Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழி கல்வி. புறக்கணிப்பு! .. 1,000 இடங்களில் மாணவர்கள் சேராததால் வீண்

Posted: 22 Jul 2016 09:50 AM PDT

தமிழ் வழி கல்வியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் புறக்கணித்து வருகின்றனர். இதற்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி, தமிழ் வழி கல்வி படிப்பில் சேர மறுப்பதால், இந்த ஆண்டில் மட்டும், பி.இ., படிப்பிற்கான, 1,002 இடங்கள் வீணாகி உள்ளன.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 523 கல்லுாரிகளில், பொது கவுன்சிலிங் முறையில், 84 ஆயிரத்து, 352 இடங்கள் நிரம்பின; ஒரு லட்சத்து 1,318 இடங்கள் காலியாக உள்ளன.பல்கலையின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள, 12 உறுப்பு கல்லுாரிகள் மற்றும் சென்னை கிண்டி இன்ஜி., கல்லுாரியில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப்பிரிவுகள் உள்ளன. மெக்கானிக்கலில், 718 இடங்கள்; ...

ஆம் ஆத்மி எம்.பி., வீடியோவால் பார்லியில்...அமளி ! அலுவல் நடக்காமல் சபைகள் ஒத்திவைப்பு

Posted: 22 Jul 2016 09:59 AM PDT

ஆம் ஆத்மி கட்சி எம்.பி., பார்லிமென்டை படம் பிடித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, இரு சபைகளிலும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பி.,க்கள், நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஒரு அலுவல் கூட நடக்காமல் நாள் முழுவதும் பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டது.

பார்லிமென்ட் மீது, கடந்த, 2001ல் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு, பார்லிமென்ட் வளாகத்தின் ஒவ்வொரு அங்குலமும், பலத்த கண்காணிப்பு வளையத்திற்குள், கொண்டு வரப்பட்டது. பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், ரகசிய கேமராக்கள், துணைநிலை ராணுவப் ...

நேஷனல் ஹெரால்டுக்கு நில ஒதுக்கீடு; ஹரியானா 'மாஜி' முதல்வர் மீது வழக்கு

Posted: 22 Jul 2016 10:01 AM PDT

புதுடில்லி: காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான, நேருவால் தொடங்கப்பட்ட, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்திய, 'அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட்' நிறுவனத்துக்கு, நிலம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக, ஹரியானா முன்னாள் முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா மீது,அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியில், ஏ.ஜே.எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு, 1982ல், 3,360 சதுர மீட்டர் நிலம் ஒதுக்கப்பட்டது. அந்நிறுவனம் நிலத்தைப் பயன்படுத்தாததால், அரசே மீண்டும் ...

'ஜாதிய பிரச்னைகளை தூண்டாதீர்!'எதிர் கட்சிகளுக்கு பிரதமர் கண்டனம்

Posted: 22 Jul 2016 10:03 AM PDT

கோரக்பூர்,: ''ஜாதிய பிரச்னைகளையும், வேறுபாடுகளையும் கிளப்புவதை கைவிட்டு, வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவு தர முயற்சி செய்யுங்கள்,'' என, எதிர்க்கட்சிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக கண்டனம் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அரசு அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்குள்ள கோரக்பூரில், பா.ஜ., பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி பேசினார். அப்போது, எதிர்க்கட்சி களின் பெயரைகுறிப்பிடாமல் மறைமுகமாக தாக்கி பேசினார். அவர் ...

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: நிறுவும் பணிக்கு அதிகாரி நியமனம்

Posted: 22 Jul 2016 10:22 AM PDT

டேராடூன்:உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் உள்ள மேளா பவனில், திருவள்ளுவர் சிலை நிறுவும் பணியை மேற்கொள்ள, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, முதல்வர் ஹரிஷ் ராவத் அனுப்பியுள்ளார்.

திருவள்ளுவரின் புகழை வட மாநிலங்களிலும் தெரிந்து கொள்ளும் வகையில், உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் ஏற்பாடு செய்தார்.இதற்காக தமிழகத்தில், 12 அடி உயர திருவள்ளுவர் சிலைதயாரிக்கப்பட்டு, ஹரித்துவார் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், கும்பமேளா நடைபெறும் இடத்தில் சிலையை நிறுவ எதிர்ப்பு கிளம்பியதால், ...

'அம்மா பட்ஜெட்' என பெயர் சூட்டுங்கள்: பன்னீர் செல்வத்துக்கு கருணாநிதி யோசனை

Posted: 22 Jul 2016 10:27 AM PDT

சென்னை: சட்டசபையில், நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட்டை, 'அம்மா பட்ஜெட்' என்றே பெயர் சூட்டி அழைக்கலாம் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:காலி பாத்திரத்தை கையில் எடுத்துக் கொண்டு, அதை அட்சய பாத்திரமென்று, அ.தி.மு.க.,வினரை நம்ப வைத்து, அள்ளி, அள்ளி கொடுப்பதைப் போல, பாவனை செய்யும் நிதியமைச்சர் பன்னீர் செல்வத்தின் திறமை கண்டு, பாராட்டுவதா அல்லதுபரிதாபப்படுவதா?பட்ஜெட்டில், 'இந்த அரசு' என்று இருந்த இடங்களை படிக்கும் போதெல்லாம், பன்னீர்செல்வம், 'மாண்புமிகு, தமிழக முதல்வர் அம்மா தலைமையிலான இந்த அரசு' என்றே மாற்றி ...

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., முதல் வாரம் அறிவிப்பு

Posted: 22 Jul 2016 10:33 AM PDT

உள்ளாட்சி தேர்தல் தேதியை, செப்., முதல் வாரம் வெளியிட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 12 மாநகராட்சி, 123 நகராட்சி, 529 பேரூராட்சி, 12,527 ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இவற்றின் நிர்வாகிகளாக உள்ளவர்களின் பதவிக்காலம், வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. அதற்கு முன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் ஏற்கனவே துவங்கிவிட்டது.
ரூ.183 கோடி ஒதுக்கீடு
உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக பட்ஜெட்டில், 183கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தேதி, செப்., முதல் வாரம் ...

சென்னை விமானம் மாயம்: 29 பேர் கதி என்ன

Posted: 22 Jul 2016 10:36 AM PDT

சென்னையில் இருந்து அந்தமானுக்கு, 29 பேருடன் சென்ற விமானப்படை விமானம், வங்கக்கடல் மீது பறந்த போது மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் கப்பல்களும், விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

சென்னை, தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து, நேற்று காலை, 8:30 மணியளவில், ஏ.என்., - 32 ரக விமானம், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு புறப்பட்டது. அது, சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் விமானம். இதில், விமானப் படையை சேர்ந்த, 9 பேர்; கடற்படையை சேர்ந்த 9 பேர்; ராணுவத்தை சேர்ந்த இருவர்; கடலோரக் காவல் படை வீரர் ஒருவர்; 3 அதிகாரிகள்; 2 ஏர்மென் மற்றும் தொழில்நுட்ப ...

காவிரி நீர் திறப்பை குறைத்தது கர்நாடகா: பாக்கி 54 டி.எம்.சி.யாக உயர்வு

Posted: 22 Jul 2016 10:43 AM PDT

தமிழகத்தின் தேவைக்காக, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதில், ஒவ்வொரு மாதமும் திறக்க வேண்டிய நீரின் அளவையும், காவிரி நடுவர் மன்றம் நிர்ணயம் செய்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஜூன் துவங்கி, அடுத்தாண்டு மே வரை, நீர் வழங்கும் காலம். கடந்த, 2015 - -16ம் ஆண்டு நீர் வழங்கும் காலத்தில், 35 டி.எம்.சி., நீரை வழங்காமல், கர்நாடகா நிலுவை வைத்துள்ளது. இந்த நீரை வழங்கக் கோரி, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2016 - -17ம் ஆண்டுக்கான நீர் வழங்கும் காலம், ஜூனில் துவங்கியது.இந்த மாதத்தில், 10 ...

