Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


உள்ளாட்சித் தேர்தல்: மக்கள் நலக் கூட்டணியில் தொடர்வது தேமுதிகவின் முடிவு

Posted: 03 Jul 2016 02:30 PM PDT

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தொடர்வது என்பது அவர்கள் எடுக்கப்படவேண்டிய முடிவாகும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

வாகனக் காப்பீட்டில் மோசடி: விழி பிதுங்கும் வாகன உரிமையாளர்கள்

Posted: 03 Jul 2016 02:28 PM PDT

மத்திய அரசின் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீடு செய்யப்படும் வாகனக் காப்பீடுகளில், தற்போது பல விதங்களில் மோசடிகள் நடைபெற்றுவருவது வாகன உரிமையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கைவிடப்பட்டதா நெசவுப் பூங்கா திட்டம்?

Posted: 03 Jul 2016 02:25 PM PDT

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் தொடங்கப்பட்ட வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

பொலிவிழந்து வரும் கரூர் ஜவுளி ஏற்றுமதித் தொழில்

Posted: 03 Jul 2016 02:23 PM PDT

ஜவுளி உற்பத்திக்கான உலக வரைபடத்தில் கரூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்களான திரைச்சீலை, கால் மிதியடிகள், தரை விரிப்புகள், குஷன்கள், கைக்குட்டைகள் உள்ளிட்டவை ஏற்றுமதியாகின்றன.

சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் அருகி வரும் நிலத்தடி நீர்!

Posted: 03 Jul 2016 01:20 PM PDT

அரியலூரில் பெருகி வரும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கல்விக் கொள்கை வரைவறிக்கை: தேசியக் குழந்தைகள் கொள்கைக்கு பாதகம்

Posted: 03 Jul 2016 01:18 PM PDT

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை வரைவறிக்கையில் உள்ள சில அம்சங்கள், தேசியக் குழந்தைகள் கொள்கையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர 60 ஆண்டுகளாகப் போராட்டம்!

Posted: 03 Jul 2016 01:14 PM PDT

வறண்டு பாலைவனமாகக் காட்சியளிக்கும் தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர 60 ஆண்டுகளாகப் போராடியும் இதுவரை திட்டம் நிறைவேறாததால், வேதனையில் உள்ளனர் இந்தப் பகுதி விவசாயிகள்.

மாற்றமின்றித் தீர்வில்லை...

Posted: 03 Jul 2016 12:24 PM PDT

சென்னையை மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கிவிட்டது சுவாதி என்ற இளம்பெண்ணின் கொலைச் சம்பவம். மக்கள் அதிகம் கூடும் இடத்தில், அதிலும் பட்டப்பகலில் இவ்வாறு கொடூரமாக ஓர் இளம்பெண் கொலை செய்யப்பட்டது ஒரு அசாதாரண நிகழ்வுதான்.

அணு ஆயுத ஆபத்தை முறியடிப்போம்!

Posted: 03 Jul 2016 12:21 PM PDT

அணு ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் பாரத நாட்டின் தலைநகர் புதுதில்லியை தாக்க முடியும் என்று பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் அப்துல் காதிர்கான் சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்தார்.

வளர்ச்சி குறித்த அயர்ச்சி!

Posted: 03 Jul 2016 12:17 PM PDT

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி இருக்கும் "யுனிசெப்' என்று பரவலாக அறியப்படும் ஐ.நா. சபையின் குழந்தைகள் அவசர உதவி நிதி அமைப்பின் அறிக்கை அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது.

வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு அபராதம்

Posted: 03 Jul 2016 12:14 PM PDT

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாத தொண்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தாக்குதல் எதிரொலி: இந்திய-வங்கதேச எல்லையில் உஷார் நிலை

Posted: 03 Jul 2016 12:12 PM PDT

வங்கதேசத்தில் பிரபலமான உணவகத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய-வங்கதேச எல்லையில் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாம்போர்: பயங்கரவாதிகளின் கார் ஓட்டுநர் அடையாளம் தெரிந்தது

Posted: 03 Jul 2016 12:11 PM PDT

ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பாம்போரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கார் ஓட்டுநர் அடையாளம் தெரிய வந்துள்ளது.

சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி கைது: காவல் துறைக்கு கருணாநிதி பாராட்டு

Posted: 03 Jul 2016 12:10 PM PDT

பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்த காவல் துறைக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இசிஇ பிரிவு

Posted: 03 Jul 2016 12:09 PM PDT

பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

Posted: 03 Jul 2016 12:09 PM PDT

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Posted: 03 Jul 2016 12:08 PM PDT

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்தனர்.

குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாள் விழா: நாடு முழுவதும் கொண்டாட ரூ.100 கோடி ஒதுக்கீடு

Posted: 03 Jul 2016 12:07 PM PDT

சீக்கிய மத குருவான, குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த நாளை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; இதற்காக ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சட்டவிரோத செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு "சீல்': எஸ்டிஎம்சி திட்டம்

Posted: 03 Jul 2016 12:07 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி கோபுரங்களுக்கு "சீல்' வைப்பதற்காக சிறப்பு அதிரடி படையை அமைக்க அந்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் பணம் முதலீடு: இந்தியர்களுக்கு 75-ஆவது இடம்

Posted: 03 Jul 2016 12:07 PM PDT

ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை முதலீடு செய்திருப்போரின் பட்டியலில், இந்தியர்கள் 75-ஆவது இடத்தைப் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 14 இடங்கள் குறைவாகும்.

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு

Posted: 03 Jul 2016 12:06 PM PDT

தில்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.19.57 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணிடம் தவறாக நடந்ததாக முன்னாள் தலைமைச் செயலர் மீது வழக்கு

Posted: 03 Jul 2016 12:06 PM PDT

பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தில்லியின் முன்னாள் தலைமைச் செயலரும், பஞ்சஷீலா கிளப்பின் தலைவருமான உமேஷ் சாய்கல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் தேர்வுமுறை: ஆய்வுக் குழு அமைக்க கொலீஜியம் எதிர்ப்பு

Posted: 03 Jul 2016 12:06 PM PDT

நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை இறுதி செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்த யோசனைக்கு கொலீஜியம் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறைந்த விலையில் ஐஸ்கிரீம் வழங்க மறுத்த வியாபாரி அடித்துக் கொலை

Posted: 03 Jul 2016 12:05 PM PDT

காஜியாபாதில் சலுகை விலையில் ஐஸ்கிரீம் வழங்க மறுத்த வியாபாரியை இளைஞர் கும்பல் அடித்துப் கொலை செய்தது.

பெண்ணிடம் பணம் மோசடி: மந்திரவாதி கைது

Posted: 03 Jul 2016 12:05 PM PDT

பெண்ணை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.

சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய 3 பேர் கைது : டிசிடபிள்யூ தகவல்

Posted: 03 Jul 2016 12:04 PM PDT

தில்லியில் தாய், தந்தையை இழந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர் என்று தில்லி மகளிர் ஆணையம் (டிசிடபிள்யூ) தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்திலிருந்து தப்பியோடிய இளைஞர் கைது

Posted: 03 Jul 2016 12:04 PM PDT

மேற்கு தில்லியில், கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் அவர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வர்த்தக நிறுவன ஊழியரின் கண்களில் மிளகாய்பொடி தூவி ரூ.10 லட்சம் கொள்ளை

Posted: 03 Jul 2016 12:04 PM PDT

தில்லியில் வர்த்தக நிறுவன ஊழியரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Posted: 03 Jul 2016 12:03 PM PDT

அரசுக் குடியிருப்பை சட்டவிரோதமாக பயன்படுத்த பொதுப்பணித் துறை அதிகாரிகளைப் பயன்படுத்தியதாகக் கூறி ஆம் ஆத்மி எம்எல்ஏ அகிலேஷ் திரிபாதிக்கு எதிரான புகார் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கேஜரிவால் ஜூலை 9ஆம் தேதி சோமநாதர் ஆலயம் செல்கிறார்

Posted: 03 Jul 2016 12:03 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ஒரு நாள் பயணமாக குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்துக்கு வரும் சனிக்கிழமை (ஜூலை 9) செல்லவுள்ளார்.

தலைநகரில் இதமான வானிலை!

Posted: 03 Jul 2016 12:02 PM PDT

தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்ந்து பெய்த மழையால், ஞாயிற்றுக்கிழமை வெயில் தாக்கம் இன்றி இதமான வானிலை நிலவியது.

ஜேஎன்யுவில் விலங்குகள் நலன் சார்ந்த படிப்புகள் ,

Posted: 03 Jul 2016 12:02 PM PDT

தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) நிகழ் கல்வியாண்டு முதல் விலங்குகள் நலன் சார்ந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

கேசவபுரம் ஐஸ்வர்ய மகாகணபதி கோயிலில் வர்ஷிகா மகோத்ஸவம்

Posted: 03 Jul 2016 12:01 PM PDT

தில்லி கேசவபுரத்தில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி கோயில் வர்ஷிகா மகோத்ஸவம் கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 3) வரை நடைபெற்றது.

நுழைவுத் தேர்வு மூலம் "டியு' மாணவர் சேர்க்கை: ஸ்மிருதி இரானிக்கு மணீஷ் சிசோடியா கடிதம்

Posted: 03 Jul 2016 12:00 PM PDT

தில்லி பல்கலைக்கழக (டியு) மாணவர் சேர்க்கையை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை தில்லி கல்வித் துறை அமைச்சரும், துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார்.

தில்லி கன்டோன்மன்ட் பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரம்: "தூய்மை இந்தியா' பட்டியலில் முதலிடம் பெற  முயற்சி

Posted: 03 Jul 2016 12:00 PM PDT

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடம் இடம் பெறும் நோக்கில் தில்லி கன்டோன்மன்ட் பகுதியில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வைரமுத்து சிறுகதைகள் பன்முகப் பரிணாமத்தைக் கொண்டுள்ளன: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

Posted: 03 Jul 2016 11:59 AM PDT

சமூக அக்கறை, சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கவிஞர் வைரமுத்து சிறுகதைகள், பன்முகப் பரிணாமத்தைக் கொண்டுள்ளன என்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார்.

தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசம்

Posted: 03 Jul 2016 11:59 AM PDT

பரமன்குறிச்சி அருகே சியோன் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிகழ்ந்த திடீர் தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்து சாம்பலானது.

ஆறுமுகனேரியில் தீ விபத்து: குடிசை எரிந்து நாசம்

Posted: 03 Jul 2016 11:59 AM PDT

ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சாம்பலானது.

ஆறுமுகனேரி கடையில் பணம், செல்லிடப்பேசி திருட்டு

Posted: 03 Jul 2016 11:59 AM PDT

ஆறுமுகனேரி பேயன்விளை அருகே கடையில் வைத்திருந்த செல்லிடப்பேசி மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சாவு

Posted: 03 Jul 2016 11:58 AM PDT

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த போலீஸ்காரர் சனிக்கிழமை மருத்துவமனையில் இறந்தார்.

ஆறுமுகனேரி அருகே மறுகால் ஓடையில் பாலம் அமைக்க அனுமதிக்க கோரிக்கை

Posted: 03 Jul 2016 11:57 AM PDT

ஆறுமுகனேரி அருகே கடம்பா குளம் மறுகாலில் பாலம் அமைக்க அனுமதிக்க வேண்டுமென ஆறுமுகனேரி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக அச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

திருச்செந்தூர் உணவகம் தீ விபத்தில் சேதம்

Posted: 03 Jul 2016 11:57 AM PDT

திருச்செந்தூர் தினசரி காய்கனிச் சந்தையில் உள்ள குடிசையினாலான உணவகம் தீப்பிடித்து எரிந்ததில் சேதமடைந்தது.

சுகந்தலையில் உழவர் பாதுகாப்புத் திட்ட முகாம்

Posted: 03 Jul 2016 11:56 AM PDT

குரும்பூர் அருகேயுள்ள சுகந்தலை கிராமத்தில் தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருச்செந்தூர் அமலி நகர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி

Posted: 03 Jul 2016 11:56 AM PDT

திருச்செந்தூர் அமலிநகர் அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சிக் கூட்டம்

Posted: 03 Jul 2016 11:56 AM PDT

கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மறுசீரமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புன்னைக்காயல் புனித தோமையார் திருத்தல திருவிழா கொடியேற்றம்

Posted: 03 Jul 2016 11:55 AM PDT

புன்னைக்காயலில் புனித தோமையாரின் திருத்தல திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது.

ஆறுமுகனேரியில் ஆலோசனைக் கூட்டம்

Posted: 03 Jul 2016 11:55 AM PDT

ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டுமென காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவில்பட்டி தீக்குச்சி நிறுவனத்தில் திடீர் தீ

Posted: 03 Jul 2016 11:54 AM PDT

கோவில்பட்டி புதுக்கிராமத்தில் உள்ள தீக்குச்சி நிறுவனத்தில் சனிக்கிழமை இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

ஆறுமுகனேரி அம்மன் கோயிலில் கொடை விழா

Posted: 03 Jul 2016 11:54 AM PDT

ஆறுமுகனேரி செல்வராஜபுரம் ஸ்ரீமுப்புடாதி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி

Posted: 03 Jul 2016 11:53 AM PDT

நாகர்கோவிலில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில உச்சரிப்புப் (ஜாலி பொனிடிக்) பயிற்சி அளிக்கப்பட்டது.

10 ஆண்டுகளாக செப்பனிடப்படாத தெரு: சீரமைப்புப் பணிகள் தொடங்கப்படுமா?

Posted: 03 Jul 2016 11:52 AM PDT

நாகர்கோவில் சதாவதானி பாவலர் தெருவில், 10 ஆண்டுகளாக சாலை செப்பனிடப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

நாகர்கோவிலில் இன்று மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: வைகோ பங்கேற்பு

Posted: 03 Jul 2016 11:52 AM PDT

நாகர்கோவிலில் திங்கள்கிழமை(ஜூலை 4) நடைபெறும் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலர் வைகோ பங்கேற்கிறார்.

ராம்குமாரை அழைத்துச் சென்று நடித்துக் காட்ட வைக்க திட்டம்?

Posted: 03 Jul 2016 11:52 AM PDT

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 3 மருத்துவர்கள் குழுவுடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்னைக்கு வருகிறார் ராம்குமார். இவரை காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்-இன்  "நலந்தானா' திட்டம் தொடக்கம்

Posted: 03 Jul 2016 11:51 AM PDT

பி.எஸ்.என்.எல்-இன் "நலந்தானா' மக்கள் சந்திப்பு திட்டத்தை நாகர்கோவில் பொது மேலாளர் சாஜூ ஜார்ஜ் தலைமையில், துணைப் பொது மேலாளர்கள் கே.சந்திரன், எஸ்.கோபாலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாற்றுத்திறனாளி காப்பாளர்களுக்கு 3 மாத கால பயிற்சி தொடக்கம்

Posted: 03 Jul 2016 11:51 AM PDT

மாற்றுத்திறனாளி காப்பாளர்களுக்கான 3 மாத பயிற்சி கொட்டாரத்தில் தொடங்கியது.

விளவங்கோடு தொகுதிக்குள்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி முதல்வருக்கு எம்.எல்.ஏ. மனு

Posted: 03 Jul 2016 11:50 AM PDT

விளவங்கோடு தொகுதிக்கு உள்பட்ட சாலைகளை சீரமைக்கக் கோரி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஜயதரணி எம்எல்ஏ மனு அனுப்பியுள்ளார்.

அடைவுத்தேர்வில் மாநில முதலிடத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 03 Jul 2016 11:50 AM PDT

அடைவுத்தேர்வுகளில் தமிழக அளவில் கன்னியாகுமரி மாவட்டம்  பெற்றுள்ள மாநில முதலிடத்தை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது: 6 பைக்குகள் பறிமுதல்

Posted: 03 Jul 2016 11:49 AM PDT

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பைக்குகளை திருடிய 3 பேரை தனிப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது "ஸ்வயம்' திட்டம்

Posted: 03 Jul 2016 11:46 AM PDT

இணைய வழியில் அனைத்து வகையான கல்விகளையும் அளிக்கும் "ஸ்வயம்' திட்டத்தை வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் தொடங்கி வைக்க இருக்கிறார்.

யூரோ கோப்பை கால்பந்து: அரையிறுதியில் ஜெர்மனி

Posted: 03 Jul 2016 11:45 AM PDT

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடக்கம்

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

மாணவர், மாணவிகளின் பொதுஅறிவை மேம்படுத்தும் விதத்தில் கன்னியாகுமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் நூலகங்களில் மாணவர்களை உறுப்பினராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மார்த்தாண்டம் அருகே புதிதாக தேவாலயம் கட்ட எதிர்ப்பு

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

மார்த்தாண்டம் அருகே புதிதாக தேவாலயம் அமைக்க கிறிஸ்தவர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவிலில் ஜூலை 5 மின்தடை

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொட்டாரம் சந்திப்பில் போலீஸ் பாதுகாப்பு: பொதுமக்கள் கோரிக்கை

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

கொட்டாரம் சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் வாகன விபத்தை தவிர்க்க போக்குவரத்து காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முகமது ஷாஹித் சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் உதவி

Posted: 03 Jul 2016 11:44 AM PDT

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஷாஹித்துக்கு ரூ.10 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் அறிவித்துள்ளார்.

6 நாடுகள் ஹாக்கி: ஸ்பெயினுடன் இந்தியா டிரா

Posted: 03 Jul 2016 11:43 AM PDT

ஆறு நாடுகள் பங்கேற்றுள்ள சர்வதேச ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினுடன் டிரா செய்தது.

கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி

Posted: 03 Jul 2016 11:43 AM PDT

இலங்கைக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

விம்பிள்டன் டென்னிஸ்: 4-ஆவது சுற்றில் செரீனா, ஸ்வெட்லானா, சோங்கா

Posted: 03 Jul 2016 11:42 AM PDT

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா, பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்கா உள்ளிட்டோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றான 4-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

"தூய்மை இந்தியா' திட்டத்தை செயல்படுத்த மாணவர்களுக்கு போட்டிகள்

Posted: 03 Jul 2016 11:36 AM PDT

தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கலைமகள் கல்வி நிலையம் பள்ளியும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தின.

விளம்பரப் பதாகைகளை நீக்க கோரிக்கை

Posted: 03 Jul 2016 11:36 AM PDT

அம்பத்தூர் பகுதியில், விளம்பரப் பதாகைகளை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வருவாய் அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்

Posted: 03 Jul 2016 11:36 AM PDT

காஞ்சிபுரத்தில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குச் சந்தையில் பி.எஃப். முதலீட்டை அதிகரிக்க தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பு

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

பங்குச் சந்தைகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (பி.எஃப்.ஓ) முதலீட்டை அதிகரிக்கச் செய்யும் யோசனைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) உள்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

குண்டர் சட்டத்தில் ரெளடி கைது

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

கூடுவாஞ்சேரியில் பிரபல ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பேருந்து நிலையத்தில் ஈவ்டீசிங்: மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பள்ளி முடியும் நேரத்தில் இளைஞர்கள் சிலர், மாணவிகளை கேலி (ஈவ் டீசிங்) செய்து வருவதால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

கூடுவாஞ்சேரி அருகே பேருந்து மோதி இளைஞர் ஒருவர் சனிக்கிழமை இறந்தார்.

பொது விநியோகக் கடை திறப்பு

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

சிக்கராயபுரம் பகுதியில் ஒன்றிய பொது நிதியில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடையை மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

அம்பத்தூர், ஆவடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

அம்பத்தூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்கிறது.

நான்கு வயது சிறுமிக்கு  மர்மக் காய்ச்சல்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

பொன்னேரியை சேர்ந்த 4 வயது சிறுமி மர்மக் காய்ச்சல் காரணமாக, சென்னை குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

"அம்மா' திட்ட முகாமில் 19 மனுக்களுக்கு தீர்வு

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

ஊத்துக்கோட்டை வட்டத்தில், நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில் 19 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

காரைத் திருடியவர் வாகன சோதனையில் பிடிபட்டார்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

கும்மிடிப்பூண்டி அருகே காரைத் திருடி உல்லாசமாக சுற்றியவர் வாகன சோதனையில் பிடிபட்டார்.

இழந்த மூக்கை அறுவை சிகிச்சையால் மீண்டும் பெற்ற சிறுவன்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

ஊசி மருந்து செலுத்தியதால் ஏற்பட்ட பக்கவிளைவால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மூக்கை, முதலில் நெற்றியில் பொருத்தி விட்டு பின்பு சரியான இடத்தில் பொருத்தும் அரிய அறுவை சிகிச்சையை மத்தியப் பிரதேச மருத்துவர்கள் நடத்தி சாதனைப் படைத்துள்ளனர்.

கார்பைட் கற்களால் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

மாம்பழ சீசன் முடியும் நேரத்தில், கார்பைட் கல்லில் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் வயிற்று உபாதையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஜூலை 5 மின் தடை

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

ஆவடி நெடுஞ்சாலையில் திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்துகள்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

திருவள்ளூர் - ஆவடி நெடுஞ்சாலையில் சுதந்திரமாக சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

காவல்துறையை மேம்படுத்த வேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

Posted: 03 Jul 2016 11:35 AM PDT

சுவாதி கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையை பாராட்டுவதாகவும், அதேசமயம், அத்துறையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருவள்ளூரில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 2 இந்தியர்களை மீட்க தீவிர முயற்சி

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள 2 இந்தியர்களை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

"அம்மா' திட்ட முகாம்: 142 மனுக்களுக்கு தீர்வு

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள கருநிலம் கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது.

ஆழ்துளைக் கிணற்றால் 2 கிராமத்தினருக்கு இடையே மோதல் அபாயம்

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

செல்லம்பட்டிடை ஊராட்சியில் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை அகற்ற வேண்டும் என குணகரம்பாக்கம் பொதுமக்கள் கிணற்றின் அருகே சனிக்கிழமை கூடியதால் இரண்டு கிராமத்தினருக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல்  நிலவியது.

சித்தர் பீடத்தின் ஏழாம் ஆண்டு விழா

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

செங்கல்பட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஏழாம் ஆண்டு விழாவும், நல உதவிகள் வழங்கும் விழாவும் செங்கல்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீட்டிலிருந்த பெண்ணிடம் நூதனத் திருட்டு

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

ஆற்காட்டில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி நூதன முறையில் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் இளம்பெண் சாவு

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

குடியாத்தம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழந்தார்.

நாயக்கனேரி மலைக் கிராமத்துக்கு கூடுதல் சிற்றுந்துகள் இயக்கப்படுமா?

Posted: 03 Jul 2016 11:34 AM PDT

ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி மலைக் கிராமத்துக்கு கூடுதல் சிற்றுந்துகளை இயக்க வேண்டுமென மலைவாசி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் ரூ. 2.75 லட்சம் திருட்டு

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

ராணிப்பேட்டையில் தனியார் தோல் தொழிற்சாலை நிர்வாகி வங்கியில் இருந்து எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்த ரூ.2.75 லட்சம் திருட்டு போனது.

அணைக்கட்டு எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் அண்மையில் திறக்கப்பட்டது.

ஆம்பூர் மருந்துக் கடைகளில் வட்டாட்சியர் சோதனை: காலாவதியான மருந்துகள் பறிமுதல்

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

ஆம்பூரில் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறையினர் மருந்துக் கடைகளில் ஞாயிற்றுக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

குடியாத்தம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

குடியாத்தம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் காயம்

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

குடியாத்தம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விருப்புரிமை நிதியுதவி பெற வாய்ப்பு

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

பாதுகாப்பு அமைச்சகத்தின் விருப்புரிமை நிதியுதவி பெற விரும்பும் முன்னாள் படை வீரர்கள் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

ரயிலில் பயணத்தின் போது மாரடைப்பு: வட மாநில பயணி சாவு

Posted: 03 Jul 2016 11:33 AM PDT

ரயிலில் பயணம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™