Tamil Star |
- ஒருமுகப்படுத்தப்பட்ட நன்கொடைத் திட்டத்தை உருவாக்குகிறது அல்பேட்டா!
- கனடாவும் அச்சுறுத்தல் அபாயங்களை எதிர்நோக்கி வருகின்றது – கடற்படைத் தளபதி
- Fiat Chrysler இல் முதலீடு செய்யும் ஒன்ராறியோ அரசாங்கம்
- Osgoode Hall பகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு
| ஒருமுகப்படுத்தப்பட்ட நன்கொடைத் திட்டத்தை உருவாக்குகிறது அல்பேட்டா! Posted: 15 Jun 2016 09:07 AM PDT
முன்னதாக Slave Lake காட்டுத் தீ ஏற்பட்ட போது புதிய ஆடைகள் குப்பைக் கிடங்கில் போடப்பட்டமை போன்ற தவறுகள் இடம்பெறுவதை இந்த நடவடிக்கை தடுக்கும் என்றும் அது கூறியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்துள்ள மாநகர விவகார அமைச்சர் Danielle Larivee, தேவைக்கு அதிகமான அளவு நன்கொடைகள் ஃபோட் மக்முரேக்கு கிடைக்குமானால், அவ்வாறு பெறப்பட்ட மேலதிக பொருட்கள் ஏனைய தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். நன்கொடைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக அட்வென்டிஸ்ட் அபிவிருத்தி மற்றும் நிவாரண அமைப்புடன் (Adventist Development and Relief Agency) தமது அல்பேட்டா மாநிலம் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். சிறிதுகாலம் பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள், உணவுப்பொருட்கள், படுக்கை விரிப்புக்கள், குழந்தைகளுக்கான உணவுகள் என்பன உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் தற்போதும் எற்றுக்கொள்ளப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நகரின் பத்திலொரு பங்கு பகுதியை அழித்து 80,000இற்கு அதிகமான மக்கள் வெளியேறக் காரணமான கடந்த மாதக் காட்டுத் தீ சம்பவம் இடம்பெற்றதில் இருந்து, பாதிக்க்பபட்ட மக்களுக்காக பெருமளவிலான நன்கொடைகள் கிடைக்கப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆண்டு Slave Lake பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் போதும் இதேபோன்றே பெருமளவிலான நக்கொடைகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், குழந்தைகளுக்கான புதிய ஆடைகள் உள்ளிட்ட சில நன்கொடைகள் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post ஒருமுகப்படுத்தப்பட்ட நன்கொடைத் திட்டத்தை உருவாக்குகிறது அல்பேட்டா! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கனடாவும் அச்சுறுத்தல் அபாயங்களை எதிர்நோக்கி வருகின்றது – கடற்படைத் தளபதி Posted: 15 Jun 2016 07:35 AM PDT
எதிர்வரும் 23ஆம் நாளுடன் பணி ஓய்வு பெற்றுச் செல்லவுள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கரிபீயன் பகுதிகளுக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்களைக் கடத்தல், சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நாட்டுக்குள் நுளைதல் போன்ற அச்சுறுத்தல்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் அறிந்திராத பல இராணுவ அச்சுறுத்தல்களும் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இவ்வாறான சிக்கல்களால் இதுவரை பாதிப்புக்கள் நேராமல் உள்ளமை கனடாவுக்கு கிடைத்த அதிஸ்டம் என்கின்ற போதிலும், இவ்வாறான அதிஸ்டவசமான சம்பவங்களை கூறுவதை விடுத்து உண்மையான பாதுகாப்பு ஆலோசனைகளை உரிய முறையில் தெரிவிப்பதே தங்ளைப் போன்ற அதிகாரிகளின் பொறுப்பு எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இவ்வாறான நிலைமையில் அமெரிக்காவுடன் நெருக்கமாக செயலாற்றி வட அமெரிக்காவின் கடற்பிராந்திய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிசக்கைகளை கனடா மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையேயான தகவல் பரிமாற்ற உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கடற்பிராந்திய கண்காணிப்புகளை அதிகரிக்கும் வகையிலான கருவிகளை நிறுவுவதற்கு கனேடிய அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அவர் பரிந்துரை செய்துள்ளார். ஆழ்கடல் கண்காணிப்பு வலையமைப்புக்கள் மற்றும் தரையில் இருந்து கண்காணிப்பதற்கான ராடர்களில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, அவற்றிற்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். The post கனடாவும் அச்சுறுத்தல் அபாயங்களை எதிர்நோக்கி வருகின்றது – கடற்படைத் தளபதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Fiat Chrysler இல் முதலீடு செய்யும் ஒன்ராறியோ அரசாங்கம் Posted: 15 Jun 2016 07:20 AM PDT