'பதவியே வேண்டாம்': தே.மு.தி.க.,வினர் ஓட்டம்

Posted: 22 Jul 2016 10:46 AM PDT

தே.மு.தி.க.,வில் காலியாக இருக்கும் பதவிகளுக்கு, புதியவர்களை நியமிக்க கட்சித் தலைமை விரும்பினாலும், 'பதவியே வேண்டாம்' என, கட்சியினர் ஓட்டம் பிடிப்பதால், விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., படுதோல்வி அடைந்ததோடு, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார். அதனால், கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை என, நம்பும் பல நிர்வாகிகள், மாற்று முகாம் தேடி ஓடுகின்றனர்.இப்படி கட்சி மாறும் பொறுப்பாளர்களுக்கு பதிலாக, புதியவர்களை நியமித்து வருகிறார் விஜயகாந்த். ஆனாலும், மாவட்ட செயலர் பதவிக்கு மட்டுமே, பொறுப்பாளர்கள் ...

ஆதர்ஷ் கட்டடத்தை இடிக்கக்கூடாது; சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

Posted: 22 Jul 2016 12:09 PM PDT

புதுடில்லி: 'மும்பையில் உள்ள ஆதர்ஷ் கட்டடத்தை இடிக்கக் கூடாது; அதை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநில தலைநகர் மும்பையில், 31 மாடிகள் உடைய ஆதர்ஷ் கட்டடம் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் விதவைகளுக்காக கட்டப்பட்டது. இந்தக் கட்டட ஒதுக்கீட்டில், பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ.. விசாரணை செய்தது. இவ்வழக்கு தொடர்பாக, ...

'சிபில்' அறிக்கை இலவசம்; ரகுராம்ராஜன் தகவல்

Posted: 22 Jul 2016 01:15 PM PDT

மும்பை : 'சிபில்' நிறுவனத்தின் கடன் தகுதி அறிக்கை இலவசமாக வழங்கப்பட உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார்.
வங்கி, நிதி நிறுவனங்கள் ஆகியவை, 'சிபில்' நிறுவனத்தின் கடன் தகுதி அறிக்கையின் அடிப்படையில் தனி நபருக்கு கடன்களை வழங்குகின்றன. தனிநபர் கடன், கல்விக் கடன், வீட்டுவசதி கடன் உள்ளிட்ட எந்தவொரு கடன் கோரினாலும், வங்கிகள், முதலில், 'சிபில்' அறிக்கையை பரிசீலித்து தான் முடிவு எடுக்கின்றன. இதற்காக, கடன் பெறுவோரிடம், 550 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இனி, இது ஆண்டுக்கு ஒரு முறை, இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ...

மாயாவதி மீது தயாசங்கர் சிங்கின் குடும்பத்தார் போலீசில் புகார்

Posted: 22 Jul 2016 01:40 PM PDT

லக்னோ: ''அவதுாறாக பேசிய, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட தயாசங்கர் சிங்கின் குடும்பத்தார், போலீசில் புகார் அளித்துள்ளனர்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியை தரக்குறைவாக விமர்சித்ததாக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து தயாசங்கர் நீக்கப்பட்டார். அவரை கைது செய்யக் கோரி, பகுஜன் சமாஜ் கட்சியினர் நேற்று முன்தினம், லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
''இந்த போராட்டத்தின் போது எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை ...

கோஹ்லி, அஸ்வின் அபாரம்; வலுவான நிலையில் இந்தியா

Posted: 22 Jul 2016 02:25 PM PDT

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை சதம், அஸ்வின் சதம் கை கொடுக்க இந்திய அணி ஆதிக்கம் செலுத்துகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட், ஆண்டிகுவா, விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (143), அஷ்வின் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோஹ்லி அபாரம்:
நேற்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்தது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™