Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வாகவாசல் பள்ளியில் செஸ் போட்டி: குறுவட்ட போட்டிக்கு 8 பேர் தகுதி

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

புதுக்கோட்டை அருகே வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்றவர்களில் 8 மாணவ, மாணவிகள் குறுவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

"எம்.பி.யின் மகள் குறித்து விமர்சனம்:மாயாவதி மன்னிப்புக் கோர வேண்டும்'

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

பாஜக எம்.பி.யின் மகள் குறித்து பகுஜன் சமாஜ் மூத்த தலைவர் நசிமுதீன் சித்திக் தெரிவித்த கருத்துக்கு அக்கட்சித் தலைவர் மாயாவதி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜக வலியுறுத்தியது.

மாணவர் சேர்க்கை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 25-ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், தனியார் தொழில் பயிற்சி நிலையங்கள் அரசிடம் ஒப்படைக்கும் இடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25-ல் நடைபெற உள்ளது.

விராலிமலை பகுதியில் ஜூலை 23 மின்தடை

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 23) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதிக்க வேண்டும்: மாவட்ட நுகர்வோர் குழு கோரிக்கை

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

புதுக்கோட்டையில் ஷேர் ஆட்டோக்களை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டுமென மாவட்ட நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.

புதுகையில் ஜூலை 28-ல் விவசாயிகள் குறை கேட்பு முகாம்

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

புதுக்கோட்டையில் ஜூலை 28-ல் மாவட்ட விவசாயிகள் குறை கேட்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாங்காடு பிடாரி அம்மன் கோயிலில் பாளையெடுப்பு திருவிழா

Posted: 22 Jul 2016 02:16 PM PDT

ஆலங்குடி அருகேயுள்ள மாங்காடு பிடாரி அம்மன் கோயில் பாளையெடுப்புத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தணிக்கை வாரியத் தலைவர் வழிகாட்டியாக செயல்பட பெனகல் குழு ஆலோசனை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (சிபிஎஃப்சி) தலைவரும் உறுப்பினர்களும் திரைப்படங்களுக்கு சான்றிதழ்களை அளிக்கும் வழக்கமான பணியைச் செய்வதைக்

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நுரையீரல் பரிசோதனை முகாம்

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

இந்திய மருத்துவ சங்கம், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், அரசு போக்குவரத்துக் கழகம் இணைந்து நடத்திய நுரையீரல் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

குறுவட்ட போட்டி: காரையூர் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் முகைதீன் அப்துல்காதர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருமயம் குறுவட்ட கோ-கோ போட்டியில் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.

சிதம்பரம் மெட்ரிக் பள்ளியில் ஆளுமைப் பயிற்சி

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தொலைநோக்கு பார்வை எனும் தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான ஆளுமைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று (ஜூலை 22) கும்பகோணம் பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு வழிகாட்டல் பயிற்சி

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்த: மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

அனைத்து மாநிலங்களிலும் வலுவான லோக் ஆயுக்த அமைக்க கோரும் பொதுநல மனு மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம்

பொறுப்பேற்பு

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். இவர் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர்.

அதிராம்பட்டினத்தில் இளைஞர்களுக்கு நேர்முகத்தேர்வு விழிப்புணர்வு பயிற்சி

Posted: 22 Jul 2016 02:15 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மாணவர் இந்தியா அமைப்பு கிளை சார்பில், பட்டதாரி இளைஞர்கள் நேர்முகத்தேர்வில் 100% வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கும் நேர்முகத்தேர்வு விழிப்புணர்வுப் பயிற்சி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உளுந்து சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

பட்டுக்கோட்டையை அடுத்த வேப்பங்குளம்  தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

நிலம் கையக மசோதா: நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவராக பாஜக எம்.பி. கணேஷ் சிங் நியமனம்

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

நிலம் கையக மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் புதிய தலைவராக பாஜக எம்.பி. கணேஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

1,324 டன் பொட்டாஷ் உரம் தஞ்சை வந்தது

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயிலில் 1,325 டன் பொட்டாஷ் உரம் தஞ்சாவூருக்கு வந்தது.

"தமிழகத்தில் 8 அரசு, 48 தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம்'

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

தமிழகத்தில் 8 அரசு மருத்துவமனைகளிலும், 48 தனியார் மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ஆய்வு மருத்துவர் வீ.சி. சுபாஷ்காந்தி.

ஜூலை 29-ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஜூலை 29-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கபாலி படத்துக்கு அதிக கட்டணம்: திரையரங்கை முற்றுகையிட்ட  13 பேர் கைது

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

தஞ்சாவூரில் கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, திரையரங்கை வெள்ளிக்கிழமை முற்றுகையிட முயன்ற தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

மதுரை மாணவர் லெனின் தற்கொலைக்குக் காரணமான தனியார் பெரு நிறுவனத்தினரைக் கைது செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

தஞ்சாவூரில் தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சாலை செப்பனிடும் பணிகளில் ஊழல் கடுமையான சட்டத்தின்கீழ் நடவடிக்கை: மகாராஷ்டிர அரசு பரிசீலனை

Posted: 22 Jul 2016 02:14 PM PDT

மும்பையில் சாலை செப்பனிடும் பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் ஊழல் நடைபெற்ற விவகாரத்தில், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அரசின் கடமை: மாநிலங்களவையில் தகவல்

Posted: 22 Jul 2016 02:13 PM PDT

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அரசின் கடமை என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இணையமைச்சர் பி.பி. செளதரி ஆகியோர் மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

விபத்துகளை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைகளில் தகட்டுத் திரையுடன் கூடிய தடுப்பு அரண்கள்: மத்திய அரசு முடிவு

Posted: 22 Jul 2016 02:12 PM PDT

அதிகரித்து வரும் விபத்துகளை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைகளின் 2 பக்கவாட்டுகளிலும் இரும்புத் தகட்டு திரையுடன் கூடிய தடுப்பு அரண்களை அமைப்பதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

சிரியா போல் மாறிவிடாமல் காஷ்மீரைப் பாதுகாக்க வேண்டும்:பண்டிட்டுகள் அமைப்பு வலியுறுத்தல்

Posted: 22 Jul 2016 02:11 PM PDT

பாகிஸ்தான், சிரியா போன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் ஜம்மு-காஷ்மீர் சிக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்று பனூன் காஷ்மீர் அமைப்பு (இடம்பெயர்ந்த பண்டிட்டுகள்

குஜராத்தில் தாக்கப்பட்ட தலித்துகளுடன் கேஜரிவால் சந்திப்பு

Posted: 22 Jul 2016 02:10 PM PDT

குஜராத் மாநிலம், உனாவில், இறந்த பசுவின் தோலை உரித்ததாக தாக்கப்பட்ட தலித்துகளையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி

தலித் விவகாரத்தில் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?

Posted: 22 Jul 2016 02:10 PM PDT

குஜராத்தில் தலித்துகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ்

மகாராஷ்டிர அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் ஆதாரமற்றவை

Posted: 22 Jul 2016 02:09 PM PDT

மகாராஷ்டிர மாநில அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் ஆதாரமற்றவை என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்தார்.

கோலி இரட்டைச் சதம்; இந்தியா-404/4

Posted: 22 Jul 2016 02:08 PM PDT

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் மதிய உணவு இடைவேளையின்போது 119 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 404 ரன்கள் குவித்திருந்தது இந்தியா. கேப்டன் கோலி 200, அஸ்வின் 64 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

மருத்துவ வசதிகளின்றி மக்கள் அவதி?: ம.பி. அரசுக்கு என்.ஹெச்.ஆர்.சி. நோட்டீஸ்

Posted: 22 Jul 2016 02:08 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் அவதிப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த மாநில அரசுக்கு தேசிய மனித

மக்களவையில் தகவல் : வருமான வரிச் சோதனைகளில் சிக்கிய ரூ.22,000 கோடி கருப்புப் பணம்

Posted: 22 Jul 2016 02:08 PM PDT

நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில் ரூ.22,475 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் கண்டறியப்பட்டதாக, மக்களவையில்

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

Posted: 22 Jul 2016 02:08 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்தால் கடும் நடவடிக்கை

Posted: 22 Jul 2016 01:29 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வருவாய் கோட்டாட்சியர் ரா. பேபி. 

