Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சவாலை எதிர்கொள்ளும் பிரிட்டன்!

Posted: 15 Jul 2016 02:15 PM PDT

ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து பிரிட்டன் விலகுவது என்கிற கருத்து வாக்கெடுப்பு முடிவு வெளிவந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, கடந்த புதன்கிழமை பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கான போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது.

அருணாசல் பேரவையில் திட்டமிட்டபடி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

Posted: 15 Jul 2016 02:13 PM PDT

அருணாசலப் பிரதேச சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு 10 நாள்கள் கால அவகாசம் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் நபம் துகி விடுத்த கோரிக்கையை ஆளுநர் ததாகத ராய் நிராகரித்து விட்டார்.

இந்தியாவின் உள்விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது

Posted: 15 Jul 2016 02:12 PM PDT

பர்ஹானின் மறைவுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக் கூடாது என்று இந்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

பர்ஹான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜூலை 19-இல் கருப்பு தினம்: பாகிஸ்தான் முடிவு

Posted: 15 Jul 2016 02:12 PM PDT

ஜம்மு-காஷ்மீரில், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, பாகிஸ்தானில் வரும் 19-ஆம் தேதி கருப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.

தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Posted: 15 Jul 2016 02:12 PM PDT

சென்னையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 33 சிறார்கள் தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜீவ் கொலைக் கைதிகள் விவகாரம்: தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்

Posted: 15 Jul 2016 01:31 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையில் வாதத்தை முன்வைக்க தமிழக அரசுக்கு ஒரு வாரம் அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்

Posted: 15 Jul 2016 01:30 PM PDT

காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி ஜே.செலமேஸ்வர் வெள்ளிக்கிழமை கூறினார்.

குளச்சல் துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பிரதமரைச் சந்திக்கிறார் பினராயி விஜயன்

Posted: 15 Jul 2016 01:29 PM PDT

தமிழகத்தில் குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு எதிராக, கேரள அரசின் கவலைகளைத் தெரிவிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

பத்தாம் வகுப்பு: ஜூலை 18-இல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

Posted: 15 Jul 2016 01:28 PM PDT

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் வரும் திங்கள்கிழமை (ஜூலை 18) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

உதய் திட்டத்தின் சாதக, பாதகங்கள்: தமிழக குழு விரைவில் தில்லி செல்லும்

Posted: 15 Jul 2016 01:28 PM PDT

மின் வாரியங்களின் கடன் சுமையைக் குறைக்கும் "உதய்' திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மத்திய அரசுடன் விவாதிக்க தமிழக மின் துறை அமைச்சர் தலைமையில் உயர் நிலைக் குழு தில்லிக்குச் செல்ல உள்ளது.

ஜிஎஸ்டி மசோதா: காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ஜேட்லி

Posted: 15 Jul 2016 01:26 PM PDT

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியினரின் ஆதரவைப் பெறுவதற்காக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லியும், ஆனந்தகுமாரும் வெள்ளிக்கிழமை அக்கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினர்.

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 80 உயர்வு

Posted: 15 Jul 2016 01:16 PM PDT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 80 அதிகரித்து, ரூ.23,520-க்கு விற்பனையானது.

மருத்துவர் சரவணனின் மர்ம மரணம்: உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்: வைகோ

Posted: 15 Jul 2016 01:15 PM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையத்தில், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சரவணன் மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து மத்திய அரசு உரிய விசாரணை மேற்கொள்ள, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கெங்கையம்மன் கோயிலுக்கு பால்குட ஊர்வலம்

Posted: 15 Jul 2016 01:15 PM PDT

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மனுக்கு அபிஷேகம் செய்ய 1,000 பால் குடங்கள் ஏந்தி பக்தர்கள் வெள்ளிக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.

தீப்பற்றி எரிந்த சரக்கு ஆட்டோ

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

குடியாத்தம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிந்தது. சேம்பள்ளியைச் சேர்ந்த காந்திக்குச் சொந்தமான சரக்கு ஆட்டோ குடியாத்தம் ராஜகணபதி நகரில் நிறுத்தி

தேர்தலுக்குப் பிறகு மக்களின் நம்பிக்கையை திமுக பெற்றுள்ளது: ஸ்டாலின்

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மக்களின் நம்பிக்கையை திமுக பெற்றுள்ளது என்று அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி செய்தி எதிரொலி:கைலாசகிரி மலைப்பாதை பணி மீண்டும் தொடக்கம்

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

தினமணி செய்தி எதிரொலியாக ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைப்பாதை பணி வியாழக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

செவிலியர் கல்லூரியில் தாய்ப்பால் வார விழா

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

ஆற்காடு மகாலட்சுமி செவிலியர் கல்லூரியில் தாய்ப்பால் வார விழா அண்மையில் நடைபெற்றது.

புகையிலை பொருள்கள் பறிமுதல்

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

ஆற்காடு அருகே கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டம்: ஜெயலலிதா பங்கேற்க வேண்டும்

Posted: 15 Jul 2016 01:14 PM PDT

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (ஜூலை 16) நடைபெறவுள்ள அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

Posted: 15 Jul 2016 01:13 PM PDT

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் ரயில் நிலையத்தில் இருந்து ஆண் சடலம் மீட்கப்பட்டது.

ஆனி கருட சேவை உற்சவம்

Posted: 15 Jul 2016 01:13 PM PDT

உத்தரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி கருட உற்சவம் அண்மையில் நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும், ஆனி மாதம் கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

சாதுர்மாஸ்ய விரத சங்கல்ப மகோத்ஸவம்

Posted: 15 Jul 2016 01:13 PM PDT

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இந்த ஆண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அனுஷ்டிக்க உள்ளனர்.

பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தர்னா - வெளிநடப்பு

Posted: 15 Jul 2016 01:13 PM PDT

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை உயரத்தை அதிகரித்து வரும் பிரச்னை குறித்து மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவாதிக்க அனுமதிக்காததால் விவசாயிகள் வெளிநடப்பு செய்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 15 Jul 2016 01:12 PM PDT

பேர்ணாம்பட்டு நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.

பிளாஸ்டிக் சிகிச்சை அழகியல் சிகிச்சை மட்டுமல்ல! சுகாதாரத் துறை அமைச்சர்

Posted: 15 Jul 2016 01:12 PM PDT

பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை என்றால் அழகியல் சிகிச்சை மட்டுமல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

1,600 சதுர அடியில் காமராஜரின் உருவப் படம்

Posted: 15 Jul 2016 01:12 PM PDT

குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு 1,600 சதுர அடியில் (40 அடி நீளம், 40 அடி அகலம்) வண்ணப் பொடிகளால் காமராஜரின் உருவப் படம் வரையப்பட்டது.

காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted: 15 Jul 2016 01:12 PM PDT

வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காமராஜரின் 114-ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரும்பு விவசாயிகள் சங்கக் கூட்டம்

Posted: 15 Jul 2016 01:11 PM PDT

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு விவசாயிகள் கூட்டம் அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாரதிய கிசான் சங்க கரும்பு விவசாயிகள் பிரிவு மாநிலத் தலைவர் சி.முனுசாமி தலைமை வகித்தார். இதில்

மரப்பட்டறைக்கு சீல்: அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது

Posted: 15 Jul 2016 01:11 PM PDT

ஆம்பூரில் வங்கியில் வாங்கிய கடனுக்காக ஏலம் விடப்பட்ட மரப்பட்டறைக்கு சீல் வைக்கச் சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேரை ஆம்பூர் நகர காவல் நிலைய போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வீட்டில் பதுக்கிய நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

Posted: 15 Jul 2016 01:11 PM PDT

வாணியம்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சமுதாய குற்றங்களுக்கு திரைப்படங்கள்தான் காரணம்: நீதிபதி கிருபாகரன்

Posted: 15 Jul 2016 01:10 PM PDT

சமுதாயத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு திரைப்படங்கள்தான் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.

ஆந்திர அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 01:10 PM PDT

தமிழக-ஆந்திர எல்லையில் புல்லூர் கிராமத்தில், பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரித்து கட்டி வரும் ஆந்திர அரசைக் கண்டித்து வாணியம்பாடியில் பாலாறு உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆற்காட்டில் புதிய உணவகம் திறப்பு

Posted: 15 Jul 2016 01:10 PM PDT

ஆற்காடு பேருந்து நிலையம் அருகே 70 அடி சாலை சந்திப்பில் ஸ்ரீதுர்கா பவன் உணவகத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிர் பாதுகாப்புக் கருத்தரங்கம்

Posted: 15 Jul 2016 01:10 PM PDT

ஆற்காட்டை அடுத்த கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் சுற்றுப்புறச் சூழ்நிலைக்கு மாசு ஏற்படா வண்ணம் நவீன பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

