Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


செக் மோசடி வழக்கிலும் மல்லையா 'பெப்பே' :தண்டனை வழங்க முடியாமல் கோர்ட் தவிப்பு

Posted: 06 Jul 2016 09:52 AM PDT

ஐதராபாத்: செக் மோசடி வழக்கில், 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்ட பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, கோர்ட்டில் ஆஜர் ஆகாததால், நான்காவது முறையாக தண்டனை விவரம் தள்ளிவைக்கப்பட்டது.

'கிங்பிஷர்' விமான நிறுவனத்தின் தலைவரும், பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரு மான விஜய் மல்லையா மீது, நாட்டின் பல இடங்களில் மோசடி வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ஜி.எம்.ஆர்., நிறுவனத்தின் சார்பில், விஜய் மல்லையாவுக்கு எதிராக, ஐதராபாத் கோர்ட் டில்மோசடி வழக்கு தொடரப்பட்டது. மல்லையா, தங்கள் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகைக்காக, ...

அமைச்சரவை விரிவாக்கத்தில் 'அல்வா' என்ன செய்யப் போகிறது சிவசேனா?

Posted: 06 Jul 2016 10:03 AM PDT

மும்பை: நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில், தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

இதையடுத்து, விரைவில் நடக்கவுள்ள, மஹாராஷ்டிர மாநில அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, முக்கிய இடங்களை கேட்டுப் பெற, சிவசேனா தலைமை திட்டமிட்டுள்ளது. மஹாராஷ் டிராவில், பா.ஜ.,வை சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் அங்கம் வகிக்கிறது.
பெரும் தலைவலி : எனினும், சட்டசபை
விவாதங்களின் போது, எதிர்க்கட்சிகளான, காங்., மற்றும் தேசியவாத ...

பாலை திருப்பி அனுப்பும் ஆவினை எதிர்த்து போராட்டம்...13ம் தேதி: பல மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு

Posted: 06 Jul 2016 10:42 AM PDT

''ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்ய மறுப்பதோடு, கோட்டா சிஸ்டத்தை அமல்படுத்தி உள்ளதை கண்டித்து, வரும், 13ம் தேதி, சேலம், விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின், மாநில பொதுச் செயலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில், 2012 - 13ம் நிதியாண்டில் பால் உற்பத்தி, 1.54 கோடி லிட்டர். தற்போது, 2.05 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், ஆவின் பால் கொள்முதல், 2013ல், 24 லட்சம் லிட்டராக இருந்தது. தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில், ஆவின் நிறுவனம், பால் ...

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இலாகா மாற்றம்... ஏன்?:பல்வேறு கருத்துக்களால் தேசிய அரசியலில் பரபரப்பு

Posted: 06 Jul 2016 10:55 AM PDT

மத்திய அமைச்சரவையில், செல்வாக்கான வராக திகழ்ந்த ஸ்மிருதி இரானியிடமிருந்து, மனிதவள மேம்பாட்டு துறை பறிக்கப்பட்டு, முக்கியத்துவம் இல்லாத ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, பல்வேறு தரப்பினரும், வெவ்வேறு கருத்துக்களை கூறுவதால், தேசியஅரசியலில் பரபரப்பு நிலவுகிறது.மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட தில், எதிர்பார்த்த மாற்றங்கள் பல இருந்தாலும், பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, ஜவுளித் துறைக்கு ...

தே.மு.தி.க.,வை கரைக்கும் பணி துவக்கம் : தடுக்கும் தீவிரத்தில் விஜயகாந்த்

Posted: 06 Jul 2016 10:57 AM PDT

தே.மு.தி.க.,வை ஒட்டுமொத்தமாக கரைக்கும் பணிகளை, மக்கள் தே.மு.தி.க.,வினர், இன்று துவங்குகின்றனர். தே.மு.தி.க., முன்னாள் நிர்வாகிகள் சந்திரக் குமார், பார்த்திபன், சி.எச்.சேகர் இணைந்து, மக்கள் தே.மு.தி.க., என்ற அமைப்பை, சட்டசபை தேர்தலின்போது உருவாக்கினர். இவர்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், சமீபத்தில், அக்கட்சியில் இணைந்தனர். தே.மு.தி.க.,வில் அதிருப்தியில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து, பிரம்மாண்ட இணைப்பு விழாவை, வரும் 17ம் தேதி, சேலம் கோட்டை மைதானத்தில் நடத்த இவர்கள் முடிவுசெய்துள் ளனர். இந்த விழாவிற்கு முன், தே.மு.தி.க.,வில் அதிருப்தி யில் ...

தமிழக படகுகளுக்கு இலங்கை அனுமதி? பிரதமரின் ராஜதந்திர முயற்சிக்கு பலன்

Posted: 06 Jul 2016 11:01 AM PDT

'குறைந்த எண்ணிக்கையில், இந்திய மீனவர்களின் படகுகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து, இலங்கை அரசு ஆலோசித்து வருவது, நிரந்தர தீர்வுக்கான தொடக்கமாக அமையும்; இதற்கு, பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக் கையே காரணம்' என, தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மீன்பிடித்தல் தொடர்பாக, தமிழக - இலங்கை மீனவர்களிடையே நீண்ட காலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு நாட்டு மீனவர்களின் நலன் கருதி, மத்திய அரசு அளித்த பரிந்துரைப்படி, குறைந்த எண்ணிக்கையிலான, தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்கவும், அதற்கான ...

தமிழக காங்கிரஸ் தலைவர் யார்: ராகுல் நடத்திய நேர்காணல்

Posted: 06 Jul 2016 11:09 AM PDT

தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக, யாரை நியமிக்கலாம் என்பது குறித்து, கோஷ்டி தலைவர்களிடம், தனித்தனியாக, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், டில்லியில் நேர்காணல் நடத்தினார்.

சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை, காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்றுக் கொண்டார். 'உள்ளாட்சி தேர்தல் வரை, இளங்கோவனே தலைவராக நீடிக்க வேண்டும்' என, சோனியாவிடம், இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் முறையிட்டனர். இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றும் வகையில், பீட்டர் ...

ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

Posted: 06 Jul 2016 11:58 AM PDT

புதுடில்லி: தென் ஆப்ரிக்கா, டான்சானியா, கென்யா, மொசம்பிக் ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக, டில்லி விமான நிலையத்திலிருந்து அவர் மொசம்பிக் நாட்டிற்கு தனி சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டார்.
பிரதமர் மோடி நான்கு நாடுகள் பயணமாக டில்லியிலிருந்து தனி விமானம் மூலமாக மொசாம்பிக் தலைநகர் மபுடோ புறப்பட்டார். கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்ததக்கது. இன்றைய நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் பிளிபி நியூஸியை சந்திக்கும் மோடி, அந்நாட்டு ...

ஈராக் தாக்குதல்; பலி 250 ஆக உயர்வு

Posted: 06 Jul 2016 12:24 PM PDT

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை, 250 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஈராக்கின் குறிப்பிட்ட சில பகுதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதிகளை மீட்க, ஈராக் ராணுவம், அவர்களுடன் சண்டையிட்டு வருகிறது. இந்நிலையில், தலைநகர் பாக்தாத்தில், கடந்த வாரம் இரண்டு இடங்களில் தற்கொலை படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 100 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் ...

கைதான ராம்குமாரின் ஒப்புதல் பெறப்பட்டதா ஜாமின் மனு குறித்து அரசு வழக்கறிஞர் சந்தேகம்

Posted: 06 Jul 2016 12:45 PM PDT

சென்னை:ஐ.டி., பெண் ஊழியர் சுவாதி கொலை வழக்கில், கைதான ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தது குறித்து, அரசு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த, ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனுக்கு, ஜாமின் கேட்டு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதி ஜெய்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், ...

சி.பி.ஐ., விசாரணையில் ரகசியம் வெளிவரும்: * ரூ.570 கோடி குறித்து ஸ்டாலின் பேச்சு

Posted: 06 Jul 2016 12:57 PM PDT

தஞ்சாவூர்:'திருப்பூரில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் கறுப்பு பணம் என்பதும், அது யாருக்கு சொந்தமானது என்பதும், சி.பி.ஐ., விசார ணையில் வெளிச்சத்துக்கு வரும்' என, எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், நேற்று நடந்த தி.மு.க., பிரமுகர் இல்ல திருமண விழாவில், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார்.திருமணத்தை நடத்தி வைத்து, அவர் பேசியதாவது:நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும் என்றே எல்லாரும் எதிர்பார்த்தனர்; அது நிறைவேற வில்லை. ஆனாலும், சோர்ந்து உட்கர்ந்து விட வில்லை. ...

ஹிந்து மதத்துக்கு மாறினாரா ஜேசுதாஸ்?

Posted: 06 Jul 2016 01:49 PM PDT

திருவனந்தபுரம்: பிரபல திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ், ஹிந்து மதத்துக்கு மாறியதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, 'டுவிட்டர்' சமூக தளத்தில் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருது பெற்றவர் :
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், தமிழ் உட்பட, 14 இந்திய மொழிகளில், 45 ஆயிரம் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார். கிறிஸ்தவரான ஜேசுதாஸ், ஹிந்து கடவுள்கள் குறித்து பல்வேறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இருப்பினும், அவர் ...

யூரோ கால்பந்து; பைனலுக்கு முன்னேறியது போர்ச்சுகல்

Posted: 06 Jul 2016 02:15 PM PDT

லியோன் : யூரோ கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில், வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போர்ச்சுகல் அணி, பைனுக்கு முன்னேறியது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஜெர்மன், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் வேல்ஸ் அணிகள் முன்னேறின. இதில் முதல் அரையிறுதியில் போர்ச்சுகல் அணி, வேல்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தியது.
ஆட்டம் தொடங்கியது முதல் கோல் அடிக்கும் முனைப்புடன் இரு அணிகளும் தீவிரம் காட்டின. ஆனால் அதற்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. முதல் பாதியின் முழுவதும் இரு ...

ம.பி., - எம்.பி.,க்களுக்கு யோகம்; நால்வரில் ஒருவர் மத்திய அமைச்சர்

Posted: 06 Jul 2016 03:11 PM PDT

போபால்: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தை அடுத்து, ம.பி.,யைச் சேர்ந்த எம்.பி.,க்களில், நால்வரில் ஒருவர் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்திலிருந்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, 26 பேர், லோக்சபா மற்றும் எட்டு பேர் ராஜ்யசபா எம்.பி.,க்களாக உள்ளனர். ஏற்கனவே, இம்மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட, சுஷ்மா சுவராஜ், நஜ்மா ஹெப்துல்லா, நரேந்திர சிங் தோமர், தவேர்சந்த் கெலாட் உள்ளிட்டோர், மத்திய அமைச்சர்களாக இருக்கும் நிலையில், இதே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™