Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கட்டைவிரல் இதயத்தில் கடவுள்!

Posted: 22 Jul 2016 11:40 AM PDT

பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வுடன் நோக்கியபடியே, திருவடிகளை பிடித்து விட்டுக்கொண்டிருந் தாள்.பக்தன் பெருமாள் முன் நின்று சேவித்தான். பூலோகத்தில், அவன் செய்த நன்மைகளைப் பாராட்டிய பெருமாள், பூலோகத்தில் எல்லா இன்பங்களையும் அனுபவித்தவன் நீ. வைகுண்டத்திலும் இன்பவாழ்வு நடத்து, என்றார்.பக்தன் அவரிடம்,பெருமாளே! எனக்கு பூலோகத்தில் இன்பமான வாழ்வு கிடைத்தது உண்மை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கு ...

செய்யும் தொழிலே தெய்வம்!

Posted: 22 Jul 2016 11:22 AM PDT

ஒரு பணக்காரன் பூந்தோட்டம் வைத்திருந்தான். தோட்டத்தைப் பராமரிக்க இரு வேலையாட்கள் இருந்தனர். ஒருவன் சோம்பேறி. வேலையே செய்யமாட்டான். பகலெல்லாம் தோட்டத்தில் தூங்குவான். ஆனால், முதலாளியின் தலையைக் கண்டதும் ஓடிச் சென்று தலைக்கு மேல் கும்பிடு போட்டு நிற்பான். அவர் உடுத்தியிருக்கும் ஆடை, ஆபரணத்தைப் புகழ்ந்து பேசி நடிப்பான். இன்னொரு வேலையாளோ தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். அவன் எண்ணம் எல்லாம் தோட்டத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். பூச்செடிக்கு தண்ணீர்விடுவது, பாத்தி அமைப்பது என்று நாள் முழுவதும் ...

திருப்பித்தராத அடி .........!

Posted: 22 Jul 2016 10:40 AM PDT

"இந்த அடியை மறக்காதே நாளைக்கு வரும் போது தா .......!"  என்று அருளுவின் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தான் வளவன்.  ஆனால் இன்று அருளுவிற்கு விழுந்த அடி சற்று பலமாகவே விழுந்து ஒரு விரலும் பதிந்து விட்டது. ஆனால் அப்போதைக்கு வலிக்கவேயில்லை அருளுக்கு ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவனது அம்மா சட்டையை கழட்டும்போது ஆஆவென்று கத்தினான் . என்னாடா என்று உருத்து பார்த்தவள் பதறினாள் . யாருப்பா அடிச்சா ? பள்ளியில்  ஆசிரியர்கள் அடித்தார்களா ? இல்லை சாலையில் செல்பவர்கள் அடித்தார்களா ? எப்படி வந்தது இந்த வீக்கம் ...

நூற்றாண்டுகளில் வரலாறு

Posted: 22 Jul 2016 10:35 AM PDT

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Posted: 22 Jul 2016 10:32 AM PDT

- 'என்னய்யா இன்னமும் யூத் மாதிரி ஹீரோயினைக் கொஞ்சிகிட்டு, டூயட் பாடிகிட்டு.. அங்கெல்லாம் அமிதாப் பச்சன்.....' என்று வம்பிழுப்பவர்களுக்கு 'இந்தா வெச்சுக்கோ' என்றொரு கம்ப்ளீட் பேக்கேஜ் கொடுத்திருக்கிறார் ரஜினி.. இல்லையில்லை ரஞ்சித். - 'தண்டனைக் காலம் முடிஞ்சுடுச்சு. ஆனா, இவரை வெளில விடலாமா.. வேண்டாமா' என்று மலேசிய அதிகாரிகளின் கலந்துரையாடலில் தொடங்குகிறது படம். வெளியே வருகிற ரஜினி, தன் எதிரியை என்ன செய்கிறார்... தன் குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா... என்று இரண்டரை மணி நேரத்தில் ...

வங்கியில் 8822 புரொபேஷனரி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு

Posted: 22 Jul 2016 09:07 AM PDT

இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் ...

இணையதளத்தில் புதிய படம் வெளியீடு: உரிமையாளர் கைது

Posted: 22 Jul 2016 08:23 AM PDT

புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிட்ட கிகாஸ் ரொடர்ண்ட் இணையதளத்தின் உரிமையாளர் போலந்தில் நேற்று கைது செய்யப்பட்டார். சுமார் 28 மொழிகளில் இணையதள சேவையை அளித்து வரும் கிகாஸ் ரொடர்ண்ட் இணையதளம், புதுப்படங்களை ஆன்லைனின் வெளியிடுவதில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த இணையதளத்தில் ஹாலிவுட் திரைப்படங்களை சட்ட விரோதமாக வெளியிட்டதாக, ஆர்டம் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்காவின் கோரிக்கையின்படி போலந்தில் இருந்த ஆர்டமை ...

