Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சென்னையில் ஆக. 5 இல் சேக்கிழார் விழா தொடக்கம்
- வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சாதி, மதம் கிடையாது:தொல்.திருமாவளவன்
- கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு
- சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஆகஸ்ட் 1 வரை காவல் நீட்டிப்பு
- இளங்கோவன் மீதானஅவதூறு வழக்கு: செப். 30-க்கு ஒத்திவைப்பு
- கொலை முயற்சி வழக்கில் 9 பேர் விடுதலை: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்
- கட்சியும் ’செம’ ஹிட் ஆயிடும் சார்..!
- அடிப்படை அணுகுமுறையே தவறு!
- "தூய்மை இந்தியா' தொடர வேண்டும்
- துருக்கியில் மக்கள் புரட்சி!
- திருவள்ளுவர் சிலை குன்றக்குடி வருகை
- வீட்டின் கதவை உடைத்து 190 பவுன் நகை, ரொக்கம் திருட்டு
- உள்ளாட்சி தேர்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகள் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்
- பந்தயத்தில் வெற்றி பெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசளிப்பு
- போலி விசா கொடுத்து ரூ.2.50லட்சம் மோசடி: ராமேசுவரம் மீனவர் எஸ்.பி.யிடம் புகார்
- ராமேசுவரத்தில் பயணிகள் தங்கும் விடுதி: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு
- இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
- குன்றக்குடி, கண்டரமாணிக்கம் பகுதியில் ஜூலை 19 மின்தடை
- திருப்புவனம், இளையான்குடி பகுதி பெண்கள் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் ஆட்சியரிடம் மனு
- மனைவி வெட்டி கொலை: கணவர் தலைமறைவு
- மானாமதுரையில் ஸ்ரீவீரழகர் பூப்பல்லக்கில் பவனி
- முடி திருட்டு வழக்கில் மேலும் 3 பேர் கைது: கைதானவரின் மனைவி இறந்ததால் உறவினர்கள் போராட்டம்
- கல்லூரியில் கருத்தரங்கம்
- சவூதியில் இறந்தவர் சடலத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி, மகள் ஆட்சியரிடம் மனு
- மாமியாரை தாக்கியதாக மருமகள் உள்பட 3 பேர் மீது வழக்கு
- மழைநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை
- ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம்
- மூடப்பட்ட கூட்டுறவு சங்கத்தை மீண்டும் திறக்கக் கோரி நெசவாளர்கள் மனு
- விருதுநகரில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு
- இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ.2.55 லட்சம் கொள்ளை
- உதவித் தொகை கோரி மாற்றுத் திறனாளிகள் மனு
- மதுக் கடை மீது கல் வீச்சு: 35 பேர் மீது வழக்கு
- மதுரை சமையல்காரர் விபத்தில் சாவு
- தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம்!மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
- தேனியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
- எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்:பிரதமர் மோடி நம்பிக்கை
- குறைதீர் கூட்டத்தில் 58 பேருக்கு நலத் திட்ட உதவி
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு தொடங்கியது:ஆக.1 வரை பதிவு செய்ய வாய்ப்பு
- கொடிநாள் வசூல் ரூ.84 லட்சம் இலக்கு: வசூலை தொடங்காத 13 துறைகளுக்கு அறிவுரை
- சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி
- மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் நவஜோத் சிங் சித்து:ஆம் ஆத்மியில் சேரத் திட்டம்?
- தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து
- சேது சமுத்திர திட்டத்துக்கு நிகழாண்டில் பணம் இல்லை:மத்திய அரசு தகவல்
- பழனியாண்டவர் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்
- குளச்சல் துறைமுகத் திட்டத்தை எதிர்க்க கேரள எம்.பி.க்கள் முடிவு
- ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆக. 1-க்கு ஒத்திவைப்பு
- ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையை முழுமையாக ஏற்க பிரதமர் மறுப்பு
- ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 497 தொழில் பழகுநர் காலிப் பணியிடங்கள்
- வன விலங்குகளைக் கொல்ல மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை:மாநிலங்களவையில் தகவல்
- சிறுமலைக்கு கூடுதலாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- 8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு
- நிலக்கோட்டையில் 11 கடைகளுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை
- பிரான்ஸ், வங்கதேசம்:பயங்கரவாத தாக்குதல்களுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனம்
- குணமடைந்தும் வீட்டுக்கு அனுப்பப்படாத மனநோயாளிகள்:6 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- குஜராத்தில் குளோரின் வாயுக் கசிவு:ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
- பொற்கோயிலில் பாத்திரம் கழுவினார் கேஜரிவால்:சீக்கிய மத அவமதிப்பு புகாருக்குப் பரிகாரம்
- நீடித்த வளர்ச்சிக்கு அனைவருக்கும் வங்கிச் சேவை அவசியம்: ரகுராம் ராஜன்
- புதிய அமைச்சர்களை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர்
- தாவூத்-கட்சே தொலைபேசியில் பேசவில்லை:பயங்கரவாத தடுப்புப் படை
- காஷ்மீர்: ஊரடங்கு நீட்டிப்பு:கல்வீச்சில் ஆளுங்கட்சி எம்எல்ஏ காயம்
- ஐசிசி தரவரிசை: யாசிர் ஷா முதலிடம்
- ஒலிம்பிக்:பதக்க வாய்ப்பு எப்படி? சானியா பதில்
- தேசிய கூடைப்பந்து: சென்னை அணிகள் சாம்பியன்
- 1956 மெல்போர்ன் ஒலிம்பிக்
- ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹரியாணா வீரர்களுக்கு ரூ.15 லட்சம்
- அடக்குமுறைதுருக்கிக்கு மேலை நாடுகள் எச்சரிக்கை
- மோசடிப் புகாரில் ராஜபட்ச மகனுக்கு ஜாமீன்:சகோதரர் பஸில் கைது
- அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு:கொலம்பியாவுக்கு வெனிசூலா மக்கள் படையெடுப்பு!
- போர்க் குற்றம்: வங்கதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை:5 பேருக்கு ஆயுள்
- அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மாநாடு தொடங்கியது
- இணையதளம் மூலம் ஏ.டி.எம்.மில் கோடிக்கணக்கில் கொள்ளை:தைவானில் 3 பேர் கைது
- அமெரிக்கா: 3 போலீஸாரை சுட்டுக் கொன்றவர் முன்னாள் ராணுவ வீரர்
- ரூபாய் மதிப்பு சரியான அளவில் உள்ளது: ரகுராம் ராஜன்
- பொதுப் பங்கு வெளியீட்டுக்கு தயாராகிறது ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப்
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.9,768 கோடி முதலீடு
- எச்.யு.எல். லாபம் ரூ.1,173 கோடி
- 31.11 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்
- முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரகண்ட் மாநில அரசு உறுதி :தருண் விஜய் விளக்கம்
- தலைநகரில் பரவலான மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
- மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை: அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவு
- அவசர எண் "100' விவகாரம்: நீதிபதிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்தது காவல்துறை
- தனியார் மருத்துவமனைக்கு ரூ.17 கோடி அபராதம்: ஆம் ஆத்மி அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- விமான நிறுவனத்தின் இணையதளத்தில் ஊடுருவியதாக முன்னாள் ஊழியர் கைது
- ஐடிஓ பகுதியில் செல்லிடப்பேசி பறிப்பு சம்பவம்: பணியில் அலட்சியம் காட்டியதாக மூன்று காவலர்கள் இடைநீக்கம்
- பிரான்ஸ், வங்கதேசம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனம்
- தில்லியில் கூம்பு வடிவ ஒலிப்பான்களுக்கு தடை!
- அமெரிக்காவில் ரஜினி: புகைப்படங்கள் வெளியீடு
- சென்னையில் முதன்முறையாக ஜூலை 28 முதல் 31 வரை கன்னட திரைப்பட விழா
- ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி ஆக.2-இல் தொடக்கம்
- மழையால் நிரம்பியது ஆனைமடுகு தடுப்பணை
- தர்ம ரக்ஷண ஸமிதி சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு
- கால்கள் செயலிழப்பு: போலி மருத்துவர் மீது ஆட்சியரிடம் பெண் புகார்
- வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- உண்டியல் காணிக்கை ரூ. 2.47 கோடி
- திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்
| சென்னையில் ஆக. 5 இல் சேக்கிழார் விழா தொடக்கம் Posted: 18 Jul 2016 02:29 PM PDT சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில், 24-ஆம் ஆண்டு சேக்கிழார் விழா, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ளது. |
| வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சாதி, மதம் கிடையாது:தொல்.திருமாவளவன் Posted: 18 Jul 2016 02:28 PM PDT திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சாதி, மதம் எதுவும் கிடையாது. சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு, திருக்குறள் உலகப் பொதுமறையாக விளங்குகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார். |
| கெலவரப்பள்ளி நீர்த் தேக்கத்தில் இருந்து இன்று முதல் நீர் திறப்பு Posted: 18 Jul 2016 01:31 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஆகஸ்ட் 1 வரை காவல் நீட்டிப்பு Posted: 18 Jul 2016 01:31 PM PDT சென்னையில் மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ராம்குமாருக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| இளங்கோவன் மீதானஅவதூறு வழக்கு: செப். 30-க்கு ஒத்திவைப்பு Posted: 18 Jul 2016 01:30 PM PDT முதல்வர் ஜெயலலிதா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், செப். 30}ஆம் தேதி அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. |
| கொலை முயற்சி வழக்கில் 9 பேர் விடுதலை: உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் Posted: 18 Jul 2016 01:30 PM PDT கொலை முயற்சி வழக்கில் ஜயேந்திரர் உள்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது. |
| கட்சியும் ’செம’ ஹிட் ஆயிடும் சார்..! Posted: 18 Jul 2016 01:26 PM PDT |
| Posted: 18 Jul 2016 01:22 PM PDT அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 21-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இருப்பினும் ஜூலை 17}ஆம் தேதி நிலவரப்படி 27 கல்லூரிகளில் மட்டுமே 100% மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. |
| "தூய்மை இந்தியா' தொடர வேண்டும் Posted: 18 Jul 2016 01:21 PM PDT தமிழ்நாட்டில் சிலர் பணத்தைக் கொடுத்து ஓட்டு வாங்குவதுபோல் தில்லி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜரிவால் துடைப்பத்தைக்காட்டி வாக்குகளை வாரி எடுத்து முதல்வராகி வரலாறு படைத்தார். |
| Posted: 18 Jul 2016 01:20 PM PDT துருக்கியில் நடந்த ராணுவப் புரட்சி முயற்சியானது சில மணி நேரங்களிலேயே முறியடிக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. ராணுவத்தின் ஒரு பகுதியினர் மேற்கொண்ட இந்த முயற்சியை முழுக்க முழுக்க மக்கள் ஆதரவுடன் முறியடித்திருக்கிறார் அதிபர் ரிசப் தாயீப் எர்டோகன். |
| திருவள்ளுவர் சிலை குன்றக்குடி வருகை Posted: 18 Jul 2016 12:26 PM PDT மொரிஷியஸ் நாட்டில் நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலை திங்கள்கிழமை குன்றக்குடி வந்த போது அதற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். |
| வீட்டின் கதவை உடைத்து 190 பவுன் நகை, ரொக்கம் திருட்டு Posted: 18 Jul 2016 12:25 PM PDT திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கதவை உடைத்து 190 பவுன் நகை, ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| உள்ளாட்சி தேர்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம் Posted: 18 Jul 2016 12:25 PM PDT பரமக்குடியில் மாவட்ட அதிமுக சார்பில் திங்கள்கிழமை உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகள் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம் Posted: 18 Jul 2016 12:25 PM PDT ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் புதிய கொடிமரத்துக்கு தங்கப்பட்டைகளை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| பந்தயத்தில் வெற்றி பெற்ற புறா வளர்ப்போருக்கு பரிசளிப்பு Posted: 18 Jul 2016 12:24 PM PDT ராமநாதபுரம் ரேஸிங் ஹோமர் கிளப் சார்பில் 10 வது ஆண்டாக புறா பந்தயங்கள் 4 கட்டமாக நடத்தப்பட்டு வெற்றி பெற்ற புறாக்களை வளர்த்தோருக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| போலி விசா கொடுத்து ரூ.2.50லட்சம் மோசடி: ராமேசுவரம் மீனவர் எஸ்.பி.யிடம் புகார் Posted: 18 Jul 2016 12:24 PM PDT சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.2.50 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு போலி விசா கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் எஸ்.பி. மணிவண்ணனிடம் ராமேசுவரம் மீனவர் திங்கள்கிழமை மனு அளித்தார். |
| ராமேசுவரத்தில் பயணிகள் தங்கும் விடுதி: காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறப்பு Posted: 18 Jul 2016 12:23 PM PDT ராமேசுவரத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய தங்கும் விடுதியை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார். |
| இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம் Posted: 18 Jul 2016 12:23 PM PDT இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் சார்பில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கும் இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குன்றக்குடி, கண்டரமாணிக்கம் பகுதியில் ஜூலை 19 மின்தடை Posted: 18 Jul 2016 12:22 PM PDT காரைக்குடி, கோவிலூர் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், மானகிரி, தளக்காவூர், கண்டரமாணிக்கம், நாச்சியாபுரம், பட்டமங்கலம், குன்றக்குடி, சொக்கநாதபுரம், ஆலங்குடி, கூத்தலூர், பாதரக்குடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் என். சித்தி அப்துல்காதர் தெரிவித்துள்ளார். |
| திருப்புவனம், இளையான்குடி பகுதி பெண்கள் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் ஆட்சியரிடம் மனு Posted: 18 Jul 2016 12:20 PM PDT திருப்புவனம், இளையான்குடி ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கோரி காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக் கொடுத்தனர். |
| மனைவி வெட்டி கொலை: கணவர் தலைமறைவு Posted: 18 Jul 2016 12:19 PM PDT பார்த்திபனூர் அருகே திங்கள்கிழமை மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மானாமதுரையில் ஸ்ரீவீரழகர் பூப்பல்லக்கில் பவனி Posted: 18 Jul 2016 12:19 PM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீவீரழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதிகளில் பவனி வந்தார். |
| முடி திருட்டு வழக்கில் மேலும் 3 பேர் கைது: கைதானவரின் மனைவி இறந்ததால் உறவினர்கள் போராட்டம் Posted: 18 Jul 2016 12:19 PM PDT சாத்தூர் அருகே இருக்கன்குடி கோயிலில் காணிக்கை முடி திருடப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரின் மனைவி திங்கள்கிழமை இறந்ததால் காவல்துறையினரைக் கண்டித்து, சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவருக்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. |
| Posted: 18 Jul 2016 12:18 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் வேதியியல்துறை சார்பில் ஆங்கில மொழியில் திறம்பட பேசுவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். விருதுநகர் செந்திக்குமாரநாடார் கல்லூரி ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் மு.மீனாதேவி, ஆங்கில மொழியில் எவ்வாறு திறம்பட பேசலாம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாணவர் ஜே.காந்திகிருஷ்ணா வரவேற்றார். மாணவி ஆர்.மகேஸ்வரி நன்றி கூறினார். |
| சவூதியில் இறந்தவர் சடலத்தை மீட்டுத் தரக்கோரி மனைவி, மகள் ஆட்சியரிடம் மனு Posted: 18 Jul 2016 12:18 PM PDT விருதுநகர் அருகே சொக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவூதியில் ஏப்ரல் மாதம் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரது மனைவி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். |
| மாமியாரை தாக்கியதாக மருமகள் உள்பட 3 பேர் மீது வழக்கு Posted: 18 Jul 2016 12:17 PM PDT சிவகாசி அருகே செங்கமலநாச்சியாபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜூவின் மனைவி லட்சுமி(72). இவரது மகன் வெள்ளத்துரை பாண்டிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டிமீனா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. |
| மழைநீர் கால்வாயை சீரமைக்கக் கோரிக்கை Posted: 18 Jul 2016 12:17 PM PDT சிவகாசியில் சேதம் அடைந்துள்ள மழைநீர் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி கையெழுத்து இயக்கம் Posted: 18 Jul 2016 12:16 PM PDT சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரத்திலும், சிவகாசி-விருதுநகர் சாலையில் திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி இந்தியக் கம்யூ. கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை நடத்தினர். |
| மூடப்பட்ட கூட்டுறவு சங்கத்தை மீண்டும் திறக்கக் கோரி நெசவாளர்கள் மனு Posted: 18 Jul 2016 12:16 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியில் மூடப்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் நடத்தக்கோரி நெசவாளர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் (பொ) செ.முத்துக்குமரனிடம் மனு அளித்தனர். |
| விருதுநகரில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு Posted: 18 Jul 2016 12:16 PM PDT விருதுநகர் அரசு மருத்துவமனை மற்றும் கம்பர் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். |
| இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 18 Jul 2016 12:15 PM PDT கல்விக்கடன் செலுத்த முடியாமல் மதுரையில் மாணவர் தற்கொலை செய்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆண்டிபட்டி மதுரை காமராஜர் கலைக்கல்லூரி முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். கல்விக்கடனை ஏஜென்ஸி மூலம் வசூலிப்பதை நிறுத்தவேண்டும். |
| திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ.2.55 லட்சம் கொள்ளை Posted: 18 Jul 2016 12:15 PM PDT திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை இரவு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி ரூ.2.55 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| உதவித் தொகை கோரி மாற்றுத் திறனாளிகள் மனு Posted: 18 Jul 2016 12:14 PM PDT பழனி சார்-ஆட்சியரிடம் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை கோரி மனு அளித்தனர். |
| மதுக் கடை மீது கல் வீச்சு: 35 பேர் மீது வழக்கு Posted: 18 Jul 2016 12:14 PM PDT தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாலை மறியலின் போது, அரசு மதுக்கடை மீது கல்வீசி மது பாட்டில்களை சேதப்படுத்தியதாக 35 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| மதுரை சமையல்காரர் விபத்தில் சாவு Posted: 18 Jul 2016 12:10 PM PDT நத்தம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த மதுரை சமையல்காரர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| தொலைக்காட்சி-கணினியில் நேரத்தை செலவிட வேண்டாம்!மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை Posted: 18 Jul 2016 12:10 PM PDT தொலைக்காட்சி-கணினியில் மாணவர்கள் தங்களது நேரத்தை செலவிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். |
| தேனியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 18 Jul 2016 12:10 PM PDT தேனி மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 18 Jul 2016 12:10 PM PDT பழனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக சனிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| எஸ்.பி. அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு Posted: 18 Jul 2016 12:09 PM PDT தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்:பிரதமர் மோடி நம்பிக்கை Posted: 18 Jul 2016 12:09 PM PDT நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றும் என்று நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| குறைதீர் கூட்டத்தில் 58 பேருக்கு நலத் திட்ட உதவி Posted: 18 Jul 2016 12:09 PM PDT தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 58 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார். |
| Posted: 18 Jul 2016 12:08 PM PDT பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்புப் பதிவு திங்கள்கிழமை தொடங்கியது. |
| கொடிநாள் வசூல் ரூ.84 லட்சம் இலக்கு: வசூலை தொடங்காத 13 துறைகளுக்கு அறிவுரை Posted: 18 Jul 2016 12:08 PM PDT கொடி நாள் வசூலாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.84 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை வசூலை தொடங்காத 13 துறைகள் விரைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் (பொ) பா.பாஸ்கரன் அறிவுறுத்தினார். |
| சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி Posted: 18 Jul 2016 12:08 PM PDT அமெரிக்காவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி, ரூ.3.50 லட்சத்தை மோசடி செய்ததாக தனியார் நிறுவன உரிமையாளர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் நவஜோத் சிங் சித்து:ஆம் ஆத்மியில் சேரத் திட்டம்? Posted: 18 Jul 2016 12:08 PM PDT முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யுமான நவஜோத் சிங் சித்து (52), தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். |
| தொடர் மழையால் அருவிகளில் நீர்வரத்து Posted: 18 Jul 2016 12:07 PM PDT கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. |
| சேது சமுத்திர திட்டத்துக்கு நிகழாண்டில் பணம் இல்லை:மத்திய அரசு தகவல் Posted: 18 Jul 2016 12:07 PM PDT சேது சமுத்திர கால்வாய் திட்டத்துக்கு நிகழாண்டில் பணம் இல்லை என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| பழனியாண்டவர் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம் Posted: 18 Jul 2016 12:07 PM PDT என்ஜின் கோளாறு காரணமாக பழனியாண்டவர் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக திங்கள்கிழமை திண்டுக்கல் வந்தடைந்தது. |
| குளச்சல் துறைமுகத் திட்டத்தை எதிர்க்க கேரள எம்.பி.க்கள் முடிவு Posted: 18 Jul 2016 12:07 PM PDT குளச்சல் துறைமுகத் திட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க கேரளத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். |
| ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆக. 1-க்கு ஒத்திவைப்பு Posted: 18 Jul 2016 12:06 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையை முழுமையாக ஏற்க பிரதமர் மறுப்பு Posted: 18 Jul 2016 12:06 PM PDT குஜராத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு என்கவுன்ட்டர் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண் இஷ்ரத் ஜஹான் தொடர்பான வழக்கில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் பதவிக்காலத்தை 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை |
| ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 497 தொழில் பழகுநர் காலிப் பணியிடங்கள் Posted: 18 Jul 2016 12:06 PM PDT சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 497 தொழில் பழகுநர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| வன விலங்குகளைக் கொல்ல மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை:மாநிலங்களவையில் தகவல் Posted: 18 Jul 2016 12:05 PM PDT பாதிப்பை ஏற்படுத்தும் வன விலங்குகளைக் கொல்வதற்கு மத்திய அரசு அனுமதி எதுவும் வழங்கவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே மாநிலங்களவையில் தெரிவித்தார். |
| சிறுமலைக்கு கூடுதலாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 18 Jul 2016 12:05 PM PDT சிறுமலைக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாற்றாக அரசுப் பேருந்துகளை இயக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் (பொறுப்பு) திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| 8 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி:ஒடிஸா அரசு முடிவு Posted: 18 Jul 2016 12:05 PM PDT ஒடிஸாவில் உள்ள சுமார் 8 லட்சம் இளைஞர்களுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. |
| நிலக்கோட்டையில் 11 கடைகளுக்கு தீ வைப்பு: போலீஸ் விசாரணை Posted: 18 Jul 2016 12:05 PM PDT நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சொந்தமான 11 கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் தீ வைத்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| பிரான்ஸ், வங்கதேசம்:பயங்கரவாத தாக்குதல்களுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனம் Posted: 18 Jul 2016 12:05 PM PDT பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல்நாளான திங்கள்கிழமையன்று, மாநிலங்களவையில் |
| குணமடைந்தும் வீட்டுக்கு அனுப்பப்படாத மனநோயாளிகள்:6 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 18 Jul 2016 12:04 PM PDT மனநல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் சிலர் பூரண குணமடைந்தபோதிலும், அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படாத விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்குமாறு கேரளம், மேற்கு வங்கம் உள்பட 6 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 18 Jul 2016 12:04 PM PDT ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். |
| குஜராத்தில் குளோரின் வாயுக் கசிவு:ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம் Posted: 18 Jul 2016 12:03 PM PDT குஜராத் மாநிலத்தில் நகராட்சிக்குச் சொந்தமான குடிநீர் சுத்திகரிப்புத் தொட்டியில் இருந்து திங்கள்கிழமை குளோரின் நச்சுவாயுக் கசிவு ஏற்பட்டதால், அருகில் வசித்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். |
| பொற்கோயிலில் பாத்திரம் கழுவினார் கேஜரிவால்:சீக்கிய மத அவமதிப்பு புகாருக்குப் பரிகாரம் Posted: 18 Jul 2016 12:03 PM PDT சீக்கிய மதத்தை அவமதித்ததாக எழுந்த புகாருக்குப் பரிகாரமாக, பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள பொற்கோயிலில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை பாத்திரங்களைக் கழுவினார். |
| நீடித்த வளர்ச்சிக்கு அனைவருக்கும் வங்கிச் சேவை அவசியம்: ரகுராம் ராஜன் Posted: 18 Jul 2016 12:02 PM PDT நாட்டின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவைகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். |
| புதிய அமைச்சர்களை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் Posted: 18 Jul 2016 12:01 PM PDT மத்திய அமைச்சர்களாக அண்மையில் பதவியேற்றுக் கொண்டவர்களை மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார். |
| தாவூத்-கட்சே தொலைபேசியில் பேசவில்லை:பயங்கரவாத தடுப்புப் படை Posted: 18 Jul 2016 12:01 PM PDT பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேவும் தொலைபேசியில் பேசிக்கொள்ளவில்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) தெரிவித்தனர். |
| காஷ்மீர்: ஊரடங்கு நீட்டிப்பு:கல்வீச்சில் ஆளுங்கட்சி எம்எல்ஏ காயம் Posted: 18 Jul 2016 12:01 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு உள்பட்ட 10 மாவட்டங்களில் திங்கள்கிழமையும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. |
