Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஸ்காபரோ Rouge River இடைத்தேர்தல் வேட்பாளராக திரு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

Posted: 05 Jun 2016 07:04 PM PDT

ui

uiரொரன்ரொவின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக Piragal Thiruவை லிபரல் கட்சி பரிந்துரைத்துள்ளது.

Scarborough-Rouge River பகுதியில் நீண்டகாலமாக அவர் லிபரல் கட்சியின் சார்பில் செயற்பட்டு வந்த நிலையில் அந்த கட்சி அவரைப் பரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் லிபரல் கட்சி விளக்கமளிக்கையில் திரு அந்த பிராந்தியத்திற்கான நீண்டகால தன்னார்வத் தொண்டர் என்றும், கொள்கைவகுப்பு நிபுணர் என்றும் விபரித்துள்ளது.
Scarborough-Rouge River தொகுதிக்கான லிபரல் கடசி உறுப்பினர் கடந்த மார்ச் மாதம் தமது பதவியில் இருந்து விலகிக்கொண்டுள்ளதை அடுத்து அந்த பகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை முற்போக்கு பழமைவாதக் கட்சி தமது வேட்பாளராக கிழக்கு ரொரன்ரோவின் செயற்பாட்டாளரும நகரசபை உறுப்பினருமான Raymond Choவை பரிந்துரைத்துள்ள நிலையில், லிபரல் Piragal Thiruவை தமத கட்சி வேட்பாளராக பரிந்துரைத்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான நாளை அறிவிப்பதற்கு ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னுக்கு ஆறு மாதகால அவகாசம் உள்ள நிலையில், தேர்தல் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஸ்காபரோ Rouge River இடைத்தேர்தல் வேட்பாளராக திரு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பழைய சோற்றின் நன்மைகள்

Posted: 05 Jun 2016 07:59 AM PDT

download

downloadபழைய சோறுதானே என்று ஒதுக்குபவர்களுக்கு அதில் மறைந்திருக்கும் நன்மைகள் பற்றி தெரிவதில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை ஒதுக்கி பார்க்க மாட்டார்கள்.

மாறிவிட்ட சமூகத்தில் உணவு முறைகளும் முற்றிலும் வேறுவிதமாக மாறிவிட்டன. அத்தகைய உணவுகளை உண்ணும் போது பலவித பக்கவிளைவுகளும் வருகிறது.

ஆனால் நமது முன்னோர்கள் சாப்பிட்ட பழைய சோறு, அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காயம் இவை உடலில் பல பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

பழைய சோற்றில், வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிர, சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது நமது உணவு பாதையை ஆரோக்கியமாக்கும்.

பழைய சோற்றுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால், அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. காலை உணவாக இதை உண்டால், உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

சோற்றில் இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால், உடல் சூட்டை தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவை குணமாகும்.

பழைய சோற்றில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும். மேலும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து, உடல் எடையும் குறையும். அதே போல் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து, உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால், எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும். அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகி விடுகிறது.

பழைய சோற்றுக்கு சூடான சாதத்தில் தண்ணீர் ஊற்றக் கூடாது. ஆறிய பின்பு மண் சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் சிறிது மோர் கலந்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிட்டால் பலவித நன்மைகளை பெறலாம்.

The post பழைய சோற்றின் நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கரைக்கு கொண்டுவரப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்

Posted: 05 Jun 2016 07:45 AM PDT

io

ioகனேடிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

HMCS Windsor எனப்படும் குறித்த அந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையாக கரைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய கிழக்கு கடல் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த கப்பலின் இயந்திரம் ஒன்றில் பழுது ஏற்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.io

கோளாறு ஏற்பட்டதை அடுத்து, கரைக்கு கொண்டுவந்து முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதை அடுத்து அது ஹலிஃபக்சிற்கு திரும்பியதாகவும தெரிவிக்கப்படுகிறது.

அந்த நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக 200 நாட்கள் கடலினுள் இருந்ததாக கடற்படைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இந்த ஆண்டும் அது கடுமையான பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

1990களின் பிற்பகுதியி்ல், பிரத்தானியாவிடம் இருந்து கனடா கொள்வனவு செய்த நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த HMCS Windsor என்பது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது இந்த நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களும் பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

The post கரைக்கு கொண்டுவரப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஃபோர்ட் மக்முரே: பாதிப்புக்களில் இருந்து மீளுவது குறித்து எதிர்வுகூறுவது கடினம்

Posted: 05 Jun 2016 07:17 AM PDT

ui

uiஅல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரே கட்டுத்தீயின் பாதிப்புக்களில் இருந்து மீட்சி பெறுவதற்கான காலத்தை எதிர்வுகூறுவது கடினம் என கனேடிய மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான எண்ணெய்வளத் தொழில்த்துறைகள் அல்பேர்டடா மாநிலத்தில் காணப்படும் நிலையில், அண்மையில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கனடாவின் பொருளாதாரத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், அதில் இருந்து மீட்சி பெறுவதற்கான காலக் கணிப்பீட்டினை வரையறுப்பதற்கு எண்ணெய் நிறுவனங்களின் செற்பாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய வங்கியின் ஆளுநர் ஸ்டீஃபன் போலஸ் (Stephen Poloz), அல்பேட்டாவில் பாதிப்பிற்கு உள்ளான எண்ணெய்வள நிறுவனங்கள் மீண்டும் தத்தமது வழமையான செயல்நிலைக்கு திரும்பும் என்ற காலக் கணிப்பின் அடிப்படையிலேயே, பொருளாதார மீட்சிக்கான காலக் கணிப்பீட்டினையும் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த பொருளாதார மீட்சிக்கான கணி்ப்பீட்டிலேயே ஃபோர்ட் மக்முரேப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக தமது இடங்களுக்கு திரும்பும் காலம், அங்கு மேற்கொள்ளப்படும் மீள் கட்டுமாணப் பணிகள் இடம்பெறும் காலம் உள்ளிட்ட விடயங்களும் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பல விடயங்களும், மிகவும் தளம்பலான நிலையிலேயே காணப்படுவதாகவும், அதனால் பொருளாதார மீட்சி தொடர்பில் மதிப்படுவதும் இலகுவான காரியம் இல்லை எனவும் அவர் விபரித்துள்ளார்.

The post ஃபோர்ட் மக்முரே: பாதிப்புக்களில் இருந்து மீளுவது குறித்து எதிர்வுகூறுவது கடினம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™