ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பணபுழக்கம் அதிகரிக்க
- படித்ததில் பிடித்தது :) -..மெமரி கார்டு' விபரீதம் உஷார்!
- பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்!
- ஆகஸ்டு 2 - ஒரே நாளில் 3 விசேஷங்கள் !
- பெண் என்கிற பேரரசி!
- உனக்கு மட்டும் அரைபிளேடா ?
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
- ஏன் கனவுகள் தோன்றுகின்றன?
- சிக்கனமோ சிக்கனம்!
- செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி...
- மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா?
- பாதை மாற்றிய பரம்பொருள்!
- சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்!
- POSITIVE THINKING - நேர்மறை சிந்தனை
- இலவச மின்சாரம்
- திருடா திருடி படப் பாடல் - ரீமிக்ஸ் :)
- ஜாதகம் பயன்படுத்துவது எப்படி
- கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை
- நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள்
- புதுக்கவிதை
- கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
- ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 634 சிறைக் கைதிகள் விடுதலை
- 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து
| Posted: 06 Jul 2016 02:43 PM PDT பணபுழக்கம் அதிகரிக்க இன்றைய வாழ்வில் மனிதருக்கு முக்கிய தேவை பணம் மட்டுமே. பணம் இல்லாமல் ஒரு மனிதன் வாழ்வதென்பது அரிது. அந்த பணபுழக்கம் அதிகரிக்க சில பரிகாரங்களை இங்கே பார்ப்போம். பரிகாரம் : ❈ வெள்ளிகிழமை இரவு 8-9 மணிக்குள் 9 மண் விளக்குகளில் சுத்தமான நெய் விளக்கேற்றி ஒவ்வொரு விளக்குகளிலும் 1 கிராம்பு 1 கற்கண்டு போட்டு மகாலட்சுமி படத்தின் முன் வைத்து "ஓம் ஸ்ரீம் நமஹ" என 60 முறை கூறி வழிபட்டு வர வற்றாது பண வரவு இருந்து கொண்டு இருக்கும். ❈ சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து ... |
| படித்ததில் பிடித்தது :) -..மெமரி கார்டு' விபரீதம் உஷார்! Posted: 06 Jul 2016 02:42 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்! Posted: 06 Jul 2016 01:11 PM PDT பெருமாள் கோவிலில் தீர்த்தமும், சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான காரணம்! வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம். நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு) ஆதாரமாக உள்ள தீர்த்தம், பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம். எவ்வளவு சம்பாதித்தாலும், எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை. பஸ்மம் சாம்பல் தான் என்கிற நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. மாலைமலர் ... |
| ஆகஸ்டு 2 - ஒரே நாளில் 3 விசேஷங்கள் ! Posted: 06 Jul 2016 01:08 PM PDT ஒரே நாளில் 3 விசேஷங்கள்: ஆகஸ்டு 2–ந்தேதி ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி! ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள். இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது. ஆடிப்பெருக்கு ... |
| Posted: 06 Jul 2016 12:06 PM PDT முதல் தளத்தின் ஜன்னலைத் திறந்தாள் கோகிலா. அது, பறவைகள் வலசை போகும் விடியற்காலை, 5:00 மணி; வெயில் காலம் என்பதால், அதிகாலையிலேயே வானம் பொன் வண்ணத்தில் மின்ன, அரை வட்டத்தில், ஒரே தாள லயத்தில், முத்திரை பதித்தது போல் பறவைகள் பறந்தது, அழகுமயமாக இருந்தது. பறவைகள், 'ஜிவ்'வென்று ஏறி, இறங்கிப் பறந்தது, ஓர் ஓவியம் போன்று தெரிய, சிறிது நேரம் அதை ரசித்துக் கொண்டிருந்தவள், ஏதேச்சையாக தெரு முனையில் அந்த வாகனத்தைப் பார்த்தாள். அது, முகுந்தனுடைய ஹீரோ ஹோண்டா! 'முகுந்த் ஏன் இவ்வளவு கவலையில வர்றான்... யமுனாவுக்கு ... |
