Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மூத்த தேவி, மூதேவியல்ல!

Posted: 14 Jul 2016 03:58 PM PDT

- லக்ஷ்மிக்கு மூத்தவள் இவள். இவளை மூத்த தேவியென அழைப்பதே சிறப்பு. மூதேவி என்பது தவறு. – ஜேஷ்டா தேவியின் வழிபாடு குறித்து சூடாமணி நிகண்டால் அறியலாம். பெருந்தொழுவு, கொடுவாயில் தலங்களில் இவள் மாந்தன், மாந்தி இருபுறமும் இருக்க நடுவில் உள்ளாள். – காகமும், துடைப்பமும் இவளருகில் உள்ளன. வங்காளிகள் வருடத்தில் ஒருநாள் துடைப்பத்தை அலங்கரித்துப் பூஜிப்பர். ஜேஷ்டா தேவியின் கையில் கூடையும் இருப்பதை வேலூரில் சில கோயில்களில் காணலாம். – நாம் காலையில் எழுந்து வாசல் கூட்ட எடுக்கும் கருவி துடைப்பம்தானே! ...

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Posted: 14 Jul 2016 01:45 PM PDT

சென்னை, நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப் படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால் எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் ...

விரிவுரையாளர் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

Posted: 14 Jul 2016 10:38 AM PDT

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணிகளில் 272 காலியிடங்களை நிரப்புவதற்காக செப்டம்பர் 17-ம் தேதி அன்று போட்டித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங் கியல், வரலாறு, புவியியல் பாடங்களில் முதுகலை பட்டமும், எம்எட் பட்டமும் பெற்றிருப் பவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழங்கப்படுகின்றன. ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(431)

Posted: 14 Jul 2016 08:36 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

novels

Posted: 14 Jul 2016 07:41 AM PDT

ஈகரைஇன் புதிய மெம்பெர் நான் ஸ்ருதி வினோவின் நோவேல்ஸ் பிடிஎ போர்ம் or நோவேல்ஸ் எங்க ரீட் பண்ணலாம் அல்லது நோவேல் லின்க்கை தாருங்கள் pls .

பழனிக்குப் போனால் பஞ்சாமிர்தத்தோட வரணும்…!!

Posted: 14 Jul 2016 04:06 AM PDT

– ஏண்டா, பழநிக்குப் போனவன்,சாமி கும்பிட்டுட்டு பஞ்சாமிர்தத்தோட வராம, ஒரு பெண்ணோட வந்திருக்கியே, யார் இது? – பேரு, பஞ்சாமிர்தம்! – —————————————————— – என்னது, மன்னர் தன்னை புகழ்ந்து பாடிய புலவருக்கு ஒரேயொரு பொன் மட்டும் பரசளித்துள்ளாரே? – புலவர் பாடியது, ஒரே ஒரு வரி ஹைகூவாச்சே! – ———————————————————– – என்னது, உன் கணவர் வேலைக்காரியை ஸ்கூட்டருல கொண்டு போய் அவ வீட்டுல விட்டுட்டு வர்றார்….? – இங்கே வேலை செய்யவரும்போது, அவ போட்ட கன்டிஷன்ல இதுவும் ஒண்ணு, என்ன பண்றது…? – ———————————————————-

சகுனியின் தாயம் நூல் தேவை

Posted: 14 Jul 2016 04:02 AM PDT

சகுனியின் தாயம் நூல் இருந்தால் பதிவிடவும்

நூற்றாண்டுகளில் வரலாறு

Posted: 14 Jul 2016 02:13 AM PDT

தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்றதால் ”புனிதம் கெட்டு விட்டது” கோவிலை மனைவியுடன் சேர்ந்து சுத்தம் செய்த கோவில் பூசாரி

Posted: 14 Jul 2016 02:10 AM PDT

கான்பூர் - உத்தர பிரதேச மாநிலம் கன்பூர் அருகே உள்ள மங்கல்பூரில் கோவிலில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்கள் முன்னா தேவி என்ற பெண்மணியின் தலைமையில் சாமி கும்பிட சென்றுள்ளனர். அப்போது அந்த கோவிலின் பூசாரி அவர்களை உள்ளே விட மறுத்துள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் சிலரின் உதவியுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பின்னர் தலித் பெண்கள் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டதால் அதன் புனித தன்மை கெட்டு ...

