Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Riverdale பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 02 Jul 2016 01:32 PM PDT

k

kரொரன்ரோவின் Riverdale பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Danforth அவனியூவிற்கு அருகில் Broadview Avenue இல் அதிகாலை 2.30 மணியளவில் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த நபர் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பவை தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post Riverdale பகுதியில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

2026ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கல்கரியில்?

Posted: 02 Jul 2016 01:03 PM PDT

u

u2026ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை எந்த நகருக்கு வழங்குவது என்பது தொடர்பான விருப்புக்கள் அறியப்பட்டு வரும் நிலையில், குறித்த போட்டிகளை ஏற்று நடாத்துவதற்கான விருப்பத்தை கல்கரி நகரம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் அந்த வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து தயார்ப்படுத்தல்களையும் கல்கரி நகர நிர்வாகம் மேற்கெர்ணடுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

2026ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கான தயார்படுத்தல்களை கல்கரி நகர நிர்வாகம் மேற்கொண்டு விட்டதான இந்த அறிவிப்பினை கனேடிய ஒலிம்பிக் செயற்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

கனடாவின் முக்கிய ஏழு நகரங்களின் நிர்வாகங்களுடன் கடந்த மார்ச் மாதமளவில் தொடர்பு கொண்டிருந்த கனேடிய ஒலிம்பிக் செயற்குழு, எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களை அல்லது 2028ஆண்டுக்கான கோடைகால விளையாட்டுக்களை ஏற்று நடாத்துவதற்கான விருப்புத் தொடர்பில் அறிவிப்புக்களையும் விடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே 2026ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்துவதற்கு விரும்புவதாக கல்கரி நகரம் கனேடி ஒலிம்பிக் குழுவிற்கு தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post 2026ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கல்கரியில்? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Canada Day பிரதான நிகழ்வில் கலந்துகொண்ட கனேடியப் பிரதமர்

Posted: 02 Jul 2016 12:00 PM PDT

h

h"Canada Day"ஐ முன்னிட்டு நேற்றைய நாள் ஒட்டாவாவில் முன்னெடுக்கப்பட்ட பிரதான நிகழ்வில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளார்.

கனேடிய நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்ட குறித்த இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் ஜஸ்டின் ரூடோ , இம்முறை நாட்டின் பிரதமாக "Canada Day" நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை குறித்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தம் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பினை வழங்கியுள்ள மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கனேடியர்கள் ஒருமித்த குரலாக ஒன்றுபட்டு இந்த நாளில் ஒன்றுதிரண்டு நிற்பதைக் காணும் போது தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பன்முகைப்படுத்தப்பட்ட நாடுகளில் கனடா முதன்மையானதாக உள்ளமை, செல்வச் செழிப்பான நாடாக உள்ளமை ஆகிய இரண்டு விடயங்களும் கனேடிய மக்களுக்கு தற்செயலாக கிடைத்துவிட்டவை அல்ல என்றும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

கனடா முழுவதிலும் நூற்றுக்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டு வருவதனையும், கனடாவில் இரண்டு உத்தியோக பூர்வ மொழிகள் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மூதாதையர்களின் பாரம்பரியத்தினை மதிக்கும் வகையில் தமது அரசாங்கம் பழங்குடி மக்களுடனான உறவையும் புதுப்பித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலின சமத்துவம் மட்டுமின்றி கனடாவில் வதியும் அனைவருமே சமநிலையில் மதிக்கப்பட்டு வருவதையும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தனது "Canada Day" உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post Canada Day பிரதான நிகழ்வில் கலந்துகொண்ட கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™