| Posted: 06 Jul 2016 11:59 AM PDT காகிதமும் பேனாவுமாகத் திரிந்த காதலன் இப்போதெல்லாம் கத்தியும் அருவாளுமாகத் திரிகிறான் ! முகநூலிலே தொடங்கிய காதல் முழுமை பெறாவிட்டால் முகத்திலே வெட்டு ! காதலிலே சமத்துவம் வேண்டாமா ? அவளுக்கு மட்டும் அருவாள் வெட்டு உனக்கு மட்டும் அரை பிளேடா ? நியூட்டனின் மூன்றாம் விதியை அறியாத முட்டாள்கள்தான் இன்றைய காதலர்கள் ! எதிர்வினை இல்லாதபோது எதற்கய்யா காதல் உனக்கு ? மன்மதனின் ஆயுதம் இனிமேல் மலரம்புகள் அல்ல ! " அருவாள் " என்பதை அறிந்திடுவீர் ! |
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III Posted: 06 Jul 2016 11:32 AM PDT வாவ் ! மீண்டும் இந்த திரி பிரிந்து விட்டது....... . . . இது 3 m பாகம் ! |
| Posted: 06 Jul 2016 10:48 AM PDT நாம் சாதாரணமாக தூங்கும்போது நம்முடைய மூளை முழுவதும் தூங்கி விடுகிறது. அதில் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. அப்போது நமக்கு கனவு உண்டாவதே இல்லை. ஆனால், சில சமயங்களில் நம்முடைய மூளையில் சில பாகங்கள் மட்டும் தூங்குகின்றன. மற்ற பாகங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. அந்தப் பாகங்கள் நம்முடைய பழைய அனுபவங்களைக் கொண்டு கனவுகளை ஏற்படுத்துகின்றன. நாம் கனவு கண்டாலும் சில சமயங்களில்தான் அது நம்முடைய ஞாபகத்துக்கு வருகிறது. நம்முடைய மூளையில் கனவுகளை உண்டாக்கும் பாகம் சிறியதாய் இருந்தால் கனவு மறந்து போகும். ... |
| Posted: 06 Jul 2016 10:42 AM PDT முன்னொரு காலத்தில் கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் சேது என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் உலக மகாகருமி. அவனுக்கு மூதாதையர் சொத்து நிறைய இருந்தது. வீடுகளிலிருந்து வாடகை வரும். நிலங்களில் இருந்து குத்தகைப் பணம் வரும். இவையெல்லாவற்றையும் ஒழுங்காக வசூலிப்பதுதான் அவன் தொழில். எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு காசு கூட கொடுக்க மாட்டான். அந்தக் காலத்தில் வங்கிகள் இல்லாததால், பெரிய தோட்டத்தில் இருந்த மாமரத்தின் அடியில், குழி தோண்டி வெள்ளிக் காசுகளையும், தங்க நாணயங்களையும் பானையில் போட்டு ... |
| செய்து பாருங்கள் - செர்ரி... செர்ரி... Posted: 06 Jul 2016 10:35 AM PDT தேவைப்படும் பொருட்கள்: பென்சில், ஸ்கேல், கத்தரிக்கோல், வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டு, க்ளூ ஸ்டிக், விதவிதமான நிறங்களில் பட்டன்கள்! செய்யலாமா குட்டீஸ்...? 1. முதலில் வெளிர் மஞ்சள் நிற கார்ட் போர்டை 20x10 செமீ அளவில் கட் செய்து, அதை இரண்டாக மடித்துக் கொள்ளவும். அதில் நான்கு துளைகள் உள்ள சற்று பெரிய பட்டனை கரடியின் தலையாக ஒட்டவும். 2. பிறகு அதை விட பெரிய பட்டனை அதன் கீழே ஒட்டவும். (இதுதான் கரடியின் உடல்) 3. பிறகு நான்கு வயலட் கலர் சிறிய பட்டன்களை இந்த பெரிய பட்டனின் நான்கு புறங்களிலும் ... |
| Posted: 06 Jul 2016 10:30 AM PDT உரிமையாளர்களிடமும் சரி, ஊழியர்களிடமும் சரி, 'மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா?' என்று தனிமையில் பேட்டி எடுத்துப் பாருங்களேன். உதட்டை பிதுக்கவே செய்வர். உரிமையாளர்களை கேட்டால், வியாபார மந்தம், மூலப்பொருள் கிடைப்பதில் பிரச்னை, கொள்முதல் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவின் பெருக்கம், வசூலாகாமை, ஏமாந்த கதைகள், ஊதிய உயர்வு, உண்மையாக உழைக்கும் நம்பிக்கையான ஊழியர்கள் இல்லாமை, வரித் தொல்லை, லஞ்ச பிரச்னை மற்றும் லாபம் குறைந்து விட்டமை என்று அடுக்கிக் கொண்டே போய், 'மனுஷன் செய்வானா இந்த தொழிலை...' என்பர். ஊழியர்களை ... |