மோடி தலைமையில் இன்று மாநில முதல்வர்கள் கூட்டம்

Posted: 15 Jul 2016 01:09 PM PDT

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டம் (மாநில முதல்வர்கள் கூட்டம்) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

"மதர் டெய்ரி' பால் விலை இன்று முதல் ரூ.1 உயர்வு

Posted: 15 Jul 2016 01:09 PM PDT

பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதிகளில் "மதர் டெய்ரி' நிறுவனத்தின் பாக்கெட் பால் விலை ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை (ஜூலை 16) முதல் அமலுக்கு வருகிறது.

கபாலி திரைப்படத்தை வெளியிட 169 இணையதள சேவை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை

Posted: 15 Jul 2016 01:08 PM PDT

கபாலி திரைப்படத்தை வெளியிட 169 இணையதள சேவை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

108 அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதச் சுற்றுலா

Posted: 15 Jul 2016 01:06 PM PDT

மாநில அளவில் பிரசித்திப் பெற்ற 108 அம்மன் திருக்கோயில்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆடி மாதச் சுற்றுலா திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் நன்னெறி பிரசாரம்: இமாம்கள் திட்டம்

Posted: 15 Jul 2016 01:01 PM PDT

ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளால் இளைஞர்கள் கவர்ந்திழுக்கப்படுவதைத் தடுக்க சமூக வலைதளங்கள் மூலம் நன்னெறிப் பிரசாரத்தை மேற்கொள்ள இமாம்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்: பிரணாப், மோடி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

Posted: 15 Jul 2016 01:00 PM PDT

பிரான்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

"ஒடிஸாவில் கி.பி. 1500-க்கு முன்பே ரசகுல்லா இருந்தது'

Posted: 15 Jul 2016 12:56 PM PDT

ரசகுல்லா முதன் முதலாக தோன்றியது ஒடிஸா மாநிலத்தில்தான் என்பதற்கு புதிய ஆதாரம் கண்டறியப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

நேபாள அரசியல் குழப்பத்துக்கு இந்தியா காரணமல்ல: மத்திய அரசு

Posted: 15 Jul 2016 12:56 PM PDT

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இந்தியா காரணமல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் சிதம்பரமும் பிரணாபும் தலையிட்டனர்

Posted: 15 Jul 2016 12:55 PM PDT

மத்திய முன்னாள் நிதியமைச்சர்களான ப.சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் தலையிட்டனர் என்றும் வட்டி விகிதங்ககளை நிர்ணயிப்பதில் நெருக்கடி கொடுத்தனர் என்றும் அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் டி.சுப்பாராவ் குறைகூறியுள்ளார்.

ஹார்திக் படேல் ஜாமீனில் விடுதலை: போராட்டம் தொடரும் என அறிவிப்பு

Posted: 15 Jul 2016 12:55 PM PDT

படேல் இடஒதுக்கீட்டுப் போராட்டக் குழுவின் தலைவர் ஹார்திக் படேல் (22), 9 மாத சிறை தண்டனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுதலையானார். படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. விசாரணைக்கு பாக். கோரிக்கை

Posted: 15 Jul 2016 12:55 PM PDT

காஷ்மீர் வன்முறைச் சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபை கண்காணிப்பின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

உ.பி.: இக்லாக் குடும்பத்தினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு

Posted: 15 Jul 2016 12:54 PM PDT

உத்தரப் பிரதேசத்தில் மாட்டுக்கறியைச் சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது பசுவதை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

யுனெஸ்கோ பட்டியலில் நாளந்தா பல்கலைக்கழகம்

Posted: 15 Jul 2016 12:54 PM PDT

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலில் பிகார் மாநிலத்தில் உள்ள பழைமையான நாளந்தா பல்கலைக்கழகம் சேர்க்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக அமிதாப் பச்சன் நியமனம்

Posted: 15 Jul 2016 12:51 PM PDT

"தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் நகர்ப்புற திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் "சிட்டி கம்போஸ்ட்' உரப் பயன்பாட்டை பிரபலப்படுத்துவதற்கான விளம்பரத் தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே முதல் முறையாக ம.பி.யில் மகிழ்ச்சித் துறை!

Posted: 15 Jul 2016 12:48 PM PDT

நாட்டிலேயே முதல் முறையாக, மக்களின் மகிழ்ச்சியை உறுதி செய்வதற்காக, மகிழ்ச்சித் துறை என்ற தனி அமைச்சகத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு வெள்ளிக்கிழமை அமைத்தது.

ரஃபேல் போர் விமானக் கொள்முதல்: பிரான்ஸிடம் கூடுதல் தள்ளுபடி கோருகிறது இந்தியா

Posted: 15 Jul 2016 12:43 PM PDT

பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ள இந்தியா, கூடுதலாக தள்ளுபடி வழங்கக் கோரியுள்ளது.

பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை தேவை: ஹமீது அன்சாரி

Posted: 15 Jul 2016 12:42 PM PDT

மனித சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் வன்முறை: மேலும் ஒருவர் சாவு

Posted: 15 Jul 2016 12:41 PM PDT

ஜம்மு - காஷ்மீரில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் மேலும் ஒருவர் பலியானார். பாதுகாப்புப் படையினர் 9 பேர் உள்பட 23 பேர் காயமடைந்தனர்.

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வாகனம் மலைச்சரிவில் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

Posted: 15 Jul 2016 12:39 PM PDT

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மலைச்சரிவில் இருந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் நிகழாண்டுக்குள் குற்றப்பத்திரிகை

Posted: 15 Jul 2016 12:37 PM PDT

இத்தாலி நிறுவனத்திடம் இருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான பேரத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பான வழக்கில் இந்த ஆண்டுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: வீரபத்ர சிங்

Posted: 15 Jul 2016 12:36 PM PDT

கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் (பிஎம்எல்ஏ) பதிவு செய்யப்பட்ட வழக்கில், தன்னை கைது செய்யக் கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி உயர் நீதிமன்றத்தில் ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

தங்கச் சட்டை அணிந்து பிரபலமான புணே தொழிலதிபர் அடித்துக் கொலை

Posted: 15 Jul 2016 12:34 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபரான தத்தா புகே என்பவரை அவரது மகன் கண் முன்னே மர்ம நபர்கள் சிலர் அடித்துக் கொன்றனர்.

தெற்கு சூடானில் மீட்கப்பட்ட 156 இந்தியர்கள் நாடு திரும்பினர்

Posted: 15 Jul 2016 12:33 PM PDT

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவித்த 9 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 156 இந்தியர்கள், வெள்ளிக்கிழமை பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

காமராஜர் சிலைக்கு தமிழர்கள் மரியாதை!

Posted: 15 Jul 2016 12:25 PM PDT

காமராஜரின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி தில்லி காமராஜ் மார்க்கில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர் தூவி, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லி தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

காமராஜர் 114-ஆவது பிறந்த நாள்: தில்லியில் காங்கிரஸார் மரியாதை

Posted: 15 Jul 2016 12:25 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 114-ஆவது பிறந்த நாளையொட்டி, தில்லியில் காமராஜ் மார்க் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தமிழகம் மற்றும் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேற்கு, வடமேற்கு தில்லியில் குடிநீர் விநியோகம் இன்று பாதிக்கப்படும்

Posted: 15 Jul 2016 12:24 PM PDT

குழாய் ஒன்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், மேற்கு மற்றும் வடமேற்கு தில்லி பகுதிகளில் சனிக்கிழமை குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

அவதூறு சித்திரம்: போலீஸில் கேஜரிவால் புகார்

Posted: 15 Jul 2016 12:24 PM PDT

சீக்கியர்களால் புனிதராகக் கருதப்படும் "நிகாங்' வடிவில் தன்னை உருவகப்படுத்தி அவதூறு சித்திரம் வெளியிட்ட பதிப்பகம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லி நகர காவல் துறை ஆணையர் அலோக் வர்மாவுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

டிடிஇஏ பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

Posted: 15 Jul 2016 12:24 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

டேவிஸ் கோப்பை: ராம்குமார், மைனேனி வெற்றி

Posted: 15 Jul 2016 12:19 PM PDT

தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து திணறல்

Posted: 15 Jul 2016 12:12 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 56 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது.

ஒலிம்பிக் 2016: போர்ச்சுகல் அணி அறிவிப்பு

Posted: 15 Jul 2016 12:11 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட போர்ச்சுகல் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் 2016: பிரேசில் அணியில் நெய்மர்

Posted: 15 Jul 2016 12:11 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள பிரேசில் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் 2016: இந்திய வீரர்கள் பதக்கம் வெல்வதில்  தீவிரமாக இருக்கிறார்கள்

Posted: 15 Jul 2016 12:10 PM PDT

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் என இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் 2016 சாஜனுக்கு பாராட்டு!

Posted: 15 Jul 2016 12:10 PM PDT

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கேரள நீச்சல் வீரர் சாஜனுக்கு அம்மாநில அரசின் சார்பில் தலைநகர் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: போட்டி அட்டவணை வெளியீடு

Posted: 15 Jul 2016 12:09 PM PDT

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய பசிபிக் குத்துச்சண்டை: விஜேந்தர்-கெர்ரி ஹோப் இன்று பலப்பரீட்சை

Posted: 15 Jul 2016 12:08 PM PDT

இந்தியாவின் விஜேந்தர் சிங்-ஆஸ்திரேலியாவின் கெர்ரி ஹோப் இடையிலான ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை போட்டி தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

குடியிருப்பு நலச் சங்கங்களின் மழை நீர் சேகரிப்பு: டிஜேபியின் நிலவர அறிக்கை கேட்கிறது என்ஜிடி

Posted: 15 Jul 2016 12:07 PM PDT

குடியிருப்பு நலச் சங்கங்கள் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடர்பான விரிவான நிலவர அறிக்கையை தில்லி குடிநீர் வாரியம் தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.

"பிச்சைக்காரர்கள் இல்லா தில்லி' திட்டம்நிறுத்துமாறு அமைச்சருக்கு கேஜரிவால் உத்தரவு

Posted: 15 Jul 2016 12:07 PM PDT

பிச்சைக்காரர்கள் இல்லாத தில்லியை உருவாக்க மாநில சமூக நலத்துறை அமைச்சர் சந்தீப் குமார் தொடங்கிய திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

விமானப் படை அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது

Posted: 15 Jul 2016 12:06 PM PDT

இந்திய விமானப் படை அதிகாரி ஒருவரது வீட்டில், விமானப் படை தகவல் தொடர்புக்கான செல்லிடப்பேசி உள்பட பல்வேறு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பயிற்சி ஆட்டம்: இந்தியா-162/3

Posted: 15 Jul 2016 12:06 PM PDT

செயின்ட் கிட்ஸ், ஜூலை 15: மேற்கிந்தியத் தீவுகள் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது.

காலி வீட்டில் ஆட்டோ ஓட்டுநர் சடலம்:கொலையா? போலீஸ் தீவிர விசாரணை

Posted: 15 Jul 2016 12:06 PM PDT

தெற்கு தில்லி, நெப் சராய் பகுதியில் ஆள் இல்லாத காலி வீட்டில் ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவரை நண்பர்கள் கொலை செய்துள்ளதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

1936  பெர்லின்  ஒலிம்பிக்

Posted: 15 Jul 2016 12:06 PM PDT

11-ஆவது ஒலிம்பிக் போட்டி 1936-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 முதல் 16 வரை ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்றது. 49 நாடுகளைச் சேர்ந்த 3,632 வீரர்கள், 331 வீராங்கனைகள் என மொத்தம் 3,963 பேர் கலந்து கொண்டனர்.

தில்லியில் இன்று தமிழக விவசாயிகள் தர்னா :வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரிக்கை

Posted: 15 Jul 2016 12:04 PM PDT

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி தில்லியில் சனிக்கிழமை (ஜூலை 16) தமிழக விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தர்னாவில் ஈடுபடவுள்ளனர்.

ஓய்வூதியம் பெற போலி ஆவணங்கள்: தில்லி அரசு எச்சரிக்கை

Posted: 15 Jul 2016 12:04 PM PDT

ஓய்வூதியம் பெற போலியான ஆவணங்களை அளித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது.

திண்டுக்கல் இரட்டைக் கொலை வழக்கு:நால்வரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

Posted: 15 Jul 2016 12:04 PM PDT

திண்டுக்கலில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு கீழமை விசாரணை நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்தது.

போலி டிக்கெட்டுகளை விநியோகித்த டிடிசி பேருந்து நடத்துடனர் கைது

Posted: 15 Jul 2016 12:04 PM PDT

போலி பயணச் சீட்டுகள் விநியோகித்த தில்லி போக்குவரத்து நிறுவனத்தைச் (டிடிசி) சேர்ந்த நடத்துனர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும்:ரயில்வே அமைச்சரிடம் அதிமுக எம்.பி. கோரிக்கை

Posted: 15 Jul 2016 12:03 PM PDT

தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் கு.பரசுராமன் நேரில் வலியுறுத்தினார்.

