Tamil News | Online Tamil News |
- முல்லை பெரியாறில் புதிய அணை விவகாரத்தில் கேரள கம்யூ., அரசும்...முரண்டு ! * சட்ட ரீதியான போராட்டத்திற்கு தயார் என முதல்வர் பினராயி ஆவேசம்
- உ.பி., சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ்...அதிரடி! முதல்வர் வேட்பாளராக ஷீலா தீட்சித் பெயர் அறிவிப்பு
- ஜெ., - பியுஷ் கோயல் இன்று சந்திப்பு 'உதய்' திட்டத்தில் தமிழகம் இணையுமா?
- கறுப்பு பணத்துக்கு வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு
- 'சுவாதியை கண்டிக்க சென்றேன்; கொலைகாரனாகி விட்டேன்': போலீஸ் காவல் விசாரணையில் ராம்குமார் தகவல்
- 'மீண்டும் நபாம் துகி ஆட்சி மத்திய அரசுக்கு சம்மட்டி அடி'
- உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 'டாஸ்மாக்' கடைகள் அகற்றம்?
- தமிழக சட்டசபை 21ல் கூடுகிறது புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல்
- சீனாவிற்கும் சேர்ந்து பதிலடி கொடுத்த இந்தியா
- சர்ச்சை தேவயானி மத்திய இணை அமைச்சரின் தனிச்செயலராக நியமனம்
- காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் பலி எண்ணிக்கை 37 ஆனது
- காஷ்மீர் விவகாரத்தில் வரிந்து கட்டும் பிலாவல் பூட்டோ: மெகா பேரணி நடத்த போறாராம்
| Posted: 14 Jul 2016 09:46 AM PDT திருவனந்தபுரம்,: தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, கேரளாவின் புதிய அரசும் முரண்டு பிடிக்கத் துவங்கியுள்ளது. ''சட்ட ஆலோசனைகள் பெற்று, முல்லைப் பெரியாறில், புதிய அணை கட்டுவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது,'' என, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழகம் - கேரளா இடையே, கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில், 1886ம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. இதை, தமிழக அரசு பராமரித்து வருகிறது.'இந்த அணை வலுவிழந்து, அபாய ... |
| Posted: 14 Jul 2016 09:52 AM PDT புதுடில்லி,: அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள உ.பி., மாநிலத்தில், காங்., சார்பில் முதல்வர் வேட்பாளராக, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், 78, களமிறக்கப்பட்டு உள்ளார். உ.பி.,யில், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வரும், 2019ல் நடக்கும் பார்லி., தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தல், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கும் முக்கியமானது.இதற்காக, பா.ஜ., இப்போதே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டது. அங்கு, முதல்வர் அகிலேஷ் யாதவின், ஆளும் சமாஜ்வாதி கட்சியும், முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும், சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை செய்து ... |
| ஜெ., - பியுஷ் கோயல் இன்று சந்திப்பு 'உதய்' திட்டத்தில் தமிழகம் இணையுமா? Posted: 14 Jul 2016 10:22 AM PDT மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல், முதல்வர் ஜெயலலிதாவை, இன்று சந்திக்க உள்ளதால், 'உதய்' திட்டத்தில், தமிழகம் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசு, 'உதய்' எனப்படும், மின் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில், 'மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும்; மின் கட்டணத்தை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்' என்பது உள்ளிட்ட, பல அம்சங்கள் உள்ளன.தமிழ்நாடு மின் வாரியத்தின் கடன், 80 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. தமிழக அரசின் கடன், இரண்டு லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. ... |
| கறுப்பு பணத்துக்கு வரி செலுத்த அவகாசம் நீட்டிப்பு Posted: 14 Jul 2016 10:27 AM PDT புதுடில்லி, : உள்நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளோர், அதுபற்றி தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தின் கீழ், வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. கறுப்புப் பண புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுவரை கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்துக்கள், செய்துள்ள முதலீடுகள் குறித்து, தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. வரி மற்றும் அபராதத்தை செலுத்தி, சட்டப்பூர்வமாக்கி கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.தவணை ... |
| 'சுவாதியை கண்டிக்க சென்றேன்; கொலைகாரனாகி விட்டேன்': போலீஸ் காவல் விசாரணையில் ராம்குமார் தகவல் Posted: 14 Jul 2016 10:29 AM PDT சென்னை,: 'என்னை கேவலமாக பேசிய சுவாதியை, கண்டிக்க சென்றேன்; ஆனால், கொலைகாரனாக மாறி விட்டேன்' என, ராம்குமார் கூறியுள்ளான். சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தான கோபால கிருஷ்ணன். இவரது இளைய மகள் சுவாதி, 24. ஜூன், 24ல், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம நபரால், அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக, நுங்கம்பாக்கம் போலீசார், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த, டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார், 24, என்பவனை, ஜூலை, 1ல் கைது செய்தனர். அவனை, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, ... |