| Posted: 06 Jul 2016 10:24 AM PDT இறை சிந்தனையில் ஆழ்ந்துள்ள நன்மக்களின் வார்த்தைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது: ஓர் ஊரில், கலைமகளின் திருவருளை பெற்ற இருவர், இருந்தனர். அவர்களில் ஒருவர், முடவர்; மற்றொருவர், பார்வையற்றவர். பார்வையற்றவர், முடவரை தோளில் சுமந்து போக, தோளில் இருப்பவர், வார்த்தைகளால் வழிகாட்ட, அவர்களின் பயணம் தொடர்ந்தது. போகுமிடங்களில் எல்லாம், தங்கள் தெய்வீகப் புலமையை வெளிப்படுத்தி, மக்களுக்கு நல்வழிகாட்டி, தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். தங்களுக்கு அங்கஹீனம் இருப்பதை உணராத ... |
| சீனாவிற்கும், நமக்கும் இதுதான் வித்தியாசம்! Posted: 06 Jul 2016 10:15 AM PDT - நம் நாட்டில், வேலை செய்யும் இடத்தில் பிற்பகலில் தூங்கினால், 'சார்ஜ் ஷீட் அல்லது மெமோ' என கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவோம். ஆனால், சீனாவில் நிலைமையே வேறு! அங்கு, பிற்பகல், ஒரு மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்போது, விளக்குகள் அணைக்கப்படும். ஊழியர்கள் தம் இருக்கையிலேயே தலையை கவிழ்த்து தூங்கலாம் அல்லது ஓய்வறையில் சென்றும் தூங்கலாம். இப்படி, ஓய்வெடுத்த பின், வேலையை தொடருவதால், தனி நபரின் உற்பத்தி திறன் கூடும் என்பது சீனாவின் வாதம். ஒரு மணி நேரம் மின்சாரமும் சிக்கனம்! – ———————————— — ... |
| POSITIVE THINKING - நேர்மறை சிந்தனை Posted: 06 Jul 2016 09:44 AM PDT ![]() |
| Posted: 06 Jul 2016 09:37 AM PDT இலவச மின்சாரம் சமீபத்தில் இலவச மின்சாரம் 100 , தருவதால் லாபம் ஒன்றுமில்லை , மக்கள் அதிகம் பணம் செலுத்தவேண்டும் என்று கணக்குடன் ஒரு பதிவு வந்து இருந்தது . அந்த பதிவை கண்டுபிடிக்க முடியவில்லை . இன்று எங்கள் அடுக்ககத்தில் கணக்கு எடுத்தார்கள் . போன முறை 590 யூனிட்களுக்கு செலுத்திய தொகை 2724 இப்போது 580 யூனிட்டுகளுக்கு செலுத்தப் போகும் தொகை 2396 கணிசமாக தொகை குறைந்து இருக்கு ரமணியன் |
| திருடா திருடி படப் பாடல் - ரீமிக்ஸ் :) Posted: 06 Jul 2016 09:26 AM PDT திருடா திருடி படப் பாடல் - ரீமிக்ஸ் புத்தம் புது ரெசிபி வேண்டும் நித்தம் ஒரு ரெசிபி வேண்டும் ருசிக்கும் பலகாரம் செய்ய வேண்டும் நாவில் ருசி காண வேண்டும் சுவைக்கும் பலகாரம் வேண்டும் சுவைக்க ஜாடி நிறைய வேண்டும் வயிறு பசிக்கின்ற போது தட்டில் பலகாரம் கொட்ட வேண்டும் வண்ண இனிப்புகள் வேண்டும் அது வேண்டும் என வாய் பேச வேண்டும் பேச வாய் திறக்கும் போதே நான் செய்து வாயினில் நிறைக்க வேண்டும் பழைய மெனு கொஞ்சம் வழி விடு உன் அருகிலே ஒரு இடம் கொடு புது மெனு எங்கள் தாய் மொழி என்று ... |
| Posted: 06 Jul 2016 06:27 AM PDT நூல் பெயர் - ஜாதகம் பயன்படுத்துவது எப்படி எழுத்தாளர் - என்.கணேசன் DOWNLOAD |
| கனடா சர்வதேச தொழில்நுட்ப விருது: மதுரை இளைஞருக்கு பெருமை Posted: 06 Jul 2016 04:00 AM PDT - மதுரை: மதுரை இளைஞர் ராஜாராமன், ௨௮, கனடா நாட்டின் 'தமிழ் இலக்கியத் தோட்டம்' அமைப்பு வழங்கும் 2015ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வல்லுனருக்கான சர்வதேச விருதை பெற்றுள்ளார். சென்னை 'இன்போசிஸ்' நிறுவனத்தில் நுட்ப ஆய்வாளராக பணியாற்றும் இவர், 'நீச்சல்காரன்' என்ற பெயரில் இணைய வலைப்பூவில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார். இவ்விருதை பெறும் முதல் இந்தியத் தமிழர் என்ற பெயரை தட்டிச் சென்றுள்ளார். அவர் கூறியதாவது: தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என்ற நோக்கத்துடன், 3 ஆண்டு களுக்கு முன் 'நாவி' என்ற சந்திப் ... |