பிரிட்டன் புதிய பிரதமராக தெரசா மே நியமனம்

Posted: 14 Jul 2016 02:07 AM PDT

லண்டன்: பிரிட்டனின் புதிய பிரதமராக தெரசா மே நியமிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் ராணி எலிசபெத் அறிவித்துள்ளார். ஐரோப்பா யூனியனிலிருந்த பிரிட்டன் சமீபத்தில் பிரிந்தது. இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டேவிட் கேமரூன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார். கேமரூன் தனது பதவியை இன்று அதிகாரபூர்வமாக ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமாவை பிரிட்டன் அரச குடும்பம் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பிரிட்டனின் உள்துறை செயலாளராக பதவி வகித்த தெரசா மே புதிய பிரதமராக ராணி எலிசபெத்தால் நியமிக்கப்பட்டார். ...

தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று.

Posted: 14 Jul 2016 01:58 AM PDT

தமிழ் மொழியை நேசித்த ஜப்பான் பேராசிரியர் சுசுமு ஓனோவின் நினைவு தினம் இன்று. 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் டோக்கியோவில் கக்குசியூவின் பல்கலைக்கழகத்தில்பேராசிரியராகப் பணியாற்றினார். ஜப்பானிய மொழியோடு கொரிய மற்றும் ஆஸ்திரனேசிய மொழிகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் என்று ஆய்வுகள் செய்த அவர் அப்படி எதையும் கண்டறிய முடியாமல் திண்டாடிய பொழுது தான் திராவிட மொழிகள் கண்ணில் பட்டன. அவற்றோடு ஜப்பானிய மொழி மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை அவர் கண்டார். கிமு ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 14 Jul 2016 12:58 AM PDT


-

-
-

தனித்து சுற்றுலா செல்லும் பெண்கள்; தமிழகத்துக்கு நான்காவது இடம்

Posted: 13 Jul 2016 10:26 PM PDT

ஐதராபாத்: கல்வி மற்றும் வேலைக்காக நாட்டின் எந்தப் பகுதிக்கும் பெண்கள் சென்று வரும் நிலையில், தற்போது, தனியாக சுற்றுலா செல்வதில் தென் மாநில பெண்கள், முக்கிய இடத்தை பிடித்துள்ளனர். மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனித்து சுற்றுலா செல்வதில், பஞ்சாப் மாநில பெண்கள், 66 சதவீதத்துடன் முதலிடத்தையும்; தெலுங்கானா பெண்கள், 60 சதவீதத்துடன் இரண்டாமிடத்தையும்; கேரளா பெண்கள், 58 சதவீதத்துடன், மூன்றாவது இடத்தையும்; தமிழக பெண்கள், 55 சதவீதத்துடன், ...

விடியலில் எழு, தம்பி! - சிறுவர் பாடல்

Posted: 13 Jul 2016 10:24 PM PDT

- விடியற் காலை நேரத்தில் விதவித மான பறவைகள் மடியே இன்றி எழுந்திடுமே; மகனே நீயும் எழுந்திடுவாய்! – கதிர வன்தான் எழுமுன்னர் கறவைப் பசுவும் எருதெல்லாம் அதிகா லையிலே எழுந்திடுமே; அம்பி நீயும் எழுந்திடுவாய்! – உதய கால நேரத்துள் உலகில் எல்லாப் பூக்களுமே முதலில் மலர்ந்து மணம்பரப்பும்; முனைந்து நீயும் எழுந்திடுவாய்! – பறவை விலங்கு பூக்களெல்லாம் பனியில் கூட விடியலிலே உறக்கம் நீங்கி எழுந்திருக்க உனக்கு மட்டும் உறக்கம் ஏன்? – விடியற் காலை நேரத்தில் விரைந்து எழுந்து கற்பதனால் கடின ...

புலியே தாக்க பயப்படும் விலங்கு – சுவையான தகவல்கள்

Posted: 13 Jul 2016 09:39 PM PDT

- அறிவியல் சார்ந்த சுவாரஸ்யமான அறிவியல் தகவல்கள் புலியே தாக்க பயப்படும் விலங்கு – காட்டு எருமை வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx) ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள் முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள் உலகின் மக பெரிய கங்காரு – சிவப்பு கங்காரு எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு – அப்போசம் (ஒருவகையான எலி ) ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள் மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது – ஈ மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி ...

கூழாங்கற்கள்...!!

Posted: 13 Jul 2016 06:03 PM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™