| 'மீண்டும் நபாம் துகி ஆட்சி மத்திய அரசுக்கு சம்மட்டி அடி' Posted: 14 Jul 2016 10:30 AM PDT சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அருணாசல பிரதேசத்தில், நபாம் துகி தலைமையிலான காங்., ஆட்சி நடந்து வந்தது. காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அவரை எதிர்க்க, பா.ஜ., ஆதரவுடன், காங்., அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த கலிகோ புல், புதிய முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில், அங்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டது.இதை எதிர்த்து,நபாம் துகி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிபதி ஜெ.எஸ்.கேஹர் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.'அருணாசல ... |
| உள்ளாட்சி தேர்தலுக்கு முன் 'டாஸ்மாக்' கடைகள் அகற்றம்? Posted: 14 Jul 2016 10:34 AM PDT உள்ளாட்சி தேர்தலிலும், ஓட்டுகளை அள்ள, 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சட்டசபை தேர்தலின் போது, 'தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்று, அ.தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்ததும், முதல் கட்டமாக, கடைகளின் நேரத்தை குறைத்த முதல்வர், அடுத்த கட்டமாக, தமிழகம் முழுவதும், ௫௦௦ கடைகளை மூடஉத்தரவிட்டார். இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலிலும், வெற்றியை வசப்படுத்தும் நோக்கத்துடன், தமிழகம் முழுவதும், மக்கள் அதிருப்திக்குள்ளாகி இருக்கும் மதுக்கடைகளை மூட, ... |
| தமிழக சட்டசபை 21ல் கூடுகிறது புதிய ஆட்சியின் முதல் பட்ஜெட் தாக்கல் Posted: 14 Jul 2016 10:34 AM PDT தமிழக பட்ஜெட், 21ம் தேதி, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.சட்டசபை தேர்தல் காரணமாக, பிப்ரவரியில், 2016 - 17ம் ஆண்டிற்கான, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த பின், ஜூன், 16ல் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் துவங்கியது; ஜூன், 23ல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.மீண்டும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு சட்டசபை கூட்டம் துவங்குகிறது. அன்று, 2016 - 2017ம் ஆண்டிற்கான, திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.* எதிர்பார்ப்புநடப்பு நிதி ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில், 9,155 கோடி ரூபாய் ... |
| சீனாவிற்கும் சேர்ந்து பதிலடி கொடுத்த இந்தியா Posted: 14 Jul 2016 10:56 AM PDT பிற நாடுகளின் சில பகுதிகளை, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம் சாட்டியதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தனது எண்ணத்தை, இந்தியா, மிகவும் கவனமாக முன் வைத்துள்ளது. அதே சமயம், தென் சீன கடல் பிரச்னை குறித்த, ஐ.நா., ஆணைய தீர்ப்பை ஒட்டி, சீனாவிற்கும், இது எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், 78,000 ச.கி.மீ., பரப்பை, பாகிஸ்தான் ஆக்கிரமித்து, தன் நாட்டின் ஒரு மாநிலமாகவே கருதி வருகிறது. இது போன்றே சீனாவும், நம் நாட்டின், 38,000 ச.கி.மீ., பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இது தவிர, பாகிஸ்தான் ... |
| சர்ச்சை தேவயானி மத்திய இணை அமைச்சரின் தனிச்செயலராக நியமனம் Posted: 14 Jul 2016 11:33 AM PDT புதுடில்லி: அமெரிக்காவில் , சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இந்திய துணை தூதரக பெண் அதிகாரிக்கு மத்திய இணை அமைச்சரின் தனிச்செயலராக பதவி வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில், நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில், துணை தூதராக, பணியாற்றிய ஐ.எப்.எஸ். அதிகாரி தேவயானி கோப்ரகாடே, 39, இவரது வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு, 'விசா' பெறுவதற்காக, மோசடியான, சில சான்றிதழ்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ரூ. 1 கோடி ஜாமினில் வெளிய வந்தார். இந்த விவகாரம் இந்திய -அமெரிக்க இடையே தூதரக ரீதியில் பெரும் ... |
| காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் பலி எண்ணிக்கை 37 ஆனது Posted: 14 Jul 2016 01:03 PM PDT ஸ்ரீநகர், : ஜம்மு - காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 37 ஆக அதிகரித்துள்ளது; மாநிலத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், ஆறாவது நாளாக, ஊரடங்கு உத்தரவு தொடர்கிறது.ஜம்மு -- காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தலைவன் பர்ஹான் வானி, 22, கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைக் கண்டித்து, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, ராணுவம் களமிறக்கப்பட்டது. போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து, இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகர் உட்பட பல பகுதிகள் ... |
| காஷ்மீர் விவகாரத்தில் வரிந்து கட்டும் பிலாவல் பூட்டோ: மெகா பேரணி நடத்த போறாராம் Posted: 14 Jul 2016 02:07 PM PDT இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் தனது கட்சியின் தனித்தன்மையை காண்பிக்க மெகா பேரணி நடத்த உள்ளார் மறைந்த பாக். முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோ. காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானி, பாதுகாப்புபடையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை கண்டித்து காஷ்மீரில் கடந்த ஏழு நாட்களாக வன்முறை நடக்கிறது. இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ மகனுமான பிலாவல் பூட்டோ , காஷ்மீர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 15,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |