4TamilMedia செய்திகள் | |
- மக்கள் நல கூட்டு இயக்கம் தொடரும்: வைகோ
- எனது நடை உடை, அந்தஸதை விமர்சனம் செய்ததால் சுவாதி மீது கோபம் வந்தது: ராம்குமார்
- அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்தார் ராஜ்நாத் சிங்!
- இனி குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்!
- சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் நண்பர் இல்லத்திலும் சிலைகள் மீட்பு!
- உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை என்று மோடி அறிவிக்க வேண்டும்: மு.கருணாநிதி
- பங்களாதேஷில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிப்பு!
- தாமரை மொட்டோடு வருகிறது மஹிந்த அணி!
- கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுரை!
- கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்!
- பொருளாதார மையம் தொடர்பில் த.தே.கூ ஆராய்கிறது; இரா.சம்பந்தன் தலைமையில் சி.வி. ...
- ஜெனீவாவுக்குப் போதல்! (நிலாந்தன்)
- ஐக்கியத்தைக் காப்பவர்களின் கருத்துகளை மதிப்பேன்: மைத்திரிபால சிறிசேன
- ஜூலை மாத ராசி பலன்கள்
| மக்கள் நல கூட்டு இயக்கம் தொடரும்: வைகோ Posted:
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, மக்கள் நல கூட்டு இயக்கம் தொடரும் என்றும், மற்ற காட்சிகள் கூட்டணிக்கு வருவதும் போவதும் என்பது அவர்களது மன நிலை என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். Read more ... |
| எனது நடை உடை, அந்தஸதை விமர்சனம் செய்ததால் சுவாதி மீது கோபம் வந்தது: ராம்குமார் Posted:
எனது நடை உடை,அந்தஸதை விமர்சனம் செய்ததால் சுவாதி மீது கோபம் வந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் சுவாதியை வெட்டிப் படுகொலை செய்த ராம்குமார். Read more ... |
| அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்தார் ராஜ்நாத் சிங்! Posted:
பக்தர்கள் புனித யாத்திரை சென்று தரிசிக்கும் பனி லிங்கத்தை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார். Read more ... |
| இனி குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம்! Posted:
இந்திய விமானப் போக்குவரத்துத் துறை மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களால், இனி குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கலாம் என்று, அத்துறை தெரிவித்துள்ளது. இந்திய விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை, புழக்கத்தில் இல்லாத மற்றும் புழக்கத்தில் உள்ள விமான நிலையங்களை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இணைப்பு விமானத்தின் சேவைகளையும் அதிகரிக்கும் விதத்தில் விமானக் கட்டணத்தையும் குறைத்து நிர்ணயிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. அதன் படி 200 முதல் 800 கிலோ மீட்டர் வரையான விமான பயணங்களுக்கு 2 ஆயிரத்து 500 முதல் 5ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க விமானப் போக்குவடஹ்த்துத் துறை முடிவெடுத்துள்ளது. எனினும் 200 கிலோ மீட்டர் பயணத்துக்கான விமான கட்டண சேவையை ஆயிரத்து 270 ரூபாயாக நிர்ணயிக்கவும், அடுத்து 800 கிலோ மீட்டர் வரையான பயணத்துக்கும் இதன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கலாமா என்றும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். இதில் தனியார் விமான சேவைகளையும் பயன்படுத்த விமானப் போக்குவரத்துத் துறை திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனின் நண்பர் இல்லத்திலும் சிலைகள் மீட்பு! Posted:
சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளனின் நண்பர் லக்ஷ்மி நரசிம்மன் இல்லத்தில் 232 கோயில் சிலைகள், மற்றும் ஓவியங்கள் மீட்கப்பட்டன. Read more ... |
| உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை என்று மோடி அறிவிக்க வேண்டும்: மு.கருணாநிதி Posted:
உள்ளாட்சி அமைப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக மங்கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| பங்களாதேஷில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிப்பு! Posted:
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நேற்றுமுன்தினம் இரவு விடுதியொன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 20 பேரை நினைவு கூரும் முகமாக இரண்டுநாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. Read more ... |
| தாமரை மொட்டோடு வருகிறது மஹிந்த அணி! Posted:
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான அன்ரன் டெனிக்கு பாதுகாப்பு வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுரை! Posted:
அண்மையில் கடத்தப்பட்டு தாக்குதலுக்குள்ளான மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த சந்தியோகு அன்ரன் டெனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகுந்த பாதுகாப்பினை வழங்குமாறு பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. Read more ... |
| கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10204 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்! Posted: வடக்கின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட 10204 குடும்பங்கள் இருப்பதாக மாவட்ட புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| பொருளாதார மையம் தொடர்பில் த.தே.கூ ஆராய்கிறது; இரா.சம்பந்தன் தலைமையில் சி.வி. ... Posted:
வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மையம் தொடர்பில் எழுந்துள்ள சர்சை தொடர்பில் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கூடி ஆராயவுள்ளனர். Read more ... |
| ஜெனீவாவுக்குப் போதல்! (நிலாந்தன்) Posted:
தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஒரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல்வாதிகள் போகிறார்கள். செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள். ஊடகவியலாளர்கள் போகிறார்கள். என்.ஜி.ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சிலர் ஜெனீவாவிற்கு போய் வருகின்றார்கள். இதில் சிலர் ஜெனீவாவிற்கு போவதுண்டு. திரும்பி வருவதில்லை. அங்கேயே தஞ்சம் கோரி விடுகிறார்கள். Read more ... |
| ஐக்கியத்தைக் காப்பவர்களின் கருத்துகளை மதிப்பேன்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஐக்கியம் மற்றும் ஜனநாயகத்தை காப்பவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செவிமடுப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












