Tamil Star |
| காளான் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? Posted: 05 Jul 2016 07:33 AM PDT
இது பாசி வகையை சார்ந்த தாவரம். இதில் பெரும்பாலும் விஷக் காளான் உள்ளன. அதே போல் மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட காளான்களும் உள்ளன. இவற்றுள் மூன்று வகையான காளான் சாப்பிடப்படுகின்றன.அவை மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான். இதில் ஒவ்வொரு காளானும் சிறந்த பயன்களைத் தருகின்றது. மூன்றுமே புற்று நோயை தடுக்கும் சக்தி கொண்டவை.எய்ட்ஸ்க்கும் மருந்தாக பயன்படுகிறது இந்த காலான்.குறிப்பாக வைக்கோல் காளான் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்துகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. ஃப்ளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த காளான் பற்றிய ஆய்வில், நான்கு வாரங்கள் இந்த காளான் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஒரு மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும் என்று நிரூபித்துள்ளார்கள். ஜப்பான் மற்றும் சைனாவில் சுமார் 21- 40 வயது வரை உள்ளவர்களை தினமும் காளான் உண்ண சொல்லியிருக்கிறார்கள். தொடர்ந்து நான்கு வாரம் அவர்கள் எடுத்துக் கொண்ட பின்னர் அவர்களின் செல்களை ஆய்வு செய்ததில், நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கும் டி- செல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஆய்வில் பங்கு பெற்ற அனைவரும் சைவமாக இருக்கக் கூடாது. தேநீர் அருந்தக் கூடாது. ஏனெனில், காய்கறிகளிலும், தேநீரிலும் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் இருப்பதால், அவைகளுடன் காளான் சக்தியை ஒப்பீடு செய்வது கடினம். காளானின் மருத்துவ பயன்கள் உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கிறது,மாரடைப்பை தடுக்கிறது,உயர் இரத்த அழுத்தம் உருவாவதை தடுக்கிறது.குறைந்த இரத்த அழுத்தம் ஏற்ப்படாமல் தடுக்கிறது காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதனால் மாரடைப்பும் வருவது தவிர்க்கப்படுகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.மலட்டுத்தன்மை போக்கும், கருப்பை நோய்கள் தடுக்கும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். எச்சரிக்கை குறிப்பு காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.சில வகை காளான்களை உண்ணலாம். சிலவகை, போதை தரும். சிலவகை, பயங்கர விஷம். எல்லாமே ஒன்றுபோலவே தோன்றும். ஆகவே, கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணம் உடையதாகவும் இருக்கும். விஷக்காளானை உண்டுவிட்டால் உடனடியாக சோம்புக்கஷாயம் பருகவும் சோம்புக்கஷாயம், பாம்பின் விஷம், காளான் விஷம் இவற்றை முறிக்கும். The post காளான் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஷ்ய வான்பரப்பைக் கண்காணிக்கும் கனடாவின் C-130J விமானம் Posted: 05 Jul 2016 06:15 AM PDT
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அணுசக்தி அபாய கட்டுப்பாட்டு நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2002ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வருகின்ற திறந்த வான்பரப்பு இணக்கப்பாட்டுக்கு அமைவாக இந்த வான் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அது விபரம் வெளியிட்டுள்ளது. பனிப்போரின் பின்னர் ஐரோப்பா பகுதியில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் முக்கிய நடவடிக்கையாக இந்த திறந்த வான்பரப்பு இணக்கப்பாட்டுக்கான ஒப்பந்தம் 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்டிருந்த நிலையிலேயே, அது 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கண்காணிப்பில் ஈடுபடும் கனேடிய விமானத்தில் ரஷ்ய நிபுணர்கள் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விமானத்தில் உள்ள உபகரணங்களும், விமானத்தின் கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஒப்பந்தத்திற்கு அமைவாக உள்ளனவா என்பதனை கண்காணிப்பார்கள் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. யூலை நான்காம் திகதியில் இருந்து எதிர்வரும் யூலை ஒன்பதாம் திகதி வரையில் அமெரிக்கா மற்றும் கனடாவின் இந்த இணைந்த வான்பரப்புக் கண்காணிப்பு நடவடிக்கைகள் ரஷ்ய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், அந்த காலப்பகுதியில் கனடாவின் C-130J கண்காணிப்பு விமானம் ரஷ்ய பிராந்தியங்களின் வான்பரப்புக்கு மேலாக பறப்புகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. The post ரஷ்ய வான்பரப்பைக் கண்காணிக்கும் கனடாவின் C-130J விமானம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் காளான் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு அதிகமாகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும் என கண்டறியப்படுள்ளது.
ரஷ்ய வான்பரப்பைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க மற்றும் கனடா ஆகிய நாடுகளின் விமானங்கள் ஈடுபடுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.