருதீனை, சிரியா, இராக்கில் இருந்து சிலர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

அறுவை சிகிச்சையில் கண் பார்வை பாதிப்பு:2 மருத்துவர்கள் உள்பட மூவர் இட மாற்றம்

Posted: 06 Jul 2016 12:22 PM PDT

18 பேருக்கு பார்வை பாதிக்கப்பட்டது தொடர்பாக 2 மருத்துவர்கள் உள்பட மூவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் சாவு

Posted: 06 Jul 2016 12:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர் உள்பட 2 பேர் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.

வன விலங்குகள் உயிரிழப்பது தடுக்கப்படுமா? பெரம்பலூர் மாவட்ட வனத் துறை அலட்சியம்

Posted: 06 Jul 2016 12:22 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் வனத் துறையினரின் அலட்சியத்தால் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்தது

Posted: 06 Jul 2016 12:21 PM PDT

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பருவ மழையால் மேட்டூர் அணைக்கும் கடந்த நான்கு நாள்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

வஞ்சினபுரம் கோயிலில் ஜூலை 10-ல் கும்பாபிஷேகம்

Posted: 06 Jul 2016 12:21 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வஞ்சினாபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 10 (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தல்: பார்சேகர்தான் முதல்வர் வேட்பாளர்

Posted: 06 Jul 2016 12:21 PM PDT

கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் தலைமையில் பாஜக சந்திக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகை: பிரணாப் வாழ்த்து

Posted: 06 Jul 2016 12:20 PM PDT

அன்பு, சகோதரத்துவ மார்க்கம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை இந்த ரம்ஜான் பெருநாள் உணர்த்தும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஜயங்கொண்டம் அருகே சொத்துத் தகராறில் இளைஞரை தாக்கியவர் கைது

Posted: 06 Jul 2016 12:20 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சொத்து தகராறில் இளைஞரைத் தாக்கியவரை ஆண்டிமடம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

முறைகேடுகளைத் தட்டிக் கேட்டவர்களுக்கு திட்டு: லாடபுரம் பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் மீது புகார்

Posted: 06 Jul 2016 12:20 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் பால் உற்பத்தியாளர் சங்கச் செயலர் மற்றும் தலைவர் மீது விசாரணை மேற்கொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர்களின் செயல்திறன்?சிவசேனை கேள்வி

Posted: 06 Jul 2016 12:19 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை மத்திய அமைச்சர்களின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

வேமூலா விவகாரத்தை திசைதிருப்பவே இரானியின் இலாகா மாற்றம்: கன்னையா

Posted: 06 Jul 2016 12:19 PM PDT

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் தற்கொலை விவகாரத்தை திசைதிருப்பவே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இலாகா மாற்றப்பட்டுள்ளது என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தெரிவித்தார்.

பாதுகாப்பின்றி வெடிமருந்து கொண்டு சென்றவர் கைது

Posted: 06 Jul 2016 12:19 PM PDT

பெரம்பலூர் அருகே பாதுகாப்பின்றி வெடி மருந்து கொண்டு சென்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

முஸ்லிம் போதகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர்

Posted: 06 Jul 2016 12:19 PM PDT

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக் வெறுப்பூட்டும் வகையில் பேசி வருவது கவலையளிப்பதாக, மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் நியமனம்

Posted: 06 Jul 2016 12:19 PM PDT

பெரம்பலூர் மாவட்ட பாஜக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் கருவி

Posted: 06 Jul 2016 12:18 PM PDT

பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் ரூ. 20 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன காசநோய் கண்டறியும் கருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இணை இயக்குநர் (பொ) வானொலி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.

மல்லையாவின் ஜெட் விமானம்:மறு ஏலம் விட முடிவு

Posted: 06 Jul 2016 12:18 PM PDT

கடன் ஏய்ப்பு வழக்கில் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொகுசு ஜெட் விமானத்தை மீண்டும் ஏலம் விட மத்திய சேவை வரித் துறை திட்டமிட்டுள்ளது.

விரிவுரையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வு: ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 06 Jul 2016 12:18 PM PDT

ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர் பணிக்கான போட்டி எழுத்துத் தேர்வுக்கு ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்:ரயில்வே புதிய இணையமைச்சர் உறுதி

Posted: 06 Jul 2016 12:17 PM PDT

ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அத்துறைக்கான புதிய இணையமைச்சர் ராஜென் கோஹேன் தெரிவித்துள்ளார்.

ரயிலில் அடிபட்டு இளைஞர் சாவு

Posted: 06 Jul 2016 12:17 PM PDT

கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் காந்திகிராமம் அருகே புதன்கிழமை காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ரயிலில் அடிபட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக கரூர் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

காஷ்மீரில் மோதல்: போலீஸ் உயரதிகாரி உள்பட 30 பேர் காயம்

Posted: 06 Jul 2016 12:17 PM PDT

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே புதன்கிழமை மோதல் வெடித்தது. இதில், போலீஸ் உயரதிகாரி ஒருவர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து வெங்கமேட்டில் முதியோர்கள் சாலை மறியல்

Posted: 06 Jul 2016 12:17 PM PDT

கரூர் வெங்கமேட்டில் முதியோர்கள் உதவித்தொகை வழங்கப்படாததைக் கண்டித்து பழைய கரூர்- சேலம் புறவழிச்சாலையில் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ அத்துமீறல்களை விசாரிக்க உண்மை கண்டறியும் குழு:இலங்கை அரசு முடிவு

Posted: 06 Jul 2016 12:17 PM PDT

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின்போது ராணுவம் நடத்திய அத்துமீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக உண்மை கண்டறியும் குழுவை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கரூரில் தபால் ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Posted: 06 Jul 2016 12:16 PM PDT

கரூரில் தபால் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையைத் திருடிச்சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கனிம உற்பத்தியை 35% அதிகரிக்க நடவடிக்கை

Posted: 06 Jul 2016 12:16 PM PDT

கனிம உற்பத்தியை ஆண்டுக்கு 35 சதவீதம் அதிகரிக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுரங்கத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நமது பண்பாடு,கலாசாரத்தை சீரழித்ததில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு பெரும்பங்கு: தாம்ப்ராஸ் மாநிலத் தலைவர் குற்றச்சாட்டு

Posted: 06 Jul 2016 12:16 PM PDT

நமது பாரம்பரியம்,பண்பாடு,கலாசாரம் ஆகியவைகளை சீரழித்ததில் தகவல்,தொழில்நுட்பத் துறைக்கு பெரும்பங்கு உண்டு என்றார் தமிழ்நாடு பிராமணர் சங்க(தாம்ப்ராஸ்) மாநிலத் தலைவர் என்.நாராயணன்.

18 மாதத்தில் 22 கிலோ எடையுள்ள குழந்தை!

Posted: 06 Jul 2016 12:16 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் அரிய வகை நோயால் 18 மாதக் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் உடல் எடை 22 கிலோவாக அதிகரித்துள்ளது.

கரூரில் டிப்பர் லாரி திருட்டு

Posted: 06 Jul 2016 12:15 PM PDT

கரூரில் டிப்பர் லாரியைத் திருடிச்சென்ற மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

ஜி-20 தொழிலாளர் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார் பண்டாரு தத்தாத்ரேயா

Posted: 06 Jul 2016 12:15 PM PDT

சீனாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் தொழிலாளர் நலத் துறை மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் 9-ஆம் தேதி சீனா செல்ல இருப்பதாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.

தமிழக காங். கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை மௌன விரதம் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Posted: 06 Jul 2016 12:15 PM PDT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை மௌன விரதம் என்றார் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

லாகூரில் ஹஃபீஸ் சயீது தலைமையில் ரம்ஜான் தொழுகை:இந்தியா ,அமெரிக்காவுக்கு எதிராக உரை

Posted: 06 Jul 2016 12:15 PM PDT

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள கடாஃபி மைதானத்தில், ஜமாத்-உத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கின் முக்கியக் குற்றவாளியுமான ஹஃபீஸ் சயீது தலைமையில் சிறப்புத் தொழுகை

அரசுப் பேருந்து மோதி விவசாயி சாவு

Posted: 06 Jul 2016 12:14 PM PDT

தோகைமலை அருகே புதன்கிழமை காலை அரசுப்பேருந்து மோதி விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாலைகளை சீரமைக்காவிட்டால் கடத்துவோம்: அதிகாரிக்கு எம்என்எஸ் கவுன்சிலர் எச்சரிக்கை

Posted: 06 Jul 2016 12:14 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கவிட்டால் கடத்தப்போவதாக உள்ளாட்சி அதிகாரிக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக் கட்சி (எம்என்எஸ்) கவுன்சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குளித்தலை அருகே பைக்-லாரி மோதல்: இருவர் சாவு

Posted: 06 Jul 2016 12:14 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தில் முறைகேடு: கர்நாடகத்தில் 9 செயற்பொறியாளர்கள் பணியிடைநீக்கம்

Posted: 06 Jul 2016 12:14 PM PDT

கர்நாடகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக 9 செயற்பொறியாளர்களை பணியிடைநீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது: வைகோ

Posted: 06 Jul 2016 12:14 PM PDT

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமடைந்துள்ளது. சின்னஞ்சிறு பெண் குழந்தைகள் முதல் இளம்பெண்கள் வரை வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது என்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

பெரியார் நகர் விளையாட்டுத் திடலில் கட்டுமானப் பணி: கம்யூ. கட்சியினருடன் பொதுமக்கள் முற்றுகை

Posted: 06 Jul 2016 12:13 PM PDT

கரூரை அடுத்த பெரியார் நகர் விளையாட்டுத் திடலில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியைத் தடுத்து முற்றுகையிடும் போராட்டத்தில் அப்பகுதியினர் புதன்கிழமை ஈடுபட்டனர்.  

விம்பிள்டன் டென்னிஸ்:11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர்

Posted: 06 Jul 2016 12:13 PM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர்.

ஓய்வூதியர் சங்கக் கூட்டம்

Posted: 06 Jul 2016 12:13 PM PDT

திருச்செந்தூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கிளைக் கூட்டம் நடைபெற்றது.

யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

Posted: 06 Jul 2016 12:13 PM PDT

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

தூத்துக்குடியில் நாளை மீனவர் குறைதீர் கூட்டம்

Posted: 06 Jul 2016 12:12 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 8) நடைபெறுகிறது.

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்

Posted: 06 Jul 2016 12:12 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

இலங்கைக்கு எதிரான டி20 : இங்கிலாந்து வெற்றி

Posted: 06 Jul 2016 12:12 PM PDT

இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.

திருச்செந்தூர் கிருஷ்ணன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 06 Jul 2016 12:12 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

உடன்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை

Posted: 06 Jul 2016 12:11 PM PDT

உடன்குடியில் ரமலான் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

விவேகானந்தர் நினைவு தினம் கடைப்பிடிப்பு

Posted: 06 Jul 2016 12:11 PM PDT

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப் பள்ளியில் விவேகானந்தரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

அமெரிக்க ஓபன்:2-ஆவது சுற்றில் 6 இந்தியர்கள்

Posted: 06 Jul 2016 12:10 PM PDT

அமெரிக்க ஓபன் கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ்.பிரணாய் உள்ளிட்ட 6 பேர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™