ஜூலை 27-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Jul 2016 01:28 PM PDT

பெரம்பலூர் ஆட்சியரக கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார் ஆட்சியர் க. நந்தகுமார்.

திருமானூரில் இந்திய கம்யூ. ஒன்றியக் குழுக் கூட்டம்

Posted: 22 Jul 2016 01:28 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

Posted: 22 Jul 2016 01:27 PM PDT

பெரம்பலூர் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்க புதிய உறுப்பினர்களுக்கான 9-வது பதவியேற்பு விழா தாளாளர் அ. சீனிவாசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

புகையிலை பொருள்கள் விற்றவர்களுக்கு அபராதம்

Posted: 22 Jul 2016 01:27 PM PDT

அரியலூர் மாவட்டம், ஆர்.எஸ்.மாத்தூரில் பொது இடங்களில் புகைப்பிடித்த மற்றும் பள்ளி அருகே புகையிலை பொருள்களை விற்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அம்மா திட்ட முகாமில் 60 மனுக்களுக்கு தீர்வு

Posted: 22 Jul 2016 01:26 PM PDT

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை

Posted: 22 Jul 2016 01:26 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) மனோகரன் எச்சரித்துள்ளார்.

அரியலூரில் ராஜஸ்தான் வியாபாரி வீட்டில் ரூ. 4.55 லட்சம் திருட்டு

Posted: 22 Jul 2016 01:25 PM PDT

அரியலூரில் ராஜஸ்தான் வியாபாரி வீட்டில் ரூ. 4.55 லட்சம் ரொக்கத்தை திருடிய நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

திருமானூரில் தினசரி சந்தை அமைக்க கோரிக்கை

Posted: 22 Jul 2016 01:25 PM PDT

அரியலூர் மாவட்டம், திருமானூர் பழைய காவல் நிலையம் இருந்த இடத்தில் சாலையோர பூங்காவும், பழைய அஞ்சல் நிலையம் இருந்த இடத்தில் தினசரி சந்தையும் அமைக்க வேண்டும் என மக்கள் சேவை இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்-அரியலூரில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 22 Jul 2016 01:24 PM PDT

வழக்குரைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்பாவிடில் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற பார் கவுன்சிலின் உத்தரவை கண்டித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிகழாண்டில் ரூ. 6,500 கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க இலக்கு: கூட்டுறவுத் துறை அமைச்சர் தகவல்

Posted: 22 Jul 2016 01:23 PM PDT

நிகழாண்டில் ரூ.6,500 கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மே மாதம் வரை ரூ. 186.81 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு.

மணப்பாறை அருகே  சாலையோரம் கிடந்த பழைய பாஸ்போர்ட் படிவங்கள்

Posted: 22 Jul 2016 01:22 PM PDT

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே சாலையோரம் கிடந்த பழைய பாஸ்போர்ட் படிவங்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூரில் கைதான இரு பெண் மாவோயிஸ்டுகள் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

Posted: 22 Jul 2016 01:22 PM PDT

கரூரில் கைதான இரு பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளும் வெள்ளிக்கிழமை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

திருச்சி அருகே 50 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted: 22 Jul 2016 01:21 PM PDT

திருச்சி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ கஞ்சாவை போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அரிமா சங்கம் சார்பில்  கேவிபி முன்னாள் தலைவர் ஜனார்த்தனனுக்கு விருது

Posted: 22 Jul 2016 01:21 PM PDT

கரூரில் அரிமா சங்கம் சார்பில் கரூர் வைஸ்யா வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் இயக்குநருமான மறைந்த ஏ.எஸ். ஜனார்த்தனனுக்கு அம்பாசிடர் ஆப் குட் வில் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குண்டர் சட்டத்தில் ஒருவர் சிறையில் அடைப்பு

Posted: 22 Jul 2016 01:20 PM PDT

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

நகராட்சிப் பகுதிகளில் ரூ.9 கோடியில் எல்இடி விளக்குகள்

Posted: 22 Jul 2016 01:20 PM PDT

மின் கட்டணச் செலவைக் குறைக்கும் வகையில் நகராட்சி தெரு விளக்குகளில் எல்இடி விளக்குகள் பொருத்த ரூ. 9 கோடியில் திட்ட அறிக்கை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் நகர்மன்றத் தலைவர் எம்.செல்வராஜ்.

கலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 22 Jul 2016 01:19 PM PDT

கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் தலா 5 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்படுகின்றது. 2014-15,2015-16 ஆம் ஆண்டுகளுக்கான கலை விருதுக்குரிய கலைஞர்கள் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் 10 கலைஞர்களுக்கு விருது,பாராட்டுச் சான்று வழங்கப்படும். கலைஞர்கள் தங்களது கலைப் பணியறிவு,வயதுச் சான்று,இதர விவரங்களுடன் தலைமை ஆசிரியர், அரசு இசைப்பள்ளி, 558,கருப்பாயி கோயில் தெரு, ஜவஹர் பஜார், கரூர் என்ற முகவரிக்கு வரும் ஆக.14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட  முதுநிலை ஆட்சியர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 27-ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Posted: 22 Jul 2016 01:19 PM PDT

கரூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க் கூட்டம் வரும் ஜூலை 27(புதன் கிழமை) ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் எரிவாயு நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இது தொடர்பாக ஆட்சியர் மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நகராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 22 Jul 2016 01:18 PM PDT

நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை தரைக்கடை வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள்தொகை பெருகப் பெருக பொருளாதாரம் பாதிக்கப்படும்

Posted: 22 Jul 2016 01:18 PM PDT

மக்கள் தொகை பெருக்கத்தினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பாதிப்படையும் என்றார் மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா.

பாம்பன் தூக்குப் பாலத்தில் விசைப்படகு மோதியது

Posted: 22 Jul 2016 12:46 PM PDT

பாம்பன் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகு தூக்குப் பாலத்தில் மோதி நின்றது.

ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிப்பு

Posted: 22 Jul 2016 12:46 PM PDT

இலங்கை சிறையிலுள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, ராமேசுவரம் மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

ராமநாதபுரம் அரசு கல்லூரியில் ரத்த தான முகாம்

Posted: 22 Jul 2016 12:46 PM PDT

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் கிளையும், சேதுபதி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து, கல்லூரி வளாகத்தில் தன்னார்வ ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு

Posted: 22 Jul 2016 12:45 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரத்துக்கும் கடலாடிக்கும் இடையில் உள்ள தார் சாலையோரம் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் வெள்ளிக்கிழமை இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த சாயல்குடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர். இறந்தவர் குறித்து எந்த விவரமும் தெரியவராததால், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தவர் கைது

Posted: 22 Jul 2016 12:45 PM PDT

திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டினம் மேல்தெருவைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (53). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அப்துல்வாஹித் (47)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Posted: 22 Jul 2016 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள பூலாங்குறிச்சி சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக் கல்லூரியில், பல்வேறு பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

ஆடி முதல் வெள்ளி: மடப்புரம், தாயமங்கலம் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

Posted: 22 Jul 2016 12:44 PM PDT

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மடப்புரம், தாயமங்கலம் அம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

ஊராட்சி செயலர்கள் ஊதியத்தை உயர்த்த கோரிக்கை

Posted: 22 Jul 2016 12:43 PM PDT

கமுதி ஒன்றியத்துக்குள்பட்ட 52 ஊராட்சி செயலர்கள் ஊதியத்தை உயர்த்த வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரத்தில் ஆகஸ்ட்டில் ராமகிருஷ்ண தபோவனத்தின் 75-ஆவது ஆண்டு விழா

Posted: 22 Jul 2016 12:43 PM PDT

திருச்சி பகுதியிலுள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா, ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆகஸ்ட் 5, 6, 7 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறவுள்ளதாக, ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி சாரதானந்த மஹராஜ்  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ராமேசுவரம் திருக்கோயில் ஆடித் திருவிழா: ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 22 Jul 2016 12:42 PM PDT

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் 17 நாள்கள் நடைபெறும் ஆடித் திருவிழா, ஜூலை 27 இல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடிவெள்ளி

Posted: 22 Jul 2016 12:42 PM PDT

திருவாடானை தாலுகா, திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரத்தில் அறிவியல் கண்காட்சியை ஆட்சியர் திறந்து வைத்தார்

Posted: 22 Jul 2016 12:42 PM PDT

பள்ளிக் கல்வித் துறை சார்பில், ராமநாதபுரம் லூயிஸ் லெவல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.