ஆடிவெள்ளி...!!

Posted: 22 Jul 2016 08:03 AM PDT

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு பொங்கல் வைப்பது கூழ்வார்ப்பது அருள்வாக்கு கேட்பது என்றெல்லாம் ஓரே திருவிழாக் கொண்டாட்டம் தான். மக்களின் முகங்களில் மகிழ்ச்சி சந்தோஷம் காண முடிக்கின்றது. ஆனால், கூழ்வார்ப்பு என்ற பெயரில் அண்டா அண்டாவாய் நிரம்பும் கூழினை யார் குடிக்கிறார்கள்? யாரும் குடித்து நானும் பார்த்ததில்லை. அக்கூழினைப் பள்ளம் தோண்டி அதில் ஊற்றி மூடிவிட்டு வீணாக்குகிறார்கள் அல்லது பிராணிகள் வளர்ப்போர் வந்து குடங்களில் வாங்கிக் கொண்டுப் போய் அவைகளுக்கு ஊற்றி பசியாற்றுகிறார்கள். அதற்கு பதிலாக ...

தமிழக பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

Posted: 22 Jul 2016 07:57 AM PDT

தமிழக சட்டப்பேரவையில் 2016-17 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்: * தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. * மதுரையில் பால் பொருட்கள் தயாரிப்பு மையம் அமைக்கப்படும். * இலவச அன்னதான திட்டம் மேலும் 30 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு: * மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.9, 073 கோடி நிதி ஒதுக்கீடு. * பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.24,130 கோடி ...

சென்னையில் இருந்து 29 பேருடன் புறப்பட்ட விமானப் படை விமானம் மாயம்

Posted: 22 Jul 2016 06:25 AM PDT

சென்னையில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானத்தை காணவில்லை. அதிலிருந்த 29 பேரது கதி என்னவானது என்பதும் தெரிய வரவில்லை. சென்னை தாம்பரத்திலிருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை அந்தமானின் போர்ட் பிளேருக்கு புறப்பட்ட விமானத்தைக் காணவில்லை. ஏ.என்.32 என்ற அந்த விமானம் புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையின் தொடர்பிலிருந்து விலகியுள்ளது. இத்தகவலை பாதுகாப்பு வட்டாரமும் உறுதி செய்துள்ளது. காணாமல் போன அந்த சிறிய ரக விமானத்தில் 29 பேர் இருந்தனர். அது கூரியர் ஏற்றிச் செல்லும் விமானம். விமானம் ...

மிசோரம்: 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

Posted: 22 Jul 2016 06:01 AM PDT

- சியோனின் குடும்பத்தினர். | படம்: ராய்ட்டர்ஸ் --------------------------- மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா என்ற நபர் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. - மிசோரம் மாநிலம் பக்த்வாஸ் தஸ்க்நும் கிராமத்தில் வசித்து வரும் சியோனா வியாழக்கிழமை 72வது பிறந்தநாளை தனது 38 மனைவிகளுடனும், 89 பிள்ளைகளுடனும், பேரக்குழந்தைகளுடனும் ஆட்டம் பாட்டத்தோடு கொண்டாடி முடிந்துள்ளார். - சியோன் தனது முதல் மனைவியை 1959ஆம் ஆண்டு தனது 15 ஆம் வயதில் திருமணம் செய்துள்ளார். ...

நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு

Posted: 22 Jul 2016 05:51 AM PDT

வீட்டில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வரையிலான காட்சிகளை நேரலை செய்த மக்களவை ஆம் ஆத்மி எம்.பி. பக்வந்த் மான் செயலுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருக்கும் நாடாளுமன்ற வளாகத்தை வீடியோ பிடித்தது தொடர்பாக பக்வந்த் மான் மன்னிப்பு கோரினாலும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதனை ஏற்கவில்லை. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி பக்வந்த் செயல் சரியானதே என்று வாதாடியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தலைவர் அசுடோஷ் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் கேள்விகளை ...

ஐ.நா.: அடுத்த பொதுச் செயலர் யார்?12 பேர் போட்டி; ரகசிய வாக்குப் பதிவு

Posted: 21 Jul 2016 06:42 PM PDT

-ஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு, வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் அந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றனர். தற்போதைய பொதுச் செயலர் பான் கி-மூனின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. ஐ.நா. விதிமுறைகளின்படி, பாதுகாப்புக் கவுன்சில் பரிந்துரையின் அடிப்படையில், 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு ஐ.நா. பொதுச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™