புதுவையில் பிரான்ஸ் தூதரக கார் எரிப்பு

Posted: 15 Jul 2016 12:02 PM PDT

புதுச்சேரியிலுள்ள பிரான்ஸ் தூதரகத்துக்குச் சொந்தமான கார் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

பள்ளிவாசல்களைப் போல கோயில்களுக்கும் இலவச அரிசி வழங்க வலியுறுத்தல்

Posted: 15 Jul 2016 12:02 PM PDT

பள்ளிவாசல்களுக்கு வழங்குவதுபோல ஆடி மாதத்தில் மாரியம்மன் கோயில்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் நல்லொழுக்கங்களை வளர்த்து கொள்ளும் சரியான தளம் பள்ளி, கல்லூரிகள்:அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன்

Posted: 15 Jul 2016 12:01 PM PDT

மாணவர்கள் நல்லொழுக்கங்களை வளர்த்துக்கொள்ளும் சரியான தளம் பள்ளி, கல்லூரிகள் எனவும், இதை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசைக் கண்டித்து தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 12:01 PM PDT

மதபோதகர் ஜாகிர் நாயக் மீதான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனக் கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசிடம் போராடி நிதி பெறுவேன்

Posted: 15 Jul 2016 12:01 PM PDT

புதுவை மாநில நலனுக்காக, மத்திய அரசிடம் போராடியாவது நிதியைப் பெறுவேன் என முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

காமராஜர் 114 ஆவது பிறந்தநாள்: குமரி மணிமண்டபத்தில் ஆட்சியர் மரியாதை

Posted: 15 Jul 2016 12:00 PM PDT

மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 114-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காமராஜர் சிலைக்கு புதுவை முதல்வர் மரியாதை

Posted: 15 Jul 2016 12:00 PM PDT

புதுச்சேரியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளியில் இருபெரும் விழா

Posted: 15 Jul 2016 11:59 AM PDT

ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி தின விழா, இலக்கிய மன்றத் தொடக்க விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

குழந்தைத் தொழிலாளர்கள் 5 பேர் மீட்பு

Posted: 15 Jul 2016 11:59 AM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, காவல்துறையினர் இணைந்து நடத்திய திடீர் ஆய்வில் கொத்தடிமையாக விற்கப்பட்ட ஒரு குழந்தை உள்பட ஐந்து குழந்தைத் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனர்.

தக்கலை புனித எலியாசியார் ஆலய குடும்ப திருவிழா கொடியேற்றம்

Posted: 15 Jul 2016 11:59 AM PDT

தக்கலை புனித எலியாசியார் ஆலய குடும்ப திருவிழா  வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா  ஜூலை 24-ஆம் தேதி  ஞாயிற்றுகிழமை ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் நிறைவடைகிறது.

திருமலைராயன்பட்டினம் அரசு பள்ளியில் மாணவர் தின விழா

Posted: 15 Jul 2016 11:59 AM PDT

திருமலைராயன்பட்டினம் சேணியர் தெரு அரசு நடுநிலைப் பள்ளியில் திருநள்ளாறு டிவைன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில், மாணவர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

Posted: 15 Jul 2016 11:58 AM PDT

காரைக்காலில் காமராஜர் சிலைக்கு அமைச்சர், எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

களியலில் மீன் வியாபாரிகள் மறியல்

Posted: 15 Jul 2016 11:58 AM PDT

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே களியலில் மீன் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதலில் பலியானோருக்கு காரைக்காலில் அஞ்சலி

Posted: 15 Jul 2016 11:58 AM PDT

பிரான்ஸில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக, காரைக்காலில் பிரெஞ்சு குடியுரிமைதாரர்கள் வெள்ளிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமுமுக ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 11:58 AM PDT

ஜாகிர்நாயக்கை தீவிரவாதியாக சித்தரிப்பதை கண்டிப்பதாகக் கூறி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் வெள்ளிக்கிழமை அழகியமண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 11:58 AM PDT

விலைவாசி உயர்வு, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Jul 2016 11:57 AM PDT

விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநில அரசின் பங்கின்றி காரைக்கால் - பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு : புதுச்சேரி எம்.பி. ராதாகிருஷ்ணன்

Posted: 15 Jul 2016 11:57 AM PDT

புதுச்சேரி மாநில அரசின் பங்கின்றி, காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ஆர்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™