கணினி அறிவியல் கழகம் தொடக்கம்

Posted: 22 Jul 2016 12:40 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் கணினி அறிவியல் கழகம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இயற்கை பேரிடர் மேலாண்மைப் பயிற்சி

Posted: 22 Jul 2016 12:32 PM PDT

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி, ராஜபாளையம் ஸ்ரீ சத்ய சாய் சேவா சங்கம் இணைந்து தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியை வெள்ளிக்கிழமை நடத்தியது.

கணினி அறிவியல் கழகம் தொடக்கம்

Posted: 22 Jul 2016 12:32 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல்துறை சார்பில் கணினி அறிவியல் கழகம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அடிகுழாய், மின்விசை பம்பு பழுது நீக்கும் பணிகள் நிறுத்தம்: தண்ணீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதி

Posted: 22 Jul 2016 12:31 PM PDT

விருதுநகர் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் அடிகுழாய், சிறிய குடிநீர் தொட்டி ஆகியவற்றை பழுது பார்க்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், வெளி உபயோகத்திற்கு பயன்படும் உப்புநீர் கிடைக்காமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். 

சாத்தூரில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Posted: 22 Jul 2016 12:31 PM PDT

சாத்தூர் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விசைத்தறியில் நவீன நெசவு கருத்தரங்கு

Posted: 22 Jul 2016 12:31 PM PDT

ராஜபாளையத்தில் கோவை மண்டல ஜவுளித் துறை ஆணையகம், ராஜபாளையம் தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சேவை மையம் சார்பில் விசைத்தறியில் நவீன நெசவு மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

Posted: 22 Jul 2016 12:30 PM PDT

மாணவர்கள் தங்களை வேலைக்கு தகுதியானவர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஏ.ராமநாதன் கூறினார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் குறைவதாகக் கூறி போராட்டம்

Posted: 22 Jul 2016 12:30 PM PDT

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் குறைவாகத் தருவதாகக் கூறி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டனர்.

37-ஆவது நாளாக போராட்டம்: விசைத்தறி தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிப்பு

Posted: 22 Jul 2016 12:29 PM PDT

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் 37 நாள்களாகியும் முடிவுக்கு வராததால், ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் உறுதி: போராட்டம் ஒத்திவைப்பு

Posted: 22 Jul 2016 12:29 PM PDT

ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை 45 நாள்களுக்குள் அகற்றப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்: ஆட்சியர்

Posted: 22 Jul 2016 12:29 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அகற்ற வட்டாட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) சி.முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விவசாய நிலங்களுக்குள் விலங்குகள் புகுவதை தடுக்கும் நடவடிக்கைக்கு இடையூறு செய்யக் கூடாது: ஆட்சியர்

Posted: 22 Jul 2016 12:28 PM PDT

வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதை தடுப்பதற்கு விவசாயிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வனத் துறையினர் இடையூறு செய்யக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கூறினார்.

கொடைக்கானலில் கபாலி திரைப்படத்துக்கு குறைந்த கட்டணம் வசூலிப்பு: ரசிகர்கள் மகிழ்ச்சி

Posted: 22 Jul 2016 12:26 PM PDT

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வெளியான கபாலி திரைப்படத்துக்கு குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அய்யலூர் தச்சுத் தொழிலாளி கொலை: மதுரை வழக்குரைஞர் உள்பட 5 பேர் கைது: தேனி நீதிமன்றத்தில் இருவர் சரண்

Posted: 22 Jul 2016 12:25 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தச்சுத் தொழிலாளியை கொலை செய்ததாக, மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் உள்பட 5 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

புத்தாக்க அறிவியல் கண்காட்சி

Posted: 22 Jul 2016 12:25 PM PDT

அறிவியல் தொழில் நுட்பத் துறை (புதுதில்லி), தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையம் (சென்னை) மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சுடுகாட்டுப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் வெளியே வந்த எலும்புக் கூடுகள்

Posted: 22 Jul 2016 12:24 PM PDT

போடி அருகே சுடுகாட்டுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகின்றன. இதனால் அங்கு மனித எலும்புக் கூடுகள் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளியில் தூங்கிய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்

Posted: 22 Jul 2016 12:24 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பள்ளியில் தூங்கிய தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

சாலை விபத்தில் இருவர் சாவு

Posted: 22 Jul 2016 12:23 PM PDT

பழனி அருகே இருசக்கரவாகனம் - கார் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இடையே நல்லுறவு மேம்படுவதற்கு சட்டம் இடையூறாக இருக்கக்கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 22 Jul 2016 12:23 PM PDT

வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இடையே நல்லுறவு மேம்படுகையில் சட்டம் அதற்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி பேரணி

Posted: 22 Jul 2016 12:22 PM PDT

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி லோயர்கேம்ப்பில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

Posted: 22 Jul 2016 12:22 PM PDT

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வீ.பாஸ்கரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வைகை அணை நீர்மட்டம் உயர்வு

Posted: 22 Jul 2016 12:22 PM PDT

வைகை அணைக்கு கடந்த ஜூலை 14 ம் தேதி முதல் நீர்வரத்து இல்லை. இதனால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளிக்கிழமை வைகை அணைக்கு 164 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 26.25 அடியாக உள்ளது.

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 22 Jul 2016 12:21 PM PDT

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வத்தலகுண்டு அருகே வீட்டுக்கு தீவைத்து விட்டு ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 22 Jul 2016 12:21 PM PDT

வத்தலகுண்டு அருகே குடும்பத் தகராறில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு தீ வைத்து விட்டு தூக்கிட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தங்கை கொலை: அண்ணன் பழனி நீதிமன்றத்தில் சரண்

Posted: 22 Jul 2016 12:21 PM PDT

தங்கையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய அண்ணன் பழனி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

குண்டர் சட்டத்தில் இளைஞர் சிறையில் அடைப்பு

Posted: 22 Jul 2016 12:21 PM PDT

போடி உட்கோட்டம், தேவாரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). இவர் தேவாரம் மெயின் பஜாரில் டீக்கடையில் இருந்தபோது தே.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மச்சக்காளை (28) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1000, மற்றும் கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துச் சென்றாராம்.

போடி தாலுகா காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை

Posted: 22 Jul 2016 12:20 PM PDT

தோட்டத்துக்கு சென்று வந்த 3 இளைஞர்களை, நள்ளிரவில் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றதால் கிராமமக்கள், போடி தாலுகா காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடமலைக்குண்டு அருகே வனத்தை ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட இலவங்கன்றுகள் அகற்றம்

Posted: 22 Jul 2016 12:20 PM PDT

கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து நடப்பட்ட இலவங்கன்றுகளை வனத்துறையினர் வியாழக்கிழமை அகற்றினர்.

கொடைக்கானல் அரசுப் பள்ளியை பராமரிக்க கோரிக்கை

Posted: 22 Jul 2016 12:19 PM PDT

பாழடைந்த நிலையில் உள்ள கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

25 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வெங்காய சேமிப்பு கிடங்கு: கால்நடை தீவன உற்பத்தி மையமாக மாறுகிறது

Posted: 22 Jul 2016 12:17 PM PDT

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு, தொழில் நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய எரியோடு வெங்காய சேமிப்பு கிடங்கை, கால்நடை தீவன உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு செயல்முறை கற்றல் பயிற்சி

Posted: 22 Jul 2016 12:07 PM PDT

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செயல்முறை கற்றல் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

காலிமனையில் வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை

Posted: 22 Jul 2016 12:07 PM PDT

கிராமங்களிலுள்ள காலிமனைகளில் புதிதாக வீடு கட்டியவர்களுக்கு பட்டா வழங்குவதற்கான சிறப்பு முகாம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™