| நிர்வாணக் குளியல்கள் நடக்கும் 5 கடற்கரைகள் Posted: 06 Jul 2016 01:53 AM PDT நாட்டின் 5 கடற்கரைகளில் நிர்வாணக் குளியல்கள் நடக்கின்றன இந்த இடங்களில் அவ்வப்போது போலீஸாரும் அதிரடியாகச் சென்று அவர்களை அள்ளிச் சென்று சிறையில் அடைப்பதும் நடக்கத்தான் செய்கிறதாம். இந்த கடற்கரைகளுக்குச் சென்று சுற்றிப் பார்க்க ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு. இங்கு அனைவரையும் அனுமதிப்பது கிடையாது. இயற்கை விரும்பிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கென நிறைய விதிமுறைகளும் இங்கு பின்பற்றப்படுகின்றன. இதுபோன்று நிர்வாணக் குளியல் நடைபெறும் 5 கடற்கரை ஸ்தலங்கள் எவை ... |
| Posted: 05 Jul 2016 11:37 PM PDT பொறுப்பு…!! * இன்று விடிந்ததிலிருந்தே வெளுத்தப்படியே இருக்கிறது மேகங்களற்ற வெப்ப வானம். இன்று விடிந்ததிலிருந்தே தகிக்கும் வெப்பம் மனிதர்களையும் பறவைகளையும் வெளியில் போக வேண்டாமென அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள். இன்று விடிந்ததிலிருந்தே எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ? எந்தத் திசைவழியாயும் சென்றும் திரும்புகின்றது வெப்பக் காற்று. இப்பவே இப்படியென்றால், இன்னும் கத்திரித் தொடங்கினால் எப்படி அனல் பறக்குமோ? வெயில் என்றாலே மனிதர்களுக்கு நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு நெருப்பு. அதுவும் ... |
| கோவை, மதுரை, நெல்லை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் Posted: 05 Jul 2016 04:39 PM PDT சென்னை: சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி மற்றும் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை - திருச்சி: திருச்சியிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஜூலை 9 ம் தேதி சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து 9 ம் தேதி மதியம் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். சென்னை எழும்பூரிலிருந்து திருச்சிக்கு ஜூலை 13 ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து காலை 8.30 ... |
| ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 634 சிறைக் கைதிகள் விடுதலை Posted: 05 Jul 2016 04:31 PM PDT ஜம்மு காஷ்மீரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 634 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முக்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -போராட்டத்தின் போது கற்களை எறிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஜம்மு-காஷ்மீர் அரசு சிறையில் அடைத்து வைப்பது வழக்கம். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 634 பேரை விடுதலை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அவர்களின் வாழ்வை மறுசீரமைப்பு செய்துகொள்ள கொடுக்கப்படும் ... |
| 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு:ஸ்மிருதி இரானி இலாகா மாற்றம் ஜாவ்டேகருக்கு கேபினட் அந்தஸ்து Posted: 05 Jul 2016 04:29 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் மாற்றியமைக்கப்பட்டது. இதில் 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மத்திய இணையமைச்சர்கள் 5 பேரின் பதவி பறிக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் வசம் கூடுதலாக இருந்த தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அமைச்சரான ஸ்மிருதி இரானியிடமிருந்து மனித வள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டு, அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