| ஐசிசி தரவரிசை: யாசிர் ஷா முதலிடம் Posted: 18 Jul 2016 12:00 PM PDT ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா முதலிடத்தைப் பிடித்தார். |
| ஒலிம்பிக்:பதக்க வாய்ப்பு எப்படி? சானியா பதில் Posted: 18 Jul 2016 12:00 PM PDT மற்ற போட்டிகளைப் போலவே ஒலிம்பிக் போட்டிக்கும் தயாராகி வருகிறேன். ஆனால் பதக்கம் வெல்வேனா என்பது குறித்து முன்கூட்டியே கணித்துக் கூற முடியாது என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார். |
| தேசிய கூடைப்பந்து: சென்னை அணிகள் சாம்பியன் Posted: 18 Jul 2016 11:59 AM PDT புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியின் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன. |
| Posted: 18 Jul 2016 11:58 AM PDT 16-ஆவது ஒலிம்பிக் போட்டி 1956-ஆம் ஆண்டு நவம்பர் 22 முதல் டிசம்பர் 8 வரை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 2,938 வீரர்கள், 376 வீராங்கனைகள் உள்பட 3,314 பேர் பங்கேற்றனர். |
| ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹரியாணா வீரர்களுக்கு ரூ.15 லட்சம் Posted: 18 Jul 2016 11:56 AM PDT ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஹரியாணாவைச் சேர்ந்த 22 வீரர்களுக்கும் தலா ரூ.15 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. |
| அடக்குமுறைதுருக்கிக்கு மேலை நாடுகள் எச்சரிக்கை Posted: 18 Jul 2016 11:55 AM PDT துருக்கியில் ராணுவப் புரட்சி தோல்வியடைந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வரம்பு மீறக் கூடாது என்று அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத்துள்ளன. |
| மோசடிப் புகாரில் ராஜபட்ச மகனுக்கு ஜாமீன்:சகோதரர் பஸில் கைது Posted: 18 Jul 2016 11:54 AM PDT பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்சவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது. |
| அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு:கொலம்பியாவுக்கு வெனிசூலா மக்கள் படையெடுப்பு! Posted: 18 Jul 2016 11:54 AM PDT வெனிசூலாவில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் அவற்றை வாங்குவதற்காக சுமார் ஒரு லட்சம் பேர் அண்டை நாடான கொலம்பியாவுக்கு எல்லை தாண்டிச் சென்றனர். |
| போர்க் குற்றம்: வங்கதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை:5 பேருக்கு ஆயுள் Posted: 18 Jul 2016 11:53 AM PDT வங்கதேச விடுதலைப் போரின்போது போர்க் குற்றத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மாநாடு தொடங்கியது Posted: 18 Jul 2016 11:52 AM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பிலான வேட்பாளரை அறிவிப்பதற்கான அந்தக் கட்சியின் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. |
| இணையதளம் மூலம் ஏ.டி.எம்.மில் கோடிக்கணக்கில் கொள்ளை:தைவானில் 3 பேர் கைது Posted: 18 Jul 2016 11:52 AM PDT தைவானில் வங்கிகளின் வலைதளங்களில் ஊடுருவி, அவற்றின் ஏ.டி.எம். மையங்களில் 25 லட்சம் டாலர் (சுமார் ரூ.16.7 கோடி) கொள்ளையடித்த |
| அமெரிக்கா: 3 போலீஸாரை சுட்டுக் கொன்றவர் முன்னாள் ராணுவ வீரர் Posted: 18 Jul 2016 11:52 AM PDT அமெரிக்காவின் லூயிஸியானா மாகாணத்தில் 3 போலீஸாரை ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றவர், முன்னாள் ராணுவ வீரர் என்று அடையாளம் வந்துள்ளது. |
| ரூபாய் மதிப்பு சரியான அளவில் உள்ளது: ரகுராம் ராஜன் Posted: 18 Jul 2016 11:51 AM PDT இந்திய ரூபாயின் மதிப்பு தற்போதைய நிலையில் நியாயமான அளவில்தான் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார். |
| பொதுப் பங்கு வெளியீட்டுக்கு தயாராகிறது ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் Posted: 18 Jul 2016 11:51 AM PDT ஐ.சி.ஐ.சி.ஐ. புருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டு ரூ.5,000 கோடி திரட்ட அனுமதி கோரி இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்திடம் (செபி) திங்க |
| வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.9,768 கோடி முதலீடு Posted: 18 Jul 2016 11:50 AM PDT உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பான அளவில் மேம்பட்டு வருவது மற்றும் நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றின் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.9,768 கோடி முதலீடு செய்தனர். |
| எச்.யு.எல். லாபம் ரூ.1,173 கோடி Posted: 18 Jul 2016 11:49 AM PDT வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் துறையில் ஈடுபட்டு வரும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் (எச்.யு.எல்.) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.1,173.90 கோடியை லாபமாக ஈட்டியது. |
| 31.11 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் Posted: 18 Jul 2016 11:48 AM PDT தமிழகத்தில் 31.11 லட்சம் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை அட்டை (இலவச பஸ் பாஸ்) வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார். |
| முழு மரியாதையுடன் திருவள்ளுவர் சிலையை நிறுவ உத்தரகண்ட் மாநில அரசு உறுதி :தருண் விஜய் விளக்கம் Posted: 18 Jul 2016 11:47 AM PDT ஹரித்துவாரில் கங்கை நதிக் கரை அருகே உள்ள அரசு விருந்தினர் இல்ல வளாகத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, முழு மரியாதையுடன் வேறு பகுதியில் நிறுவப்படும் என்று உத்தரகண்ட் மாநில அரசு உறுதியளித்துள்ளதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார். |
| தலைநகரில் பரவலான மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் Posted: 18 Jul 2016 11:44 AM PDT தலைநகர் தில்லியில் திங்கள்கிழமை காலையிலும், நண்பகலிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| மழை நீர் தேங்கும் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை: அதிகாரிகளுக்கு தில்லி அரசு உத்தரவு Posted: 18 Jul 2016 11:44 AM PDT மழை நீர் தேங்கும் பகுதிகளை மாநகராட்சி, பொதுப் பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து 24 மணி நேரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. |
| அவசர எண் "100' விவகாரம்: நீதிபதிக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்தது காவல்துறை Posted: 18 Jul 2016 11:44 AM PDT காவல்துறையின் அவசர உதவி எண்ணான "100'க்கு தொடர்பு கொண்ட தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, எவ்வித பதிலும் அளிக்கப்படாத விவகாரத்தில் மத்திய உள்துறையும், தில்லி காவல்துறையும் வருத்தம் தெரிவித்துள்ளன. |
| Posted: 18 Jul 2016 11:44 AM PDT தில்லியிலுள்ள தர்மஷீலா புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைக்கு, ரூ.17.86 கோடி அபராதம் விதித்த ஆம் ஆத்மி அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது. |
| விமான நிறுவனத்தின் இணையதளத்தில் ஊடுருவியதாக முன்னாள் ஊழியர் கைது Posted: 18 Jul 2016 11:44 AM PDT ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் இணையதளத்தின் கணக்குகள் பராமரிக்கும் பிரிவில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரை தில்லி போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 18 Jul 2016 11:44 AM PDT தில்லி ஐடிஓ பகுதியில் நிருபரின் செல்லிடப்பேசி பறிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக மூன்று காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| பிரான்ஸ், வங்கதேசம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மாநிலங்களவையில் கடும் கண்டனம் Posted: 18 Jul 2016 11:44 AM PDT பிரான்ஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்கள்கிழமை கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. |
| தில்லியில் கூம்பு வடிவ ஒலிப்பான்களுக்கு தடை! Posted: 18 Jul 2016 11:44 AM PDT தலைநகரில் ஒலி மாசுபாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, வாகனங்களில் கூம்பு வடிவ ஒலிப்பான்களை (பிரஷர் ஹார்ன்ஸ்) பயன்படுத்த தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| அமெரிக்காவில் ரஜினி: புகைப்படங்கள் வெளியீடு Posted: 18 Jul 2016 11:42 AM PDT நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
| சென்னையில் முதன்முறையாக ஜூலை 28 முதல் 31 வரை கன்னட திரைப்பட விழா Posted: 18 Jul 2016 11:41 AM PDT தமிழ், கர்நாடக கலைஞர்களின் நல்லுறவைப் பேணும் வகையில், கன்னட திரைப்பட விழா சென்னையில் முதன்முறையாக ஜூலை 28 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி ஆக.2-இல் தொடக்கம் Posted: 18 Jul 2016 11:39 AM PDT ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்குகிறது. |
| மழையால் நிரம்பியது ஆனைமடுகு தடுப்பணை Posted: 18 Jul 2016 11:39 AM PDT ஆம்பூர் பகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக, ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது. |
| தர்ம ரக்ஷண ஸமிதி சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு Posted: 18 Jul 2016 11:39 AM PDT ஆம்பூர் அருகே உள்ள கரும்பூர் கிராமத்தில் தர்ம ரக்ஷண ஸமிதி சார்பில் ராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. |
| கால்கள் செயலிழப்பு: போலி மருத்துவர் மீது ஆட்சியரிடம் பெண் புகார் Posted: 18 Jul 2016 11:39 AM PDT தனது இரு கால்களும் செயலிழக்க காரணமான போலி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பெண் சக்கர நாற்காலியில் வந்து குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார். |
| வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 18 Jul 2016 11:39 AM PDT வெட்டுவானம் எல்லையம்மன் கோயில் சாலையில், போலீஸ் பாதுகாப்புடன் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. |
| உண்டியல் காணிக்கை ரூ. 2.47 கோடி Posted: 18 Jul 2016 11:39 AM PDT திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.47 கோடி வசூலானது. |
| திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் Posted: 18 Jul 2016 11:39 AM PDT ஆடி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |