4TamilMedia செய்திகள் | |
- சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உதவியை நாட அருணஜெட்லி திட்டம்
- பதவி கிடைத்துவிட்டது என்று கொண்டாட வேண்டாம்:மோடி அறிவுரை
- ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம்தான்:நஜீம் ஜைதி
- மேற்கு வங்கத்தில் கைதான ஐஸ் தீவிரவாதி திருப்பூரில் வசித்தவர்
- தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம்
- புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)
- காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
- ராஜ் ராஜரட்னத்திற்கு தொழில்சார் உதவிகளை வழங்கியுள்ளேன்: இந்திரஜித் குமாரசுவாமி
- இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சிவசக்தி ஆனந்தன்
- இஸ்லாம் சமாதானத்தை வலியுறுத்துகிறது; நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மைத்திரி!
- மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பேராசையில் மஹிந்த ராஜபக்ஷ இரத்தக் காட்டேரியாக காத்திருக்கிறார்: மனோ கணேசன்
- பொருளாதார மையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது த.தே.கூ. ...
- மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இனி சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணை: புதிய திருப்பம்!
- கேபினட் அமைச்சரானார் பிரகாஷ் ஜவடேகர்: புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு!
- நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது.
- பாஸ்தா பிரியர்களுக்கு நற்செய்தி!:கொழுப்புச் சத்து இல்லை என நிரூபணம்
- இஸ்தான்புல் தாக்குதலுடன் தொடர்புடைய 17 பேரைக் கைது செய்தது துருக்கி
- இஸ்ரேல் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!:பாதுகாப்பாக தரை இறக்கம்
- பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரவி கருணாநாயக்க சவால்!
| சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உதவியை நாட அருணஜெட்லி திட்டம் Posted:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உதவியை நாட மத்திய நிதி அமைச்சர் அருணஜெட்லி திட்டமிட்டுள்ளார். Read more ... |
| பதவி கிடைத்துவிட்டது என்று கொண்டாட வேண்டாம்:மோடி அறிவுரை Posted:
மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டது என்று கொண்டாட வேண்டாம் என்று, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். Read more ... |
| ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம்தான்:நஜீம் ஜைதி Posted:
சட்டப்பேரவைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் என்று அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது என்பது சாத்தியம்தான் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார். Read more ... |
| மேற்கு வங்கத்தில் கைதான ஐஸ் தீவிரவாதி திருப்பூரில் வசித்தவர் Posted:
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் கைதான ஐஸ் தீவிரவாதி முசுருதீன் திருப்பூரில் வசித்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை கூட்டம் Posted:
இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற உள்ளது. Read more ... |
| புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி! (புருஜோத்தமன் தங்கமயில்) Posted:
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலனுக்காக 17 அமைப்புகளை உலகம் பூராவும் உருவாக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சியினரால் அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியொன்று ஈழத் தமிழர்களிடத்தில் இவ்வாறு ஊடுருவியிருப்பதன் நோக்கம் உண்மையில் எவ்வகையானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். Read more ... |
| காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு! Posted:
மோதல் காலங்களில் காணாமற்போனோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட விடயங்களைக் கையாளும் முகமாக புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ராஜ் ராஜரட்னத்திற்கு தொழில்சார் உதவிகளை வழங்கியுள்ளேன்: இந்திரஜித் குமாரசுவாமி Posted:
அமெரிக்காவில் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜ் ராஜரட்னத்துக்கு தொழில்சார் உதவிகளை தான் வழங்கியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். Read more ... |
| இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சிவசக்தி ஆனந்தன் Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பாவித்தமை தொடர்பில் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| இஸ்லாம் சமாதானத்தை வலியுறுத்துகிறது; நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மைத்திரி! Posted:
சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பேராசையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரத்தக் காட்டேரி போல காத்திருக்கின்றார் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பொருளாதார மையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்துவது த.தே.கூ. ... Posted:
வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையத்தை மாவட்டத்தின் எந்தப் பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பது அவரது இயலாமையையும், ஆற்றலின்மையையுமே காட்டுகின்றது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பும் வலியுறுத்தி வரும் நிலையில், அமைவிடத்தினை இறுதி செய்வது தொடர்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை வவுனியா நகரப்பகுதியின் இரண்டு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்பது அதற்கான திட்ட வரைபாக இருக்கின்றது. அப்படி வவுனியாவில் திட்டமிட்டபடி பொருளாதார மையத்தை அமைக்க முடியாவிட்டால், திட்டத்தை மாற்றி மதவாச்சியில் பொருளாதார மையத்தை அமைக்கவேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபையினர் முதலில் வவுனியா தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையத்தை அமைய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றிவிட்டு பின்னர், அரசியல் சுய இலாபங்களுக்காக பொருளாதார மையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டுமென கூறினார்கள். வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மையமாகக் கருதிக்கொண்டும், திட்டத்தை சரியாக தெரிந்து கொள்ளாமலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொருளாதார மைய விவகாரத்தை இப்போது அநாவசியமான இழுபறி நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளனர். திட்டத்தை முழுமையாக விளங்கிக்க கொண்டு வவுனியாவில் அமையப்பெறுவதற்கான முடிவை எடுத்து செயற்படுத்தாமல் அதைத் தட்டிக்கழிக்கும் நோக்கத்துடன் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு செய்யப்போவதாக இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார். வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார மையத்தை பொருத்தமான இடத்தை தெரிவு செய்யத் தெரியாத கூட்டமைப்பின் தலைமையும், வடக்கு மாகாண சபையும், எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை எடுப்பதற்கும், பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியைப் பெற்றுக்கொள்வதற்கும், மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைமைப் பதவிகளை பொறுப்பெடுப்பதற்கும், கோட்டுச் சூட்டோடு ஜெனீவாவுக்குப் போவதற்கும் தமிழ் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்க வேண்டும். வாக்குப் போட்ட தமிழ் மக்களிடம் அதற்கெல்லாம் கருத்துக்கணிப்பு நடத்தி தீர்மானம் மேற்கொண்டிருந்தால் அதை வரவேற்றிருக்கலாம். அவ்வாறில்லாமல் தமக்கான பதவிகளையும், அரசியல் சுகபோகங்களையும் தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்காமலே, அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுக்கள் நடத்திப் பெற்றுக் கொண்டவர்கள், சாதாரணமாக ஒரு மாவட்டத்தின் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த வேண்டுமென நாடகமாடுகின்றனர். தவிரவும் அமையப்பெறுகின்ற பொருளாதார மையத்தை, வவுனியா மாவட்டத்தின் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும், பயனாளிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ளதாகவும், இலகுவான போக்குவரத்து வசதிகளுக்கு உகந்த இடத்திலும் அமையப்பெறுவதும் மிக அவசியமாகும். மக்களின் நலனை கவனத்திலெடுக்காமல் தமது அரசியல் நலனை முன்னிறுத்தி இவ்விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவார்களாக இருந்தால் எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளாதார மையம் எமது கையிலிருந்து பறிபோய்விடும்.” என்றுள்ளார். Read more ... |
| மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இனி சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்படும்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted:
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இனி சென்னை உயர் நீதிமன்றம் என்று அழைக்கப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more ... |
| சுவாதி கொலையாளி எனப்படும் ராம்குமார் ஜாமீன் மனு விசாரணை: புதிய திருப்பம்! Posted:
சென்னை இளம்பெண் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் ராம்குமார் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. Read more ... |
| கேபினட் அமைச்சரானார் பிரகாஷ் ஜவடேகர்: புது முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு! Posted:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கேபினெட் அமைச்சரானார். 19 புது முகங்களுக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| நாசாவின் ஜூனோ செய்மதி வியாழனை நெருங்கியது. Posted:
எமது சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகமான வியாழனை நாசாவின் ஜூனோ செய்மதி செவ்வாய்க் கிழமை சென்றடைந்துள்ளது. எந்த வகையான தாதுப் பொருளால் வியாழன் ஆக்கப் பட்டுள்ளது என்பதைக் கண்டு பிடிப்பதற்காக செலுத்தப் பட்ட இந்த விண்கலம் 5 ஆண்டுகளாக சுமார் 540 மில்லியன் மைல்கள் தொலைவு பயணித்து வியாழனின் சுற்று வட்டப் பாதையைச் சென்றடைந்துள்ளது. Read more ... |
| பாஸ்தா பிரியர்களுக்கு நற்செய்தி!:கொழுப்புச் சத்து இல்லை என நிரூபணம் Posted:
ஐரோப்பா முக்கியமாக இத்தாலி நாட்டைச் சேர்ந்த மக்களிடையே மிகப் பிரபலமான உணவு பாஸ்தா. இது இன்றைய தினசரி வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவாக மாறியுள்ள போதும் உடற் பருமன் கூடியவர்களுக்கு இது ஆகாது எனவும் உணவுக் கட்டுப் பாட்டை (Diet) மேற்கொள்பவர்களுக்கு கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டும் என்றும் கருதப் பட்டது. Read more ... |
| இஸ்தான்புல் தாக்குதலுடன் தொடர்புடைய 17 பேரைக் கைது செய்தது துருக்கி Posted:
கடந்த வாரம் இஸ்தான்புல் பிரதான விமான நிலையமான அட்டாடுருக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்களை முக்கியமாக வெளிநாட்டவர்களை துருக்கி அரசாங்கம் சிறைப் பிடித்துள்ளது. Read more ... |
| இஸ்ரேல் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!:பாதுகாப்பாக தரை இறக்கம் Posted:
நியூயோர்க்கில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பென்-குரியன் விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த எல் அல் போயிங் 747 என்ற விமானத்துக்கு தீவிரவாதிகளால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்ட போதும் அது பாதுகாப்பாக டெல் அவிவ் நகரில் தரை இறங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. Read more ... |
| பகிரங்க விவாதத்துக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரவி கருணாநாயக்க சவால்! Posted:
நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நீதியமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



















