Tamil Star |
- தாவரங்களில் வந்துவிட்டது சைவ இறைச்சி!
- மிசிசாகாவில் வெடிப்புச் சம்பவம்: பல வீடுகள் சேதம்
- ரொரன்ரோ Golden Mile இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையம் தீக்கிரை
- மெக்சிக்கோ சனாதிபதியை வரவேற்றார் கனேடியப் பிரதமர்
- ஒன்ராறியோ பாடசாலைகளுக்காக மேலும் 1.1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு
| தாவரங்களில் வந்துவிட்டது சைவ இறைச்சி! Posted: 28 Jun 2016 06:57 PM PDT
கடந்த 5 ஆண்டுகள் இறைச்சிக்கு மாற்றாக அதே சுவையுடைய உணவுப் பொருளை உருவாக்க வேண்டும் என்று நிபுணர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அதிக அளவில் மக்களால் விரும்பி இறைச்சி வகை உண்ணப்பட்டு வரும் நிலையில் சான் பிரான்ஸ்சிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டது. குறித்த நிறுவனம் உணவுபொருட்களை மாட்டு இறைச்சியின் நிறத்தை ஒத்தும் உருவாக்கி உள்ளமை குறிபப்பிடத்தக்கது. The post தாவரங்களில் வந்துவிட்டது சைவ இறைச்சி! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகாவில் வெடிப்புச் சம்பவம்: பல வீடுகள் சேதம் Posted: 28 Jun 2016 06:54 PM PDT
எனினும் ஊயிரிழந்தவரின் பால், பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. சுமார் 25 வீடுகள் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள என்றும், அவற்றில் 6 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவின் Dixie வீதிக்கு அருகில் Hickory Driveஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே பிற்பகல் 4 மணிக்கு சற்று பின்னராக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதேவேளை இந்த வெடிப்புச் சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது குறித்து எதனையும் தற்போதைக்கு கூறமுடியவில்லை என பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post மிசிசாகாவில் வெடிப்புச் சம்பவம்: பல வீடுகள் சேதம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரொரன்ரோ Golden Mile இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையம் தீக்கிரை Posted: 28 Jun 2016 07:26 AM PDT
Upton வீதிக்கருகில் உள்ள Warden Avenue பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த நிலையம் நேற்று மாலை 7.30 மணியளவில் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 85 தீயணைப்புப் படையினர் மற்றும் 20 தீயணைப்பு வாகனங்கள் என்பன தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தன. இதன்போது கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்து வீழ்ந்ததாகவும், மேலும் சிறிய அளவிலான வெடிப்புக்கள் சில அங்கு இடம்பெற்றதாகவும், அவற்றில் இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமுற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநில தீயணைப்பு சிறப்பு பிரிவினர் இன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையில் சம்பவ இடத்தினை அவர்கள் பார்வையிடுவார்கள் என்ற போதிலும், குறித்த அந்த பகுதி பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்படும் வரையிலும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட மாட்டார்கள் என ரொரன்ரோ மாவட்ட தீயணைப்பு படை தலைமை அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார். The post ரொரன்ரோ Golden Mile இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையம் தீக்கிரை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெக்சிக்கோ சனாதிபதியை வரவேற்றார் கனேடியப் பிரதமர் Posted: 28 Jun 2016 07:20 AM PDT
வட அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மெக்சிக்கோ சனாதிபதி நேற்று கனடாவிற்கு வருகை தந்துள்ளார். அவரை நேற்று வரவேற்றிருந்த கனேடியப் பிரதமர், அவருக்கு விருந்துபசாரமும் வழங்கி கெளரவித்துள்ளார். அத்துடன் மெக்சிக்கோ சனாதிபதியை வரவேற்று கனேடியப் பிரதமர் ஆற்றிய உரையில், பங்காளிகளாக உள்ள கனடா மெக்சிக்கோ இருதரப்பு உறவினை கொண்டாடி மகிழ தாம் விரும்புவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரேயில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் நடவடிக்கைக்காக மெக்சிக்கோ தனது 41 தீயணைப்பு படை வீரர்களை அனுப்பியதற்கும் நன்றி தெரிவித்துள்ள பிரதமர், அது உண்மையான அயலவர்கள் செய்யும் உதவி என்றும் குறிப்பிட்டு அதற்கு தமது வரவேற்பையும் வெளியிட்டுள்ளார். அதேவேளை மெக்சிக்கோ சனாதிபதியுடன் சுற்றுச் சூழலை பாதுகாப்பது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் கனேடியப் பிரதமர் கூறியுள்ளார். The post மெக்சிக்கோ சனாதிபதியை வரவேற்றார் கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்ராறியோ பாடசாலைகளுக்காக மேலும் 1.1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு Posted: 28 Jun 2016 07:12 AM PDT
எதிர்வரும் இரண்டு கல்வி ஆண்டுகளுக்காக 1.6 பில்லியன் டொலர்களை ஒன்ராறியோ அரசு ஒதுக்கியுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாகவே இந்த 1.1 பில்லியன் டொலர் நிதித் தொகையை ஒதுக்கியுள்ளது. இந்த 1.1 பில்லியன் டொலர் மேலதிக நிதித் தொகையானது ஒன்ராறியோவில் உள்ள பாடசாலைகளை திருத்துவதற்கும், அவற்றினை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஒவ்வொரு பாடசாலைகள் சபைக்கும் இதில் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விபரங்கள் சில வாரங்களின் பின்னரே வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதியில் சுமார் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்கும், 4,900 பாடசாலைகளில் திருத்த வேலைகளும், மேம்பாட்டு பணிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது தொடர்பான அனைத்து விபரங்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படும் எனவும் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது. The post ஒன்ராறியோ பாடசாலைகளுக்காக மேலும் 1.1 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

தாவரங்களில் இருந்து இறைச்சி போன்ற சுவையுடைய பர்கரை சான் பிரான்சிஸ்கோவில் தயாரித்திதுவருகின்றார்கள்.
மிசிசாகாவில் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் அளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்தள்ளதாகவும் பல வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தீக்கிரையான "Golden Mile" இலத்திரனியல் பொருள் விற்பனை நிலைய பகுதியை தீயணைப்புப் படையைச் சேர்ந்த வல்லுணர்கள் இன்று ஆராய்வார்கள் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவுக்கு வருகை தந்துள்ள மெக்சிக்கோ சனாதிபதியை பிரதமர் ஜஸ்டின் ரூடோ சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்.
பாடசாலைகளுக்காக மேலும் 1.1 பில்லியன் டொலர்களை செலவிடவுள்ளதாக ஒன்ராறியோ மாகாண அரசு அறிவித்துள்ளது.