வின்ட்சரில் உள்ள (Windsor) "ஓட்டோமேக்கர்ஸ்" சிற்றூர்தி உற்பத்தித் தொழிற்சாலையினை விரிவுபடுத்துவதற்காகவே ஒன்ராறியோ அரசாங்கம் இந்த நிதியை வழங்குவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. மாநில அரசாங்கத்தின் இந்த முதலீடு ஏறத்தாழ 1,200 புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும், அந்த தொழிற்சாலையில் புதிய Pacifica சிற்றூர்திகள் தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே உள்ள 4,000 பேரின் பணிநிலையின் பாதுகாப்புக்கு அது உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிற்சாலைகளின் ஒருங்கிணைப்பை தரமுயர்த்துவதற்கும், வின்சரில் உள்ள அந்த நிறுவனத்தின் ஆராய்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நிதித்திட்டத்திற்கு உதவுவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேவேளை புதன்கிழமை வின்சரில் வைத்து இதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்க்கு ஒன்ராறியோ முதல்வர் கதலின் வின் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post Fiat Chrysler இல் முதலீடு செய்யும் ஒன்ராறியோ அரசாங்கம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Osgoode Hall பகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு Posted: 15 Jun 2016 07:16 AM PDT
நபர் ஒருவர் பொதி ஒன்றை வடிகால் குழயினுள் போட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளதைப் பார்த்ததாக காவல்த்துறையினருக்கு நேற்று மதியத்திற்கு சற்று முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து குயின் வீதி மற்றும் யூனிவேசிற்றி அவனியூ பகுதிகளுக்கு அருகில் கோட்கவுஸ் (courthouse) பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, அவரச மீட்புப் படையினர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அங்கு நடாத்திய சோதனை நடவடிக்கைகளில் இருந்து அவ்வாறாக அச்சுறுத்தலான பொதி எதுவும் மீட்கப்படவில்லை எனவும், அங்கு காணப்பட்ட சாதாரண பொதி ஒன்று அப்புறப்படுத்தப்பட்தாகவும் ரொரன்ரோ தீயணைப்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த நடவடிக்கையால் அங்கிருந்த கட்டடங்கள் எவையும் மூடப்படவில்லை என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எத்தகைய அச்சுறுத்தலும் இல்லை என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த பகுதியின் நிலைமை வழக்கத்திற்கு திரும்பியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். The post Osgoode Hall பகுதி வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட ஃபொர்ட் மக்முரே பகுதி குடியிருப்பாளர்களுக்காக ஒருமுகப்படுத்தப்பட்ட நன்கொடைத் திட்டம் ஒன்றை அல்பேட்டா அரசாங்கம் ஒருங்கிணைத்து வருவதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
கனடாவும் பல்வேறுவித அச்சுறுத்தல் அபாயங்களை எதிர்நோக்கி வருவதாக கனடாவின் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் மார்க் நோர்மன் தெரிவித்துள்ளார்.
Fiat Chrysler இற்கு சுமார் 85மில்லியன் டொலர்க்கும் அதிகமான தொகையை ஒன்ராறியோ அரசாங்கம் வழங்க உள்ளதாக Canadian Press செய்தி வெளியிட்டுள்ளது.
ஒஸ்குட் ஹோல் (Osgoode Hall ) அருகில் சந்தேகத்திற்கு இடமான பொருள் காணப்பட்டதாக நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் அளவில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது அகற்றப்பட்டு விட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் அறிவித்துள்ளனர்.